Friday, February 14, 2020

தசாவதார புத்தர் ! (பயணத்தொடர் 2020 பகுதி 14 )

காலையில் கொஞ்சம் நிதானமாகத்தான் எழுந்து கடமைகளை முடிச்சோம்.  நேத்து அறை எடுத்தப்ப, ப்ரேக்ஃபாஸ்ட் இல்லாமல்னு  ஒரு சாய்ஸ் இருந்ததால்....  வேணாமுன்னு தீர்மானிச்சோம். ஆயிரத்துச் சொச்சம் மிச்சம்!  ராத்ரி வாங்கிவந்த தயிர் பாக்கி இருந்துச்சு.  வேறெதாவது தேறுமான்னு நம்ம பொட்டிகளைக் குடைஞ்சால் நம்ம சங்கீதா மிக்ஸர், 'நான் இருக்கேன் மம்மி'ன்னுச்சு.   அட !  எப்படி இது மறந்தே போச்சு !!!  அஜந்தாவுலே உக்கார்ந்து மிக்சர் தின்ற சான்ஸ் போயிருச்சே.........    ப்ச்....  கொஞ்சம் மிக்சரும் தயிருமா  புதுவித ப்ரேக்ஃபாஸ்டை முடிச்சுட்டு, வெளியே ஒரு ரவுண்டு போகலாமுன்னு கிளம்பினோம். கடைகள் எல்லாம் பத்துமணிக்குமேலேதான் திறக்குறாங்க.

நமக்கு செக்கவுட் பகல்  பனிரெண்டு. ஃப்ளைட் அஞ்சு மணிக்கென்பதால் லேட் செக்கவுட் கேட்டதுக்கு  ரெண்டுவரை கொடுத்தாங்க. அதுவரை கொஞ்சம் வெளியே போய்வரலாமான்னு.... கிளம்பி....

இங்கத்துத் தோட்டத்தைச் சுத்திட்டு,  மெயின் கேட்டாண்டை போனால், ஆட்டோ கிடைச்சது. Prozone Mall  உள்ளூரில் ஒரு பெரிய மால் , கொஞ்சம் அடுத்தாப்லே  ஒன்னரை கிமீ தூரத்தில் இருக்குன்னு.... அங்கே போகலாம்.  ஃபுட் கோர்ட்டில்  எதாவது சாப்பிட்டால் ஆச்சு.  திரும்பிப் போகும்போது, கூப்பிடுங்க. நானே வந்து கூட்டிப்போறேன்னு செல்நம்பர் கொடுத்தார் ஆட்டோக்காரர்.

மணி பதினொன்னு ஆகப்போகுது, இன்னும் மாலில் இருக்கும் கடைகள் கண் முழிக்கலை. திறந்துருந்த ரெண்டு மூணு கடைகளை எட்டிப் பார்த்துட்டு, மாடியில் இருக்கும் ஃபுட்கோர்ட் போனால்....  அங்கேயும்  எல்லோரும் சோம்பல் முறிச்சுக்கிட்டு இருக்காங்க. சமையலே இன்னும் ஆகலையாம்....   நாங்க ஆளுக்கொரு லஸ்ஸி வாங்கிக்குடிச்சுட்டு அந்தாண்டை இன்னும் என்னகடைகள்னு பார்க்கப்போறோம்.  மஸாலா பீட்ஸா வந்துருக்காமே!  ம்ம்ம்... இருக்கட்டும்....

( எனக்குப் பிடிச்சுருந்தது.... ஆனா நம்ம சைஸ் கிடைக்கலைப்பா) 

பிக்பஸார் பார்த்தவுடன், உள்ளே போனோம். எனக்கு பிக்பஸார் கொஞ்சம் பிடிக்கும். சண்டிகர் வாழ்க்கையில் ஹரியானா பிக்பஸாருக்கு அடிக்கடி போவோம். அங்கே பிடிக்காத ஒரே சமாச்சாரம்......  வாய் ஓயாமல் அன்றைய ஆஃபர் ஐட்டங்களை மைக்கில் கத்திக் கத்திச் சொல்லிக் கடுப்பேத்துவாங்க.....

அதே பயத்தோடுதான் உள்ளே போனேன். நல்லவேளை...... அப்படி ஒன்னும் இல்லை....
துணிமணிகள் பகுதிக்குப் போனப்ப, அங்கே இருந்த ஷர்ட்ஸ் வகைகள், நம்ம மருமகன் போட்டுக்கும் விதமா இருக்கேன்னு படங்கள் சில மகளுக்கு அனுப்புனோம். அளவு, கலர், டிஸைன்னு  வாட்ஸ் அப் மூலமாவே பேச்சு வார்த்தைகள் ஆச்சு.  மூணு ஷர்ட்ஸ், ஒரு வெய்ஸ்ட்டுமா  வாங்கியதும், 'நம்மவருக்கும் ' எதாவது வாங்கிக்கச் சொன்னால்...  பிகு பண்ணிக்கிட்டார். சரி... வேணாமுன்னா  வேணாம்.

சமையல் ஆகி இருக்குமேன்னு திரும்ப அந்த பஞ்சாப் க்ரில் போனோம். 'நம்மவருக்கு' ஒரு நார்த் இண்டியன் , எனக்கொரு தஹிபூரி.  ரொம்ப சுமார்னு சொன்னார்.

அப்பதான் 'சென்னையில் பிக்பஸார் இருக்குன்னாலும், இந்த ஸ்டைல் அங்கே பார்த்த நினைவில்லை. கடைசி சான்ஸ் உங்களுக்கு. வேணுமுன்னா போய் வாங்கிக்கலாம்' னு ஆரம்பிச்சேன்.  மனசுமாறிப்போச்சு போல.....  திரும்பப்போய் இவருக்குத் தேவையானதை வாங்கிக்கிட்டுக் கிளம்பிட்டோம்.   கறிகாய்களைக் கண்ணால் தின்னேன்.  அதானே....   வெறும் தஹிபூரி போதுமா?  வாசலில் வேற ஆட்டோ கிடைச்சது. அதே அம்பது ரூ தான்.






மணி ஒன்னரை ஆச்சு. வாங்கி வந்தவைகளைப் பொட்டியில் அடைச்சுட்டு, தோட்டத்தை எட்டிப் பார்த்தால்.....    கல்யாணம் ஒன்னும் இன்றைக்கு இல்லை போல.... விரிச்னு கிடக்கு.
விசேஷம் வருதுன்னா....  அததுக்கு உண்டான ஆட்கள் வந்து அலங்கரிச்சுருவாங்க.  ஹொட்டேல், பணம் சம்பாதிக்க இது ஒரு நல்ல ஐடியா ! நிறைய பேருக்கு வேலை வாய்ப்பும்தான்!

ரெண்டரைக்கு வண்டி வந்துருச்சு.  காமணியில் ஏர்போர்ட் !  செக்கின் ஆச்சு.  நல்ல பளிச்ன்னு சுத்தமா இருக்கு இடம்.  பெருமாள் வேற  ஹாயாப் படுத்துருக்கார்.  இந்த போஸ் இதுவரை பார்க்கலையேன்னு உத்துப்பார்த்தால் தசாவதார புத்தர், கேட்டோ !

தசாவதாரத்துலே புத்தரையும் ஒரு அவதாரமா சிலர் கோர்த்துவிட்டது தெரியும்தானே....  இங்கே என்னன்னா.... புத்தரே தசாவதாரம் எடுத்துருக்கார்!
சென்னை போகும் ஃப்ளைட்டுக்குப் பயங்கரக்கூட்டம்.........  எப்படி, இப்படின்னு வியப்புதான். வர்றப்பப் பார்க்கலையா... அதேதான். இங்கே நிறைய இன்டஸ்ட்ரீஸ் இருக்குன்னார் 'நம்மவர்'


காமணி நேரத்தாமதத்துக்குப்பின்  கிளம்பிருச்சு வண்டி.   ஆறுமணிக்கு சூரிய அஸ்தமனம்.... ஆகாயத்தில் இருந்து க்ளிக் :-)    ரொம்ப நிதானமா ஓட்டிக்கிட்டு வந்ததால்....  சிங்காரச் சென்னை வந்து சேரும்போது ஏழரை :-)

சென்னை ஏர்ப்போர்ட் கூட அழகாவே இருக்கு!  சுவரில் நாட்டுப்புறக் கலைகள் !  அழகான நடராஜர் ஆடிண்ட்ருக்கார்!  எல்லாம் சமீபத்திய மாற்றங்கள் !

நம்ம லோட்டஸ் வந்து சேரும்போது எட்டுருபது. டாக்ஸிக்காரர், மலைக்குப் போறார்.

நம்ம அறை நமக்காகவே காத்திருந்தது.  வச்சுட்டுப்போன  பொட்டிகளை அறைக்கு வரவழைச்சுட்டு, நாமும் ராச்சாப்பாட்டுக்குக் கீதா போனோம்.  அதே ரெண்டு இட்லி  எனக்கு :-)  கூடவே ஒரு தோசையும் !


அஜந்தா எல்லோரா ஆசை தீர்ந்தது.....  இனி அடுத்து என்னன்னு பார்க்கலாம்.....

தொடரும்............ :-)


10 comments:

said...

//அங்கே இருந்த ஷர்ட்ஸ் வகைகள்// எல்லாமே கோபால் சாருக்கு பிடித்த (அதே) நிறம், (அதே) கட்டம் போட்டது ... வாங்காம இருப்பாரா என்ன ?
(சிங்கப்பூர் ல எடுத்தாலும் - அதே கலர் அதே டிசைன் - விலை அதிகம், உங்களுக்குத் தெரியாதா?)

said...

இனி, அடுத்த இடம் வருவதற்காகத் தயாராக இருக்கிறோம்.

said...

சுவையான படங்கள் மா...

said...

இனிமையான பயணம். எனக்கும் அஜந்தா/எல்லோரா போகும் ஆசை உண்டு. இன்னும் சரியான வாய்ப்பு அமையவில்லை - ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றும் சொல்லலாம்! ஹாஹா...

தொடரட்டும் பயணம்! நானும் தொடர்கிறேன்.

said...

வாங்க விஸ்வநாத்,

மருமகன் எப்பவும் டார்க் கலர்ஸ். மாமனார்.... பளிச்சுன்னே போட மாட்டார். வெளிர் நீலமும், க்ரேவுமாத்தான் நிறைய...ப்ச்...

அழுக்குக் கலர்னு சொல்லணும்... க்ரேன்னு கொஞ்சம் மதிப்பாச் சொல்ல வேண்டியதாப் போயிருச்சு :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

தொடர் வருகைக்கு நன்றி !

said...

வாங்க அனுப்ரேம்,

ரசிப்புக்கு நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

உங்களுக்கு 'அஜந்தா வேளை' வரலைன்னுதான் சொல்லணும். நீங்க வடகிழக்கெல்லாம் போய் வந்தாச்சு. நாங்கள் இன்னும் அந்தப்பக்கம் போகவே இல்லை....

எத்தனை எத்தனை சுவாரஸ்யமான இடங்கள் !!!

said...

//தசாவதாரத்துலே புத்தரையும் ஒரு அவதாரமா சிலர் கோர்த்துவிட்டது தெரியும்தானே.... //

கோர்த்து விடப்டாதாம். கோத்துதான் விடணுமாம். கொத்ஸ் வந்து 'மிரட்டிட்டுப் போனார் '

said...

மறுபடி லோட்டஸ் அடுத்து....

புத்தர் எடுக்காத அவதாரங்களா நாள் ஒன்றுக்கு புதிதுபுதிதாக.தொடரட்டும் அவதாரங்கள்.