இன்றைக்கு ஞாயிறு என்பதால் சில குடும்ப சந்திப்புகளை நடத்திக்க வேணும். மழையும் காணோம். ஆனால் எல்லாத்துக்கும் முந்தி இன்னொரு முக்கிய வேலை இருக்கே ! பதினொரு மணிக்குப் பூர்விகா போனோம். நேத்து சொன்னபடிக்கே என் S9+ இல் இருந்து, புது ஃபோனுக்கு எல்லாத்தையும் மாத்திக் கொடுத்தாங்க.
ஒரு வழியா வேலை முடிய ஒன்னேகால் மணி நேரம் ஆச்சு. படங்களை மாத்தத்தான் ரொம்ப நேரம் ஆச்சு. நௌ S9+ ஃப்ரீ ஆஃப் எவ்ரிதிங் ! இப்ப அதுதான் நம்மவருக்குப் போகுது ! அப்ப அவருக்கு புது ஃபோன்னு சொன்னது ? அட ! அதுதாங்க இது. ஏற்கெனவே வச்சுருக்கும் J7 க்கு இது எவ்ளோ தேவலைன்னு பாருங்களேன்! பூர்விகா மக்கள் எல்லாத்தையும் நல்லாவே ஒழுங்கு பண்ணிக் கொடுத்தாங்க. இன்னும் ஒன்னுதான் பாக்கி. அந்த ஸ்மார்ட் வாட்ச் .....
அப்படியிப்படின்னு இங்கேயே நேரம் ஓடிப் போச்சு. வேளச்சேரிக்குப் போறோம். ஸ்ரீ குப்தா பவனில் பகல் சாப்பாடு. கீழே ஸ்நாக்ஸ் விற்பனை, மாடியில் ரெஸ்ட்டாரண்ட். இப்பெல்லாம் லிஃப்ட் இருந்தால்தான் எங்கேயும் போகணும். மாடிப்படியில் இவரை ஏற வைக்கும் ரிஸ்க் வேணவே வேணாம். நார்த் இண்டியன் மெனுதான். நம்மவருக்கும் விஜிக்கும் தாலி. எனக்கு காலிஃப்ளவர் மஞ்சூரியன் & ஸ்வீட் லஸ்ஸி. இந்த மஞ்சூரியன் சமாச்சாரத்தை சைனீஸ்ன்னு சொல்றோமே.... அசல் சீனக்கடைகளில் இப்படி ஒரு பெயருள்ள வஸ்துவே இல்லை ! இங்கே நம்மூர் சீனக்கடைகளிலும், நம்ம சீனதேசப் பயணத்தில் பெய்ஜிங்கிலும் நல்லா விசாரிச்சுப் பார்த்துட்டேன்.
கீழே இருக்கும் ஸ்நாக்ஸ் செக்ஷனில் கொஞ்சம் தீனிகள் வாங்கிக்கிட்டு நேரா மச்சினர் வீடு. மகளும் மாப்பிள்ளையும் அங்கே வந்துருக்காங்க. இவுங்க கல்யாணத்துக்கு வரமுடியாமத்தான் கோவிட் வினை வச்சுருச்சு. மாப்பிள்ளை ரொம்பத் தங்கமானவர்னு மகள் காதில் ஓதி விட்டேன். நல்ல செலக்ஷன்தான். எங்களைப்போல் காதல் கல்யாணம் ! நல்லா இருக்கட்டுமுன்னு ஆசிகள் வழங்கினோம். இன்னும் மூணு மாசத்தில் குடும்பத்தில் புதுவரவு !
மகனும் வீட்டுலே நம்ம வரவை எதிர்பார்த்து இருந்தார். இருக்கச் சொல்லி இருந்தேன். சண்டே ஆனால் போதும் சினிமா சினிமா......ன்னு (பெரியப்பா குணம்) ..... இப்பதான் ஒரு ஒன்பது மாசங்களுக்கு முன் புது பைக் வாங்கியிருக்கார். என்ஃபீல்ட் தயாரிப்பு. கஸ்டம் பில்ட் ! அட்டகாசமா இருக்கு ! ஒரு காலத்துலே என் கனவு வண்டி இது. அப்போ அது வாய்க்கலை. (பேசாம மகனோடு ஒரு ரௌண்ட் போயிருக்கலாம், இல்லே ? )
'வச்சுக்கொடுத்தவை'களை வாங்கினதும், அங்கிருந்து கிளம்பி நாத்தனார் வீடு. இந்த வீடு இருக்குமிடம்தான் எப்பவும் குழப்பம். வழக்கம் போல் சொதப்பிட்டுப் போய்ச் சேர்ந்தோம். நாளைக்கு ஒருநாள், வீட்டுக்கே வரலைன்ற பேச்சு கூடாது, பாருங்க :-)
இன்றைக்கு ஃப்ளையிங் விஸிட் என்ற கணக்கில் நெருங்கிய தோழியின் வீடு.... கோயம்பேடு ! 'ஒலிக்கும் கணங்கள்' நிர்மலா நிவேதா . 'நுனிப்புல் 'ராமசந்திரன் உஷா வீட்டுப் பாத்திரங்களை இங்கே கொடுத்துட்டுப் போறோம். அடுத்த சந்திப்பில் அவுங்க எடுத்துக்குவாங்க. ஞாயிறு என்பதால் மகனையும் சந்திக்க முடிஞ்சது. இவர் கல்யாணமும் கோவிட் காலத்தில் என்றதால் அவரவர் ஊரில் இருந்து லைவாகப் பார்த்தோம்.
இன்னும் சில சந்திப்புகளை முடிச்சுட்டோமுன்னா.... சிங்கப்பூர் ஏர்லைன் மனசு வச்சால் சட்னு கிளம்பிடலாம்.
டின்னருக்கு பிரியாணி !
மறுநாள் நம்மவருக்குப் பிடிச்ச ஐட்டம் ப்ரேக்ஃபாஸ்ட்டில் ! நம்மவருக்குத் தலைக்கு மேல் வேலை இருக்காம். ச்சலோ பாண்டிபஸார் ! எல்லாப்பயணங்களிலும் இங்கே ஒரு விஸிட் போகாமல் வரமாட்டார்.
தொடரும்.......... :-)
7 comments:
கிர்ர்ர்ர்... இதற்கு பேர் புது போன் அவருக்கு வாங்கி கொடுக்கறதா? பாவம் கோபால் ஸார்.
நீங்கள் சொல்லி இருக்கும் வேளச்சேரி குப்தா பவனில் சென்ற மாதம் நானும் பாஸும் சாப்பிட்டோம். ரசிக்கவில்லை!
அருமை நன்றி
அது சரி புது ஃபோன் யாருக்கு?!!!!
பூரி கிழங்கு பார்க்க சூப்பரா இருக்கு டேஸ்ட்?
சந்திப்புகள் மகிழ்வான விஷயம்...தொடரட்டும்...
கீதா
வாங்க ஸ்ரீராம்,
அப்பழுக்கு இல்லாமல் பளிச்ன்னு இருக்கும் S9+ அவருக்குப் புதுசுதான் இல்லையோ !!!!!
ஃபேஸ்புக் & டிக்டாக் பார்க்க இதுவே யதேஷ்டம்தான் !!!!
அந்த குப்தா பவனில் சாப்பாடு எப்படி இருந்ததுன்னு அவுங்க யாரும் ஒன்னுமே சொல்லலை. நான் கேட்டுருக்கணும், இல்லே.... ப்ச்....
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க கீதா,
புது ஃபோன் கோபாலுக்கும் புத்தம் புது ஃபோன் துளசிக்குமா ஒரு பங்கீடு !
லோட்டஸ் ப்ரேக்ஃபாஸ்ட்டில் குறை ஒன்னும் சொல்ல முடியாது. சென்னையில் எனக்கு ரொம்பப்பிடிச்சதே இங்கத்து ப்ரேக்ஃபாஸ்ட்தான் ! ( ஐ மிஸ் தட் ஈவன் நௌ )
கிளம்பும் சமயம் சந்திப்புகள் கட்டாயம் வேணும். போயிட்டு வரேன்னு சொல்லப் போய்த்தானே ஆகணும் :-)
சந்திப்புகள் இல்லாத பயணம் அத்தனை ஈர்ப்புடையதாக இருப்பதில்லை. சந்திப்புகள் தொடரட்டும். புதிய ஃபோன்..... ஆஹா இது ஏமாற்று வேலை...... பாவம் கோபால் ஜி. :)
Post a Comment