நம்ம ஸ்ரீதரோட அப்பா, ஒரு வண்டிக்கு ஏற்பாடு பண்ணினார். அவர் எப்பவும் அங்கேதான் வண்டி எடுக்கறாராம். ரொம்ப நல்ல மாதிரின்னார். நம்ம சீனிவாசன் இல்லாமல் கையொடைஞ்சமாதிரி கிடக்கோமே..... நம்பிக்கையான இடம் கிடைச்சால் நல்லதுதானே? இன்றைக்கு ஒரு ட்ரயல் மாதிரி வரச் சொல்லி இருந்தோம். ஓனரும் கூடவே வந்தார். நம்மோடு அறிமுகம் ஆச்சு. அவரைப் போகும் வழியில் இறக்கி விட்டுட்டு நாம் அல்லிக்கேணி மீசைக்காரனைத் தேடிப்போனோம்.
நிம்மதியான தரிசனம். சனிக்கிழமை கோவிலும் ஆச்சு.
காருள்ளபோதே சுற்றிக்கொள் என்னும் புதுமொழிக்கேற்ப, அங்கிருந்து கயிலையாம் மயிலை! கோவிலுக்குள் நுழையும்போதே மேளதாளத்துடன் வரவேற்பு. புறப்பாடு!
கோவில் மிய்யூஸ்களைத் தவிர வேற யாரும் கண்டுக்கலை.... ( பாற்கடலைவிட கயிலையில் மிய்யூஸ் அதிகமே! )
கபாலி தம்பதியரின் தரிசனம் அருமை. கோவில் வாசலில் நிலவேம்புக் குடிநீர் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க ஒரு தன்னார்வக்குழுவினர்.
இவ்ளோ தூரம் போயிட்டு, கிரி போகாமல் முடியுமோ? அங்கேயும் சின்னதா கோலம் ஷாப்பிங்,பொம்மைகள்தான் அழகோ அழகு ! அப்படியே நம்ம ஆகிவந்த விஜயா.......வில் கொஞ்சம் நகைநட்டு :-)
தோழி வீட்டைக் கடக்கும்போது மனசில் ஒரு வலி..... ப்ச்.....
லோட்டஸ் வரை போய் சிலபொருட்களை எடுத்த கையோடு தாம்பரம் நோக்கிப் போறோம். வர்றோமுன்னு தகவல் சொல்லிட்டதால் நமக்கு அங்கேதான் பெரிய அத்தை வீட்டில் சாப்பாடு. எங்காத்து வேளுக்குடி! ஆகஸ்டில் கனகாபிஷேகம் முடிஞ்சது. நமக்குத்தான் கலந்துக்க வாய்ப்பில்லாமல் போச்சு. அதுக்காக.... நமக்குக் கிடைக்கவேண்டிய பொன்மலர் கிடைக்காமலா போகும் :-)
ஆல்பம் பார்த்தோம். ஆல்பத்தில் எல்லோரையும் பார்த்தோம். நலம் நலம். காலம் யாருக்காகவும் நிற்பதில்லை......வயசு ஏறிக்கிட்டே போகப்போக.... ஆரோக்யம் மட்டும் இறங்கிக்கிட்டே வருது... ப்ச்.... எல்லோருக்கும்தான்.... இல்லை?
பேரன் பேத்திகள் அனைவரும் சேர்ந்து அட்டகாசமாக் கொண்டாடிட்டாங்க. எல்லோரும் நல்லா இருக்கணும்!
சதாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு பத்து வருஷத்துக்கு முன்னே கிடைச்சது. அப்போ எழுதிய பதிவின் சுட்டி இங்கே !
வீட்டுக்குள்ளேயே வாக்கர் வச்சுக்கிட்டு மெல்ல நடக்கறாங்க. ஆனால் தினப்படி பூஜைகளுக்கும், மருமகளுக்கு உதவியாக் காலையில் காய்கறி நறுக்கிக் கொடுப்பதற்கும், டிவி சீரியல்கள் கொஞ்சம் பார்ப்பதற்கும் குறைவே இல்லை! பூர்ணாபிஷேகம் கொண்டாடப் பெருமாள் மனசு வைக்கட்டும்! நம்ம குடும்பத்தின் மூத்த புள்ளிக்கு எங்கள் பணிவான வணக்கங்களும் வாழ்த்துகளும் தெரிவிச்சுக்கிட்டு, அங்கேயே பகல் சாப்பாட்டையும் முடிச்சுக்கிட்டுக் கிளம்பினோம்.
நிம்மதியான தரிசனம். சனிக்கிழமை கோவிலும் ஆச்சு.
ராஜகோபுரத்தை இங்கே அருமையாகப் படம் எடுக்க முடியும்! 'அங்கே' கொஞ்சம் கஷ்டம்... குளத்தைத் தாண்டி அந்தாண்டை போகணும்.... ஆனால் போறதில்லை....
கோவில் மிய்யூஸ்களைத் தவிர வேற யாரும் கண்டுக்கலை.... ( பாற்கடலைவிட கயிலையில் மிய்யூஸ் அதிகமே! )
கபாலி தம்பதியரின் தரிசனம் அருமை. கோவில் வாசலில் நிலவேம்புக் குடிநீர் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க ஒரு தன்னார்வக்குழுவினர்.
இவ்ளோ தூரம் போயிட்டு, கிரி போகாமல் முடியுமோ? அங்கேயும் சின்னதா கோலம் ஷாப்பிங்,பொம்மைகள்தான் அழகோ அழகு ! அப்படியே நம்ம ஆகிவந்த விஜயா.......வில் கொஞ்சம் நகைநட்டு :-)
தோழி வீட்டைக் கடக்கும்போது மனசில் ஒரு வலி..... ப்ச்.....
லோட்டஸ் வரை போய் சிலபொருட்களை எடுத்த கையோடு தாம்பரம் நோக்கிப் போறோம். வர்றோமுன்னு தகவல் சொல்லிட்டதால் நமக்கு அங்கேதான் பெரிய அத்தை வீட்டில் சாப்பாடு. எங்காத்து வேளுக்குடி! ஆகஸ்டில் கனகாபிஷேகம் முடிஞ்சது. நமக்குத்தான் கலந்துக்க வாய்ப்பில்லாமல் போச்சு. அதுக்காக.... நமக்குக் கிடைக்கவேண்டிய பொன்மலர் கிடைக்காமலா போகும் :-)
ஆல்பம் பார்த்தோம். ஆல்பத்தில் எல்லோரையும் பார்த்தோம். நலம் நலம். காலம் யாருக்காகவும் நிற்பதில்லை......வயசு ஏறிக்கிட்டே போகப்போக.... ஆரோக்யம் மட்டும் இறங்கிக்கிட்டே வருது... ப்ச்.... எல்லோருக்கும்தான்.... இல்லை?
பேரன் பேத்திகள் அனைவரும் சேர்ந்து அட்டகாசமாக் கொண்டாடிட்டாங்க. எல்லோரும் நல்லா இருக்கணும்!
சதாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு பத்து வருஷத்துக்கு முன்னே கிடைச்சது. அப்போ எழுதிய பதிவின் சுட்டி இங்கே !
வீட்டுக்குள்ளேயே வாக்கர் வச்சுக்கிட்டு மெல்ல நடக்கறாங்க. ஆனால் தினப்படி பூஜைகளுக்கும், மருமகளுக்கு உதவியாக் காலையில் காய்கறி நறுக்கிக் கொடுப்பதற்கும், டிவி சீரியல்கள் கொஞ்சம் பார்ப்பதற்கும் குறைவே இல்லை! பூர்ணாபிஷேகம் கொண்டாடப் பெருமாள் மனசு வைக்கட்டும்! நம்ம குடும்பத்தின் மூத்த புள்ளிக்கு எங்கள் பணிவான வணக்கங்களும் வாழ்த்துகளும் தெரிவிச்சுக்கிட்டு, அங்கேயே பகல் சாப்பாட்டையும் முடிச்சுக்கிட்டுக் கிளம்பினோம்.
10 comments:
அருமை சிறப்பு
மயிலை, திருவல்லிக்கேணி பல முறை சென்றுள்ளேன். இன்று உங்கள் மூலமாக மறுபடியும் காண்கின்ற வாய்ப்பு. நன்றி.
இவரைப் பற்றி நீங்கள் நிறைய எழுதியிருக்கிறீர்கள். காலம் விரைவாக ஓடுகிறது. பக்திப்பழம் நலமுடன் இருக்கட்டும்.
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கோவில்கள், இல்லையா !!!
வாங்க நெல்லைத்தமிழன்,
எங்களுக்கெல்லாம் இவுங்கதான் பெரிய பலம்! இவுங்க ஆசிகளை வேண்டித்தான் நாங்க எல்லோரும் திரும்பத்திரும்பப் போய் வர்றதெல்லாம்!
இவுங்க நல்லா இருக்கணுமுன்னு தினமும் பெருமாளை வேண்டிக்கறோம்.
அன்பு துளசி மா, சட்டென்று உங்கள் பதிவைப் படிக்கணும்னு
தோன்றியது. எங்க வீட்டைப் பார்க்கத் தானோ. நன்றி மா.
அத்தம்மா நன்றாக இருக்கணும். அவ்ர்கள் அனைவரும் நன்றாக இருக்கணும். நன்றி மா.
வாங்க வல்லி,
நீங்கள் இல்லாத உங்க வீட்டைக் கடக்கும்போது ....... மனசு வெறுமையாப் போயிருது.
பாரிஜாதம்... உங்களைப் பதிவுக்கு இழுத்து வந்துருச்சு பாருங்களேன் !!!!
சென்னை உலா... நன்று.
வல்லிம்மா வீடு - நானும் நண்பர் பால கணேஷ் அவர்களும் ஒரு முறை சென்று வந்தோம். இனிய நினைவுகள்.
பாட்டிம்மாவுக்கு எனது நமஸ்காரம்... அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.
இனிய சந்திப்பு அம்மாவை வணங்குகிறேன்.
Post a Comment