பண்டிகைகள், விழாக்கள் எல்லாம் அதுபாட்டுக்கு வந்துக்கிட்டு இருந்தாலும், நாட்டின் கோவிட் நிலை அனுசரிச்சு அரசு என்ன லெவல்னு சொல்லுதோ அதுக்கேத்தமாதிரி ஆடிக்கிட்டு இருந்தோம். அதனால் சில சமயம் கோவில் விஸிட் கூட இல்லாமப்போயிருது. இத்தனைக்கும் எங்க தெற்குத்தீவில் கோவிட் நோய் இல்லவே இல்லை. நாட்டின் ஒருமைப்பாடு என்ற நிலையில் நாங்களுமே பத்தியம் சாப்பிடவேண்டியிருக்கு. பலசமயங்களில் நம்ம நல்லதுக்குத்தானேன்னு நினைச்சாலும், சிலசமயம் எரிச்சல் வருவதைத் தடுக்க முடியலை. ஊரில் இருக்கும் ரெண்டு கோவில்களில், ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவில் ஒன்னு. அங்கே இருந்த பண்டிட் ஸ்வாமிகளுக்கு, விஸா நீட்டிக்க அரசு மறுத்ததால்...... அவர் கிளம்பி குஜராத்துக்கே போயிட்டார். இங்கே பூஜை செய்ய ஆளில்லாததாலும், கோவிட் காரணமாகவும் (! ) கோவிலை மூடி வச்சுட்டாங்க.
அப்புறம் விசாரிச்சதில் பூஜை முடங்காமல் இருக்க, அவுங்க ஆட்களிலேயே யாராவது வாலண்டியர்கள் தினசரி ஆரத்தி எடுக்கறாங்கன்னு தெரிஞ்சது. பொதுமக்கள்தான் தரிசனம் செஞ்சுக்க முடியாமல் போயிருச்சு. இந்தக்கோவில் முழுக்க முழுக்க குஜராத் மக்களின் நிர்வாகத்தில் இயங்குது.
இன்னொரு கோவில்தான் நம்ம ஹரே க்ருஷ்ணா. ஊரின் மூத்த கோவில். ஆரம்பிச்சு முப்பத்தியொன்பது வருஷங்களாச்சு. நாம் இங்குவந்த ஆரம்பகாலங்களில் இருந்து இங்கேதான் போய்க்கிட்டு இருக்கோம். நிலநடுக்கத்தில் கோவில் இடிஞ்சுட்டதால்.... ஆறு வருஷமாக் காத்திருந்து புதுக்கோவில் அதே இடத்தில் கட்டிட்டாங்க. அதுவரை உற்சவமூர்த்திகளை வச்சே... வாரம் ஒரு முறைன்னு சமூகக்கூடத்தில் கும்பிட்டுக்கிட்டு இருந்தோம். புதுக்கோவில் வந்ததுமுதல் எல்லாம் வழக்கம்போல மீண்டாச்சு.
கோவிட் ரூல்ஸ்க்கு ஏத்தாப்போல இங்கேயும் தான்..... ஆனால் உள்ளேயே பண்டிட்கள் தங்கி இருப்பதால் நித்யப் பூஜைகள் முடங்கலை. ஸ்ரீ வைஷ்ணவக் கேலண்டர்படிதான் எல்லாமும்.
நம்ம யுகாதியில் சைத்ர மாசம் ஆரம்பிச்சு ஃபல்குண மாசம் ( சித்தரை - பங்குனி )வரை இருக்கும் பனிரெண்டு மாசங்களுக்கு வைஷ்ணப்பெயர்கள் இருக்கு. எல்லாம் மஹாவிஷ்ணுவின் நாமங்களே ! விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ஹ்ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா, கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா!
இன்னொரு வகை த்வாதஸ நாமம், இல்லே !
இப்போ தாமோதர மாசம் நடக்குது. கோவிலில் பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றிக் கும்பிடலாம். நாம் விளக்கெல்லாம் கொண்டுபோக வேணாம். கோவில் வகையிலேயே குட்டியூண்டு நெய்ப்பந்தங்கள்(Ear bud size ) வச்சுருப்பாங்க. ஒன்னு எடுத்துக் கொளுத்திக் கும்பிடவேண்டியதுதான். தாமோதராஷ்டகம் சொல்வாங்க. தெரியலைன்னா போர்டுலே இருப்பதைப் பார்த்துப் படிக்கலாம். இதுலே ஒரே ஒரு கஷ்டம்தான் நமக்கு....
அந்தக் காலத்துலே சமஸ்க்ரதம், பெங்காலி மொழிகளில் இருந்த ஸ்லோகங்களையும், பாடல்களையும் , ஹரேக்ருஷ்ணா இயக்கம் ஆரம்பிச்சப்ப, வெளிநாட்டவருக்காக இங்லிஷில் எழுதி வச்சுருக்கும் வகை இது. எந்தப் புண்ணியவான் கைங்கரியமோ..... அதைப்பார்த்துப் படிக்கும்போது உச்சரிப்பெல்லாம் நமக்குச் சட்னு புரிஞ்சுக்கும்படி இல்லை. ஆனால் இயக்கத்தில் இருக்கும் பக்தர்கள் இதுக்கான வகுப்புகளுக்குப்போய் கத்துக்கிட்டதால் அவுங்களுக்குச் சுலபமா வருது. இங்லிஷில் இல்லாமல் ஹிந்தியில் இருந்தால் நமக்குச் சுலபமா இருக்கும். நல்ல வேளை.... மற்ற பக்தர்கள் இப்படியெல்லாம் கஷ்டப்படவேணாமுன்னு யார் வேணுமுன்னாலும் சுலபமாச் சொல்லும்படி மஹாமந்த்ரம் உருவாக்கிய ஸ்ரீ ல ஸ்ரீ பிரபுபாதா அவர்களுக்குக் கோடி நமஸ்காரம் !
ஹரே க்ருஷ்ணா ஹரே க்ருஷ்ணா க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே !
மகளின் தோழி வாலண்டியர் வேலை செய்யும் இடத்தில் செடிகள் விற்பனை இருக்குன்னாதால் ஏதாவது தேறுமான்னு பார்க்கப் போனோம். மூணு நாட்களா நடக்குது. தீபாவளி சமயத்து வேலைகள் காரணம் போக முடியலை. இன்றைக்குத்தான் கடைசி. எட்டிப்பார்த்துட்டு வரணும். ரொம்பச் செடிகள் இல்லை. ஒன்னே ஒன்னு நம்மிடம் இல்லாதது கிடைச்சது. ஆனால் மரத்தில் செஞ்ச ஒரு ப்ளான்டர் நல்லா இருக்குன்னு வாங்கினோம்.
வீட்டுக்கு வரும் வழியில் கார்டன் சென்டர் போய்க் கொஞ்சம் பூச்செடிகள் வாங்கினோம். ஏற்கெனவே விதைபோட்டு வளர்த்துப் பூக்கள் வரும் சமயம் இப்படி வாங்கி வச்சால் நோகாமல் தோட்ட வேலை செய்யலாம் இல்லை?
நம்ம வீட்டு வழக்கப்படி இப்படி எது வாங்கினாலும் நம்ம பெருமாளுக்குக் காமிச்சுட்டு, 'க்ருஷ்ணார்ப்பணம்.... நீரே பார்த்து வளர்க்கணுமு'ன்னு பொறுப்பைக் கொடுத்துட்டால் ஆச்சு. அவர் பார்த்துப்பார் !
நம்ம ரஜ்ஜுவுக்கு இந்த ப்ளான்டர் ரொம்பப்பிடிச்சுப் போச்சாம்!
ஆஹா.....
6 comments:
செடிகள் எல்லாம் பார்க்க சூப்பர்.
ரஜ்ஜு சோ ஸ்வீட்டு! உள்ளேயே செட்டில் ஆயுடுவான் போல!
கீதா
நிகழ்வுகள் அனைத்தும் நன்று. செடிகள் பராமரிப்பு நல்ல ஒரு பொழுதுபோக்கு. ரஜ்ஜு கலக்குகிறார்....:)
"PLANTS SALE" ன்னு எழுதியிருக்கணும் தானே ?
வாங்க கீதா,
செடிகள் அழகுதான். ஆனால் வேலை அதிகமாகிருது...... ரஜ்ஜு ரொம்ப நோஸி :-) நம்ம க்வாலிட்டி இன்ஸ்பெக்டர்.
வாங்க வெங்கட் நாகராஜ்,
நம்மூர் நியூஸியின் கார்டன் ஸிட்டி என்பதால் ஒரு தோட்டம் வச்சே ஆகணும். முந்திமாதிரி இப்போ தோட்டவேலை செய்ய முடியறதில்லை... ப்ச்....
ரஜ்ஜுதான் வீட்டு உடமஸ்தன்.
வாங்க விஸ்வநாத்,
எஸ் மிஸ் :-)
Post a Comment