Wednesday, June 24, 2020

சாங்கி முதல் நியூஸிவரை.... (பயணத்தொடர் 2020 பகுதி 68) நிறைவுப்பகுதி

ஏர்ப்போர்ட் கூட ஒரு தனி உலகமாத்தான் இயங்குது!  அதுவும் இங்கே சாங்கியில் எப்பவும் திருவிழாக்கூட்டம்தான்.  இதுலே  டெர்மினல் 2 எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம். பழகின இடம் பாருங்க. கொஞ்சம் சுத்திப் பார்த்துட்டு, மகள் அனுப்பிய லிஸ்ட்டில் இருந்த சில ஐட்டங்களை வாங்கியாச்.  தலைவலி மாதிரி இருக்கு. சாயங்காலம் ஆனாவே நேரத்துக்கு  குடிச்சே ஆகணும்....   ஆளுக்கொரு  காஃபி ஆச்சு.ட்ரான்ஸிட் பயணிகளுக்குத் தரும் சாங்கி டாலர்கள் கொஞ்சம் கையில் இருந்தது....   ( முந்தியெல்லாம்  நபருக்கு நாப்பது கிடைக்கும். இப்போ அதில் பாதிதான் ) அதையும் செலவு செஞ்சுட்டு ஸ்கை ட்ரெய்னில் நாலாம் டெர்மினல் விஸிட்.  முதல்முறையா எட்டிப் பார்த்தோம். காலமாற்றம் நல்லாவே தெரியுது !  எல்லாம் அப்மார்கெட் சமாச்சாரம்.


ரயில் பிடிச்சு மூணாம் டெர்மினல் போயிட்டோம்.  நியூஸி ஃப்ளைட் இங்கே இருந்துதான். ஏழு அம்பதுக்குக் கிளம்பும்.  ஒரு  முக்கால் மணி நேரத்துக்கு முன்னால் அங்கே இருக்கணும். நம்ம கேட் எங்கோ ஒரு மூலையில்.....   நடந்துநடந்து அலுத்துப்போய்ச் சேர்ந்தால், நம்ம நியூஸி நண்பர்கள் அங்கே இருக்காங்க.   தோழிக்கும் உடம்பு சரி இல்லாமல் போயிருச்சாம், இந்தப் பயணத்தில்.  ப்ச்.... நமக்கும் அதே தானே ஆச்சு......   ஒன்னும் சரி இல்லை. போர்டிங் ஆகும்வரை ஊர்விவகாரம் பேசுனதில் நேரம் ஓடிப்போச்சு. அப்புறம் ?  வண்டிக்குள் போய் உக்கார்ந்தாச். அதே போரிங் ஃப்ளைட்தான். ராத்ரி என்பதால்  தூங்க முடிஞ்சவரை தூங்கிக்கணும். வீட்டுக்குப் போனதும் ஏகப்பட்ட வேலைகள் இருக்கே !
ப்ரேக்ஃபாஸ்டுக்கு எழுப்புனதும் பார்த்தால்  ஊரை  நெருங்கிக்கிட்டு இருக்கோம்.  டிசம்பர் எங்களுக்குக் கோடைகாலம் என்பதால் சதர்ன் ஆல்ப்ஸ் மலையில் துளியூண்டு பனிதான் ஒட்டியிருக்கு.

காலை பத்தே முக்காலுக்கு  நம்மூரில் லேண்டிங். வருஷக்கடைசிநாள். அத்தியை நினைச்சுத்தான் கொஞ்சம் பயமா இருந்துச்சு.  டிக்ளேர் பண்ண வேண்டிய ஐட்டங்களில் முதலாவது  ஒரு மரச்சிலை.  எல்லாம் எழுதிக்கொடுத்துட்டு, மனசு திக் திக்ன்னு  காத்திருந்தோம். பயோ செக்யூரிட்டியில் பொட்டியைத் திறந்து, ட்ரீட்டட் வுட் என்று சொல்லி அத்தியைக் காமிச்சதும், ஓக்கேன்னுட்டார் ஆப்பீஸர் !  ஹப்பாடா........
டாக்ஸி எடுத்து பதினொன்னரைக்கு நம்ம வீட்டுக்கு வந்தாச்சு!  ஆனந்த அத்தி நாடு விட்டு நாடு புலம் பெயர்ந்துட்டார். இனி எல்லாம் (அவருக்கு) சுகமே!
ஸ்வாமி நமஸ்காரம் பண்ணிட்டு, புழக்கடையில் போய் செடிகளைப் பார்வையிட்டேன். தாமரை பூத்துருக்கு!  வேற சில செடிகள் மண்டையைப் போட்டும் இருக்கு.  நாலடி வளர்ந்த அவகாடோ.... மர்கயா.....ப்ச்.
தோட்டத்தில்  ரன்னர் பீன் காய்ச்சுக்கிடக்கு. கொஞ்சம் பறிச்சுட்டு வந்தேன்.  ராஸ்பெர்ரி செடியில் கொஞ்சம் காய்கள் பாக்கி. நாம் இல்லாத சமயம் காய்ச்சுத் தள்ளி இருக்கு!  மகள் அப்பப்ப அறுவடைப் படங்கள் அனுப்பிக்கிட்டே இருந்தாள் :-)
சட்னு குளிச்சுட்டுச் சமையலை ஆரம்பிக்கணும்.  தால் பாத் அண்ட் பீன்ஸ் கறி. யதேஷ்டம்!
ஆனந்த அத்தியை ஸ்வாமி அறையில்  கொண்டுபோய் வச்சுட்டு, தீபாராதனை காமிச்சேன்.
நாலுமணிக்குக் கேட்டரி போனோம்.  ரஜ்ஜூ கொஞ்சம் கோபத்தில்தான் இருந்தான்.  ரொம்பவே நல்ல  மேனர்ஸ் இருக்காம். கேட்டரி ஓனர் ஒரேதாப் புகழ்ந்தாங்க.  நம்ம வளர்ப்பு அப்படின்னு ஒரு (அல்ப) சந்தோஷம். ' வேணுமுன்னா நீங்களே வச்சுக்குங்க'ன்னேன். ரெடியாம் ! சரியா சாப்பிடறதே இல்லைன்னு சொன்னாங்க. இவனுக்கு நாங்களே அவனுடைய ரெகுலர் சாப்பாடை வாங்கிக் கொடுத்துருவோம்.  கேட்டரியில் கொடுக்கும் ப்ராண்ட் இவனுக்குப் பிடிக்காது.

ரெண்டு வாரத்துக்கொருமுறை மகள் போய் பார்த்துட்டு, அடுத்த ரெண்டுவார சாப்பாட்டைக் கொடுத்துட்டு வருவாள்.   கொடுத்து வச்ச சாப்பாடு பாதி பேக் அப்படியே இருக்கு. பாவம்.... ஏங்கிப்போயிருக்கான்...... கேட்டரி ஓனரின் ரங்க்ஸூம் இவனைப் புகழ்ந்து தள்ளிட்டார் !
விஸிட் செஞ்ச மகளும் 'இவன் கேட்டரி ஓனரின்  பெட் ஆகிட்டான். நிறைய சலுகை கிடைக்குது.  அவுங்க ப்ரைவேட் கார்டனில் போய் சுத்தற அளவுக்கு'ன்னாள் !

வீட்டுக்குள் கொண்டுபோய் ஸ்வாமி நமஸ்காரம் பண்ணியதும் திறந்துவிட்டால்.... விடுவிடுன்னு புழக்கடைப்பக்கம் ஓடறான். எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணணும். அவன் இல்லாத சமயம் யார்யார் வந்து போனாங்களோ?  அவன் கவலை அவனுக்கு.. :-)  பாவம்..... நல்லாவே இளைச்சுட்டான். தூக்கினால்  கனமே இல்லை....  ப்ச்...
சுத்திட்டு வந்ததும், மூஞ்சு கொஞ்சம் தெளிவாச்சு :-)  அப்பா மடியில் ஏறி உக்கார்ந்துட்டான். முகத்தில் சிரிப்பு தெரியுதோ ?
இன்றைக்கு நியூ இயர் கொண்டாட்டம் இருக்கு நம்மூர் ஹேக்ளி பார்க்கில்.  பொதுவா பதினொன்னரைக்குக் கிளம்பிப்போய், வருஷம் பிறந்தவுடன்  ஒரு காமணி நேரம் நடக்கும் வான/ண வேடிக்கை  (பட்டாஸ்தான். ஆர்கனைஸ்ட் ஃப்யர்வொர்க்ஸ் ) பார்த்துட்டு வருவோம்.  விழா என்னமோ சாயங்காலம் அஞ்சு மணிக்கே ஆரம்பிச்சுப் பாட்டுக்கச்சேரியோடு நடக்கும். இங்கே வந்த புதுசில் ஒரு சில வருஷங்கள் போனதோடு சரி. இப்பெல்லாம்  அந்தப் பாட்டும், கூட்டமும் ரசிக்கறதில்லை.

இன்னும் நேரம் இருக்குக் கிளம்பிப்போக. புதுவருஷத்துக்கு நம்ம ஆனந்த அத்திக்கு புது ட்ரெஸ் போட்டேன். கொஞ்சம் அலங்காரமும் ஆச்சு.  'பெரியவர்' வந்து பார்த்தார் :-)  புதுசா ஒன்னு வந்துறக்கூடாதே........
நேரம் ஆக ஆக....ராத்ரி புதுவருஷத்தை வரவேற்கும் கொண்டாட்டத்துக்குப் போகணுமா....... களைப்பா இருக்குன்னு நம்ம ப்ளானை மாத்திக்கிட்டோம்.  வாணவேடிக்கை பார்க்கப் போகப்போறதில்லை..... ராத்ரி பனிரெண்டு மணிக்கு ( உண்மையில் அப்போ பதினொரு மணிதான். இங்கே டே லைட் ஸேவிங்க்ஸ் காலம் ) சாமி நமஸ்காரம் பண்ணிட்டு, எல்லோருக்கும் (!) ஹேப்பி நியூ இயர் சொல்லிட்டுத் தூங்கியாச்சு.

நம்ம பயணம் என்பது ஏர்ப்போர்ட் வந்து சேர்ந்ததும் முடிவடையாது....  அந்தநாள் முடியும்வரை நீடிக்கும் :-)   முக்கியமா  செல்லம்  கேட்டரியில் இருந்து திரும்பினால்தான் அவன் பயணமும் முடியும் :-)

அதான் சொல்றோமே   பயணங்கள் முடிவதில்லைன்னு !

வழக்கத்துக்கு மாறாக, நமக்குப்பின்னாலேயே இந்த கொரோனா துரத்திக்கிட்டு வருது என்ற சமாச்சாரம் தெரியாமலேயே.....  டிசம்பர் முப்பத்தியொன்னாம் தேதி  முற்பகல்  இங்கே வந்து இறங்கியிருக்கோம்.  2020 ஆவது வருஷம்  நல்ல நேரத்தில் பொறக்கலை போல....
உலகத்தையே ஆட்டிவச்சுக்கிட்டுப் பேயாட்டம் போடுது....  ப்ச்....  பார்க்கலாம்....  எப்போ அடங்குதுன்னு....


பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும். ஆனா ஒன்னு.... உடலில் கொஞ்சம் வலு இருக்கும்போதே போய் வந்தால் நல்லது. முட்டிவலி, முழங்கால் வலி, தலை சுத்தல் இப்படி  வலிகள்   வர்ற வயதான காலம்வரை  தள்ளிப்போடாதீங்க.....

ஆதலினால் பயணம் செய்வீர்! 

PINகுறிப்பு :  இந்த வருஷம் ஏதும் பயணங்கள் இருக்க வாய்ப்பில்லை.  விண்டர் எஸ்கேப் என்னும் வகையில் அலாஸ்காப் பயணம் ஒன்னு கைக்கெட்டும் தூரத்தில் வந்தது. ஏற்பாடுகளும் ஆரம்பிச்சோம். கொரோனா அதன் வாயில் மண் போட்டுருச்சு.  அதே போல் உள்நாட்டுப் பயணம் ஒன்றையும்  லாக்டௌன் காரணம் ரத்து செஞ்சோம். இனி கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும்வரை  வெளிநாட்டுப் பயணம் போகப்போறதில்லைன்னு  'ஒருமனசா' முடிவு செஞ்சுருக்கோம்.

பார்க்கலாம்....
பொறுமையாக தொடர்ந்துவந்த வாசகப் பெருமக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்! 


16 comments:

said...

பயணங்கள் முடிவதில்லை என்று எழுதிவிட்டு கூடவே முற்றும் போட்டு விட்டீர்கள். பயணங்கள் இல்லாவிட்டால் என்ன. ஏதாவது இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு அதன் பின்னணி, கதை என்று எழுதலாம்.

 Jayakumar

said...

பயணங்கள் முடிவதில்லை என்று எழுதிவிட்டு கூடவே முற்றும் போட்டு விட்டீர்கள். பயணங்கள் இல்லாவிட்டால் என்ன. ஏதாவது இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு அதன் பின்னணி, கதை என்று எழுதலாம். Jayakumar

said...

உங்க பயணக்கட்டுரை படிக்கும் போதெல்லாம்.. எப்படி இவ்வளவை நினைவு வைத்துக்குறீங்க என்ற வியப்பே அதிகம் இருக்கும் :-) .

எங்கெல்லாமோ சுற்றி வந்தாலும் நம்ம நாட்டுக்கு (நியூசி) வீட்டுக்கு வந்ததும் ஒரு நிம்மதி கிடைக்கும் பாருங்க.. அது தனி சுகம்.

"கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும்வரை வெளிநாட்டுப் பயணம் போகப்போறதில்லைன்னு 'ஒருமனசா' முடிவு செஞ்சுருக்கோம்."

பாதுகாப்பான முடிவு.

said...

உண்மை, அருமை, நன்றி என்னையும் அழைத்துக்கொண்டு திரிந்ததுக்கு;

said...

பயணம் நல்லது - ஆதலினால் பயணம் செய்வீர்....

அதே தான். எனது பயணங்களும் இப்போதைக்கு தடைபட்டுள்ளது. சூழல் சரியானதும் தொடங்க வேண்டும். நானும் ஏப்ரல் மாதத்தில் திட்டமிட்டு அதனைத் தள்ளிப்போட வேண்டியதாயிற்று.

பயணக் குறிப்புகள் அனைத்தும் சிறப்பு. ரஜ்ஜூ வீட்டிற்கு வந்ததும் தான் அதற்கும் சந்தோஷம். நமக்கும்!

தொடரட்டும் பயணங்கள் - சூழல் சரியானதும்!

said...

பதிவைப் படிக்க ஆரம்பித்ததும், வீட்டின் முன் வாசலைப் பார்த்தமும், முன்ன பார்த்திருந்த பசுமை கார்டன், மற்ற படங்களையெல்லாம் விட்டுவிட்டார்களா இல்லை வீட்டு முகப்பு முன்பு பார்த்ததுபோல இல்லையா என்ற சந்தேகம். கோபால் சார் ரிலாக்ஸ் செய்யும் சோஃபாவும் முன்பு பார்த்த படங்களில் இருந்ததுபோலத் தோணலை.

பத்திரமா நீண்ட பயணத்தை முடித்துவிட்டு வந்திருக்கிறீர்கள். அத்தி வரதரோடு இந்த வருடம் போகட்டும்.

பயணக்குறிப்பு மிகவும் ரசனையாக இருந்தது.

said...

அஆவ் ..ரஜூ  மாதிரிதான் எங்க ஜெஸியும் ..royal canine dry அப்புறம் core grain free இதுதவிர ஏதும் சாப்பிட மாட்டா .
எங்க வீட்ல ரெட் கரென்ட்ஸ் கனிஞ்சு வந்து ரெண்டு நாள் கழிச்சு பார்த்தா காணோம் அணில்கள் சிட்டுகள்       மொத்தமா முடிச்சிட்டாங்க .ஸ்டராபெரிஸ்  மட்டும் நிறைய விளைஞ்சு .அடுத்து பிளாக் கர்ரேன்ட்சுக்கு வெயிட்டிங் உங்ககிட்ட முந்தி சொன்னேனா நினைவில்லை மகள் இப்போ செகண்ட் இயர் போறா யூனிவெர்சிட்டி .ரெண்டு வருஷமுன் ஒர்க் எக்ஸ்பீரியன்ஸுக்கு cattery போனா .அங்கே ஒருவர்  ஜிஞ்சி இவளை மியாவ் னு கையையாச்சி கத்தி கூப்பிட்டு தூக்க சொல்லி கெஞ்சுமாம் கேஜுக்கு போனா கழுத்தை கட்டி பிடிக்குமாம் ..எல்லா பூனைகளும் ஓநர்சை  மிஸ் பண்ணுவாங்கக்கா அப்படிதான் ரஜ்ஜுவும் .இப்போ ஓகே தானே .

said...

நான் ஜனவரி முதல் தேதி எப்பவும் மிக கவனமா இருப்பேன் எல்லா வருஷமும் ப்ரே சர்ச் நல்ல சைவ உணவு இப்படி சந்தோஷமா இருக்கணும்னு பார்த்து செய்வேன் .இந்த ஜனவரி 1 எனக்குமிக்க மோசமான அனுபவம் வேலையிடத்தில் .  அழாக்குறையா 1 ஆம் தேதியை கடந்தேன் பாருங்க அது ஒரு அலெர்ட் மாதிரி இருந்திருக்கு எனக்கு ,பிரார்த்திப்போம் சீக்கிரம் நோயற்ற உலகை காணனும்னு 

said...

வாங்க ஜயகுமார்,

பயணம் முடிந்தால் என்ன ? எழுத விஷயமா இல்லை ? கண்ணையும் காதையும் திறந்துவைத்தால் போதுமே!

கிடப்பில் போட்டவைகளையாவது எழுதி முடிக்கணும். என்ன ஒன்னு..... குளிர்காலம் ஆரம்பிச்சுட்டதால்..... மனசு ரொம்ப டல்லா இருக்கு..... கூடவே இந்தக் கொரோனாவும்...ப்ச்.... டிப்ரெஷன் என்னை உள்ளே இழுக்காமல் இருக்கணும்..... பெருமாளே....

said...

வாங்க கிரி.

இதுவரை கண்டது கடுகளவே ! உலகில் எத்தனை எத்தனை இடங்கள்? அற்புதங்கள் ? எண்ணி மாளுமோ ?

கொரோனா ஒழியட்டும் முதலில் !

said...

வாங்க விஸ்வநாத்,

அயற்சி இல்லாமல் கூடவே வந்ததுக்கு நானல்லவா நன்றி சொல்லணும் :-)

நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

கொரோனா கால்களைக் கட்டிப்போட்டுருக்கு.... ப்ச்...

இன்னும் அதிகமாகத் துன்பம் கொடுக்காமல் ஒழிஞ்சு போகட்டும்.....

நீங்கள் கவனமாக இருங்கள் .

said...

வாங்க நெல்லைத்தமிழன்,


அதே வீடு, அதே சோஃபா, எல்லாம் அதே அதே!

பயணத்தைத் தொடந்து வாசித்ததற்கு நன்றி !

அத்தி, இங்கே நல்லாவே செட்டில் ஆகிட்டார் :-)

said...

வாங்க ஏஞ்சலீன்,

ரஜ்ஜுவின் அட்டகாசம் அதிகமாகிக்கிட்டே போகுது :-) அப்பாவை நல்லா ஏமாத்தறான் !

சாப்பாடு வேஸ்ட் அதிகம். ஒவ்வொரு பாக்கெட் திறந்து போட்டதும் கொஞ்சம் தின்னுட்டு மீதி வேணாமாம். கொஞ்ச நேரத்தில் புதுப் பாக்கெட் போடணுமாம். பாக்கி ஆனதைத் தின்ன 'புலி' ஒன்னு இங்கேயே தோட்டத்தில் ஒளிஞ்சுருக்கு ! அப்பப்ப இன்னொன்னு (அசப்பில் நம்ம ஜிகே போல!) வந்து போகுது......

பறவைகளில்..... ஸில்வர் ஐ க்கள், ஆப்பிள் மரத்தை மொட்டை அடிச்சுக்கிட்டு இருக்கு. இன்னும் ஒரு பத்துப் பழங்கள் பாக்கி.

said...

சேஞ்சலீன்,

என்னமோ போதாத காலம். எல்லாம் சரியாகும். நாம் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது !

said...

பயணங்கள் இனிதாக நிறைவேறியது ரஜ்ஜுவும் வீட்டுக்கு வந்துவிட்டான்.

அத்தி வரதரின் வருகையுடன் இனிஎல்லாம் நலமாகட்டும்.