இந்தவருஷம் ரெண்டு திதியும் ஒரே நாளில் வந்ததால் நவராத்ரி இப்படி அஷ்டராத்ரியா ஆகிருச்சு. இன்றைக்கே சரஸ்வதி பூஜை! பழைய நினைவுகளை மறக்கமுடியுமோ ? பொரிகடலை முக்கியம் இல்லையோ..... அந்தக் கடலைவேற நமக்குப் புடிச்ச சமாச்சாரம்.... அதனால் நைவேத்யம் சமர்ப்பியாமின்னு ....
நல்ல படிப்பும் அறிவும் (அம்மா அப்பாவுக்குக்) கொடுன்னு ஒருத்தர் போய் சாமியை வேண்டிக்கிட்டு இருந்தார் ! எல்லாம் சரியா இருக்கான்னு இன்ஸ்பெக்ஷனும் நடந்தது :-)
நம்ம கொலுவுக்கு இன்றைக்கு விசேஷ விருந்தினர் வரவு ! 555 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்துருக்காங்க. எப்ப நம்மூருக்கு வந்தாலும் துல்ஸியை விஸிட் பண்ணாமப் போறது கிடையாது என்பது கூடுதல் மகிழ்ச்சிதான் !
பள்ளிக்கூடப் பெரிய லீவு இப்போ. நம்ம பள்ளிக்கூடக் காலங்களில் மூணு டெர்ம் , மூணு லீவுன்னு இருக்கும். அதுலே ரெண்டு சின்ன லீவும் ஒரு பெரிய லீவும். சின்ன லீவு சரியா நவராத்ரி சமயம்தான். எங்களுக்கும் விதவிதமா அலங்காரம் பண்ணிக்கிட்டுக் கொலுப் பார்க்கப்போக ரொம்பவே சௌகரியம். இன்னொரு சின்ன லீவு க்றிஸ்மஸ் சமயம். இப்பவும் அப்படித்தானே இருக்கு? இல்லையோ....?
இங்கே மூணு டெர்மா இருந்ததை நாலா மாத்திட்டாங்க. பத்துவாரம் பள்ளி ரெண்டுவாரம் லீவு என்ற கணக்கில் மூணுமுறையும் நாலாவது பத்துவாரம் முடிஞ்சு பெரிய லீவுன்னு ஆறு வாரமுமாப் போகுது. வருஷத்துலே நாப்பது வாரம் பள்ளி, பனிரெண்டு வாரம் லீவு. இந்த நாலு முறை வரும் லீவுக்குக் கட்டாயம் நம்மூருக்கு வந்துருவாங்க. பசங்களோட அம்மம்மா இங்கே இருக்காங்க. அவுங்க என் மாணவியா இருந்து, தோழியாயிட்டாங்க. ஆச்சு 24 வருஷம் ! தோழியின் இன்னொரு மகள் இங்கே உள்ளூரில்தான். ரெண்டு செட் பேரன்பேத்திகள் !
காலை தீபாராதனை சமயம் வந்தவங்களுக்கும் ஆரத்தி எடுக்க வாய்ப்பு கிடைச்சது. பசங்களுக்கு ஒரே மகிழ்ச்சி.
ரஜ்ஜு ஓசைப்படாமல் இருந்தான். வந்த பசங்க 'வெட் வீடு' ன்னு தெரியுமோ என்னவோ !
தோட்டம் பார்க்கறது, ரஜ்ஜு கொஞ்சல், புழுப்பூச்சி ஆராய்ச்சின்னு எல்லாம் வழக்கம்போல் ஆச்சு:-) பையன் சரியான Bug Man.
நவராத்ரி கடைசிநாள் ஆச்சே. இதுவரை எட்டிப் பார்க்கலையேன்னு நினைச்சுக்கிட்டு இருந்த மகள், இன்றைக்கு வர்றதாச் சொல்லி இருந்தாள். ஸ்வாமி ஆரத்தி எடுத்தாங்க. டின்னரும் இங்கேயே ஆச்சு. மருமகன் ஸ்பெஷல்... மஸால்தோசை ! மாமியார் மாதிரி வடைப்ரேமி! ஆனால் வடை செய்யலை. ப்ச்...... இன்னொருநாள் ஆகட்டும்.....
6 comments:
மருமகனுக்கு வடை குடுக்காத அல்வா குடுத்துட்டீங்க
விழாக்கள் நண்பர்கள்,குடும்பத்தினர் ஒன்று கூடல் என மகிழ்ச்சியான நேரங்கள் மகிழ்ந்திருங்கள்.
எங்கும் மகிழ்ச்சி நிலவட்டும்.... படங்களும் தகவல்களும் சிறப்பு.
வாங்க விஸ்வநாத்,
பொழுதன்னிக்கும் வடை என்ன வேண்டி இருக்குன்னுதான் :-)
வாங்க மாதேவி.
மகிழ்ச்சியான தருணங்களை விடக்கூடாது இல்லையோ !!!
வாங்க வெங்கட் நாகராஜ்,
மிகவும் நன்றி !
Post a Comment