என்ன எண்ணம் பாருங்க ஒவ்வொன்னுக்கும்........ நேத்து பகல் ஒன்னரை வரை அசையாம நின்னு எங்களுக்குச் சண்டை மூட்டிவிட்ட, பனிமூட்டம்..... ' நானா ? அப்படியா செஞ்சேன், இங்கே எப்போ வந்தேன்'னு கேள்வி கேக்கறாப்போல..... காலையில் கண் தொறந்து பார்க்கும்போதே பளிச்ன்னு இருக்கு !
கடமைகளை முடிச்சுட்டு ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போறோம். ஒன்பதரைக்கு ஏர்ப்போர்ட் ட்ராப் வண்டிக்குச் சொல்லி இருக்கார். இன்றைக்கு முழு நாளும் பயணத்துலேதான்..... ப்ச்......
ஏர்லைன்ஸ் சாப்பாட்டை நம்ப முடியாது..... பல சமயங்களில் கழுத்தறுத்துரும்.... கொஞ்சம் நல்லா சாப்ட்டுக்கணும்..... ஆச்சு.
அறைக்குப்போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட். எனக்கும் கடைசி நிமிட் நைல் க்ளிக்..... 'போயிட்டு வரேண்டா... நைலு.....'
செக்கவுட் செஞ்சு ஏர்ப்போர்ட் போனப்ப மணி பத்து இருபது. அங்கே செக்கின் ஆச்சு. நம்ம ஃப்ளைட் பனிரெண்டு மணிக்கு. கொஞ்ச நேரம் ச்சும்மா ஏர்ப்போர்ட்டைச் சுத்திப் பார்த்தோம். ஈஜிப்ஷியன் காட்டன்னு பெரிய பெயர் இருக்கேன்னு 'நம்மவர்' தனக்குச் சிலது வாங்கிக்கலாமுன்னு போனால்..... ரகமும் சுமார். விலையும் அதிகம். இதுக்கு நாம் சென்னையிலேயே வாங்கிக்கலாம். ட்யூட்டி ஃப்ரீ ஒன்னும் நமக்குத் தேவை இல்லை..... அடுத்த ஸ்டாப்பிங்லே பார்க்கணும் ... :-)
ஒரு காஃபி மட்டும் குடிச்சோம். கப்புச்சீனோ :-) ஏர்லைன்ஸ் காஃபி.... யக்..... வேணவே வேணாம்....
நம்ம வண்டி வந்துருச்சு, போர்டிங்கும் ஆச்சு. இந்தப் பயணத்துலேதான் நாம் எமிரேட்ஸ் டிக்கெட் எடுத்துருக்கோம். பொதுவா நம்ம நியூஸி- சென்னைப் பயணம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்தான். நம்மூரில் இருந்தே கிளம்புவதால் இதுதான் வசதி. ஆனால் வேற ஏர்லைன்ஸ் இல்லாததால் கொள்ளை அடிச்சுருவாங்க. நமக்கு வேற வழி ? முப்பத்திரெண்டு வருஷமா.... இதேதான்.
எல்லோரும் எமிரேட்ஸை ஆஹா ஓஹோன்னு சொல்லும்போதெல்லாம் ஒருக்காப் போகணுமுன்னு நினைப்பேன். சென்னையில் இருந்து கய்ரோ போக முடிவானதும் இதுலேயே டிக்கெட்டும் போட்டாச்சு. எதிர்பார்த்த அளவு அப்படியொன்னும் பிரமாதமா இல்லை. கால் வச்சுக்கும் லெக்ரூம் மட்டும் கொஞ்சம் அதிகம்.
பகல் நேரப் பயணம் என்பதால் கீழே தெரியும் காட்சிகளுக்குக் கெமெராவை ரெடியா வச்சுருந்தேன். ஆனால்.... ஜன்னல் இருந்த அழகைப் பார்க்கணுமே...... கொஞ்சம் துடைச்சுச் சுத்தப்படுத்தி இருக்கக்கூடாதோ ?
மூணரை மணிப் பயணத்தில் துபாய் வந்துருந்தோம். அடுத்த ஃப்ளைட்டுக்கு ஒரு ரெண்டரை மணி நேரம் காத்திருக்கணும். ஏர்ப்போர்ட் முழுக்க க்றிஸ்மஸ் அலங்காரங்கள் !
கையில் பாக்கி இருந்த ஈஜிப்ஷியன் பவுன்ட்ஸை மாத்திக்கணும். இனி தேவை இல்லை. அப்புறம் ட்யூட்டி ஃப்ரீ பக்கம் போய் கடைகளைப் பார்க்கணும்.
நேத்து 'வாங்கிக்கோ வாங்கிக்கோ'ன்னு சொன்ன வாய் கப்சுப் :-)
இவ்ளோ விலைக்கு இதுலே என்ன இருக்குன்னு புரியலை....... என்னதான் வைரமா இருந்தாலும்............ ச்சீ.... ஒரே புளிப்பு........ யாருக்கு வேணும் ?
ஞாபகத்துக்கு எதாவது வாங்கணுமேன்னு ஒரு செட் ஐஸ்க்ரீம் ஸ்பூன்ஸ் வாங்கினேன். எல்லாம் இது போதும்....
எட்டு இருபதுக்கு போர்டிங் ஆச்சு.
நாலுமணி பத்து நிமிட் ஃப்ளையிங் டைம்.
டின்னர் , அதே லஞ்சு மெனுதான். வெவ்வேற ஃப்ளைட்....
மெனுகார்ட் தமிழ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தமிழைவிடத் தேவலாம்.
சிங்காரச் சென்னையில் இறங்குபோது மணி ரெண்டரை. சென்னையில் கூட்டமான கூட்டம். நமக்கு வெறும் ஹேண்ட் லக்கேஜ்தானே..... சட்னு வெளியே போயிடலாமுன்னு பார்த்தால்... என்னவோ ஃபார்ம் ஃபில் பண்ணனுமுன்னு..... அதான் அரைவல் கார்ட் இருக்கேன்னா வேறென்னவோ... ஒன்னு..... அது எங்கே இருக்குன்னு கூடத் தெரியலை....
எல்லாம் முடிஞ்சு வெளியில் வரும்போதே மணி மூணே கால். முருகன் வந்து காத்திருந்தார். இன்றைக்கு க்றிஸ்மஸ் பண்டிகை. லீவுநாள்.
முதலில் லோட்டஸ் போய், சாமான்களைப் போட்டுட்டுக் குளிச்சுட்டு, திரும்ப அடுத்த பயணத்துக்கு ஏர்ப்போர்ட் வரணும். அது உள்நாட்டு சேவைக்கான தளம்தான். அஞ்சேகாலுக்குக் கிளம்பினால் போதும்.
இன்றைக்கு நம்ம முருகனோட தங்கமணிக்குப் பொறந்தநாள். நம்மை ஏர்ப்போர்ட்டில் பிக்கப் பண்ணி லோட்டஸ்லே ட்ராப் பண்ணச்சொல்லித்தான் ஏற்பாடாகி இருந்தது. இப்போ இந்தக் குட்டிப் பயணம் சேர்ந்ததால்.... முருகன் நம்மைத் திரும்ப டொமஸ்டிக் ஏர்ப்போர்ட்லே கொண்டு விடவேண்டியதும் சேர்ந்து போச்சு.
லோட்டஸில் 'க்றிஸ்மஸ் கேக்'கோடு வரவேற்பு :-)
முக்கால் மணி குட்டித்தூக்கம் முடிச்சுக் குளிச்சுக் கிளம்பிட்டோம்.
எத்தனை மணிக்குப் பிக்கப்னு கேட்ட முருகனுக்கு லீவு கொடுத்தாச்சு. கூடவே அவரோட மனைவிக்குக் கொஞ்சம் அன்பளிப்பும். சாயங்காலம் நாம் டாக்ஸி எடுத்துப்போம். சரிதானே ?
தொடரும்....... :-)
கடமைகளை முடிச்சுட்டு ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போறோம். ஒன்பதரைக்கு ஏர்ப்போர்ட் ட்ராப் வண்டிக்குச் சொல்லி இருக்கார். இன்றைக்கு முழு நாளும் பயணத்துலேதான்..... ப்ச்......
ஏர்லைன்ஸ் சாப்பாட்டை நம்ப முடியாது..... பல சமயங்களில் கழுத்தறுத்துரும்.... கொஞ்சம் நல்லா சாப்ட்டுக்கணும்..... ஆச்சு.
அறைக்குப்போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட். எனக்கும் கடைசி நிமிட் நைல் க்ளிக்..... 'போயிட்டு வரேண்டா... நைலு.....'
ஒரு காஃபி மட்டும் குடிச்சோம். கப்புச்சீனோ :-) ஏர்லைன்ஸ் காஃபி.... யக்..... வேணவே வேணாம்....
நம்ம வண்டி வந்துருச்சு, போர்டிங்கும் ஆச்சு. இந்தப் பயணத்துலேதான் நாம் எமிரேட்ஸ் டிக்கெட் எடுத்துருக்கோம். பொதுவா நம்ம நியூஸி- சென்னைப் பயணம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்தான். நம்மூரில் இருந்தே கிளம்புவதால் இதுதான் வசதி. ஆனால் வேற ஏர்லைன்ஸ் இல்லாததால் கொள்ளை அடிச்சுருவாங்க. நமக்கு வேற வழி ? முப்பத்திரெண்டு வருஷமா.... இதேதான்.
எல்லோரும் எமிரேட்ஸை ஆஹா ஓஹோன்னு சொல்லும்போதெல்லாம் ஒருக்காப் போகணுமுன்னு நினைப்பேன். சென்னையில் இருந்து கய்ரோ போக முடிவானதும் இதுலேயே டிக்கெட்டும் போட்டாச்சு. எதிர்பார்த்த அளவு அப்படியொன்னும் பிரமாதமா இல்லை. கால் வச்சுக்கும் லெக்ரூம் மட்டும் கொஞ்சம் அதிகம்.
பகல் நேரப் பயணம் என்பதால் கீழே தெரியும் காட்சிகளுக்குக் கெமெராவை ரெடியா வச்சுருந்தேன். ஆனால்.... ஜன்னல் இருந்த அழகைப் பார்க்கணுமே...... கொஞ்சம் துடைச்சுச் சுத்தப்படுத்தி இருக்கக்கூடாதோ ?
மூணரை மணிப் பயணத்தில் துபாய் வந்துருந்தோம். அடுத்த ஃப்ளைட்டுக்கு ஒரு ரெண்டரை மணி நேரம் காத்திருக்கணும். ஏர்ப்போர்ட் முழுக்க க்றிஸ்மஸ் அலங்காரங்கள் !
கையில் பாக்கி இருந்த ஈஜிப்ஷியன் பவுன்ட்ஸை மாத்திக்கணும். இனி தேவை இல்லை. அப்புறம் ட்யூட்டி ஃப்ரீ பக்கம் போய் கடைகளைப் பார்க்கணும்.
நேத்து 'வாங்கிக்கோ வாங்கிக்கோ'ன்னு சொன்ன வாய் கப்சுப் :-)
இவ்ளோ விலைக்கு இதுலே என்ன இருக்குன்னு புரியலை....... என்னதான் வைரமா இருந்தாலும்............ ச்சீ.... ஒரே புளிப்பு........ யாருக்கு வேணும் ?
ஞாபகத்துக்கு எதாவது வாங்கணுமேன்னு ஒரு செட் ஐஸ்க்ரீம் ஸ்பூன்ஸ் வாங்கினேன். எல்லாம் இது போதும்....
நாலுமணி பத்து நிமிட் ஃப்ளையிங் டைம்.
டின்னர் , அதே லஞ்சு மெனுதான். வெவ்வேற ஃப்ளைட்....
சிங்காரச் சென்னையில் இறங்குபோது மணி ரெண்டரை. சென்னையில் கூட்டமான கூட்டம். நமக்கு வெறும் ஹேண்ட் லக்கேஜ்தானே..... சட்னு வெளியே போயிடலாமுன்னு பார்த்தால்... என்னவோ ஃபார்ம் ஃபில் பண்ணனுமுன்னு..... அதான் அரைவல் கார்ட் இருக்கேன்னா வேறென்னவோ... ஒன்னு..... அது எங்கே இருக்குன்னு கூடத் தெரியலை....
எல்லாம் முடிஞ்சு வெளியில் வரும்போதே மணி மூணே கால். முருகன் வந்து காத்திருந்தார். இன்றைக்கு க்றிஸ்மஸ் பண்டிகை. லீவுநாள்.
முதலில் லோட்டஸ் போய், சாமான்களைப் போட்டுட்டுக் குளிச்சுட்டு, திரும்ப அடுத்த பயணத்துக்கு ஏர்ப்போர்ட் வரணும். அது உள்நாட்டு சேவைக்கான தளம்தான். அஞ்சேகாலுக்குக் கிளம்பினால் போதும்.
இன்றைக்கு நம்ம முருகனோட தங்கமணிக்குப் பொறந்தநாள். நம்மை ஏர்ப்போர்ட்டில் பிக்கப் பண்ணி லோட்டஸ்லே ட்ராப் பண்ணச்சொல்லித்தான் ஏற்பாடாகி இருந்தது. இப்போ இந்தக் குட்டிப் பயணம் சேர்ந்ததால்.... முருகன் நம்மைத் திரும்ப டொமஸ்டிக் ஏர்ப்போர்ட்லே கொண்டு விடவேண்டியதும் சேர்ந்து போச்சு.
லோட்டஸில் 'க்றிஸ்மஸ் கேக்'கோடு வரவேற்பு :-)
முக்கால் மணி குட்டித்தூக்கம் முடிச்சுக் குளிச்சுக் கிளம்பிட்டோம்.
எத்தனை மணிக்குப் பிக்கப்னு கேட்ட முருகனுக்கு லீவு கொடுத்தாச்சு. கூடவே அவரோட மனைவிக்குக் கொஞ்சம் அன்பளிப்பும். சாயங்காலம் நாம் டாக்ஸி எடுத்துப்போம். சரிதானே ?
தொடரும்....... :-)
13 comments:
அருமை. படங்களுடனும், எழுத்துக்களுடனும் உங்களோடு எங்களையும் அழைத்துச் சென்றிருக்கிறீர்கள். நன்றி.
நமது வலைத்திரட்டி: வலை ஓலை
பயணத்தின் தொடக்கமாய் இன்னுமொரு பயணம். எங்கே என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
இனிய மண நாள் நல்வாழ்த்துகள். இன்று போல் என்றும் இனிமையாக அமைந்திடட்டும்.
//நேத்து 'வாங்கிக்கோ வாங்கிக்கோ'ன்னு சொன்ன வாய் கப்சுப் :-)//
ஈஜிப்த் போகும்போது, ட்யூட்டிஃப்ரீ கடைல்லா அரைவல் ல தான்னு சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கு;
மனமார்ந்த இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் துளசிக்கா அண்ட் கோபால் ஸார் .
இன்னுமொரு பயணம் மகிழ்ச்சி.
வருகிறோம்....
இதோ இந்த பயண வண்டியில் நானும் ஏறியாச்சு ...
வாங்க சிகரம் பாரதி,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !
வாங்க வெங்கட் நாகராஜ்,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும். அந்தப் பயணம் பெண்களூருக்கே :-)
வாங்க விஸ்வநாத்,
அதெல்லாம் நேரத்துக்கேத்தாப்போல் 'மறதி' வந்துரும் ! எஸ்கேப்பிஸம்.....
வாங்க ஏஞ்சலீன்,
வாழ்த்துக்ளுக்கு நன்றி !
@ வெங்கட் நாகராஜ்,
வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி !
வாங்க மாதேவி,
பயணங்கள் முடிவதே இல்லைப்பா :-)
வாங்க அனுப்ரேம்,
வண்டியை ரிவர்ஸில் அனுப்பட்டுமா ? ஹாஹா
Post a Comment