Monday, May 15, 2023

இப்படிச் சொல்லும்படி ஆச்சேன்னு............ கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 48

காலையில் ட்யூட்டி நர்ஸ் வந்ததும் நல்ல சேதி ஒன்னு சொன்னாங்க.  எல்லா ரிப்போர்ட்டும்  நல்லதா வந்துருக்காம்.  நிம்மதியோடு  லோட்டஸுக்குக் கிளம்பிப்போய்க்    குளிச்சுட்டுக் கொஞ்சம் நல்லாவே சாப்பிட்டேன்.   இவருக்கானவைகளையும்  பார்ஸல் பண்ணி வாங்கிக்கிட்டுத் திரும்ப ஹாஸ்பிடலுக்கு வந்துட்டேன். 
Deep Breathing Exerciser  (Respirometer) ஒன்னு கொண்டு வந்து நம்ம அறையில் வச்சுருந்தாங்க. இவருக்கு ட்ரிப்ஸ் நிறுத்தியிருந்தாங்க.   தேவைப்பட்டால்  போட்டுக்கலாமாம்.  கையைக் கட்டிப்போட்ட மாதிரி இருந்ததுக்கு இப்போ விடுதலை. மெதுவா பாத்ரூம் வரை நடந்து போக முடிஞ்சது.  பாதுகாப்புக்குக் கூடவே ரெண்டு பேர்.    பொதுவா ஹாஸ்பிடல்களில்  பாத்ரூமில் கைபிடிச்சுப்போக ரெய்ல்ஸ்  இருக்கணும். இங்கே இல்லை......
பகல் சாப்பாடு என்ன வேணுமுன்னு  பதிவுலகத்தோழி 'நுனிப்புல்' ராமசந்திரன் உஷா, கேட்டாங்க. ரஸம் வேணுமுன்னார்.  பதினொரு மணிக்கு  வந்துட்டாங்க.  கொஞ்சநேரம்தான் பேசிக்கிட்டு இருந்தோம்.  அவுங்களோட ரங்ஸ்,   இங்கே விட்டுட்டு ஒரு வேலையாப்போனவர்,  கீழே வெயிட்டிங்னு ஃபோன் பண்ணதும்   கிளம்பிப்போனாங்க.  வீடு ரொம்ப தூரம் என்பதால்  அதுதான் சரி.  (எனக்கு செல்ஃபி எடுக்க வர்றதில்லை )
 ப்ளாஸ்க்லே  ரஸம்.  சூடாக இருந்துச்சு. கூடவே பீன்ஸ் கறி.  ஹாட் பேக்கில் சாதம்.  எதுக்காக  இவ்ளோ கொண்டு வந்தாங்க ?  ஒரு நாலு நாளைக்கு வச்சுக்கவா ? 


மத்யானமா நர்ஸிங் சூப்பரின்டென்டன்ட் வந்து பார்த்தாங்க. வசதிகள் எல்லாம் சரியா இருக்கா? நர்ஸிங் ஸ்டாஃப் சேவைகள் எப்படி ? ஏதாவது குற்றங்குறை இருந்தால் சொல்லுங்கன்னு கேட்டாங்க.  கட்டுனவீட்டுக்குப் பழுது சொல்ல நமக்காத்  தெரியாது?

பாத்ரூம் பற்றிச் சொன்னேன். நர்ஸ்கள்  நல்லபடியாப் பார்த்துக்கிட்டாங்க, 'ஒரே ஒரு நைட் ட்யூட்டி நர்ஸ் தவிர'ன்னேன்.  அது ரெண்டுமூணு நாட்களுக்கு முன்னே.....  ஆனால் அவுங்க பெயரைச் சொல்லலை. அசைய முடியாமல் நம்மவர் கிடப்பில் இருந்தப்ப....  ஒரு தேவைக்காக   நானே  நேரில் போய் அவுங்களிடம் சொல்லியும் கூட ( நம்ம அறைக்கு நேராத்தானே நர்சஸ் ஸ்டேஷன்)  ,  அவுங்க  வராமல்  ரொம்ப நேரம் கடத்திட்டாங்க.  லிப்ஸ்டிக் போட்டுக்கும் வேலையில் பிஸியா இருந்தாங்க.   முடிச்சுட்டு வருவாங்கன்னு நான்  அறைக்கு வந்துட்டேன்.  கொஞ்ச நேரம் ஆச்சு.  அப்பவும்  வரலை.  திரும்பப்போய் சொல்லலாமுன்னு  அறைக் கதவைத் திறந்தால், செல்ஃபோன் பார்த்துக்கிட்டு இருந்தாங்க.   அப்ப இன்னொரு நர்ஸும்  அங்கே இருந்தாங்க. அவுங்க உடனே வந்து உதவி செஞ்சாங்க.  அதன் காரணமா.....  எனக்கு மனசில் ஒரு சின்ன சலிப்பு  வந்தது உண்மை. 

நம்ம  அறைக்கு வந்துபோன மற்ற பணியாளர்கள் எல்லாம் நல்லமுறையில் அவுங்க வேலைகளைச் செஞ்சுட்டுப்போனாங்க. முக்கியமா பார்வதியம்மான்னு குறிப்பிட்டுச் சொன்னேன். நர்ஸிங் சூப்பரின்டென்டன்ட்  எல்லாம் நோட் பண்ணிக்கிட்டாங்க. இப்பதான் ரெனவேஷன்  ஒவ்வொரு பகுதியா நடந்துக்கிட்டு இருக்கு.  பாத்ரூமை மேம்படுத்திக்கிட்டு வர்றோம். ரெய்லிங்   ஐடியா நல்லது. போட்டுறலாம்னு தன்மையா சொன்னாங்க. அவுங்க பெயர் ரம்யா.  அதென்னமோ சிலரைப் பார்த்தால் நமக்குப் பிடிச்சுப்போகுது இல்லையா ?  (ஒரு வேளை அந்த குறிப்பிட்ட நர்ஸுக்கு   என்னைப் பார்த்தால் பிடிச்சுருக்காது போல ! )

நான் பெயரைச் சொல்லலைன்னாலும்,  அவுங்க யார்னு சட்னு புரிஞ்சுக்கிட்டாங்க போல..... இதழோரம் ஒரு சின்னச் சிரிப்பும், கூடவே இருந்த இன்னொரு  நர்ஸின் கண்களுடன் ஒரு  சந்திப்பும் !  

உடம்பு நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கு. நாளைக்கு அநேகமா டிஸ்சார்ஜ் செய்யலாமுன்னு  சொல்லிட்டுப் போனாங்க.

அன்றைக்கு இரவு பழையபடி  அந்த குறிப்பிட்ட நர்ஸின் ட்யூட்டி. அந்தப்பக்கம் நான் போகும்போதும் வரும்போதும் அவுங்களை நான் பார்த்தேன் என்றாலும்  அவுங்க  என்னைத் தலைதூக்கிப் பார்க்கவேயில்லை. ஒருவேளை நம்ம புகார் அவுங்க காதுக்கு எட்டி இருக்குமோ ?   இருக்கலாம்.   ஆனால் சொன்னதெல்லாம்  உண்மைதானே ! ஏண்டா சொன்னோம்னு சின்ன உளைச்சல் என் மனசுக்குள்ளே இருக்குதான். கண்டுக்காம இருந்துருக்கலாமோ ?  இப்ப நினைச்சு என்ன செய்வது ? சொன்ன சொல்லை அள்ளி எடுக்க முடியுமா ? அவுங்க தொழிலுக்கு அந்தப் போக்கு சரியில்லைதானே ?   குரங்கு மனசு சும்மா இருக்குதா ? இப்ப என்னைப்போட்டுப் பிறாண்டிக்கிட்டு இருக்கு...ப்ச்....   

வார்டில் இருக்கும்  நோயாளிகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி  நைட் ட்யூட்டியில் ரெண்டு இல்லை மூணுபேர்  இருக்காங்க.   மற்ற நர்ஸ்தான்  வந்து வந்து பார்த்து, விசாரிச்சுட்டுப் போனாங்க. 

பொழுது விடிஞ்சதும் கொஞ்சம் மகிழ்ச்சியா இருந்துச்சு. இன்றைக்கு வீட்டுக்கு விட்டால் தேவலை !

தொடரும்........... :-)


10 comments:

said...

நர்சின் மீதுள்ள குறையை வெளிப்படையாகச் சொல்வது நல்லது.

அவங்க தொழிலில் சலிப்போ அல்லது ஆர்வமின்மையோ பொழுதைப் போக்குவதோ இல்லை இறுதியில் டிப்ஸ் கேட்பதோ இருக்கக்கூடாது. இது அவங்க ஃப்ரொஃபஷன்.

said...

எல்லாம் நன்மைக்கே;

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

அந்த நர்ஸும் மற்றவர்களைப் போல் சின்ன வயசுப் பெண்தான். அநேகமா ஒரே பேட்ச் ஆகவும் இருக்கலாம். அந்த வயசுக்குரிய அழகுணர்ச்சி இருப்பதில் தப்பே இல்லை. ஆனால் எந்த இடத்தில் ட்யூட்டியில் இருக்கிறோம் என்பதைப் புரிஞ்சுக்கலை. ப்ச்....

said...

வாங்ட விஸ்வநாத்,

இதுலே எது நன்மைன்னு புரியலை !

said...

சில சமயங்களில் இந்த உறுத்தல் இருக்கும்தான்.  எனக்கும் அபப்டி ஒரு உறுத்தல் சென்ற வாரம் ஏற்பட்டது.  அதனால் புரிந்து கொள்ள முடிந்தது.

said...

வாங்க ஸ்ரீராம்,

அது இக்கட்டான நிலை..... ப்ச்....

said...

அப்புறம் டாக்டர் செக்கப்பில் 'காதுக்குள்ளே இருக்கும் திரவத்தில் என்னமோ ஆகி , பேலன்ஸ் போயிருக்கு'ன்னு சொல்லி மருந்து சாப்பிட்டு பத்துநாளில் சரியாச்சு. //

துளசிக்கா எனக்கும் இது ஏற்பட்டது கீழ விழுந்ததில் தலையில் பின் பக்கம் அடிபட்டதில் smell பண்ணும் சென்ஸ் போனதில் சுவையும் தெரியாமல் (உப்பு காரம் புளிப்பு துவர்ப்பு எல்லாம் தெரியும் ஆனால் flavour தெரியாது) போனது இப்ப அப்பப்ப தெரியும் திடீர்னு ஒன்னுமே தெரியாது ஆனாலும் ரசித்து சாப்பிடுவேன்!!!!!

அப்படி அடிபட்டதில் மற்றொன்று inner ear fluid பாதிப்பு இதுக்குமாத்திரை எதுவும் எடுத்துக்கலை. epley maneuver செஞ்சு சரியாகிடுச்சு. இப்பவும் எப்பவாச்சும் வந்தா இது செய்து ஒரே நாள் ல சரியாகிடுது.

கீதா

said...

வாங்க கீதா,

இது ரொம்பநாள் இருந்து, அப்புறம் ஒரு பேலன்ஸ் க்ளினிக் போய் ரெண்டு ஸிட்டிங் ஆனதும் சரியாச்சு. அதைப்பற்றி விரிவாகப் பதியணும்தான் !

said...

நர்ஸ் குறையை சொன்னது நல்லது .முக்கியமாகன பணியில் இருப்போர் தங்கள் கடமையை உணரவேண்டும்.

said...

நர்ஸ் செயல் - சேவைத் துறையில் இருப்பவர் இப்படிச் செய்வது நல்லதல்ல. அவரால் மொத்த துறைக்கும் கெட்ட பெயர் வந்துவிட வாய்ப்புண்டு. அதைக் குறித்து சொன்னதும் நல்லதற்கே.