Wednesday, October 02, 2019

கற்கால ராமனும் கலிகால ராவணனும்.....(பயணத்தொடர், பகுதி 150 )

பத்தாம் நூற்றாண்டு, பதினோராம் நூற்றாண்டுன்னு சரித்திரகாலத்துக்குள்ளே மூழ்கி ஒரேடியா உள்ளே போயிட்டா.... நடப்பு  காலத்துக்கு எப்படித் திரும்பி வர்றது?
காலையில் கிளம்புனதுமுதல் கோவில் கோவிலா நடையா நடந்தாச்சு. கொஞ்சம் கால்களுக்கு ஓய்வு தேவைதான்னு  ஸ்வொஸ்திக்குத் திரும்பிப்போகலாமுன்னு போறோம். மணி வேற பனிரெண்டாகப்போகுது.  வயித்துலே  மணி அடிக்கும் நேரம் ....

கலிங்கக் கட்டடக்கலையில் புதுமை புகுத்தியதைப்போல் ஏறக்குறைய  அதே ரேகா ஸ்டைலில்  நாலைஞ்சு கோபுரம் கண்ணில் பட்டது. 'ஸேண்ட் ஸ்டோன்' கலரைக் கொண்டுவரும் முயற்சியில்  என்னமோ  டெர்ரகோட்டா பெயின்ட் அடிச்சுருக்காங்க.

கடந்துபோகும்போது பார்த்தால்... வாசல் கேட் முகப்பில் ராம் மந்திர்னு ....  சரி. என்னன்னு பார்த்துட்டே போகலாம்.....




ஜன்பத் என்ற சாலை முழுசும்....  இந்தப் பகுதியிலே கேபிள் போட,  பள்ளம் தோண்டி வச்சுருக்காங்க.... பார்க்கிங் எங்கே போடன்னு  நாங்க மட்டும் வண்டியைவிட்டு இறங்கி அந்த கேட்டாண்டை போனோம். வாசலாண்டையே ஏகப்பட்ட தீனிக்கடைகள்.....

இந்தக் கடைகளில் தயிர்வடை ரொம்பநல்லா இருக்காம்!  சொன்னது யார் தெரியுமோ?  வெள்ளைக்கார டூரிஸ்ட்....  மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதி இருக்கார் ட்ராவல் பக்கத்துலே!
வாசல் கேட்டைக் கடந்து உள்ளே போறோம். நல்ல சுத்தமான பெரிய வளாகம். தனியார் கோவில்.  இப்பெல்லாம் ஆஸ்ரமங்களும், தனியார் நிர்வகிக்கும்   ட்ரஸ்ட் கோவில்களும்  ஏகப்பட்ட அழகான சந்நிதிகளுடன் அட்டகாசமா இருப்பதைக் கவனிச்சீங்களோ?  படு சுத்தம் வேற !  சனம்தானே அதையும் செய்யுது. அதே சனம் வெளியே நாடு முழுக்கக் குப்பை போட்டு அசுத்தமாக்கி வைப்பதை என்னன்னு சொல்ல?  ஒன்னும் புரியலை.... போங்க....

நடுநாயகமா இருக்கும் மெயின் கோவிலுக்குப் படியேறிப் போகணும். உள்ளே ராமர், சீதை, லக்ஷ்மணன், ஆஞ்சி எல்லாம் பளபளன்னு  வெண்பளிங்குச்சிலைகள்.  முற்பகல் தரிசனம் முடிஞ்சு நடை சாத்திக்கிட்டு இருக்காங்க. ஒரு கதவு மூடியாச்.  அதனால் ரொம்ப நேரம் நிக்காம சட்னு கும்பிட்டுக்கிட்டு வெளியே வந்துட்டோம்.
நல்ல கூட்டம்தான்.


கோவில் நேரம் காலை அஞ்சரை முதல் பகல் பனிரெண்டு. மாலை நாலரை முதல் ஒன்பதரை வரை.  மாலை நேர ஆரத்தி ரொம்ப நல்லா இருக்குமாம். நமக்கு வரமுடியுமான்னு தெரியலை.... பார்க்கலாம்.



நல்லா அழகாத்தான் கட்டி இருக்காங்க.  ஒரு ஆறரை வருஷம்தான் ஆகி இருக்கு. 17 February 2012  திறப்பு விழா நடந்ததாம். தனியார் கோவில் என்றபடியால்.... எல்லா ஹிந்துப்பண்டிகளையும்  ரொம்ப நல்லாவே கொண்டாடுறாங்களாம்.  உள்ளூர் சனம் வர்றதைப்போல வெளிநாட்டு சனமும் வருதாம். (இப்பெல்லாம் இந்தியாவில் இருக்கும் 'சாமியார்' களுக்கு வெளிநாட்டுலேயும் ப்ராஞ்ச் ஆஃபீஸ் இருக்கு. அங்கத்து பக்தர்கள் வந்து போறாங்க! )
நல்லதா கேண்டீன் ஒன்னும்  இருக்குன்னாங்க.  நாங்க  போகலை.

அழகு அழகுன்னாலும் எல்லாமே வளாகத்து மதில் சுவருக்கு உள்ளே மட்டும்தான்.  கிளம்பி வெளியே வந்தால்   செருப்பு வைக்கும் அறையின் சுவர்களைப் பார்க்கணும்.... உவ்வே.....
ட்ரைவர் (பெயர்தான் மறந்துபோச்சு ) வாசலாண்டைக் காத்துக்கிட்டு இருந்தார்.  வண்டியைக் கொஞ்ச தூரத்தில் நிப்பாட்டி இருக்காராம். மெள்ள நடந்து போனோம்.   வண்டியாண்டை இளநி கிடைச்சது.  தாகத்துக்கு ஆச்சு.
இனி நேரா ஸ்வொஸ்திதான்னு போகும்வழியில் ராவணனைப் பார்த்தேன். நேத்தே கண்ணில் விழுந்த  உருவம்தான். அப்போ  இவன் ராவணன்னு தெரியாது.
பத்துத் தலைகளுடன் நல்ல உயரமா வாட்டசாட்டமா  மேடையில் ஏறி நிக்கறான். 15 அடியாம்!  இவனுக்கு ஒரு இனிஷியல் கூட இருக்கு. E Ravan .
வருங்காலத்தில்  இந்த E  பெரிய தொந்திரவா இருக்கப்போகுது உலக நாடுகள் அனைத்துக்கும் :-(  போன நூற்றாண்டு வரை ஓரளவு நிம்மதியா வாழ்ந்துக்கிட்டு இருந்த   மனித இனத்தின்  வாழ்க்கைமுறைகளை அடியோடு புரட்டிப் போட்டுருக்கு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்.

எலக்ட்ரானிக் சாதனங்கள்  எதுவும் வாங்கினால்  அவை  மனுஷனோட ஆயுட்காலம் முழுசும் வேலை செய்யாது. அடிக்கடி புது மாடல், அதுலே இன்னும் புது  வசதிகள் அது இதுன்னு அப்க்ரேடு பண்ணிக்கிட்டே போகணும்.  எடுத்துக்காட்டா .... கேஸட், ஸிடி, விஸிடி, டிவிடின்னு மளமளன்னு மாறிக்கிட்டே வந்து இப்ப இதெல்லாமே காணாமப்போயிருச்சு பாருங்க. குட்டியா இருக்கும் பென் ட்ரைவில் சினிமாக்களைப் பதிஞ்சுக்கிட்டு, அதைச் சாவிக் கொத்தில் போட்டுக்கிட்டு போய்க்கிட்டே இருக்கலாம் , இல்லே?

ஐய்ய.... எ கான்னாலும் சினிமாதானா?  தலையில் அடிச்சுக்கிட்டாலும் தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது... 

டெக்னாலஜி மாற மாறப் புதுசு வாங்குனா பழசை எல்லாம் என்ன செய்யறது?  ஈயம் பித்தாளைக்காவது பேரீச்சம்பழம் கிடைக்கும், ஆனா  இதுக்கு?  தூக்கிப்போட வேண்டியதுதான். வேற வழியே இல்லை. அதுபாட்டுக்கு சேர்ந்துக்கிட்டே போய்  பின்னாளில்  ஹிமயமலைக்குப் போட்டியா நின்னாலும்  அதிசயமில்லை, கேட்டோ!

நிலைமை தீவிரமா ஆகறதுக்குள்ளே  மக்களுக்கு இந்த எலக்ட்ரானிக் வேஸ்ட் பற்றிய விழிப்புணர்வை ஊட்டும் முகமாகத்தான்  இந்த எலக்ட்ரானிக் கழிவுகளை வச்சே இந்த ராவணனை உருவாக்கி இருக்காங்க.
 The sculpture has been designed and built by artist Pinaki Ranjan Mohanty and his team comprising Bidyadhar Majhi, Raju Bhoi and Mahesh.

"We used obsolete computer monitors as the 10 heads of Ravan. The body parts are made of motherboards, keyboards, integrated circuits and other e-waste," said Mohanty.

நகரத்துலே இது புதுசு. 5 ஜூன் 2018 லே ப்ரதிஷ்டை பண்ணி இன்னும் ரெண்டுமாசம் கூட ஆகலை.... நம்ம கண்ணுலே விழுந்துருச்சு :-)  புபனேஷ்வர் முனிசிபாலிட்டி, ஒரு தொலைபேசி எண் கூடக் கொடுத்துருக்கு.  நம்ம வீட்டுலே எ குப்பை சேர்ந்துபோச்சுன்னா, இவுங்களாண்டை கேட்டால், அதை முறைப்படி  ஒழிச்சுக் கட்ட வழி சொல்வாங்களாம்.

'அட ராபணா'ன்னு ஸ்வொஸ்திக்குப் போய்ச் சேர்ந்தோம்.  ட்ரைவரை சாப்பிட அனுப்பிட்டு உள்ளே போனால் வாசப்புள்ளையார்கள் காத்திருந்தார்கள்.  ரூம் சர்வீஸில் ஒரே ஒரு சாப்பாடு . தால் மக்கானி, கூடவே ஒரு ப்ளேட் சோறு.  சாப்பாடானதும் கொஞ்சநேரம்  ஓய்வு....

ஒரு நாலுமணி போல கிளம்பலாம்.

தொடரும்..........:-)

6 comments:

said...

தமிழ்மணம் வேலை பார்க்கலையே, ஏன்னு தெரியுமா? இல்ல வேற முகவரியா இப்போ? எப்ப துளசியம்மா போஸ்ட், லக்கிலுக் போஸ்ட் எல்லாம் வரும்னு பார்க்க வசதியா இருந்தது.

said...

ராம் மந்திர் கண்ணுக்கு விருந்து.
புதியரெக்னலஜி இமயமலை போல்தான் ஆகும் .அதை ஒழித்துகட்ட வழிசொல்வது சிறப்பு.

said...

வாங்க கலை,

எனக்கும் என்ன ஆச்சுன்னு தெரியலை....

said...

வாங்க மாதேவி,

புதுக்கண்டுபிடிப்புகளின் வேகத்துக்கு முன் இமயம் கூட தோற்றுவிடுமோ !!!

said...

ராம் மந்திர்...முகப்பு வாசல் அட்டகாசமா இருக்கு மா

15 அடியாம்! இவனுக்கு ஒரு இனிஷியல் கூட இருக்கு. E Ravan ...ஆஹா செம்மையா இருக்கார் ..

said...

ஈ ராவண் - :)

அழகான கோவில். வெளிப்புறம் கொடுமை. நாங்கள் சென்றபோதும் இப்படி பல இடங்கள் அசுத்தமாகவே. கிராமப்புறங்கள் பரவாயில்லை. நகரங்கள் நரகங்கள்! :(