Wednesday, June 17, 2020

சென்னையிலிருந்து சிங்கைக்கு..... (பயணத்தொடர் 2020 பகுதி 65)

காலை ஆறு மணிக்கு வண்டிக்குச் சொல்லி இருந்தோம்.  சதீஷே வந்துருந்தார்.  சட்னு கிளம்பி பாண்டிபஸார் பாலாஜி பவனில் ப்ரேக்ஃபாஸ்ட். இட்லியும் காஃபியும்.  (கீதா கஃபே இன்னும் திறக்கலை )



அடுத்த ஸ்டாப்பிங் நம்ம  பெருமாள், வெங்கடநாராயணா ரோடு. சீக்ர தரிசனம்!  போயிட்டு வரேன்....  போயிட்டு வரோம்..... ஓக்கேன்னார் பெரிய திருவடி !


நம்ம சாமுண்டி பார்த்துட்டாங்க. கை நிறைய எடுத்து நீட்டிய பூச்சரத்தை, 'இருக்கட்டும். அடுத்தமுறை'ன்னு சொன்னேன். அதான் நேத்து அல்லிக்கேணியில் வாங்கின சரம், தலையில் இருக்கே! 'அடுத்து எப்பம்மா'ன்ன சாமுண்டிக்குப் பெருமாள் பக்கம் கை  காட்டினேன்....

லோட்டஸ் திரும்பி  அங்கே ரெடியா  எடுத்து வச்சுருந்த கணக்குகளைச் சரிபார்த்துக் கட்டி முடிச்சுட்டுக் கிளம்பி நேரே ஏர்ப்போர்ட்டுதான் !  இருவதே நிமிட்டில் வந்துருந்தோம். ஞாயிறு அதிகாலை என்பதால் வண்டிநடமாட்டம் அவ்வளவா இல்லை....  வர்றவழியில் சோளா தாண்டுனதும்  இருக்கும் சிலையில் யார்?னு வழக்கம்போல் மண்டை காய்ஞ்சது....   உம்.... யாராக இருக்கும் ?
நம்ம சதீஷுக்கு நன்றி !  நல்ல மனுஷர். இனி இவர்தான் நமக்கு இந்தியப் பயணத்துலே.....  நல்லா இருக்கட்டும் !

எல்லா நேரங்களிலும் கலகலன்னு இருப்பது, ஏர்ப்போர்ட்டும், ரயில்வே ஸ்டேஷனும், பஸ் ஸ்டாண்டும்தான் இல்லையோ....  மக்கள் பயணிச்சுக்கிட்டேதான் இருக்காங்க !
செக்கின் பண்ணதும் 'பயம் ' போயிருச்சு.  எடை சரி !   அத்தி, பத்திரமா  என் கேபின் பேகில்.






உள் அலங்காரம் நல்லாவே இருக்கு !  ஒன்பதரைக்கு வண்டிக்குள் போயிட்டோம். பத்துமணிக்கு டேக் ஆஃப். நாலேகால் மணி நேரப்பயணம். சிங்கையில் கால் வைக்கும்போது நாலரை. அட!  காமணி முன்னால் வந்துருக்கோம்!

பெரிய பெட்டிகளை நியூஸிக்கு செக்த்ரூ பண்ணிட்டதால்  கேபின் பேகோடு வெளியில் வந்து டாக்ஸியில் 'ஹில்ட்டன் கார்டன் இன்' வந்து சேர்ந்தப்ப  மணி அஞ்சரை.  பெயர்தான் பிடுங்கித் தின்றாப்போல...... அதே பழைய க்ராண்ட் சான்ஸ்லர்தான்.... கைமாறி இருக்கு.  வர்றவழியில் சிங்கை அலங்காரம்.....   வாவ்....
செக்கின் ஆனதும்  அடுத்த அஞ்சாவது நிமிட், வீரமாகாளியம்மன் வாசலுக்குள் நுழைஞ்சாச்சு.  அலங்கார பூஷிணி !



எதிர்சாரியில் நம்ம கோமளவிலாஸ். இடையில் பூக்கடை.  விடலாமோ ?  ஹாஹா...



மெனு போர்ட் புதுசு :-)  வாங்குன ஒரு வடைக்கு இத்தினி ஃப்ரெண்ட்ஸா ?

ஞாயித்துக்கிழமைக் கூட்டம் செராங்கூன் சாலை முழுசும் !  தொழிலுக்காக இங்கே வந்தவர்களின் சங்கமம், வாரம் ஒரு நாள்.



நடைபாதை நடப்பதற்காக மட்டுமே என்பதால்  பொடிநடையில் , சிங்கைச்சீனு கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தப்ப.... மணி ஏழுக்கு சமீபம்.


தன்வந்த்ரி மஹாயாகம் நடந்துக்கிட்டு இருக்கு !

 போனமாசம் ஆரம்பிச்ச  ஆஞ்சி பொறந்தநாள் லக்ஷார்ச்சனை, க்றிஸ்மஸ்தினம் வரை நடந்துருக்காம் !  ஒரு மாசம் பொறந்தநாள் கொண்டாடுனவர் நம்ம ஆஞ்சி !

அலங்கார பூஷிதனா நம்ம பெருமாள் !  உற்சவர், கருடவாஹனத்தில் !  எவ்ளோ வேணுமுன்னால் க்ளிக்கலாம் இந்தக் கோவிலில். !  இதனால்  கோவிலின் சாந்நித்யம் வளருமே தவிர குறையாது !   ஒவ்வொருமுறையும்  கோவிலின் செல்வநிலையும் உயர்ந்துக்கிட்டே போகுது என்பதும் உண்மை !
தீபாராதனை தரிசனம் ஆச்சு. வலம் வரும்போது கிளைபிரிந்து டைனிங் ஹாலுக்குள் போனால்.... புளியோதரை விநியோகம்.  விட முடியலை. அவனே கூப்பிட்டுக் கொடுக்கும்போது..... வேணாமுன்னு சொல்ல மனசு வரலை. ராத்ரி டின்னருக்கு ஆச்சு :-)

திரும்பி வரும் வழியில் ஒரு கடையில் ஒரு சிப்ஸ்  & பலாப்பழம்.
மற்றவை எல்லாம் கெமெராக் கண்ணால் தின்னதுதான் :-)










காலையில் சுப்ரபாத ஸேவைக்குப் போகனுமுன்னு  சொல்லிக்கிட்டே....... தூக்கம் ஆரம்பிச்சது....

தொடரும்..........  :-)

10 comments:

said...

சென்னையிலிருந்து சிங்கை.....

படங்கள் அழகு. சிங்கிள் வடைக்கு இத்தனை இணை! :) ருசிச்சு, ரசிச்சு சாப்பிடலாம்!

said...

புளியோதரை சிப்ஸ் பலாப்பழம்
ஆகா தேவாமிர்தம்.

said...

சிங்கை பெருமாள் கோவில் விஸிட் பற்றி எழுத ஆரம்பித்தாலே, நியூசிக்கு திரும்பறீங்கன்னு புரிந்துபோயிடும்.

இந்தியாவை விட்டுட்டுப் போறோமேன்னு உங்க மனசுல தோணுமா, இல்லை..அப்பாடி..நியூசிக்கு வீட்டுக்குப் போறோமேன்னு தோணுமா?

said...

மீண்டும் வீரகாளி அம்மன் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி. செரங்கூன் பாதை எமது சிங்கை பயணத்தை அசை போட்டது.

கோமளவிலாஸ்,சிங்கைசீனு வணங்கிக்கொண்டோம் .

said...

சென்னை வந்துருக்கீங்க ஒரு போன் பண்ணி பேசிருக்கலாம்ல...ம்

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

உண்மையில் எனக்கு மசால்வடைக்குச் சட்னி எல்லாம் பிடிக்காது :-) பஜ்ஜி கூட அப்படியே தின்னணும் !

said...

வாங்க விஸ்வநாத்,


அப்ப அழிவே இல்லை :-)

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

சிங்கை வழி மட்டும்தான் எங்களுக்கு. கிறைஸ்ட்சர்ச் டைரக்ட்!

மிக்ஸட் ஃபீலிங்ஸ் தான். இந்தியாவில் வீடு இல்லாததால்...... ரொம்பநாள் அங்கே இருப்பது கஷ்டம்தான்......

said...

வாங்க மாதேவி,

பயணம் முடிச்சு வந்துட்டால் நினைவுகள்தான் எப்பவும் மனசில் !

said...

வாங்க....

unknown னு ஏன் சொல்லுது? ப்ரொஃபைல் காணோமே !