Wednesday, October 30, 2019

சப்பன் சப்பன்னு....அந்த அம்பத்தியாறு........ !!!!! (பயணத்தொடர், பகுதி 162 )

தினம் தினம் இப்படி அம்பத்தியாறு வகைன்னு சொல்லிச் சொல்லி மாய்ஞ்சு போய்க்கிட்டு இருக்கேன் நான்.  அதென்ன அப்படி? என்னென்ன இருக்குமாம்னு ஒரு  ஆர்வம்தான்......
தேடுனதில் கிடைச்சுருச்சு......  ரொம்பத்தெளிவா இல்லைன்னாலும்,  இருக்கு.....    அப்படியே பார்த்துக்கிட்டே போனேன்.....
அப்பதான் இந்த ரஸ்குல்லா சமாச்சாரம் கண்ணில் பட்டது.....   ஆஹா..... அல்வாவுக்குப் பதில் ரஸ்குல்லாவா இருந்ததைச் சொன்னேனோ.....

ராணியம்மா Gகுன்டிச்சாவின்  கோவிலுக்குத் தன் அண்ணன் தங்கையுடன்  கிளம்பிப்போன  ஸ்ரீகிருஷ்ணன்,  அங்கே போய்ச் சேர்ந்ததும் ஒரு நாள் பூராவும் ரதத்தை விட்டு இறங்காமல், அங்கே கிடைச்ச வரவேற்பு, வழிபாடு எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு, மறுநாள்தான் கோவிலுக்குள்ளே போய் உக்கார்றது. அங்கேயும்   உபசாரத்துக்குக் குறைவே இல்லை. தினம் அம்பத்தியாறு வகையும் குறையொன்றுமில்லாமல்  விளம்பறாங்க.

எட்டுநாள் அங்கே விருந்து, பூஜை, உபசாரம்னு  கொண்டாடிட்டு, கிளம்பி  ஸ்ரீக்ஷேத்ராவுக்கு  வர்றாங்க. இதுக்கு பஹூடா யாத்ரான்னு பெயராம்.  வந்தவுடனே கோவிலுக்குள் போகாம வெளியே இருந்தே எல்லோருக்கும் தரிசனம் கொடுக்கறதுதான்.  அப்போ தங்கம், வைரம்னு விலை உயர்ந்த நகைநட்டுகளைப் போட்டு அலங்கரிப்பாங்களாம்.
அன்றைக்கு இரவு முழுசும் வெட்ட வெளியில் தங்கத்தோடு தரிசனம்.  சாமிகளுக்கும் சரி, ஆசாமிகளுக்கும் சரி ராமுழுக்கத் தூக்கமில்லை.  சனம் அப்படிக் குவியுமாம். பார்க்கப்பார்க்கத் தெவிட்டாத அழகும் ஜொலிப்பும். Suna Bhesa ன்னு பெயர்.  (ஸோனா வேஷம்!  ஸோனா = தங்கம்.   அதானே....   அலங்காரப்ரியனுக்கு வேஷங்கட்டிக்கக் கசக்குமா?  )





கையும் காலும் இல்லாத சாமிகளுக்குத் தங்கக்கைகளும் கால்களும்,  சங்கு சக்கரம், தலை அலங்காரமா  தங்கக்ரீடம், காது குண்டலங்கள், விதவிதமான  நெக்லஸ்கள்  இப்படி.... (இதுக்கும் ஒரு பெரிய லிஸ்ட்   கிடைச்சது ! )    120 கிலோ தங்கம் வச்சுருக்கார் நம்ம ஜகந்நாத்.

பலராமருக்கான தங்கக் கலப்பையும் உண்டு. ஆண்களுக்கே இப்படின்னா சுபத்ராவுக்குச் சொல்லணுமா?
இந்த ரதங்கள் எல்லாம் ரொம்பவே  பெரிய சைஸ். ஒரு மாடி வீடு அளவு இருக்கு.  அப்படியே வீட்டை உருட்டிக்கிட்டுப் போறதுதான்.  இங்கே  நியூஸியில்  மரவீடுகளை பெரிய ட்ரக்கில் ஏத்திக்கிட்டுப் போவாங்க. இதுக்கான ஸ்பெஷலிஸ்ட்களும்,  ரொம்ப கனம் இழுக்கும்  வண்டிகளும் உண்டு. ஏகப்பட்ட  டயர்கள்  இருக்கும். அதைப்போலத்தான்  பூரி ரதங்களிலும். என்ன ஒன்னு சக்கரங்கள் ரெண்டு பக்கங்களிலும் நீளவாட்டில் இல்லாமல் சதுர வடிவில் இருக்கு.  அதுக்குமேல் மாடிவீடு!  எஞ்சின் இழுக்காது. சனம்தான் இழுத்துக்கொண்டு போகும். வடம் பிடிக்கவே லக்ஷக்கணக்கான சனம்!  அற்புதம்தான் , இல்லே !
ரதவீட்டைப் பெருக்கிச் சுத்தம் பண்ணுவார் பூரி அரசர் !
'அவன்' அரசருக்கெல்லாம் அரசன் இல்லையோ !  பேரரசன் ! ஜகத்துக்கே அதிபதி !

மறுநாள் காலை பூஜை முடிஞ்சு கோவிலுக்குள் போகலாமுன்னா.... கோவில் வாசல் அடைபட்டுக் கிடக்கு. 'ஆ.....  யாரங்கே.... கதவைத் திற ' எல்லாம் வேலைக்காகாது....   அடைச்சுச் சாத்தியவள் அவன்   தங்கமணி,  ருக்குமிணி.
"பெண்டாட்டியை இங்கே அம்போன்னு விட்டுட்டு அண்ணன் தங்கைகூட எட்டுநாள் ஊர்சுத்திட்டா வர்றே? " 

 (அண்ணன்கூடப் பரவாயில்லை.... மூத்தார்னு விட்டுடலாம்.... இந்த நாத்தனாருக்கு  இப்படி உபசாரமா? எவ்ளோ நகையும் நட்டுமா  ஜொலிக்கிறாளே......  சாமியே ஆனாலும்... நாத்தனார்...... நாத்த  .... நார் தான், இல்லையோ..........! )

கோபமா இருக்கும் பெண்டாட்டிக்கு அல்வா ஊட்டி விட்டுத் தாஜா பண்ணலாம்தான்... அல்வா எங்கே? திருநெல்வேலிக்கு ஓடிவரவா முடியும்?  அன்னிக்குப் பார்த்து  அந்த  அம்பத்தாறில் ஒன்னா  இருக்கும் ரஸகுல்லாதான் கண்ணில் பட்டது. எடுத்து ஊட்டவேண்டியதுதான்....

கண்ணே  ருக்கு.... கோச்சுக்காதடா.....  வாக்குக் கொடுத்ததுக்காக அங்கே போனேனே தவிர,  சந்தோஷம்  கொண்டாடவா போனேன்? என் உடல்தான் அங்கே இருந்துச்சே தவிர, நீதான் என் மனசு முழுசும்....  பாவம்.... இங்கே தனியா நீ எப்படி இருக்கியோ? வேளா வேளைக்குச் சாப்பிட்டயோன்னு  எவ்ளோ மனக்கவலை இருந்தது தெரியுமா? போன இடத்துலே  காமிச்சுக்க வேணாமேன்னு  அங்கே சந்தோஷமா இருக்கறாப்போலே 'நடிச்சேன்' !  என்னை நம்பும்மா... செல்லம்.....

பைத்தாரி ருக்கு..... சட்னு உச்சி குளிர்ந்து போச்சு....

"நிஜமாவா சொல்றீங்க....  நிஜமாவா..... ?" 

"இல்லையா பின்னே  ? இதைப்பாரு புதுசா ஒரு இனிப்பு உனக்காகக் கொண்டுவந்தேன்... சாப்பிட்டுப் பார்த்துட்டு நல்லா இருக்கான்னு சொல்லு. நீ மொதல்லே சாப்பிடணுமுன்னுதான் யாருக்கும் கொடுக்காம இங்கே கொண்டு வந்துருக்கேன். முதல்லே நீ 'ஆ' காட்டு! "

அடைச்ச கதவு  திறந்தது.... ரஸகுல்லா வாயில் போச்சு.....  சண்டையும் சமாதானமாச்சு.....

நம்ம ஸ்ரீரங்கம் பெருமாளுக்குக் கிடைக்கும்  மட்டையடி  ஞாபகம் வந்துருக்கணுமே.....

இப்படியாக இந்த ரஸ்குல்லா, சமாதான இனிப்புன்னு பெயர் வாங்கிட்டதால்..... வருஷத்துக்கு ஒரே ஒரு முறை மட்டுமே அல்வா வேலையைச் செஞ்சுக்கிட்டு இருக்கு !
இப்பப் பாருங்க..... வகைகளை....

1. Sadha Anna – Simple Rice water
2. Kanika – Rice, Ghee and Sugar
3. Dahi Pakhal – Curd Rice and water
4. Ada Pakhal – Rice, Ginger and water
5. Thali Khechedi – Lentil, Rice with Sugar and Ghee
6. Ghea Anna – Rice mixed with Ghee
7. Khechedi – Rice mixed with Lentil
8. Mitha Pakhal – Rice , Sugar and water
9. Oria Pakhal – Rice, Ghee, Lemon and Salt
Sweets
10. Khaja – Made of wheat
11. Gaja – Made of wheat, sugar and Ghee
12. Ladu – Made of wheat, sugar and Ghee
13. Magaja Ladu
14. Jeera Ladu
15. Jagannath Ballav – Wheat, Sugar and Ghee
16. Khuruma – Made of wheat, Sugar and Salt
17. Mathapuli – Made of Ghee, Ginger and a kind of beans ground in to a thick paste
18. Kakara – Made of Ghee and Wheat
19. Marichi Ladu – Made of Wheat and Sugar
20. Luni Khuruma – Made of Wheat, Ghee and Salt
(Onreturn of Bahuda Yatra during Suna Vesha, Rasagolla are offered as Bhogas but on no other day Rasagollas are allowed for Bhog)
Cakes, Pancakes and Patties
21. Suar Pitha – Made of wheat and Ghee
22. Chadai Lada – Made of Wheat, Ghee and Sugar
23. Jhilli – Rice Flour, Ghee and Sugar
24. Kanti – Rice Flour and Ghee
25. Manda – Made of wheat and Ghee
26. Amalu – Made of wheat, ghee and sugar
27. Puri – Made of wheat and Ghee and deeply fried like a small thin pan cake
28. Luchi – Made of Rice, Flour and Ghee
29. Bara – Made of Curd, Ghee and a kind of beans
30. Dahi Bara – Cake made of a kind of a beans and curd
31. Arisa – A flat cake made of Rice flour and Ghee
32. Tripuri – Another flat cake made of Rice, Flour and Ghee
33. Rosapaik – A cake made of wheat and
Milk Preparations
34. Khiri – Milk, Sugar with Rice
35. Papudi – Prepared from only the cream of milk
36. Khua – Prepared out of Pure Milk slowly boiled over many hours to a soft custard like consistency
37. Rasabali – Made of Milk, Sugar and Wheat
38. Tadia – Made of fresh cheese, sugar and Ghee
39. Chhena Khai – Made of fresh Cheese, milk and sugar
40. Bapudi Khaja – cream of milk, sugar and ghee
41. Khua Manda – Made of milk, wheat and Ghee
42. Sarapulli – This is the most famous and most difficult milk dish to prepare. It is made of pure milk boiled slowly for hours and spread in to a large pizza shaped pan.
Curry with Vegetables
43. Dali
44. Biri dali
45. Urid Dal
46. Muga Dal
47. Dalama – This is one of the typical dishes in Oriya Home. It is a combination of Dahl and Vegetable. Usually eggplant, beans, sweet potato and tomatoes, although tomatoes are not used in Temple preparations. Coconuts and a dried root of vegetables known as Bodhi which looks like a mush room and is high in protein are added.
48. Maur
49. Besar
50. Sag – A spinch dish
51. Potala Rasa
52. Goti Baigana
53. Khata
54. Raita – a yogurt like dish with curd and radish.
55. Pita
56. Baigilni

போதுண்டா சாமி.... தாங்காது....

ஆனாலும் கிச்சா ரொம்பவே கொடுத்து வச்சவன்..... வருஷத்துக்கு ஒரே ஒருமுறைதான் மனைவி கோச்சுக்கறாள் !!!   நம்ம வீடுகளில்?  ஒருநாள்தான் கோச்சுக்காம இருக்காள்..... ஆஹா.... எப்படி இந்த அற்புதம்?  அந்த ஒருநாள், கணவனோ மனைவியோ யாராவது ஒருத்தர் ஆஃபீஸ் டூர் போயிருந்தால்தான்.....

 பட்டியல் போட்டவருக்கு நம் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு...........

தொடரும்......  :-)

PINகுறிப்பு : கூகுளாண்டவர் அருளிய படங்களுக்கு நன்றி ! மஹாப்ரஸாத் மாதிரிதான்... :-)





9 comments:

said...

56 வகைகளையும் படித்து முடிக்கவே நேரமாகிறது...படித்ததே ஜீரணம் ஆக நேரம் எடுக்கும் போலிருக்கிறது...!  விசாகா ஹரி கதை சொல்வது போல சொல்லி இருக்கிறீர்கள்!   அழகிய படங்கள்.

said...

வாங்க ஸ்ரீராம்,


எனக்கும் மூச்சு முட்டறது....... எப்படித்தான் தினம் தினம் தின்னறானோன்னுதான்....

said...

chசப்பன் Bபோக்g - இங்கே மதுரா, விருந்தாவன், துவாரகை என எல்லா இடங்களிலும் உண்டு. தில்லியில் ஒரு உணவகத்தில் இந்த chசப்பன் Bபோக்g விருந்து உண்டு - ஆனால் சாப்பிட நம்மால் முடியாது!

பெரிய பட்டியல் தான். எத்தனை எத்தனை இனிப்புகள்.

said...

ரசகுல்லா அல்வா ஆகிவிட்டதா:)
56 வகை சாப்பிட்டும் கண்ணைகட்டலை அவர்தான் ஜகந்நாத்.

said...

சப்பன் என்றல் அந்த 56 அங்குல மார்பு பற்றி பேசும்மனிதர்தான் நினைவுக்கு வருகிறார்

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

உண்மைதான். நம்மால் அவ்ளோ சாப்பிடமுடியாது.... இங்கேயும் ரெண்டு நாளைக்கு முன் ஹரேக்ருஷ்ணா (பண்டிட்) வீட்டில் சப்பன்போக் பூஜை. நம்மைக் கட்டாயமா வரச்சொல்லிச் சொன்னார். அதென்னமோ போகத்தோணலை....

தினம் இவ்ளோ இனிப்பு சாப்பிட்டும்கூட நோய் நொடி இல்லாமல் இருக்கான் பாருங்க :-)

said...

வாங்க மாதேவி,

ஆமாம்ப்பா.... பேசாம சாமியாப் பொறந்தால் பிரச்சனையே இல்லை :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

உண்மையிலேயே அம்பத்தியாறா?

said...

அம்பத்தியாறு வகை யும் ...ஆஹா ..

சுவையான பதிவு மா ...என்னமா தாஜ பண்ணார்...