நெனப்புதான் பொழைப்பைக்கெடுக்குதுன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க?
எட்டுவருஷமா எனக்குப் பேச்சு வார்த்தை கிடையாது. 'அங்கே' போனாலும் அக்கம்பக்கம் பார்ப்பேனே தவிர முகமுழி வேணான்னு மலையை ஒதுக்கியாச்சு. 'நம்மவருக்கு' அது ஒரு உறுத்தலாவே இருந்துருக்கு போல..... அதான் சமயம் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நடந்த அநியாயத்தைச் சொல்லி ஒரு மூச்சு அழுவேனே.... டெர்ம்ஸ் சரி இல்லைப்பா.......
இந்த முறை எனக்கொரு சர்ப்ரைஸ் கொடுக்கறதாக நினைச்சு ஓசைப்படாம ஆன்லைனில் புக் பண்ணிக் காசையும் கட்டிட்டார். சேதி தெரிஞ்சதும் ஒரு பேயாட்டம் ஆடினேன்தான்.....
ரெண்டு நாளுக்கு இதுக்கு ஓசைப்படாம ஒதுக்கியிருக்கார். முதல் நாள் போய் சீனியர் சிட்டிஸன்களுக்கான ஏற்பாட்டில் போய் தரிசனம் முடிச்சுக்கறது. மறுநாள் காலையில் 'என் ஆர் ஐ' களுக்கான முறையில் போய் தரிசனம். அன்றைக்கே பகல் ஒன்னரைக்கு இன்னொரு கல்யாண உற்சவத்தில் கலந்துக்கிட்டு தரிசனம் செஞ்சுடறது. மூணு கல்லில் ஒரு கல்லிலாவது மாங்காய் விழுந்துறாதா?
இப்ப ஒருக்கா முதல் வரியைப் பாருங்க....நெனப்புதான்..... பொழப்பைக் கெடுத்துருது........ ரொம்பச் சரி.
அதென்ன எட்டுவருஷ மனத்தாங்கல்னா.... என்ன விவகாரமுன்னு கொஞ்சம் இந்தச் சுட்டியில் போய்ப் பார்க்கலாம்.... ப்ச்....
ஃப்ளாஷ் பேக்.......
அப்போ பதினொன்னரை மணிக்கு என் ஆர் ஐ பகுதியில் இருக்கணுமுன்னு போனதும், பதினொன்னு இருபத்தியஞ்சுக்கே உள்ளே அனுப்பி, பனிரெண்டு பத்துக்கு வெளியில் வந்தாச்சு. சரியா நாப்பத்தியஞ்சு நிமிட் ! அதே கணக்கை இப்பவும் போட்டுருக்கார்! பனிரெண்டேகாலுக்கு வெளியே வந்து லஞ்ச் முடிச்சுக்கிட்டு ஒன்னரைக்கு அந்த ஆர்ஜித சேவா வரிசைக்குப் போயிடலாம். ஸோ.......... சிம்பிள் இல்லே?
இந்த என் ஆர் ஐ முறையில் போறதுக்கு ஆம்புளைகளுக்கு(ம்) ட்ரெஸ் கோட் இருக்கு! என் ஆர் ஐ ன்னதும் அரை நிஜார் போட்டுக்கிட்டு வந்துருவாங்கன்ற பயம் போல :-) வேஷ்டி கட்டிண்டு வரணும். ( இதை என்னாண்டை சொல்லவே இல்லையாக்கும்...கேட்டோ ! )
ஒன்பதாம் தேதி காலையில் கிளம்பிப்போறோம், பத்தாம் தேதி ராத்ரி திரும்பி வர்றோமுன்னு நம்மவர் பக்காவா ப்ளான் பண்ணியிருக்கார். நம்ம அடையார் கோவிலில் கார்த்திகை தீபம் பத்தாம்தேதின்னு பார்த்ததும், ஆஹா.... 'அங்கே' கூட்டம் குறைவாக இருக்கும். டிசம்பர் குளிர் வேற.... ன்னு மனசு கொண்டாடுனதும் உண்மை.
இதுக்கிடையில் நமக்கு (ஔரங்காபாதில் இருந்து திரும்பினபிறகு ) நாலு நாள் கிடைச்சுருக்கு. பழையபடி கடைகண்ணி, நண்பர்கள், உறவினர்கள் சந்திப்புன்னு ஓடத்தான் வேணும். வந்த மறுநாள் காலை ப்ரேக்ஃபாஸ்ட் போனப்ப, ஏகப்பட்ட கூட்டம். எல்லோரும் மலேசியாவில் இருந்து. தமிழ்க்காரர்கள் தான். நடனம் ஆட வந்துருக்காங்களாம். எங்கே ? இப்ப இசைவிழாவேற தொடங்கி இருக்குல்லே.... டிசம்பர் சீஸன்?
சென்னையில் இல்லையாம். வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் நடன நிகழ்ச்சியாம். வாசலில் இருந்த பஸ் அவுங்களுக்கானதாம் ! நடன ஆசிரியை ரொம்ப நல்லா ஸ்நேகமாப் பேசுனாங்க. கே எல்லில் நடனப்பள்ளி நடத்தறாங்களாம். குழு நடனம், முப்பதுபேர் அஞ்சு வயசு முதல் இருபத்தியிரண்டு வயசுவரை ! நிகழ்ச்சி நல்லபடி நடக்கட்டுமுன்னு வாழ்த்தினோம்.
போத்தீஸ், குமரன்னு கடைகளுக்குப் போனால் எல்லா இடங்களிலும் கூட்டமோ கூட்டம். வாங்கறதைக் கொஞ்சம் வாங்கியாச்சு. எனக்கில்லைப்பா. உறவுகளுக்குக் கொடுக்க வாங்கினதே....
நம்மவருக்குப் பல்வலின்னு டாக்டரைப் பார்க்கப்போனோம். நாம் ஔரங்காபாத் கிளம்பும் முதல் நாளும் கொஞ்சம் ஜூரமா இருக்கேன்னு நம்ம டாக்டர் பவானியைப் பார்க்கப்போனால் அவுங்க க்ளினிக் மூடி இருந்தது. ஆபத்துக்குப் பாவமில்லைன்னு வேற டாக்டரைத் தேடப்போக டாக்டர் ரங்கநாதன் கிடைச்சார். இதே பேட்டைதான், தி நகர். ஒரு வாரத்துக்கு மருந்தும் கொடுத்துருந்தார். கொடுத்த மருந்து சட்னு கேட்டது.
இப்பப் பல்வலியா வாய் வலியான்னு தெரியாத நிலையில் அவரையே பார்க்கப்போனோம். நல்ல மாதிரிதான். ஆடம்பரம் ஒன்னும் இல்லாத எளிய மனிதரும், எளிய க்ளினிக்கும். நம்ம அண்டை நாடுவரை வந்துருக்காராம். (நமக்கு இது போதாதா? ஹிஹி )
இன்னும் இந்தமாதிரி மருத்துவர்கள் இருக்கத்தான் செய்யறாங்க. இப்படி இருப்பது(ம்) மக்கள் சேவைதான் இல்லையோ? பெரிய ஹாஸ்பிடல்களா வச்சுக் கொள்ளை அடிக்காம......
ஒரு சமயம் 'நம்மவருக்கு' ரத்தக்கொதிப்பு மாத்திரை தீர்ந்து போச்சு. (இது பத்து வருசத்துக்கு முந்திய கதை )மருந்துக்கடையில் இங்கத்து சீட்டைக் காமிச்சு (பெயர் தெரிஞ்சுக்கத்தான்) வாங்கி இருக்கலாம்தான். ஆனால்.... இவர் பெரிய மருத்துவ மனைக்குள் போய் கேக்க, அப்படியே இவரைப் பிடிச்சுப்போட்டுக் கையில் ஒரு ஃபைலும் கொடுத்து நாலைஞ்சு இடங்களில் பணத்தைக் கட்டச் சொல்லி மூணுநாள் ட்ரில் வாங்கி விதவிதமான பரிசோதனைகள் செஞ்சு இல்லாத வியாதிகளை எல்லாம் கண்டு பிடிக்க முடியலைன்னு வருத்ததோடு நம்ம ஊர் மாத்திரை பெயரிலேயே மருந்துச் சீட்டு கொடுத்தாங்க. இந்த அழகில் 'நீயும் செக்கப் செஞ்சுக்கம்மா' ன்னு எனக்குப் பரிந்துரை வேற !!! 'ஆளை விடுங்கப்பா'ன்னு தப்பிச்சேன்.
அவருடைய க்ளினிக் இருக்குமிடத்தில் வளாகத்துள் ஒரு புள்ளையார் கோவில் இருக்கு. அப்படியே சாமி கும்பிடப்போனால் பக்கத்துலே ஒரு கூண்டும் முயல்களும். அச்ச்சோ....... அழகு !
வாயைப் பார்த்த அவர், இது பல் சம்பந்தமுன்னுட்டார். நாளைக்கு ஒரு பல்டாக்டரைப் பார்க்கணும்....
'நம்மவர்' வலி வந்து வந்து போகுதுன்னாரா... சரி. ( ஒரு வேளை நான் கடைக்குள் நுழையும்போது மட்டும் வலி வருதோ? ) எப்போ வலிக்கலையோ அப்ப சாப்பிட்டுக்கணும், இல்லே?
சாயங்காலமாக் கிளம்பி வெங்கட்நாராயணா ரோடு திருப்பதி தேவஸ்தானக் கோவில். பெருமாளை தரிசனம் செஞ்சுக்கிட்டு, இதுபோல அங்கே வர்ற திட்டத்தைச் சொல்லி, 'எட்டு வருஷத்துக்குப்பிறகு வர்றேன். பார்த்துச் செய். பழையபடி எதாவது கடுபடு பண்ணேன்னா அம்புட்டுதான்'னு அல்ட்டிமேட்டம் கொடுத்தேன். "இங்கே எப்படி தெருவாசலில் நின்னாலும் உன்னைப் பார்க்க முடியுது! அங்கே இவ்ளவு கூட வேணாம். கண் குளிர ஒரு நிமிட் பார்க்க ஏற்பாடு செய்ய உன்னால் முடியாதா என்ன? "
( இந்த சாமிகிட்டப் பேசும் வழக்கம் எனக்கு உண்டு. இங்கே நம்ம வீட்டுப் பெருமாளுக்கு என் பேச்சைக் கேட்டே காது அவுட் ஆகி இருக்கும்.... இன்பமோ துன்பமோ எல்லாம் அவன் காதுக்குப் போயிரும்! )
பக்கத்துலே இருக்கும் ஸ்ரீ க்ருஷ்ணா ஸ்வீட்ஸுக்குப்போய் கொஞ்சம் இனிப்பு வாங்கிக்கணுமுன்னு ( நாளைக்கு ஒரு இடத்துக்குப் போகணும்) போனா.... புதுசா இலைசாப்பாடுன்னு ஒன்னு ஆரம்பிச்சுருக்காங்க. காலை ஏழு முதல் ராத்ரி பத்து வரை வேளாவேளைக்கு வயித்துக்குப் போட்டுருவாங்க! ஆடம்பரம் இல்லாம, சுத்தமா இருக்கு இடம்.
பல்வலிக்குதான்னா இல்லைன்னார். சரி இங்கேயே டின்னரை முடிச்சுக்கலாம். எனக்கு மோர்க்களி கிடைச்சது. ஆஹா.... எத்தனை வருஷமாச்சு...... ஏன் வீட்டுலே செய்யவே இல்லை? எப்படி மறந்தேன்..........
அந்தாண்டை இருக்கும் கடைக்குள் போனால்.... ஹெர்பல் கண்ட்ரி ஷுகர், சுக்கு மல்லிக் காபி, விதவிதமான மூலிகையுடன் பருப்புப்பொடின்னு.......... வாவ்.....
பானGAMனு இருக்கு! பேசாம Come னு போட்ருக்கலாம்.
இனிப்பு ஒரு டின் வாங்கிக்கிட்டுக் கிளம்பினோம்.
இந்தக் கடைகள் எல்லாம் வந்தபிறகு மானிட வாழ்க்கை சுலபமாப் போயிருக்கு. எதுக்கும் மெனெக்கெட வேணாம்.....
தொடரும்....... :-)
எட்டுவருஷமா எனக்குப் பேச்சு வார்த்தை கிடையாது. 'அங்கே' போனாலும் அக்கம்பக்கம் பார்ப்பேனே தவிர முகமுழி வேணான்னு மலையை ஒதுக்கியாச்சு. 'நம்மவருக்கு' அது ஒரு உறுத்தலாவே இருந்துருக்கு போல..... அதான் சமயம் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நடந்த அநியாயத்தைச் சொல்லி ஒரு மூச்சு அழுவேனே.... டெர்ம்ஸ் சரி இல்லைப்பா.......
இந்த முறை எனக்கொரு சர்ப்ரைஸ் கொடுக்கறதாக நினைச்சு ஓசைப்படாம ஆன்லைனில் புக் பண்ணிக் காசையும் கட்டிட்டார். சேதி தெரிஞ்சதும் ஒரு பேயாட்டம் ஆடினேன்தான்.....
ரெண்டு நாளுக்கு இதுக்கு ஓசைப்படாம ஒதுக்கியிருக்கார். முதல் நாள் போய் சீனியர் சிட்டிஸன்களுக்கான ஏற்பாட்டில் போய் தரிசனம் முடிச்சுக்கறது. மறுநாள் காலையில் 'என் ஆர் ஐ' களுக்கான முறையில் போய் தரிசனம். அன்றைக்கே பகல் ஒன்னரைக்கு இன்னொரு கல்யாண உற்சவத்தில் கலந்துக்கிட்டு தரிசனம் செஞ்சுடறது. மூணு கல்லில் ஒரு கல்லிலாவது மாங்காய் விழுந்துறாதா?
இப்ப ஒருக்கா முதல் வரியைப் பாருங்க....நெனப்புதான்..... பொழப்பைக் கெடுத்துருது........ ரொம்பச் சரி.
அதென்ன எட்டுவருஷ மனத்தாங்கல்னா.... என்ன விவகாரமுன்னு கொஞ்சம் இந்தச் சுட்டியில் போய்ப் பார்க்கலாம்.... ப்ச்....
ஃப்ளாஷ் பேக்.......
அப்போ பதினொன்னரை மணிக்கு என் ஆர் ஐ பகுதியில் இருக்கணுமுன்னு போனதும், பதினொன்னு இருபத்தியஞ்சுக்கே உள்ளே அனுப்பி, பனிரெண்டு பத்துக்கு வெளியில் வந்தாச்சு. சரியா நாப்பத்தியஞ்சு நிமிட் ! அதே கணக்கை இப்பவும் போட்டுருக்கார்! பனிரெண்டேகாலுக்கு வெளியே வந்து லஞ்ச் முடிச்சுக்கிட்டு ஒன்னரைக்கு அந்த ஆர்ஜித சேவா வரிசைக்குப் போயிடலாம். ஸோ.......... சிம்பிள் இல்லே?
இந்த என் ஆர் ஐ முறையில் போறதுக்கு ஆம்புளைகளுக்கு(ம்) ட்ரெஸ் கோட் இருக்கு! என் ஆர் ஐ ன்னதும் அரை நிஜார் போட்டுக்கிட்டு வந்துருவாங்கன்ற பயம் போல :-) வேஷ்டி கட்டிண்டு வரணும். ( இதை என்னாண்டை சொல்லவே இல்லையாக்கும்...கேட்டோ ! )
ஒன்பதாம் தேதி காலையில் கிளம்பிப்போறோம், பத்தாம் தேதி ராத்ரி திரும்பி வர்றோமுன்னு நம்மவர் பக்காவா ப்ளான் பண்ணியிருக்கார். நம்ம அடையார் கோவிலில் கார்த்திகை தீபம் பத்தாம்தேதின்னு பார்த்ததும், ஆஹா.... 'அங்கே' கூட்டம் குறைவாக இருக்கும். டிசம்பர் குளிர் வேற.... ன்னு மனசு கொண்டாடுனதும் உண்மை.
இதுக்கிடையில் நமக்கு (ஔரங்காபாதில் இருந்து திரும்பினபிறகு ) நாலு நாள் கிடைச்சுருக்கு. பழையபடி கடைகண்ணி, நண்பர்கள், உறவினர்கள் சந்திப்புன்னு ஓடத்தான் வேணும். வந்த மறுநாள் காலை ப்ரேக்ஃபாஸ்ட் போனப்ப, ஏகப்பட்ட கூட்டம். எல்லோரும் மலேசியாவில் இருந்து. தமிழ்க்காரர்கள் தான். நடனம் ஆட வந்துருக்காங்களாம். எங்கே ? இப்ப இசைவிழாவேற தொடங்கி இருக்குல்லே.... டிசம்பர் சீஸன்?
போத்தீஸ், குமரன்னு கடைகளுக்குப் போனால் எல்லா இடங்களிலும் கூட்டமோ கூட்டம். வாங்கறதைக் கொஞ்சம் வாங்கியாச்சு. எனக்கில்லைப்பா. உறவுகளுக்குக் கொடுக்க வாங்கினதே....
நம்மவருக்குப் பல்வலின்னு டாக்டரைப் பார்க்கப்போனோம். நாம் ஔரங்காபாத் கிளம்பும் முதல் நாளும் கொஞ்சம் ஜூரமா இருக்கேன்னு நம்ம டாக்டர் பவானியைப் பார்க்கப்போனால் அவுங்க க்ளினிக் மூடி இருந்தது. ஆபத்துக்குப் பாவமில்லைன்னு வேற டாக்டரைத் தேடப்போக டாக்டர் ரங்கநாதன் கிடைச்சார். இதே பேட்டைதான், தி நகர். ஒரு வாரத்துக்கு மருந்தும் கொடுத்துருந்தார். கொடுத்த மருந்து சட்னு கேட்டது.
இப்பப் பல்வலியா வாய் வலியான்னு தெரியாத நிலையில் அவரையே பார்க்கப்போனோம். நல்ல மாதிரிதான். ஆடம்பரம் ஒன்னும் இல்லாத எளிய மனிதரும், எளிய க்ளினிக்கும். நம்ம அண்டை நாடுவரை வந்துருக்காராம். (நமக்கு இது போதாதா? ஹிஹி )
இன்னும் இந்தமாதிரி மருத்துவர்கள் இருக்கத்தான் செய்யறாங்க. இப்படி இருப்பது(ம்) மக்கள் சேவைதான் இல்லையோ? பெரிய ஹாஸ்பிடல்களா வச்சுக் கொள்ளை அடிக்காம......
ஒரு சமயம் 'நம்மவருக்கு' ரத்தக்கொதிப்பு மாத்திரை தீர்ந்து போச்சு. (இது பத்து வருசத்துக்கு முந்திய கதை )மருந்துக்கடையில் இங்கத்து சீட்டைக் காமிச்சு (பெயர் தெரிஞ்சுக்கத்தான்) வாங்கி இருக்கலாம்தான். ஆனால்.... இவர் பெரிய மருத்துவ மனைக்குள் போய் கேக்க, அப்படியே இவரைப் பிடிச்சுப்போட்டுக் கையில் ஒரு ஃபைலும் கொடுத்து நாலைஞ்சு இடங்களில் பணத்தைக் கட்டச் சொல்லி மூணுநாள் ட்ரில் வாங்கி விதவிதமான பரிசோதனைகள் செஞ்சு இல்லாத வியாதிகளை எல்லாம் கண்டு பிடிக்க முடியலைன்னு வருத்ததோடு நம்ம ஊர் மாத்திரை பெயரிலேயே மருந்துச் சீட்டு கொடுத்தாங்க. இந்த அழகில் 'நீயும் செக்கப் செஞ்சுக்கம்மா' ன்னு எனக்குப் பரிந்துரை வேற !!! 'ஆளை விடுங்கப்பா'ன்னு தப்பிச்சேன்.
அவருடைய க்ளினிக் இருக்குமிடத்தில் வளாகத்துள் ஒரு புள்ளையார் கோவில் இருக்கு. அப்படியே சாமி கும்பிடப்போனால் பக்கத்துலே ஒரு கூண்டும் முயல்களும். அச்ச்சோ....... அழகு !
வாயைப் பார்த்த அவர், இது பல் சம்பந்தமுன்னுட்டார். நாளைக்கு ஒரு பல்டாக்டரைப் பார்க்கணும்....
'நம்மவர்' வலி வந்து வந்து போகுதுன்னாரா... சரி. ( ஒரு வேளை நான் கடைக்குள் நுழையும்போது மட்டும் வலி வருதோ? ) எப்போ வலிக்கலையோ அப்ப சாப்பிட்டுக்கணும், இல்லே?
( இந்த சாமிகிட்டப் பேசும் வழக்கம் எனக்கு உண்டு. இங்கே நம்ம வீட்டுப் பெருமாளுக்கு என் பேச்சைக் கேட்டே காது அவுட் ஆகி இருக்கும்.... இன்பமோ துன்பமோ எல்லாம் அவன் காதுக்குப் போயிரும்! )
பக்கத்துலே இருக்கும் ஸ்ரீ க்ருஷ்ணா ஸ்வீட்ஸுக்குப்போய் கொஞ்சம் இனிப்பு வாங்கிக்கணுமுன்னு ( நாளைக்கு ஒரு இடத்துக்குப் போகணும்) போனா.... புதுசா இலைசாப்பாடுன்னு ஒன்னு ஆரம்பிச்சுருக்காங்க. காலை ஏழு முதல் ராத்ரி பத்து வரை வேளாவேளைக்கு வயித்துக்குப் போட்டுருவாங்க! ஆடம்பரம் இல்லாம, சுத்தமா இருக்கு இடம்.
பல்வலிக்குதான்னா இல்லைன்னார். சரி இங்கேயே டின்னரை முடிச்சுக்கலாம். எனக்கு மோர்க்களி கிடைச்சது. ஆஹா.... எத்தனை வருஷமாச்சு...... ஏன் வீட்டுலே செய்யவே இல்லை? எப்படி மறந்தேன்..........
அந்தாண்டை இருக்கும் கடைக்குள் போனால்.... ஹெர்பல் கண்ட்ரி ஷுகர், சுக்கு மல்லிக் காபி, விதவிதமான மூலிகையுடன் பருப்புப்பொடின்னு.......... வாவ்.....
பானGAMனு இருக்கு! பேசாம Come னு போட்ருக்கலாம்.
இனிப்பு ஒரு டின் வாங்கிக்கிட்டுக் கிளம்பினோம்.
இந்தக் கடைகள் எல்லாம் வந்தபிறகு மானிட வாழ்க்கை சுலபமாப் போயிருக்கு. எதுக்கும் மெனெக்கெட வேணாம்.....
தொடரும்....... :-)
15 comments:
கிருஷ்ணா ஸ்வீட்ஸில் எல்லாம் கிடைக்கும்தான். ஆனால் மோர்க்களி சுவை சரி இல்லை என்பது என்னோட கருத்து. கொழுக்கட்டை காஸ்ட்லி.
தரிசனம் நிறைவாகக் கிடைத்ததா என்று அறிய ஆவல். பொதுவா நல்லா தரிசனம் கிடைக்கும்.
ஸ்ரீகிருஷ்ணா மிகவும் விலை அதிகம். நாம பாரம்பரிய சுவைகளை வேறு கடைகளிலும் வாங்கக்கூடும். மோர்க்களி, வெளியில் எங்குமே நல்லா இருக்காது. வீட்டில் செய்வதுதான் சுவை.
//சேதி தெரிஞ்சதும் ஒரு பேயாட்டம் ஆடினேன்// சாதாரணமாவே ஹிஹிஹி, இதுல கொலுசு வேற கட்டி விட்டா கேட்கணுமா.
வழக்கம்போல அருமையான அனுபவப்பகிர்வு. நன்றி.
நல்ல தொகுப்பு. படித்தேன். ரசித்தேன். தொடருங்கள், தொடர்வோம்...
தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஐந்து வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது சென்னை… சில சுருக்ஸ்…. (பயணத்தொடர் 2020 பகுதி 15 ) பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் விலை கொஞ்சம் அதிகம் தான். பெரும்பாலும் நன்றாகவே இருந்தாலும் சில எனக்குப் பிடிக்கவில்லை.
போதீஸ்! :) இப்படி நிறைய இடங்களில் ஆரம்பித்து விட்டார்கள் - திருச்சியில் கூட இருக்கிறது - பிரம்மாண்டம் தான்.
திருப்பதி நல்ல தரிசனம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
பல கதைகள்😊😊..
வாங்க ஸ்ரீராம்,
இதுக்குத்தான் நான் ஒரு வழி வச்சுருக்கேன். விலை அதிகமுன்னு நினைக்கும்போது சட்னு அதை அம்பதால் வகுத்துருவேன். அப்புறம் பார்த்தால் சின்ன எண்களாக இருக்கும் :-)
பயணத்துலே இதெல்லாம் கிடைப்பது அரிது இல்லையோ!
வாங்க நெல்லைத்தமிழன்,
தரிசனம் 'ரொம்ப நல்லா' கிடைச்சதுன்னு சொல்லிக்கலாமுன்னா...........
மற்ற கடைகளுக்குப் போக வாய்ப்பில்லை.....
மறந்துபோன மோர்க்களியை நினைவூட்டுனது அவுங்கதான் :-)
இனி அடிக்கடி செஞ்சுருவேன்.
வாங்க விஸ்வநாத்,
அது கொலுசா இல்லை சலங்கையா? ஹாஹா...
வாங்க ஜம்புலிங்கம் ஐயா,
வருகைக்கு நன்றி !
வாங்க சிகரம் பாரதி,
நன்றி !
வாங்க வெங்கட் நாகராஜ்,
அங்கே சில ஐட்டங்கள் பரவாயில்லை. விலை கொஞ்சம் அதிகமானாலும் சுத்தமாக இருப்பதால் தொடர்ந்து போகிறோம். நாம் தங்கும் அதே பேட்டை என்பதும் ஒரு வசதி.
போத்தீஸ் மட்டுமா? பெரிய ஜவுளிக் கடைகளும், நகைக்கடைகளும் கூட இப்ப செயின் ஸ்டோர்ஸ் ஆகி இருக்கு. முந்தி இருந்ததைப்போல தி நகர் போய்த்தான் வாங்கணும் என்பதில்லை.....
திருப்பதி தரிசனம்........ லேசுப்பட்டவனா 'அவன்' ?
வாங்க அனுப்ரேம்,
கதைகள்.... ஹாஹா...
இல்லையா பின்னே ?
திருப்பதி வெங்கடேசா தரிசனம் மனம் குளிர்ந்திருக்கும்.
Post a Comment