Wednesday, February 05, 2020

பொண்ணழைப்பும் போஜனமும் !(பயணத்தொடர் 2020 பகுதி 10 )

நம்ம நதீம் கொடுத்த லிஸ்ட்லே நாலு இடம் ஆச்சு.  சித்தார்த் கார்டன் & Zoo போகும் ஐடியா இல்லை.  அப்ப ம்யூஸியம்  மட்டும்தான்.  போய் பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டால்  நிதானமா ம்யூஸியம் சுத்தலாமேன்னு  நம்ம ஹொட்டேலுக்கு திரும்பினோம்.  கேட்டுக்குள் நுழையும்போதே கோலாகலமா இருக்கு. பாண்டு வாத்ய கோஷ்டி  முழங்கிக்கிட்டு இருக்காங்க.  என்னன்னு பார்த்தால் பாராத்!   இது எனக்குப் புதுசு. ஏன்?  பொண்ணு அழைப்பு!

அந்தக் காலத்துலே பிள்ளை வீட்டுக் கல்யாணமுன்னா, பொண்ணு அந்த ஊருக்குள் நுழையும்போது பெண்ணழைப்புன்னு  ஒன்னு இருக்கும். ஜானவாசம் போல ஜானகி வாசம் :-)எங்க பெரியக்கா கல்யாணம் மாப்பிள்ளை வீட்டுலேதான் ! வட இந்தியாவில் பொண்ணழைப்பு இருக்காதுன்னு ஒரு நெனப்புதான்........
அப்ப மாப்பிள்ளை அழைப்பு இல்லையான்னு கல்யாணவீட்டுக்காரர்களைக் கேட்டால், சாயங்காலம் ஏழு மணிக்காம். இங்கெயேதான்னார்.
டாப் திறந்த காரில் பொண்ணு ஊர்வலம்.  அதீத மேக்கப் ஒன்னும் இல்லாம ரொம்ப சாதாரணமா இருந்தாங்க. காரில் உக்கார்ந்து வர்றதைப் பார்க்காம இருந்துருந்தா....  அவுங்கதான் கல்யாணப்பொண்ணுன்னு நம்பி இருக்கமாட்டேன்.....   ரொம்பப் பெரிய இடம் போல.....   அதான் சிம்பிளா இருக்காங்க.  ஹொட்டேல் வாசலில் வண்டி நின்னதும் பொண்ணு இறங்கி, தோழிகள், உறவினர்களோடு சேர்ந்து ஆடறாங்க.  நின்னு ரசிச்சு, க்ளிக்கின்னு எல்லாம் ஆச்சு.


கல்யாணமே கொண்டாட்டம் இல்லையோ!   நேரம் போனதே தெரியலை. அப்புறம் பார்த்தால் மணி ரெண்டாகப்போகுது.  (பேசாமக் கல்யாணக்கும்பலோடு போய் சாப்புட்டுருக்கலாமோ !  ஹாஹா)
வலையில் பார்த்துவச்ச  இடத்துக்குச் சாப்பிடப்போனோம். சையது வேற இடத்தில் சாப்புடுவாராம். ரெஸ்ட்டாரண்டுக்குப் பெயர் போஜ்.  இது அந்த போஜ் (சுமை) இல்லை  போஜனம் என்பதன் சுருக். 
முகப்புலே புள்ளையார் அன்றைய தின போஜனத்தை ரசிச்சுக்கிட்டு இருந்தார்.  இத்தனை வகையை எப்படி முழுங்கறதுன்னு மலைப்பு   (எனக்கும்தான்!)
முதலில் ஒரு ஹாலில்  வடக்கர்கள் சம்ப்ரதாயமா உக்கார்ந்து சாப்பிடும் வகையில்  இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க. அநேகமா ராஜஸ்தான் மக்களுக்காக இருக்குமோ?  பகடிகளைப் பார்த்தால் அப்படித் தோணுச்சு. எதாவது பார்ட்டி/ தனியார் விழாவுக்காக இருக்கலாம்.

அடுத்த பெரிய ஹாலில்  மேஜைகளும் நாற்காலிகளுமா டைனிங்! பெரிய தட்டும், ஏகப்பட்டக் குட்டிக்கிண்ணங்களுமா பரபரன்னு பரிமாற ஆரம்பிச்சாங்க.




என்ன ஒரு நல்ல விஷயமுன்னா.... எல்லாம் சின்னச் சின்ன போர்ஷன். பிடிச்சுருந்தா இன்னும் வாங்கிக்கலாம்.
அன்லிமிட்டட் மீல்ஸ்தான். பஞ்சாபி, குஜராத்தி, ராஜஸ்தானி வகை சமையல்களாம். மராட்டி இல்லை போல.....
இதுதான் மெனு.... நீங்களே பாருங்க.....
இது மொத்தத்துலேயும் எனக்கானவை ரொம்பக் குறைவான ஐட்டங்களே.....  ஆனால் கண்ணால் நிறைய சாப்பிட்டேன்.

சாப்பிடும்போது படம் எடுக்க முடியாமல் போச்சுன்ற குறை இருந்தது.....   கடைசியில் 'பான்' வந்தது. க்ளிக் ! போதும்.  வாயில் போட்டுக்க வேணாம்.
இங்கே பார்ஸல் கூட வாங்கிக்கலாமாம். ஐ மீன் சாப்பாடு ! பரவாயில்லையே......
சாப்பாடு ஆனதும்,  அஞ்சு நிமிட் ரெஸ்ட். இதோ   கிளம்பி நேரா ம்யூஸியம் போறோம்.

தொடரும்........ :-)


12 comments:

said...

நேற்றிரவு ஒரு ரிசப்ஷன் முடிந்து திரும்புகையில் ஒரு குடிசைப்பபகுதியில் கார் வைத்து மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்கிக்கொண்டிருந்தது.  இரவு ஒன்பதரை மணி!  குறுகிய அந்தப் பாதையில் தாண்டி வருவதற்குள் போதும் போதுமென்றானது!

said...

சாப்பாடு சிறப்பு; அருமை நன்றி.

said...

ரொம்ப நாளைக்கப்பறம் படிக்கிறேன். நிறைய படிக்கவேண்டி இருக்கு. அப்போதான் இது எந்த இடம்னு தெரியவரும்.

இருந்தாலும் ப்ளேட்டில் இருக்கும் ஐட்டங்களை எல்லாம் ரசித்து உண்ண முடியுமா? 5-6 ஐட்டங்கள்னா ஓகே.. இது ஏகப்பட்டது இருக்கும் போலிருக்கு.

said...

சிறப்பான விருந்து .
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க நலமுடன்.

said...

சுவையான விருந்து. இப்போது இந்த மாதிரி பாரம்பரிய உணவு வழங்கும் உணவகங்கள் வடக்கில் நிறையவே திறந்திருக்கிறார்கள். அஹமதாபாத் சென்ற போதும், ஜெய்பூர் சென்ற போதும் இப்படியான இடங்களில் சுவைத்திருக்கிறேன். நல்ல விருந்து தான்! கண்ணால் சாப்பிட மட்டும் தான் பலருக்கு முடியும்!

தொடர்கிறேன்.

said...

அடடா...ஒரே நேரத்தில் எப்படி அனைத்தையும் சாப்பிடுறது...

டேஸ்ட் பார்க்கலாம்

said...

வாங்க ஸ்ரீராம்,

நல்லவேளை இரவு நேரம்! பகல் பொழுதுன்னா போக்குவரத்து இன்னும் அதிகமா இருந்துருக்கும், இல்லே ? குதிரை போய் கார் வந்தது டும் டும் டும் !

said...

வாங்க விஸ்வநாத்,

ஹாஹா.... நன்றி !

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

ஔரங்காபாதில் சுத்திக்கிட்டு இருக்கோம் இப்போ :-)

நிதானமா வாசிக்கலாம். வலையில் இது ஒரு வசதி !

said...

வாங்க மாதேவி,

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,


அஹமதாபாத் கோபி யிலும் கூட அன்பான உபசரிப்புடன் கிட்டத்தட்ட ஊட்டி விட்டுடறாங்க :-)

நமக்குத்தான் வயிறு சின்னதாப் போயிருச்சு :-)

ஏகப்பட்ட வகைகளை ஒரு சேரப் பார்த்தால் கண்ணு நிறைஞ்சுருது. கூடவே வயிறும் நிறைஞ்ச உணர்வு !

said...

வாங்க அனுப்ரேம்,

அப்படித்தான் ஆச்சு.