Monday, March 14, 2022

இப்பெல்லாம் யார் ஸார் ஃபோட்டோ ஆல்பமெல்லாம் வாங்கறாங்க ?

உண்மைதான். எப்போ டிஜிடல் ஃபோட்டோஸ் எடுக்க ஆரம்பிச்சோமோ.... எல்லாம் ஃபோனிலும், கம்ப்யூட்டரிலும், எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவிலும்தானே  இருக்கு. இதுலே ஒரு வசதி ..... சட்னு தேடி எடுக்க முடியும்.  பழைய காலத்துப் ஃபோட்டோ ஆல்பத்தில் ஒன்னு தேடணுமுன்னா.... தாவு தீர்ந்து போகுதுல்லே ? 
இதுலே  'நம்மவர்' தன் கைவரிசையை ஒரு முறை ஓசைப்படாம காட்டிட்டார்.  கண்டுபிடிச்சப்பிறகுக் 'கத்திச் சண்டை' போடவேண்டியதாப் போச்சு.  ஒரு காலக்கட்டத்துப் படங்கள் ஒரே ஆல்பத்துலே இருப்பதுதானே நல்லது.  ஆல்பத்துலே புதுமை பண்ணறேன்னு  நிறையப்படங்களை 'யஹாங் ஸே வஹாங் & வஹாங் ஸே யஹாங்' னு கலந்துகட்டி வச்சுருக்கார். கொஞ்சம் லேட்டாத்தான் கண்டுபிடிச்சேன்.  எடு கத்தியை.... சண்டைபோடத்தான்....  ஒன்னு ரெண்டு ஆல்பமுன்னா பரவாயில்லை. நம்மாண்டை சின்னதும் பெருசுமா  ஒரு அம்பது ஆல்பம்ஸ் இருக்கே....   

 நல்லவேளை டிஜிடல் ஆச்சோ... .....    ஆல்பம் வாங்கியே நொடிச்சுப்போன குடும்பம் என்ற அவப்பெயரில் இருந்து தப்பிச்சோமோ....

மார்கெட்டில் ஒரு மரப்புத்தகம் பார்த்தேன்.  என்னவா இருக்கும்னு திறந்துபார்த்தால்   ஃபோட்டோ ஆல்பம்!   இப்பெல்லாம் யார் ஸார் ஃபோட்டோ ஆல்பமெல்லாம் வாங்கறா? அதான் மார்கெட்டுக்கு வந்துருச்சு.  ஆனால் நான் வாங்கினேன். நம்ம கற்பனை கோடோன் சும்மாத்தானே கிடக்கு. எதாவது ஆப்டாது ?

கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சதும், உள்ளே இருக்கும்  படம்  சொருகி வைக்கும் ப்ளாஸ்டிக் கத்தையை எடுக்க வந்துச்சு. எடுத்தாச்.  செவ்வக வடிவு, நீச்சல் குளம் நல்லா இருக்காது? எடு அந்த ஹல்திராம் ப்ளாஸ்டிக் டப்பாவை.  உள்ளே வச்சுப் பார்த்தால் கச்சிதமாப் பொருந்துது.  தண்ணீர் நிரப்பி அதுலே ரெண்டு சொட்டு ப்ளூ ஃபோட் கலரைச் சேர்த்தேன்.



உடனே குளிக்க தேவலோக மக்கள் பறந்து வந்தாங்க. அதான் இறக்கைகள் இருக்கே :-)  டப்பா தெரியாமல் இருக்க எதாவது செய்யணுமே.... கண்ணாடிச்சுவர்னு விட்டுடலாமா ? ஊஹூம்....   கைவசம் இருக்கும்  தங்க ரிப்பனை எப்படி மறந்தேன் ? 

தண்ணீரில் கலர் போடும்போதே  நம்ம ஆள் வந்து பார்த்தான். வீட்டுலே ஒன்னு நடந்துறக்கூடாதே.........

 தண்ணீர் ஆபத்துன்னு தெரிஞ்சது... எனக்குத்தான். கீழே கார்பெட்டில் கொட்டிட்டா.... நீலமாகிறாது ?  அதுவுமில்லாம தண்ணீர்ன்னா அடிக்கடி மாத்தணும். இல்லைன்னா நாறிடாதோ ? 
தண்ணிக்குப் பதிலா ஃபோம் ஷீட்.  அல்மோஸ்ட் அதே எஃபெக்ட். போதுமே!  எதாவது விசேஷ டிஸ்ப்ளேன்னா... தண்ணீர் நிறைச்சதை வச்சால் ஆச்சு, இல்லையோ ?
ரஜ்ஜுவின் பீச் இப்போ காலி.  அதுக்கும் வழி கிடைச்சது. சிக்ஸ் பேக் வச்ச ஒரு ஆள் வந்து  ஸன்பாத் எடுக்க உக்கார்ந்தார்.  ரொம்ப வெயிலும் ஆகாது... இங்கே ஓஸோன் லேயரில் ஓட்டை விழுந்ததால் ஸ்கின் கேன்ஸர் கொஞ்சம் அதிகம்தான்.  போடு ஒரு சட்டையை !  கருப்புச் சட்டைக்காரன் ஆனான்.  ஆல் ப்ளாக் :-) 
வந்து பார்த்த 'பெரியவர்களுக்கு'  அது யார்னு விளக்க வேண்டியதாப் போச்சு... அடடா.....  எடு அந்த வெள்ளைக்கலரை.....  சின்ன ப்ரஷ் தேட நேரம் இல்லை. தாற்காலிக ஏற்பாடா ஒன்னு வரைஞ்சு விட்டேன். புலியப் பார்த்து.... பூனை.... கதைதான்.

பார்க்கலாம். புதுச்சட்டை ஒன்னு தைச்சு, அதில் சரியான டிஸைன் வரைய எப்போ நேரம் வாய்க்குதோ ? யார் கண்டா ?

ஆங்.......... அந்த எடுத்துவச்ச ஆல்பத்துலே ஒரு பெட்டி நிறைய வச்சுருந்த  படங்களில் கொஞ்சம் எடுத்துப் போட்டு வச்சாச். ச்சும்மாக்கிடந்தா நல்லாவா இருக்கும் ?  :-)



10 comments:

said...

அருமை நன்றி

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

அலங்காரங்கள் எல்லாம் அழகாகவே வந்திருக்கிறது.

said...

நல்ல கற்பனை. நல்ல கைவேலைப்பாடு. அழகு.

said...

செம க்ரியேட்டிவ். கற்பனையும். கைவண்ணம் அழகோ அழகு துளசிக்கா..ரசித்துப் பார்த்தேன். எனக்கு என் பழைய நினைவுகள் வந்து வந்து போச்சு!!

கீதா

said...

சிறப்பான ஏற்பாடுகள். அனைத்தையும் ரசித்தேன்.

said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா !

said...

வாங்க ஸ்ரீராம்,

நன்றி !

said...

வாங்க கீதா,

எப்பவும் இங்கே பழைய நினைப்புதான்..... அந்த நாளும் வந்திடாதோ....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ரசிப்புக்கு மிகவும் நன்றி !