வீட்டுக்குப்போகும்போது நல்ல உடுப்பு வேணாமா ? பயணங்களில் கோவில்களுக்குப் போகும்போது தேவைப்பட்டால் உடுத்திக்கன்னு ஒரு வேஷ்டி கொண்டு வர்றது வழக்கம்தான். இந்த முறை கொண்டு வந்தது, நம்ம அநந்த பதுமன் ஒரு முறை அன்பளிப்பாகக் கொடுத்தது. இதுவரை உடுத்திக்கலையேன்னு அதையும், ஒரு ஷர்ட்டும் கூடுதலாக எடுத்துக்கிட்டேன். டாய்லெட்ரி எல்லாம் ஏற்கெனவே அங்கே கொண்டுபோயிருந்தேன்.
ஆஸ்பத்ரிக்குள் நுழையும் போதும் வெளியே வரும்போதும், தன்னிச்சையா என் தலை 'சம்பவம்' நடந்த இடத்தை நோக்கித் திரும்பும். இப்பவும்தான். வரவேற்பில் இருக்கும் புள்ளையாருக்குப் பூஜை நடந்துருக்கு. புதுசாப் பூச்சூட்டியிருந்தாங்க. ஒரு நிமிட் நின்னு கைகூப்பிக் கும்பிட்டுட்டு மாடிக்குப் போனேன். புள்ளி உறக்கத்தில் !
பல் தேய்ச்சு, ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்ததும், 'இன்னிக்கு டிஸ்சார்ஜ்னு அஃபிஸியலா இன்னும் சொல்லலைதான். இருக்கட்டும். நீங்க முகத்தை சரிபண்ணிக்குங்க'ன்னு டாய்லெட்ரி பையை எடுத்துக்கொடுத்தேன். ஆச்சு. டே ட்யூட்டியில் இருந்த நர்ஸுகள் மருந்து மாத்திரைகள் எல்லாம் நேரா நேரத்துக்குக் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. ட்யூட்டி டாக்டர் விஸிட் வந்தார். செக்கப் பண்ணிட்டு, 'இன்னிக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாமுன்னு ச்சீஃப் சொன்னார்' என்றார்.
அப்பதான் நான் கேட்டேன்.... 'யார் இங்கே ச்சீஃப் டாக்டர் ? இவரை வந்து பார்த்தாரா ? '
'ஆமாம்மா. வந்து பார்த்தார்' னு நர்ஸ் சொன்னாங்க.
"எப்போ வந்தார்? நான் பார்க்கவே இல்லையே!"
பொதுவா ச்சீஃப் ரௌண்ட்ஸ் வரும்போது கூடவே வார்டு டாக்டரும்... இன்னும் பல ட்ரெய்னீஸ் & டாக்டர்ஸ் எல்லாம் வருவாங்க தானே ? அப்புறம்தான் தோணுச்சு.... இது என்ன மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடலான்னு !
'நீங்க அன்னிக்கு பகல், எங்கியோ போயிருந்தப்ப வந்தார்'னு ஒரு நர்ஸ் சாட்சி சொன்னாங்க. சரி. இருக்கட்டும்.
"நான் அவரைப் பார்க்கணும். எப்போன்னு கேட்டுச் சொல்லுங்க"
அப்பதான் நர்ஸிங் சூப்பரின்டென்டன்ட் ரம்யாவும் வந்தாங்க. சம்பவம் நடந்த நாள் நம்மை கவனிச்சுக்கிட்ட நர்ஸுகளும் கூடவே வந்தாங்க. எல்லோருமா சில க்ளிக்ஸ் ஆச்சு :-) செல்ஃபி சரியா வர்றதில்லைன்னதும் ட்யூட்டி டாக்டரே க்ளிக்கினார். அவரை விட்டுட முடியுதா ? ஒரு நர்ஸ், நம்ம ஃபோனில் செல்ஃபி எடுத்தாங்க. கலகலன்னு அறையே கலகலத்துப்போச்சு :-)
கொஞ்ச நேரத்துலே ச்சீஃப் வரச்சொன்னார்னு ஒரு நர்ஸ் கூட்டிப்போனாங்க. ரொம்ப அனுபசாலியான பெரியவரைப் பார்க்கப்போறோமுன்னு அறைக்குள்ளே போனால், ஒரு முப்பத்தியஞ்சு, இல்லே முப்பத்தியாறு இருக்கும் இளைஞர். டாக்டர் கார்த்திக் ராம் சந்தர்.
நம்மவரின் நிலை உண்மையில் எப்படி ? என்ன மாதிரியான கவனிப்பு இனி தேவைன்னு சில பல தகவல்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். அவரும் விளக்கமா (சைகை மொழியிலும்)சொன்னவர், உங்க காது ஆரம்பத்துலே இருந்தே இப்படி இருக்கா ? இங்கே ENT டாக்டரைப் பார்க்கறீங்களான்னார்.
அடடா.... நம்ம காது எபிஸோட் இவருக்குத் தெரியாதுல்லேன்னு.... கங்கை முழுக்கு, ரெண்டு நாட்களுக்கு ஒரு முறைன்னு தொடர்ச்சியான ஃப்ளைட்னு நாலு வரியில் நடந்ததைச் சொன்னதோடு, டாக்டர் சுந்தர் க்ருஷ்ணன் & காது ஸ்கேன் & மருந்துகள்னு ஒரு வரி கூடச் சேர்த்தேன்.
"தொடர்ந்து கொடுக்க வேண்டிய மருந்துகளை எழுதித்தர்றேன். நேரம் தவறாமல் கொடுக்கணும். கம்ப்ளீட் ரெஸ்ட் லே இருக்கட்டும். அடுத்த வாரம் செக்கப்புக்கு வாங்க. எங்கே வீடு?"
"அடுத்த தெருதான். லோட்டஸ்லே இருக்கோம். "
"ஓ.... அப்ப வெளியூர்லே இருந்து வந்துருக்கீங்களா ?"
"ஆமாம். நியூஸிலாந்தில் இருந்து வந்துருக்கோம். "
அப்புறம் கொஞ்சம் சின்னப்பேச்சுகள்.
"எப்போ கிளம்பறீங்க ? "
'இன்னும் ரெண்டு வாரம் இருக்கு. ஆனால் அடுத்த செக்கப் முடிச்சு, ( Can Fly ) பயணிக்கலாமுன்னு சொன்னீங்கன்னா.... கிளம்பிருவோம். அடுத்த வாரம் அப்பாய்ன்ட்மென்டுக்கு, ஃப்ரன்ட் டெஸ்கில் டைம் வாங்கிக்கவா'ன்னு கேட்டதும், அவர் தன்னுடைய கார்டு கொடுத்து, 'இந்த நம்பருக்குப் ஃபோன் செய்யுங்க. டைம் சொல்றேன்'னார்.
நியூஸியில் எங்க நெருங்கிய(டாக்டர்) தோழியிடம் தினசரி ரிப்போர்ட் கொடுத்துக்கிட்டு இருந்தேன். அவுங்கதான் சொன்னாங்க , கேன் ஃப்ளைன்னு ஒரு லெட்டர் வாங்கினால் நல்லது.
ஃப்ரன்ட் டெஸ்கில் இருந்தவரிடம், பில் ரெடி பண்ணச் சொல்லிட்டு அறைக்கு வந்தேன். 'நம்மவர்' ச்சீஃப் டாக்டர் என்னவோ பெருசா 'தன்னுடைய நோய்' பற்றிச் சொல்லி இருக்கார்னு கவலையோடு டிவி பார்த்துக்கிட்டு இருந்தார். பொழுதன்னிக்கும் சினிமா சினிமான்னு பார்க்கும் ஆசாமிக்குக் கற்பனை இருக்காதா என்ன ?
முதல்வேலையா சதீஷுக்கு ஃபோன் செஞ்சு வண்டியை அனுப்பச் சொல்லிட்டு, நம்ம சொந்தப் பொருட்களையெல்லாம் சேகரிச்சுவச்சேன். இதுலே லோட்டஸுலே இருந்து கொண்டு வந்த சாமான்கள் தனித்தனிப் பைகளில்.
நம்மவரை ஒரு வழியா படுக்கையை விட்டு எழுப்பி, உடையை மாத்திக்கிட்டு உக்காரச் சொல்லியாச்.
எழுதிக்கொடுத்த ஒன்னரை முழ நீள மருந்து லிஸ்ட்டைக் கொண்டுவந்து காமிச்சுட்டு, இங்கேயே கீழே வாங்கிக்கறீங்களா இல்லை வேறெங்கேயாவதான்னு கேட்டாங்க நர்ஸ். ஐயோ... மருந்து வாங்கப்போய்த்தானே இவ்வளவும் ஆச்சு ! நீங்களே கீழே இருந்து வரவழைச்சுருங்கன்னேன். அதையும் பில்லில் சேர்த்துறச் சொல்லிருங்கன்னுட்டேன்.
எல்லாமும் ஆச்சு. நான் கீழே போய் பில்லுக்கான தொகையைக் கட்டிட்டு, மேலே வந்ததும், வண்டி ரெடின்னு ட்ரைவர் செல்லில் கூப்பிட்டுச் சொன்னார். அவரை மேலே அறைக்கு வரச்சொல்லி, மூட்டை முடிச்சுகளைக் கொடுத்தனுப்பிட்டு, மெதுவா இவரை நடத்திக்கூட்டிக்கிட்டு வெளியே வந்ததும், நர்ஸஸ் ஸ்டேஷனில் இருந்த எல்லோரும் 'போயிட்டு வாங்கப்பா' ன்னு கோரஸாச் சொல்லி வழி அனுப்புனாங்க. லிஃப்ட்க்கு மின்சார உயர்த்தின்னு எழுதியிருந்தது !
கதவு திறந்ததும் ரம்யா வெளியே வந்தாங்க. நல்ல சகுனம். போயிட்டு வர்றோமுன்னு சொல்லிட்டுக் கீழே வந்தால்.... ச்சீஃப் டாக்டர் அறைக்கதவைத் திறந்துக்கிட்டு டாக்டர் கார்த்திக் வெளியே வர்றார். இன்னும் நல்ல சகுனம் ! லஞ்சுக்குப் போறாராம்.
வாசல் கேட் கடக்கும்போது, 'இங்கேயா விழுந்தேன்'னார் நம்மவர். ஆமாம். சரியாச் சொன்னால் இப்படின்னு தலை தொட்ட இடத்தைக் காலால் காமிச்சுட்டு லோட்டஸுக்கு வந்து சேர்ந்தோம்.
இங்கேயும் நிறையப்பேர் வந்து எப்படி இருக்கீங்கன்னு இவர்கிட்டேயே விசாரிச்சுக்கிட்டுப் போனாங்க.
பகல் சாப்பாட்டுக்கு ஒன்னும் வேணான்னார். மனசு நிறைஞ்சா வயித்துலே பசி இருக்காது ! ஒரு சூப் மட்டும் கீழே இருந்து வரவழைச்சுக் குடிக்கக் கொடுத்துட்டு, நம்ம நட்புகள், உறவுகளுக்கெல்லாம் 'வீட்டுக்கு' வந்தாச்சுன்ற தகவலைச் சொல்லிட்டு நானும் கொஞ்ச நேரம் ரெஸ்ட்தான்.
ஒரு நாலுமணி போல் ஆனதும் தலை பிச்சுக்க்க்க் போக நல்லதா ஒரு ஷவர். கீழே வண்டி இருக்கும்போதே கோவிலுக்குப்போய் வரலாமுன்னு கிளம்பி, நம்ம அடையார் அநந்த பதுமன், வெங்கடநாராயணா ரோடு பெருமாள் னு வண்டியை விட்டு இறங்காமலேயே வாசலுக்கு முன் நிறுத்தி, நன்றி சொல்லிட்டு, வந்தோம். கால்கள் வெலவெலன்னு இருக்காம். இருக்காதா பின்னே ? பலப்படுத்தலாம்.....
லோட்டஸில் இறங்கும்போதுதான் கவனிச்சேன்.... வண்டியின் முன் வேல் ! இனி எங்கேயும் போகலைன்னு வண்டியைத் திருப்பி அனுப்பிட்டோம்.
ஒரு ஏழு மணி போல நம்ம நெருங்கிய தோழி அலைகள் அருணா தம்பதியர் வந்தாங்க. கூடவே ராச்சாப்பாடும். ! சுடச்சுட இட்லிகள் !
இவ்ளோநாள் வயிறுவாடாமக் கவனிச்சத் தோழிகளுக்கு எந்த வகையில் நன்றி சொல்லமுடியும் ?
வீட்டுக்குத்தான் வந்தாச்சே.... இனி இங்கேயே சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணிக்கலாம். கீழே சொன்னால் தனியாக சமைச்சுக் கொடுப்பாங்கதான்.
ஹாஸ்பிடல் ரிவ்யூ ஒன்னு ரெண்டு வரிகளில் எழுதி அனுப்பிட்டு தூங்கணும்.
The Drs and staff are very good and very caring persons. I wish them for more success and very best in their life & career. God bless them.
தொடரும்........ :-)
11 comments:
அப்போதைய உங்கள் அனுபவத்தை அதே பதட்டம் குறையாமல் தந்து எங்களுக்கும் இந்த வாரம் படிக்கும்போது நிம்மதியை உண்டாக்கி இருக்கிறீர்கள்!
எதிர்பாராத்து.பரவாயில்லை. ரெஸ்ட் எடுத்திருப்பீர்கள். எல்லாம் நல்லபடியாக முடிந்ததில் சந்தோஷம்.
எனக்கும் ஆஸ்பத்திரியிலும் போட்டோ பிடிக்கும் வழக்கம் உண்டு. அப்பா ஐசியுவில் இருந்தபோதும் படமெடுத்திருக்கிறேன்.
அருமை நன்றி
வாங்க ஸ்ரீராம்,
திரும்பிப் பார்த்தால்..... பதட்டமாத்தான் போயிருது..... ப்ச்...
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க நெல்லைத்தமிழன்,
ரொம்ப பதற்றத்தில் இருந்தால் படம் பிடிக்கத் தோணாது. கொஞ்சம் செட்டில் ஆனதும்தான்
நோயாளிக்குக் காண்பிக்கவாவது படம் எடுக்கணுமுன்னு தோணிப்போகுது. அதுவும் இப்பெல்லாம் கையில் செல்ஃபோன் வேற இடம்பிடிச்சுருக்கே !
துளசிக்கா சூழ்நிலைய நல்லா ஹேண்டில் பண்ணிருக்கீங்க. இதுதான் முக்கியம். ரெண்டாவது எங்க போனாலும் உலகில் எந்த இடத்திற்குப் போனாலும் எல்லார்க்கிட்டயும் எந்த வித்தியாசமும் பாகுபாடும் பார்க்காம அன்போடு பழகி நட்பு உண்டாக்கிக் கொண்டு, அவர்களுக்கும் முக்கியத்தும் கொடுத்து புகைப்படம் எடுத்து நிஜமாகவே உங்களைப் பார்த்து வியக்கிறேன். இந்தப் பண்பும் குணமும் தான் உங்களுக்கு எங்கு சென்றாலும் உதவிகளும் அன்பும் கிடைக்க இறைவன் துணை நிற்கிறான்! எல்லாருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல விஷயம், Great Akka!!! உங்க்ளுக்கும் அண்ணாவுக்கும் நல்லதே நடக்கும்.
கீதா
வாங்க கீதா,
எல்லாம் பெருமாளின் அருளன்றி வேறு ஏது ?
க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்ச்
44
ப்-[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[
655555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555535522222222222222222222223255555555555555555555]\
33333333333333333333333333333333
அவனருளால் எல்லாம் நலமே.மகிழ்ச்சி
முடிவில் எல்லாம் நலம். சூழலை சரியான முறையில் சமாளிப்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. எல்லோருக்கும் கைவருவதில்லை.
Post a Comment