Wednesday, October 23, 2019

மா ராமசண்டி தேவி...... !!!! (பயணத்தொடர், பகுதி 159 )

சூரியன் கோவிலில் இருந்து கிளம்பி பீச் ரோடு வழியா போகும்போது, பக்கத்துலே ஒரு சக்தி வாய்ந்த தேவி கோவில் இருக்குன்னும் அங்கே பத்து நிமிட் போயிட்டுப் போகலாமான்னும் நம்ம ட்ரைவர் கேட்டதுக்கு சரின்னோம்.
பத்துநிமிஷத்துலே போய்ச் சேர்ந்தது மா ராம்சண்டி மந்திர். ஸ்ரீ ராமர் வந்து கும்பிட்ட சண்டிதேவி.  கார்பார்க்கில் வண்டியை நிறுத்துனதும், நான் என்பக்கக் கதவைத் திறந்து கீழே கால் வைக்கப்போகும்போது பார்த்தால் ஒரு கொத்து வேப்பிலை கிடக்கு. காளி ஸ்டைல் வரவேற்பு !!!
வளாகத்து முகப்பில் சிங்கங்கள்.  உள்ளே போனதும்  வலதுபக்கம் 'நல்லது'  இருக்கு. புத்து மழையில்  கரையாமல் இருக்க கொட்டாய் போட்டு வச்சுருக்காங்க.
இடப்பக்கம் ஒரு பெரிய மரம்.  ஸ்தலவிருக்ஷம்.   இதுவே கோரிக்கை மரமாவும் இருக்கு.  மக்களுக்கு வேண்டுதல்கள் கொஞ்சமா நஞ்சமா?  ஜிலுஜிலுன்னு சரிகை மின்னல்கள் !
படிகளில் இறங்கிப்போகும்படி ரொம்பத் தாழ்வான கட்டடம்தான்  கருவறையும் முன்மண்டபமும்.  பழைய கோவில்மாதிரி தெரியலை.... டைல்ஸ் எல்லாம்  போட்டுருந்தாங்க.

மூலவர் சண்டி தேவிதான் ப்ராச்சீனாம்.  கடலும் ஆறும் (கசுபத்ரா ஆறு )கலக்குமிடத்தில் கோவில் இருக்கறதால் அடிக்கடி புயல், மழை காரணம்  வெள்ளம் புகுந்து  பழுதாகிருதாம். ஒவ்வொரு முறையும் புதுப்பிச்சுக் கட்டிக்கிட்டே இருக்காங்களாம்.  (நாம் போனது போனவருஷம் 2018. இந்தப் பதிவு எழுதும் 2019 லேயும்  வெள்ளத்தால் கோவில் மண்டபம், சுவர்கள் எல்லாம் இடிஞ்சு விழுந்துட்டதா செய்தி . திரும்பக் கட்டுவாங்க போல )

கருவறையில் சண்டி ! வட்டமுகமா சந்தனக்காப்பில்..... கும்பிட்டுக்கிட்டோம். கருவறைக்குப் பின் பக்கம் வளாகத்துலே  தச மஹா வித்யான்னு  தசமாதாக்கள் சந்நிதி, திறந்த வெளியில்!  ஹோமகுண்டம்  இங்கே வச்சுருக்காங்க.  இந்தாண்டை 'நான்' !

மா ராமசண்டி என்னும் பெயரை இப்பதான் முதல்முதலாக் கேக்கறேன்.....  விஷ்ணுதுர்கைக்கு இந்தப் பக்கங்களில்  இதுதான் பெயரோ என்னவோ.....
சாப்பாட்டுலே ஆரைப் போட்டது யார்? 
கோவிலுக்கு  அந்தாண்டை கொஞ்ச தூரத்தில்  ஒரு பிக்னிக் ஸ்பாட் இருக்கு. நிறைய படகுகள் வாடகைக்குக் கிடைக்குமாம்.  கடலில் கொஞ்சதூரம் போய் வரலாம்.  அவ்வளவா ஆழம் இல்லைன்னு சொன்னார் ட்ரைவர்.
நல்லவேளையா இந்தப் பகுதிகளில்  காலையில் இருந்து மழை இல்லை. பூரி எப்படி இருக்கோ, ஹொட்டேலில் பவர் வந்ததோன்னு சின்னக் கவலை.....



அடுத்த  முக்கால் மணியில்  ஜமீந்தார்மாளிகைக்குத் திரும்பியாச்சு.  பூரி நெருங்க நெருங்க  ராத்திரி பெய்ஞ்ச மழை, வெள்ளத்தின் பாதிப்பு  அதிகம்தான்.

ட்ரைவருக்கு நன்றி சொல்லி ஒரு அன்பளிப்பும் ஆச்சு. நல்ல பையர். பெயர்தான் இன்னும் நினைவுக்கு வரலை. நம்மவர் செல்லில் நம்பர் போட்டு வச்சப்ப என்ன பெயரில்  எழுதுனார்னு பார்த்தால்  'டி' ன்னு போட்டு வச்சுருக்கார். டிரைவராம்....
ஹொட்டேலில் பவர் வந்துருக்கு.  வைஃபையும் வேலை செய்யுதாம்.  வரவேற்பில் சொன்னாங்க. ரொம்ப நல்லது. ரெண்டாம் மாடிக்குப் படியேற வேணாம். லிஃப்ட் இருக்கே!

லைட்டா எதாவது ஸ்நாக்ஸ் இருக்கான்னு கேட்டதுக்கு  காஃபியும் சேர்த்து அனுப்பறேன்னார் வரவேற்பாளர்.  இந்தப் பக்கங்களில் காஃபி வாயில் வைக்க வழங்காது என்பதால்  டீ அனுப்பச் சொன்னோம்.   கொஞ்ச நேரத்தில் சுடச்சுட பஜ்ஜி அண்ட் டீ.
பால்கனியில் உக்கார்ந்து கடலை வேடிக்கை பார்த்தபடி....  நல்லாத்தான் இருக்கு :-)

கடற்கரையில் கொஞ்சம் கூட்டம். ஒட்டகம் வந்துருக்கு....


இங்கேயும் ராத்ரி பெய்ஞ்ச மழையோடு சரியாம். அதுக்குப்பிறகு இதுவரை மழை இல்லையாம். ப்ளேட்ஸ் எடுக்க வந்தவர் சொன்னார்.

கோவில்வரை போயிட்டு வரலாமேன்னு  வாசலுக்கு வந்து ஆட்டோக்காரரிடம்  கேட்டால்  கோவிலுக்குப் பக்கத்து சந்துலே கொண்டு விடறேன்னார். ஸத்தர் ருப்யா. (எழுபது)

சந்நிதி விவரம் எழுதிக்க ஒரு பேப்பரும் பேனாவுமாக் கிளம்பினேன்.

சிங்கவாசல் வழியா உள்ளே போய் அந்த இருபத்தியிரண்டு படிகளில் ஏறி (மறு பிறப்பு இல்லை இனி! )  ஸ்ரீ ஜகந்நாத்தையும், அண்ணந்தங்கையும் கும்பிட்டுக்கிட்டு ( பண்டா நிற்கும் இடத்துக்கு கொஞ்சம் நாலடி தள்ளியே ) நேத்து நம்ம ஹரிஷங்கர் கூட்டிப்போன அதே வழியில் போய்  சுத்திட்டுப் பெயர்கள் எழுதினோம். ஒரு நாப்பது இருக்கும்.

ஆனந்த பஸாரில் மஹாப்ரஸாதம் இன்னும் வித்துக்கிட்டுத்தான் இருக்காங்க. பகல் மூணு மணிக்கு வந்தால் ஃப்ரெஷாக் கிடைக்குமாம். இப்போ என்னவோ  வறவறன்னு இருக்கறாப்லெ தெரிஞ்சது.


ஆதிசங்கரர் காலத்துலே  பாரதத்தின் நாலு திசைகளிலும் நாலு கோவில்களை முக்கியமாச் சொல்லி இருக்கார். சார்தாம்னு வடக்கே பத்ரிகாஷ்ரம், தெற்கே ராமேஸ்வரம்,  கிழக்கே பூரி, மேற்கில் த்வார்க்கா.  இந்த சார்தாமில் மூணுதான் போயிருந்தோம். நாலாவது தரிசிக்கலை என்ற  குறை இப்பத் தீர்ந்தது !

ராமேஸ்வரத்தில் காலைக் குளியல்.

அலங்காரமா ட்ரெஸ் பண்ணிக்க த்வாரகை அரண்மனை !

அடுத்து பகல் போஜனமா 56 வகைகளோடு பூரி கோவிலில் தினமும் விருந்து !

ஆச்சா... இப்போவாவது பல்லுயிர்களைப் பார்த்துக் காப்பாத்தலாமா வேணாமா ?

தியானம் பண்ணப் போறேன்னு விஷால்பத்ரியில் போய் ரெஸ்ட் !

ஹைய்யோ.....  பாருங்க எப்படி மஜா !

ஜகந்நாதரே....   கொடுத்துவைத்தவர் உம்மைப்போல் உண்டா ?

கொஞ்ச நேரம் கோவிலில் சுத்திட்டு  ரொம்ப இருட்டுமுன்னே போயிடலாமுன்னு வெளியே வந்தால்.... வாசலுக்குக் கொஞ்ச தூரத்துலே ஆட்டோ கிடைச்சது. எட்டரை மணி ஆகுது இப்போ.  எட்டுமணிக்கப்புறம்  போக்குவரத்து நியமத்தைக் கொஞ்சம் தளர்த்தறாங்களாம்.

ஜமீந்தார் மாளிகை முன்பக்க ரெஸ்ட்டாரண்டு வழியாப் போகும்போது  டின்னருக்குச் சொல்லிட்டுப் போனோம்.  ரொட்டி, சோறு, ஆலுமட்டர் க்ரேவி, தயிர் . ஒன்பதேகாலுக்கு சாப்பாடு வந்தது.
பயணத்தில் சுத்தோ சுத்துன்னு சுத்தறதால் கால் வலி பின்னியெடுத்துருது.  சுத்தும்போது  கவனம் வேற இடத்தில் என்பதால்  வலி தெரியாது. இனி  வேறெங்கும் போகமாட்டோம்.  ரெஸ்ட்ன்னு நினைக்கும்போதே, அதுவரை ஒளிஞ்சுருந்த  வலி, டான்னு ஆஜராகிரும்.  எடு அந்த டைகர்பாம்/ஐஸிஹாட் ..... நல்லா தேய்ச்சுவிட்டு, தூங்கி எழுந்தால்  சரியாகும்.....

தொடரும்........... :-)


6 comments:

said...

மா ராம்சண்டி மந்திர்...நல்லா இருக்கு ..

திரும்பவும் போய் ஜெகநாதரை பார்த்துட்டீங்க மகிழ்ச்சி மா ..


பயணம் ன்னா ஒரே மகிழ்ச்சி ஆரவாரம் தான் ..ஆனா சில பின்விளைவுகள் ஒன்னும் பண்ண முடியாது ..கூடவே வச்சுக்க வேண்டியது தான்

said...

அருமை நன்றி.

said...

சண்டிதேவி தரிசனத்துடன் மீண்டும் ஜகநாதர் மனதுக்கு நிறைவு.

said...

வாங்க அனுப்ரேம்,

எல்லாம் கலந்துகட்டித்தான் கிடைக்குது பயண அனுபவங்களில் !

ஜகந்நாத் கூப்புட்டுக் காட்சி கொடுத்தான்ப்பா !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

அவன் அருளால் அவன் தாள் வணங்கி.....