நாங்க இங்கே நியூஸிக்கு வந்த சமயம்தான் எங்கூரு ஹரே க்ருஷ்ணா கோவிலும் ஆரம்பிச்சது. அப்போ முதல் இந்த இஸ்கான் கோவிலுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டுப் போச்சு. இதுதான் முதல் ஹிந்துக் கோவில் இந்த க்றைஸ்ட்சர்ச் மாநகரத்துலே! (பார்க்கக் கோவில் போல இருக்காது. ஒரு ரெட்டை மாடிக் கட்டடம். அவ்ளோதான்.... கீழே படம் புபனேஷ்வர் கோவில், இந்தியா)
நிலநடுக்கத்தில் எங்க கோவில் இடிஞ்சு போன அஞ்சாம் மாசம் நாங்கள் இந்தியாவில் ஒரு ரெண்டரை வருஷம் இருந்துட்டுத் திரும்பி வர்றோம். அப்போதான் இங்கத்து ரெண்டாவது ஹிந்துக்கோவிலான ஸ்வாமிநாராயண் மந்திர் ஆரம்பிச்சது. கோவில் இல்லா ஊரில் குடியிருக்கலாகாது என்பதால் பெருமாள் இந்த ஏற்பாட்டைப் பண்ணிட்டான்னு நான் எப்பவும் நினைச்சுப்பேன்.
பயணங்களில் ஹரேக்ருஷ்ணா கோவில் இருக்கும் ஊர் வாய்ச்சதுன்னா எட்டிப் பார்த்துட்டாவது வந்துருவோம். அதே போல்தான் இப்போ உதயகிரியில் இருந்து கிளம்பி புபனேஷ்வர் ஹரே க்ருஷ்ணாவை நோக்கிப் போறோம். ஒரு அஞ்சரை கிமீ தூரம்தான். பத்தே நிமிட்டில் போயாச்சு!
அழகான வித்தியாசமான கட்டடம் ! கோவில் வளாகத்தில் ஏகப்பட்டக் கூட்டம். ரெண்டுமூணு மெஷீன்கள் நிலத்தைத் தோண்டிக்கிட்டு இருக்கு! என்ன நடக்குதுன்னு விசாரிச்சால்..... சாலையை விரிவுபடுத்தும் காரணத்தால் அரசு வளாகத்துக்குள் இருக்கும் இடத்தை எடுத்துக்குதாம். அதுக்கு ஏன் கவலை படிந்த முகத்துடன் இத்தனை மக்கள்?
தேசிய நெடுஞ்சாலை 16க்குப் போகும் வழியில் இந்தக் கோவில் சாலையையொட்டியே கட்டப்பட்டுருக்கு. கூடுதலா 40 அடி நிலத்தை வளைச்சுப்போட்டு வளாகம் கட்டிக்கிட்டாங்கன்னும், சாலை விரிவுக்கு இந்த இடம் தேவையா இருக்குன்னும் புபனேஷ்வர் டெவெலப்மெண்ட் அத்தாரிட்டி சொல்லுது. இதே சாலையில் இன்னும் கொஞ்சம் தூரத்தில் இருக்கும் ஒரு ஷாப்பிங் மாலும் கார்பார்க் அமைக்க இப்படி அரசு நிலத்தை சட்டத்துக்குப் புறம்பா எடுத்துக்கிட்டு இருக்குன்னும் எல்லாத்தையும் இடிச்சுத்தள்ள அரசு முடிவெடுத்து அந்த வேலையைத் தொடங்கி இருக்குன்னு ஒரு செய்தி.
இன்னொரு செய்தியில்.... கோவிலுக்கு முன்னாடி தண்ணீர் தேங்குது. மழைக் காலங்களில் வெள்ளம் வந்து சாலைப் போக்குவரத்துக்குச் சிரமம். மழைத்தண்ணீர் மட்டுமில்லாம கழிவு நீர் குழாய்களும் சரிவரப் பதிக்கப்படாததால் அந்தக் கழிவு நீர்களும் சேர்ந்து சுகாதாரமற்ற சூழலை உருவாக்குதுன்னு சொல்றாங்க.
எது எப்படியோ தோண்டும் வேலை ஆரம்பிச்சுருக்கு. மக்களின் கவலைக்குக் காரணம், இப்போ தோண்டுமிடத்தில்தான் குரு கோவிந்த ஸ்வாமியின் சமாதியும், ஸ்ரீல பிரபுபாதர் பஜனைக்குடிலும் அமைஞ்சுருக்கு என்பதே. பஜனைக்குடிலை வேணுமுன்னா, வேறு இடத்தில் கட்டிக்கலாம். குருதேவரின் சமாதியைத் தோண்டுவதே ரொம்ப துக்கம். இதுக்கான வழக்கு ஒன்னு ஒரு ஏழெட்டு வருஷமா நடக்குதுன்னும், புது சமாதி கட்ட இடம் ரெடியானதும்தான் பழைய சமாதித் தோண்ட வேணும் என்னும் கோர்ட் உத்தரவு அனுசரிச்சு, அதுக்கான இடம் எல்லாம் சரியாக்கிட்டு, இப்பத் தோண்டறாங்க.
குருதேவரை வெளியில் எடுத்து மீண்டும் சமாதியாக்கணும். பாவம்.... அவரும் இருபத்தியிரண்டு வருஷங்களுக்குப்பின் இடம்பெயர வேண்டியதாப் போச்சு. இந்த குருதேவர், இஸ்க்கான் ஸ்தாபகரான ஸ்ரீல பிரபுபாதாவின் நேரடிச் சீடராம். அதான் இவ்ளோ முக்கியமானவருக்கு இப்படி ஆகிப்போச்சேன்னு வருத்தம்.
சரிவுப்பாதையில் நல்ல உயரமான அமைப்பில் மேலே ஏறிப்போறோம். பாதை முடிஞ்சதும் நிறையப் படிகள்... 1991 இல் இந்தக் கோவிலைக் கட்டி இருக்காங்க.
ரொம்ப விஸ்தாரமான ஹால். ஹாலின் கோடியில் மூணுபாகமா இருக்கும் சந்நிதிகள். சந்நிதிகளைப் பார்த்தாப்போல ஒருபக்கம் பெரிய திருவடியும், இன்னொரு பக்கம் 'நானும்' மேடையில் ஏறி நிக்கறோம்!
ஸ்ரீல ப்ரபுபாதாவின் கனவுக்கோவிலாம் இது. புபனேஷ்வரில் ஒரு கோவில் கட்டணும். இதுவரை கட்டிய கோவில்களை விட அழகான டிஸைனில் அமைக்க வேணும். இதுபோல் வேறொன்னு இல்லை என்ற வகையில் இருக்கணும். பூரி ஜகந்தாதர் கோவிலின் அழகுக்கு ஈடாகக் கட்டவேணும்னு எப்பவும் சொல்வாராம். புதுசாக் கட்டும் கோவிலில் பலராமரையும் ப்ரதிஷ்டை செஞ்சு கோவிலுக்கு ஸ்ரீ கிருஷ்ண பலராமர் கோவிலுன்னு பெயரும் வைக்கணுமுன்னு அவர் ஆசைப்பட்டார். அவர் முன்னின்று கட்டுன கோவில்களின் எண்ணிக்கைப்படிப் பார்த்தால் இது 108 வது கோவில். இதுக்கான திட்டம் போட்டுக்கிட்டே இருந்தவர் 1977 இல் அந்த 'ராமன் அண்ட் கிருஷ்ணன்' கிட்டேயே போயிட்டார்.
அவருடைய கனவை எப்படியாவது நிறைவேத்தணுமுன்னு குருதேவர் கோவிந்த் ஸ்வாமி பாடுபட்டு, ஒரு வழியா கோவிலைக் கட்டி முடிச்சுட்டாங்க 1991 இல். பிரமாதமா இவ்வளவு ஏற்பாடுகளைச் செய்த குருதேவர், கோவில் கட்டடத்துலே தங்காமல் வளாகத்தில் சின்னதா குடிசை வீடொன்னு கட்டி அதில் தங்கினாராம். எளிமை....
அவரும் அடுத்த அஞ்சாம் வருஷம் (1996) சாமியாண்டை போயிட்டார். அவருடைய சமாதிக்குத்தான் இப்போ இந்த கதி....
இப்ப ஆரத்தி நேரம் இல்லை. ஆனால் சந்நிதிகள் திறந்துதான் இருக்கு. போய்க் கும்பிட்டதும், கோவிலைச் சுற்றிப் பார்க்கணும்.
ஒரு சந்நிதியில் பிரபு நித்யாநந்தாவும் (Sri Sri Gaura Nitai) இன்னொன்னில் பூரி ஜகந்நாத்தும் அவருடைய அண்ணன், தங்கையும். நடுவிலே க்ருஷ்ணரும் பலராமருமா காட்சி கொடுக்கறாங்க. தரிசனம் ஆச்சு!
ஹாலின் ஒரு பக்கம் கோவில்கடை ! அழகான பலதும் இருந்தாலும்.... சின்னதா ஒரு தலைப்பாகை மட்டும் வாங்கினோம்.
யாருக்குன்னு முடிவாகலை. ஊருலே போய் பார்த்துக்கலாம். யாருக்குக் கொடுத்து வச்சுருக்கோ அவருக்கு....
கோவில்வாசலை விட்டு வெளியில் வந்தால் வளாகத்தில் நல்ல கூட்டம். நாம் வேற உயரத்தில் இருக்கோமே.... முழு வளாகமும் தெரியுது.
அடுத்தாப்லெ தாமரைமொட்டு போல இருக்கும் சந்நிதியின் பால்கனியில் நல்ல கூட்டம். எல்லோருடைய கண்களிலும் கவலையும் கண்ணீருமா.... ப்ச்..... இருபத்திரெண்டு வருஷமாக் கும்பிட்டு வந்த குருதேவர் சமாதி இடிபடும்போது மனசு வலிக்கத்தான் செய்யும்....
தாமரைமொட்டுக்குள் போனால் ராதா கிருஷ்ணா சந்நிதி. கூட்டம் காரணம் நாம் அங்கே போகலை....
இந்தப்பக்கம் ஒரு பக்தர்கள் கோஷ்டி நாமசங்கீர்த்தனம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. அவுங்க இருக்குமிடத்துக்குப் பின்னால் ப்ரஸாதக் கடை ஒன்னு... பெருசா இருக்கு!
நாங்க படி இறங்கி பின்னே சரிவுப்பாதையும் கடந்து வலதுபக்கம் போறோம். கோவிந்தா'ஸ் ப்ரஸாதம். கோவில் கடைமாதிரி இல்லாமல் பக்கா ரெஸ்ட்டாரண்ட் ஸ்டைலில் பெரிய ஹாலும் மேஜை நாற்காலிகளுமா நிறைஞ்சுருக்கு!
இப்ப ஸ்நாக்ஸ் டைம்தான். ஒருநாளைக்கு நாலு வேளையா வச்சு விளம்புறாங்க. விலைப்பட்டியலைப் பார்த்ததும் திக்ன்னு ஆச்சு. எப்படி முடியும்? எப்படி? அங்கேயே சாப்பிடாம வீட்டுக்கும் பார்ஸல் கட்டித்தரும் சர்வீஸும் உண்டாம். ரெண்டுங்கெட்டான் நேரமா இருக்கேன்னு பார்ஸல் வாங்கிப்போயிடலாமுன்னு முடிவு.
அதிரசம் இருக்கேன்னு பார்த்தால் அது ரஸகுல்லாவாம். மசால்தோசை முப்பதே ரூபாய் !!!! மஸால்தோசை, ரஸகுல்லா, வடைன்னு ரெண்டு செட் வாங்கியும் காசு நூறைத் தாண்டலை. எங்கூர் ரெண்டே டாலர். மகளுக்குக் கட்டாயம் சொல்லணும். ரியலி? ரியலி? னு மாய்ஞ்சு போயிடுவாள்....
பார்ஸல் வரும்வரை காஃபி எல்லாம் குடிக்கமுடியாது. இஸ்கான் ரெஸ்ட்டாரண்டுகளிலோ, கோவில் ப்ரசாதங்களிலோ காஃபி , டீ கிடையாது. நம்ம மஹாப்பெரியவா சந்தோஷப்பட்டுருப்பார்! காஃபியாலே குடும்பமே அழியுதுன்னு சொன்னவர். உண்மைக்கும் பார்த்தால் இது உண்மைதான். குடும்பங்களில் ஃபில்டர் காஃபிக்காகும் செலவை மட்டும் கணக்குப் பார்த்தால்.... திகைச்சுப் போயிருவோம். ஆனால் இந்த காஃபிச் சனியனை விடமுடியலையே.... :-(
பார்ஸலை வாங்கின கையோடு கிளம்பி ஸ்வொஸ்திக்கு வந்து, அன்றையக் கணக்கை ட்ராவல் டெஸ்க்கில் முடிச்சுக்கிட்டு, மறுநாள் ஒரு பத்துமணிக்கு வண்டி வேணுமுன்னு புக் பண்ணிக்கிட்டோம்.
இன்றைக்கு ரொம்பவே சுத்தியாச்சு. கால் வலி பின்னுது. நல்லா ரெஸ்ட் எடுத்தால்தான் மறுநாள் சுற்றலாம்....
ஒரு எட்டுமணி போல பார்ஸலைப் பிரிச்சுச் சாப்பிட்டோம். மஸால்தோசையில் ' அசல் மசாலா, வெங்காயம் ருசி' இல்லாததால் கொஞ்சம் சுமாராத்தோணுச்சு. ரஸகுல்லான்னு வாங்கியது குலாப்ஜாமூனாக்கும் ! ரொம்பப்பெரூசு....
கொஞ்சம் நேரம் வலை மேய்ஞ்சுட்டுத் தூங்கணும்.
குட் நைட்.
தொடரும்........ :-)
நிலநடுக்கத்தில் எங்க கோவில் இடிஞ்சு போன அஞ்சாம் மாசம் நாங்கள் இந்தியாவில் ஒரு ரெண்டரை வருஷம் இருந்துட்டுத் திரும்பி வர்றோம். அப்போதான் இங்கத்து ரெண்டாவது ஹிந்துக்கோவிலான ஸ்வாமிநாராயண் மந்திர் ஆரம்பிச்சது. கோவில் இல்லா ஊரில் குடியிருக்கலாகாது என்பதால் பெருமாள் இந்த ஏற்பாட்டைப் பண்ணிட்டான்னு நான் எப்பவும் நினைச்சுப்பேன்.
பயணங்களில் ஹரேக்ருஷ்ணா கோவில் இருக்கும் ஊர் வாய்ச்சதுன்னா எட்டிப் பார்த்துட்டாவது வந்துருவோம். அதே போல்தான் இப்போ உதயகிரியில் இருந்து கிளம்பி புபனேஷ்வர் ஹரே க்ருஷ்ணாவை நோக்கிப் போறோம். ஒரு அஞ்சரை கிமீ தூரம்தான். பத்தே நிமிட்டில் போயாச்சு!
அழகான வித்தியாசமான கட்டடம் ! கோவில் வளாகத்தில் ஏகப்பட்டக் கூட்டம். ரெண்டுமூணு மெஷீன்கள் நிலத்தைத் தோண்டிக்கிட்டு இருக்கு! என்ன நடக்குதுன்னு விசாரிச்சால்..... சாலையை விரிவுபடுத்தும் காரணத்தால் அரசு வளாகத்துக்குள் இருக்கும் இடத்தை எடுத்துக்குதாம். அதுக்கு ஏன் கவலை படிந்த முகத்துடன் இத்தனை மக்கள்?
தேசிய நெடுஞ்சாலை 16க்குப் போகும் வழியில் இந்தக் கோவில் சாலையையொட்டியே கட்டப்பட்டுருக்கு. கூடுதலா 40 அடி நிலத்தை வளைச்சுப்போட்டு வளாகம் கட்டிக்கிட்டாங்கன்னும், சாலை விரிவுக்கு இந்த இடம் தேவையா இருக்குன்னும் புபனேஷ்வர் டெவெலப்மெண்ட் அத்தாரிட்டி சொல்லுது. இதே சாலையில் இன்னும் கொஞ்சம் தூரத்தில் இருக்கும் ஒரு ஷாப்பிங் மாலும் கார்பார்க் அமைக்க இப்படி அரசு நிலத்தை சட்டத்துக்குப் புறம்பா எடுத்துக்கிட்டு இருக்குன்னும் எல்லாத்தையும் இடிச்சுத்தள்ள அரசு முடிவெடுத்து அந்த வேலையைத் தொடங்கி இருக்குன்னு ஒரு செய்தி.
இன்னொரு செய்தியில்.... கோவிலுக்கு முன்னாடி தண்ணீர் தேங்குது. மழைக் காலங்களில் வெள்ளம் வந்து சாலைப் போக்குவரத்துக்குச் சிரமம். மழைத்தண்ணீர் மட்டுமில்லாம கழிவு நீர் குழாய்களும் சரிவரப் பதிக்கப்படாததால் அந்தக் கழிவு நீர்களும் சேர்ந்து சுகாதாரமற்ற சூழலை உருவாக்குதுன்னு சொல்றாங்க.
எது எப்படியோ தோண்டும் வேலை ஆரம்பிச்சுருக்கு. மக்களின் கவலைக்குக் காரணம், இப்போ தோண்டுமிடத்தில்தான் குரு கோவிந்த ஸ்வாமியின் சமாதியும், ஸ்ரீல பிரபுபாதர் பஜனைக்குடிலும் அமைஞ்சுருக்கு என்பதே. பஜனைக்குடிலை வேணுமுன்னா, வேறு இடத்தில் கட்டிக்கலாம். குருதேவரின் சமாதியைத் தோண்டுவதே ரொம்ப துக்கம். இதுக்கான வழக்கு ஒன்னு ஒரு ஏழெட்டு வருஷமா நடக்குதுன்னும், புது சமாதி கட்ட இடம் ரெடியானதும்தான் பழைய சமாதித் தோண்ட வேணும் என்னும் கோர்ட் உத்தரவு அனுசரிச்சு, அதுக்கான இடம் எல்லாம் சரியாக்கிட்டு, இப்பத் தோண்டறாங்க.
குருதேவரை வெளியில் எடுத்து மீண்டும் சமாதியாக்கணும். பாவம்.... அவரும் இருபத்தியிரண்டு வருஷங்களுக்குப்பின் இடம்பெயர வேண்டியதாப் போச்சு. இந்த குருதேவர், இஸ்க்கான் ஸ்தாபகரான ஸ்ரீல பிரபுபாதாவின் நேரடிச் சீடராம். அதான் இவ்ளோ முக்கியமானவருக்கு இப்படி ஆகிப்போச்சேன்னு வருத்தம்.
சரிவுப்பாதையில் நல்ல உயரமான அமைப்பில் மேலே ஏறிப்போறோம். பாதை முடிஞ்சதும் நிறையப் படிகள்... 1991 இல் இந்தக் கோவிலைக் கட்டி இருக்காங்க.
ஸ்ரீல ப்ரபுபாதாவின் கனவுக்கோவிலாம் இது. புபனேஷ்வரில் ஒரு கோவில் கட்டணும். இதுவரை கட்டிய கோவில்களை விட அழகான டிஸைனில் அமைக்க வேணும். இதுபோல் வேறொன்னு இல்லை என்ற வகையில் இருக்கணும். பூரி ஜகந்தாதர் கோவிலின் அழகுக்கு ஈடாகக் கட்டவேணும்னு எப்பவும் சொல்வாராம். புதுசாக் கட்டும் கோவிலில் பலராமரையும் ப்ரதிஷ்டை செஞ்சு கோவிலுக்கு ஸ்ரீ கிருஷ்ண பலராமர் கோவிலுன்னு பெயரும் வைக்கணுமுன்னு அவர் ஆசைப்பட்டார். அவர் முன்னின்று கட்டுன கோவில்களின் எண்ணிக்கைப்படிப் பார்த்தால் இது 108 வது கோவில். இதுக்கான திட்டம் போட்டுக்கிட்டே இருந்தவர் 1977 இல் அந்த 'ராமன் அண்ட் கிருஷ்ணன்' கிட்டேயே போயிட்டார்.
அவருடைய கனவை எப்படியாவது நிறைவேத்தணுமுன்னு குருதேவர் கோவிந்த் ஸ்வாமி பாடுபட்டு, ஒரு வழியா கோவிலைக் கட்டி முடிச்சுட்டாங்க 1991 இல். பிரமாதமா இவ்வளவு ஏற்பாடுகளைச் செய்த குருதேவர், கோவில் கட்டடத்துலே தங்காமல் வளாகத்தில் சின்னதா குடிசை வீடொன்னு கட்டி அதில் தங்கினாராம். எளிமை....
அவரும் அடுத்த அஞ்சாம் வருஷம் (1996) சாமியாண்டை போயிட்டார். அவருடைய சமாதிக்குத்தான் இப்போ இந்த கதி....
இப்ப ஆரத்தி நேரம் இல்லை. ஆனால் சந்நிதிகள் திறந்துதான் இருக்கு. போய்க் கும்பிட்டதும், கோவிலைச் சுற்றிப் பார்க்கணும்.
ஒரு சந்நிதியில் பிரபு நித்யாநந்தாவும் (Sri Sri Gaura Nitai) இன்னொன்னில் பூரி ஜகந்நாத்தும் அவருடைய அண்ணன், தங்கையும். நடுவிலே க்ருஷ்ணரும் பலராமருமா காட்சி கொடுக்கறாங்க. தரிசனம் ஆச்சு!
ஹாலின் ஒரு பக்கம் கோவில்கடை ! அழகான பலதும் இருந்தாலும்.... சின்னதா ஒரு தலைப்பாகை மட்டும் வாங்கினோம்.
யாருக்குன்னு முடிவாகலை. ஊருலே போய் பார்த்துக்கலாம். யாருக்குக் கொடுத்து வச்சுருக்கோ அவருக்கு....
கோவில்வாசலை விட்டு வெளியில் வந்தால் வளாகத்தில் நல்ல கூட்டம். நாம் வேற உயரத்தில் இருக்கோமே.... முழு வளாகமும் தெரியுது.
அடுத்தாப்லெ தாமரைமொட்டு போல இருக்கும் சந்நிதியின் பால்கனியில் நல்ல கூட்டம். எல்லோருடைய கண்களிலும் கவலையும் கண்ணீருமா.... ப்ச்..... இருபத்திரெண்டு வருஷமாக் கும்பிட்டு வந்த குருதேவர் சமாதி இடிபடும்போது மனசு வலிக்கத்தான் செய்யும்....
தாமரைமொட்டுக்குள் போனால் ராதா கிருஷ்ணா சந்நிதி. கூட்டம் காரணம் நாம் அங்கே போகலை....
இந்தப்பக்கம் ஒரு பக்தர்கள் கோஷ்டி நாமசங்கீர்த்தனம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. அவுங்க இருக்குமிடத்துக்குப் பின்னால் ப்ரஸாதக் கடை ஒன்னு... பெருசா இருக்கு!
நாங்க படி இறங்கி பின்னே சரிவுப்பாதையும் கடந்து வலதுபக்கம் போறோம். கோவிந்தா'ஸ் ப்ரஸாதம். கோவில் கடைமாதிரி இல்லாமல் பக்கா ரெஸ்ட்டாரண்ட் ஸ்டைலில் பெரிய ஹாலும் மேஜை நாற்காலிகளுமா நிறைஞ்சுருக்கு!
பார்ஸல் வரும்வரை காஃபி எல்லாம் குடிக்கமுடியாது. இஸ்கான் ரெஸ்ட்டாரண்டுகளிலோ, கோவில் ப்ரசாதங்களிலோ காஃபி , டீ கிடையாது. நம்ம மஹாப்பெரியவா சந்தோஷப்பட்டுருப்பார்! காஃபியாலே குடும்பமே அழியுதுன்னு சொன்னவர். உண்மைக்கும் பார்த்தால் இது உண்மைதான். குடும்பங்களில் ஃபில்டர் காஃபிக்காகும் செலவை மட்டும் கணக்குப் பார்த்தால்.... திகைச்சுப் போயிருவோம். ஆனால் இந்த காஃபிச் சனியனை விடமுடியலையே.... :-(
பார்ஸலை வாங்கின கையோடு கிளம்பி ஸ்வொஸ்திக்கு வந்து, அன்றையக் கணக்கை ட்ராவல் டெஸ்க்கில் முடிச்சுக்கிட்டு, மறுநாள் ஒரு பத்துமணிக்கு வண்டி வேணுமுன்னு புக் பண்ணிக்கிட்டோம்.
இன்றைக்கு ரொம்பவே சுத்தியாச்சு. கால் வலி பின்னுது. நல்லா ரெஸ்ட் எடுத்தால்தான் மறுநாள் சுற்றலாம்....
ஒரு எட்டுமணி போல பார்ஸலைப் பிரிச்சுச் சாப்பிட்டோம். மஸால்தோசையில் ' அசல் மசாலா, வெங்காயம் ருசி' இல்லாததால் கொஞ்சம் சுமாராத்தோணுச்சு. ரஸகுல்லான்னு வாங்கியது குலாப்ஜாமூனாக்கும் ! ரொம்பப்பெரூசு....
கொஞ்சம் நேரம் வலை மேய்ஞ்சுட்டுத் தூங்கணும்.
குட் நைட்.
தொடரும்........ :-)
9 comments:
அதிரசம் மாதிரி இருப்பது ஜாமூனாக இருக்கும். ரசகுல்லானு தவறா எழுதிட்டீங்க
அருமை நன்றி
பொதுவா நன் சென்ற ஹரே கிருஷ்ணா கோவில்கள் நன்றாக மெயிண்டெயின் செய்யப்படுகின்றன
அழகிய கோவில்.
சமாதியை இடித்து மாற்றுவது கவலைதான் என்ன செய்வது.
வாங்க நெல்லைத்தமிழன்,
மெனு கார்டில் ரஸகுல்லான்னு இருந்ததை வாங்கிக்கத்தான் பணம் கட்டினோம். இதைத்தான் கொடுத்தாங்க. அப்போ இது ரஸகுல்லான்னா... ஒரிஜினல் ரஸகுல்லாவுக்கு வேற பெயர் மாத்தி இருப்பாங்களோன்னுதான்..... :-) :-) :-)
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க ஜிஎம்பி ஐயா,
வெளிநாடுகளிலும் நல்லாவே மெயின்டெய்ன் செய்யறாங்க. நம்ம ஹிந்துக் கோவில்களில்தான் ஏனோ தானோன்னு..... ப்ச்...
வாங்க மாதேவி,
இந்தக் கோவில் நம்ம ஸ்ரீல பிரபுபாதா அவர்களின் கனவுக்கோவில். அதான் கொள்ளை அழகு!
சமாதி...... ஹூம்...
இஸ்கான் ...நல்ல பராமரிப்புடன் அழகான இடம் ..
இங்கு பெங்களூர் ல் உள்ள இஸ்கான் க்கு ஒரு முறை சென்று வந்துள்ளோம் ...திரும்ப போகணும் ன்னு ஆசை ஆனா இன்னும் போக முடில
Post a Comment