Friday, June 12, 2020

அசல் சொதியும் அத்தி வரதரும்........ (பயணத்தொடர் 2020 பகுதி 63 )

அடுத்த மூணுநாட்களும் ஒரே ஓட்டம்தான்.   காலை ப்ரேக்ஃபாஸ்ட்  ஆனதும் கிளம்பணும். கொஞ்சம் நகை ரிப்பேர், 'நம்மவருக்கான சின்ன ஷாப்பிங்,  நம்ம ஆனந்த அத்திவரதருக்குக் கொஞ்சம் நகைநட்டு,  சொந்த உடைகள் அலங்காரத்துக்கான  எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா  மோடிஃப் வகையறாக்கள் வாங்கிக்க தி.நகர் வணிக வளாகம் விஸிட்.


 இதுக்கிடையில்  தி.நகரில் கனகாம்பரம் பார்த்துட்டு, விட்டுப்போக மனசில்லாமல்  கட்டித்தர்றேன்னு சொன்ன  தரணியாண்டைக் காமணி காத்திருந்து வாங்கி, ஆசைஆசையாத் தலையில் வச்சுக்கிட்டது, மயிலை விஜயா ஸ்டோர்ஸ், சுக்ரா ஜுவல்லர்ஸ்,   முதல்முறையா  மயிலை கணபதி ஸ்டோர்ஸ் தேடிப்போய் , முருங்கைக்கீரை சேர்த்தப் பருப்புப்பொடி வாங்கியதுன்னு நேரம் பறக்குது.....
 நகைத்தொழிலாளர் சங்கத்துக்கு இவர்தான் தலைவர் !



இந்தப் பயணத்தின் கடைசி லஞ்ச் @ கீதா கஃபே கூட  ஆச்சு :-) சாயங்காலமா அண்ணன் வீட்டுக்குப் போயிட்டு அங்கேயே டின்னர் முடிச்சு, பயணம் முடிஞ்சதுக்கான 'பைபை' கூட (மூணு நாளுக்கு முன்னாலேயே ) சொல்லியாச்சு.  திரும்ப வீட்டுக்குப்போய் விடைபெற  நேரம் இல்லை.....


மறுநாள்  சந்திப்புகளும் சாப்பாடுமா.....   ப்ரேக்ஃபாஸ்ட் ஆனதும்  ரெண்டு நிமிட் நடையில் இருக்கும் பழமுதிர்ச்சோலை. காய்கறிகளைக் கேமெராக் கண்ணால் தின்னுட்டுப் பெரியவங்களை சந்திக்கப்போறதால்  கொஞ்சம் பழங்கள் வாங்கினோம். கத்தாழை கூட விக்கறாங்க!!!
நம்ம லோட்டஸில்  க்றிஸ்மஸ் குடில்.




பொதுவா ரெஸ்ட்டாரண்டுகளில் இந்தக் காய்கறிகளைக் கண்ணில் காட்டுறதே இல்லை.  பழங்களும் ஏகப்பட்டவை இருந்தாலும்  தர்ப்பூசணியும், பப்பாளியும்தான் தினமும்.....

இன்றைக்கு நம்ம சுத்தல் பூராவும் அடையார்.  அநந்தபதுமனை தரிசிக்காமல் அடையார் பயணம் உண்டா என்ன ?  உச்சிகாலபூஜைக்கு முன்னால்  போயிடணும். ஏற்கெனவே கிளம்பும்போதே கொஞ்சம் லேட்டாகிப்போச்சே....  மனதில் அவன் முகத்தை நிரப்பிக் கும்பிட்டுக்கிட்டேன்.  'போயிட்டு வரேன்டா'ன்னும் விடை வாங்கியாச்சு.  எனக்குதான் 'இனி எப்போ'ன்ற கலக்கமே தவிர, அவன் என்னமோ மேலே பார்த்தப்படிக் கிடக்கிறான்.

முதலில் நம்ம சித்ரா அம்மா வீட்டுக்கு. இங்கே போகாமல் நம்ம பயணம் பூர்த்தி ஆகாது. வழக்கம்போல் அன்பான வரவேற்பு !  சாப்பிட்டுப்போன்னு  மிரட்டல் :-)

'இல்லை மாமி. இன்னொரு சமயம் ஆகட்டும். இப்போ நமக்கு விருந்து தோழி வீட்டில்'னு சொல்லிட்டுக் கிளம்பினோம்.  'என்றைக்கு, எப்போ' என்பதெல்லாம் நாம் ஈஜிப்டில் இருக்கும்போதே முடிவாச்சு :-)

மாமாவைப் பார்க்க முடியலை. வெளியே போயிருக்கார். கொஞ்ச நேரம் காத்திருந்தோம். ஊஹூம்.....  காணோம்.  தோழி வீட்டுக்குச் சேதி அனுப்பினேன்.... கொஞ்சம் லேட்டாகும்னு. 'நோ ஒர்ரீஸ், காத்திருக்கோம்' னு சொன்னாங்க.

தோழி வீட்டுக்குப் போனப்ப ஒன்னு இருபது. ' நீங்க பசியோடு காத்திருப்பீங்களே'ன்னு நான் ஆரம்பிக்க, 'நீங்க பசியோடு இருப்பீங்களேன்னுதான் எனக்குக் கவலை'ன்னு தோழி சொல்றாங்க....   ஹௌ ஸ்வீட்!
தோழியின் மகர், கணவர், தோழி , நாங்க இருவர் ....  அஞ்சு பேரும்  சாப்பிட  ஆரம்பிச்சாச்சு.  அருமையான ஒரிஜினல் தின்னவேலி சொதி !

டிஸ்ஸர்ட்டுக்குப் ஃப்ரூட் ஸாலட் !  இன்றைக்கு நம்ம வலையுலகத்தோழி ராமலக்ஷ்மிக்குப் பொறந்தநாள்.  கொண்டாட்ட விருந்துன்னு சொல்லிக்கிட்டோம்.
பசி அடங்கி  விருந்து முடிச்ச திருப்தியில் இருக்கும்போது மகர் ஆனந்த் (இவர்தான் இன்றையப் படங்களுக்குப் பொட்டாக்ராஃபர்! ) நமக்கான அத்திவரதரைக் கொண்டு வந்தார்.  தோழி கல்யாணி (நைன்வெஸ்ட் நானானி)ஆனந்த  அத்தியை , அவுங்க பூஜையில் வச்சுக் கும்பிட்டு, என் கையில் சமர்ப்பிச்சாங்க.

" பாஸ்போர்ட், விஸா, டிக்கெட் இப்படி எதுவுமில்லாமல் நியூஸிக்குப் போறே....  சூதானமா நடந்துக்கோ" 

"அதெல்லாம் கவலைப்படாதீங்க..... நான் குட் பாயா இருப்பேன் "

"இதோ பாரு அத்தி,  தினம் தினம் வகைவகையா பிரசாதம் ஒன்னும் பண்ண மாட்டேன். நான் என்ன சமைக்கிறேனோ, சாப்பிடறேனோ....  அதேதான் உமக்கும்!  ஆனா ஒன்னு  ஒரு வஞ்சனையும் இல்லாமல் என் மனசையே உனக்குத் தந்தாச்சு"

"ஓக்கே துல்ஸி. ஐ லவ் யூ"

ஆனந்த அத்திக்கும் எனக்குமான  மனப்பேச்சு...  ஹிஹி.....
நமக்காக  மகர் ஆனந்த் தேடிப்பார்த்து தெரிஞ்செடுத்த  அத்தியுடன்  தோழி கல்யாணி, தோழியின் கணவர் ஷங்கர் (இவர் CIT யில்  'நம்மவரின்' சீனியர்! ) மகர்  ஆனந்த் இவர்களிடம் பிரியாவிடை வாங்கிக்கிட்டோம்.  குடும்பமே நமக்கு உறவுதான்.

இங்கேயும்  விரும்பினால் க்ளிக்கலாம்.....  அத்தியின்  முன்கதை சுருக்கம் :-)


அடுத்து இன்னொரு விஸிட் .... திருவான்மியூர்.  இங்கே நியூஸியில் இருக்கும் தோழி ஒருவரின் அம்மா,  அங்கே ஒரு சீனியர் சிட்டிஸன் ஹோமில் இருக்காங்க.  அவுங்களைப் போய்ப் பார்த்துக் கொஞ்ச நேரம் பேசிட்டுக் கிளம்பினோம்.  முருங்கைக்கீரை பருப்புப்பொடி இவுங்களுக்குத்தான்.  இந்த பருப்புப்பொடி சமாச்சாரமே  நியூஸித் தோழிதான் சொன்னாங்க.
ஹோமில் உதவியாளர்களா இருக்கும் இளம்பெண்கள் எப்பவும் சிரிச்ச முகத்துடன்  நல்லபடியாக முதியோர்களைப் பார்த்துக்கறாங்க.  இதுவே மனசுக்கு நல்ல சந்தோஷம் தருது, இல்லையோ !

இந்த ஹோமிலும் 'கிறிஸ்மஸ் குடில்' அலங்காரம் வச்சுருக்காங்க.   புள்ளையாரும், நானும் எப்பவும்போல  இருக்கோம் :-)


அம்மாவிடம் சொல்லிக்கிட்டுக் கிளம்பி லோட்டஸ் வந்து சேர்ந்ததும்,  நம்ம ஆனந்த அத்திவரதருக்குச் சின்னதா ஒரு உபசாரம்.  பத்திரமா இவரை நியூஸிக்குக் கொண்டு போகணுமேன்னு சின்னதா ஒரு கவலையும்....

தொடரும்...... :-)


14 comments:

said...

சந்திப்புகள்... இனிமை.

சித்ராம்மா.... எங்க ஊர்க்காரர் ஆச்சே... நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைப் பார்க்கிறேன் - ஃபோட்டோ வழி! நேரில் பார்த்தது - அது ஆச்சு முப்பது வருஷத்துக்கும் மேலே!

அத்தி - அழகா இருக்கார்.

said...

பளிச் பளிச் படங்கள் ...

said...

அசல் சொதியும் அத்தி வரதரும் ரெண்டுமே எங்களுக்கு மிகவும் விருப்பம் தான் ....

said...

அருமை நன்றி சிறப்பு.

said...

உறவுகள் நண்பர்கள் சந்திப்புகள் அத்திவரதர் வருகை என மகிழ்ச்சியான தருணங்களை கண்டு கொண்டோம்.
அத்திவரதரை வணங்கி அவன் அருள் வேண்டுகிறோம்.

said...

சந்திப்புகளை அறிந்து மகிழ்ச்சி. லஞ்ச் படம் கீதா கஃபேதானே... தட்டைவிட பெரிசா இருக்கே அப்பளாம்.

இந்தியப் பயணம் நிறைவுக்கு வருது போலிருக்கே... ஸ்வாகத், கிராண்ட் ஸ்னாக்ஸ் இவற்றில் ஏதேனும் வாங்கினீங்களா (வழிப் பயணத்துக்கு)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

உங்கூர்க்காரர் நல்லாதான் இருக்காங்க. வயது காரணம், கொஞ்சம் களைப்பு தெரிஞ்சது முகத்தில்.... இது முதல்முறை !

அத்திக்கென்ன..... சென்ற இடமெல்லாம் சிறப்பே !

said...

வாங்க அனுப்ரேம்,

நன்றிப்பா !

said...

வாங்க செந்தில்பிரசாத்,

ரெண்டுமேவா ? ஆஹா ஓஹோ........

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

அவனருள் அனைவருக்குமே !!!!

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

அம்பிகா அப்பளமோ ?


ஒன்னும் வாங்கிக்கலை. ஏர்ப்போர்ட்டில் செக்கின் ஆனதும்தான், எடை சரியானதும் எதாவது வாங்கிக்கணும். அதுவும் வழிப்பயணத்துக்கெல்லாம் இல்லை.... வீட்டுப்பெருமாளுக்குக் கை காமிச்சுட்டு மகளுக்கு மட்டும்.

said...

அம்மா

சொதி எங்க வீட்டுல ஸ்பெசல் தான் .அடுத்த முறை இங்க வரும் போது கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க சொதி விருந்து(இஞ்சி பச்சடி ,சொதி , உருளை வறுவல் ) வெஞ்சுடலாம்

.

said...

வாங்க செந்தில் பிரசாத்,

கட்டாயம் வர்றோம் ! கொரோனா ஒழியட்டும் :-)