Friday, March 04, 2022

விஜயதசமி 2021

நம்ம வீட்டில் வழக்கமா  விஜயதசமிக்கு, ஸ்ரீ விஷ்ணுசஹஸ்ரநாமம் பாராயணம் நடக்கும். நண்பர்கள் குடும்பத்தோடு கலந்துகொள்வார்கள்.  அன்றைக்கு வேலைநாளாக இருந்துவிட்டால் நாங்கள்  வீட்டோடு பூஜை செய்துவிட்டு, தொடர்ந்துவரும் வீக் எண்ட் சனிக்கிழமை பாராயணம் வைத்துக்கொள்வோம்.  அப்பதானே எல்லோராலும் வரமுடியும், இல்லையா?
1999 முதல் இதுவே  வழக்கமா இருக்கு. இடையில் ஒரு வருஷம் நாம் ஊரில் இல்லை. பயணத்தில் இருந்தோம். இந்த முறை பயணத்தில் இல்லைன்னாலும் குழுப் பாராயணம் வைக்கலை.  நம்மவர் கண் இன்னும் பிரச்சனையா இருக்கே.... எல்லாம் சரியானபிறகு வச்சுக்கலாமுன்னு நாந்தான் சொன்னேன். போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு இந்தக் கோவிட் வேற.... கூட்டம் கூட்டவே பயமாவும் இருக்கு. நம்மால் மற்றவங்களுக்கு ஏதும் ஆகிறக்கூடாதே....
வேணாமுன்னு முடிவு பண்ணிட்டா, அதுக்கான காரணங்களைக் கண்டுபிடிக்கறது கஷ்டமா என்ன ?  :-)
இன்று விஜயதசமி. நாங்க மூணுபேருமாச் சேர்ந்து பாராயணம் ஆச்சு.  ப்ரஸாதமா அக்காரவடிசில்.  வழக்கமா நம்ம கொலு விஸிட்டுக்கு வரும் தோழிகள் இருவர், இன்றைக்குத்தான் வர்றாங்க.



உள்ளூரில் பரதநாட்டியப் பள்ளி நடத்தும் தோழி (இவுங்கதான் நாட்டியப்பள்ளி முன்னோடி.  13 வருஷமா  பள்ளி நடக்குது. )  முழுத் தொழில் வகையில் எஞ்சிநீயர்.  பரதம் பார்ட் டைம். வீக் எண்டுகளில் வகுப்புகள். ஒரு அம்பது மாணவிகள் இருக்கலாம்.  இந்த வருஷ ஷோகேஸ் ப்ரோக்ராம் படம் கீழே ! 
இவுங்க எப்பவும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பாங்க.   இவுங்களோட  நாட்டிய நிகழ்ச்சிகளும் சொன்னா சொன்ன நேரத்துக்கு 'டான்'னு ஆரம்பிச்சுரும் !  இந்த குணம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் ! சரியா அஞ்சு மணிக்குத் தாயோடு ஆஜர்! 

https://www.facebook.com/1309695969/videos/244292304223485/

நம்ம கொலுவுக்கும் விஜயதசமி நாளுக்கும்  இன்று சிறப்பு நிகழ்ச்சியாக தோடய மங்களம்  'ஜய ஜானகீரமண ஜய விபீஷண சரண'
மேலே இருக்கும் சுட்டியில் பார்க்கலாம்.

இன்னொரு தோழியும் வந்தாங்க. முதல்முறையாக தோழியின் மகளும்.  நாட்டிய மணி வேற !  ஆனால் ஹாலிடே ஜாப்னு வேலைக்குப் புதுசா சேர்ந்துருக்காங்க , இப்போ போகணும் என்பதால்  'ஆட வைக்கலை'    அடுத்த வருஷம் கொலுவுக்கு அட்வான்ஸ் புக்கிங் ஆச்சு :-)



மகளின்  நடனம் இங்கே, கீழே  இந்தச் சுட்டியில் !

https://www.facebook.com/1309695969/videos/10219708021513603/

இன்று மனசுக்கு நிறைவாக இருந்த நாள் !


எல்லோருமாக் கிளம்பிப் போனதுக்கப்புறம், நாங்களும் நம்ம சநாதன் ஹாலுக்குக் கிளம்பினோம். அங்கேயும் நவராத்ரி கடைசிநாள் விழா.  நல்ல வேளையா ஹவன் ஆரம்பிக்கும் சமயம் போயிட்டோம் !  அங்கே வழக்கம்போல் ஒன்பதுநாள் விழா என்றாலும் இந்த வருஷம் நமக்கு மூணு நாட்கள்  அமைஞ்சது!  

மறுநாள் புனர்பூஜை செய்து, கொலுவைப் பிரிச்செடுத்ததும்  சட்னு ஒரு வெறுமை மனசுள் வந்துபோனது நிஜம்.  உடனே நம்ம கொலுப்படிகளில் வெவ்வேற பொம்மைகள் வந்து இடம் பிடிச்சதும் எல்லாம் பேக் டு நார்மல். 

 இன்றைக்கு ஸ்வாமிகளுக்கு நைவேத்யம் என்ன தெரியுமோ ? 

இந்த வருஷ நவராத்ரி விழா நல்லபடியாக முடிஞ்சது. எல்லாம் க்ருஷ்ணார்ப்பணம் !




11 comments:

said...

அருமை நன்றி

said...

மிகவும் சிறப்பு. மகிழ்ச்சி.

said...

நவராத்திரி விழாவின் இனிய பகிர்வுகள்.

said...

நவராத்திரி கொண்டாட்டங்கள் சிறப்பு. படங்களை பார்த்தேன்..... ரசித்தேன்.....

said...

படங்களும் ரசித்தேன். வீடியோவும் பார்த்தேன் துளசிக்கா. நடனம் ரெண்டுபேரும் சூப்பர்.

கீதா

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

மிகவும் நன்றி !

said...

வாங்க மாதேவி,

நன்றிப்பா !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ரசித்தமைக்கு நன்றி !

said...
This comment has been removed by the author.
said...

வாங்க கீதா,

ரசித்தமைக்கு நன்றி !

ரொம்ப அழகா ஆடறாங்கல்லே !!!!