ஸ்வொஸ்தியில் இருந்து ஒரு ஏழரைக் கிமீ தூரம்தான். நாலரைக்கு அங்கே போய்ச்சேர்ந்தோம். மலைகளுக்கு எதுத்தாப்லெ கார்பார்க். இந்த மலைகள் இந்திய அரசின் தொல்லியல்துறையின் கவனிப்பில் இருக்கு. ஆளுக்குப் பதினைஞ்சு ரூ டிக்கெட்.
உள்ளே வாசல் கேட்டுக்குள் நுழைஞ்சவுடன்..... நம்மாளுங்க.... கைப்பிள்ளைகளோடு காட்சி கொடுத்தாங்க. நல்ல சகுனம் ! வாசக்கேட்டுக்கு எதுத்தாப்லெ ஒரு கோவில்..... பாதுகா ஆஷ்ரம்னு பெயர். கோவில்தான்னு நினைக்கிறேன்.....
நம்மாளுங்களுக்கு எதாவது வாங்கிக்கொடுக்கணுமுன்னு நினைக்கும்போதே வாழைப்பழக்காரர் பறந்து வந்தார். தட்டு நிறைய பழங்கள். நிறையப்பேர் இருக்காங்க.... முழுத்தட்டும் நமக்கே இருக்கட்டும்....
'யப்பா.... எப்பப்பா வந்தே'ன்னு ஆசையோடு ஒருத்தன் ஏறிக் கழுத்தைக் கட்டிக்கிட்டான். ரெண்டு கையிலும் பழங்கள். 'அப்பா, இந்தா உனக்கொன்னு எனக்கொன்னு' :-)
'நம்மவர்' அப்படியே பூரிச்சுப்போய் நிக்கறார்! இப்படித்தான் நாம் பாலியில் போன ஃப்ரண்ட்லி மங்கி ஃபாரஸ்ட்டில் ஒருத்தன் கட்டிப்பிடிச்சு ஏறித்தலையில் உக்கார்ந்தான். எதோ ஒரு முன்ஜென்ம பந்தம் இருக்கு ! (சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்.... முடிவே இல்லாதது....)
பசங்க எல்லோரும் அமைதியா வந்து கைநீட்டிப் பழம் வாங்கிக்கிட்டாங்க. எப்பப் பார்த்தாலும் வாழைப்பழமே தின்னால் போரடிக்காதா.... ப்ச்.... பாவம்..... வேறெதாவது வாங்கித் தரலாமுன்னா.... வெறும் பானிப்பூரிதான் இருக்கு வாசலில்..... தட்டு காலி ஆனதும் கணக்கை செட்டில் பண்ணிட்டு மலைமேலே ஏறிப்போறோம்.
தொல்லியல்துறையின் கணக்குப்படி பதினெட்டு குகைகள் இருக்கு இந்த உதயகிரி மலையில். அந்தாண்டை இருக்கும் கந்தகிரியில் பதினைஞ்சு குகைகளாம். எல்லா குகைகளுக்கும் பெயர் எழுதி, நம்பர் எல்லாம் போட்டு வச்சுருக்காங்க. முழுசும் சுத்திப் பார்க்கணுமுன்னா ஒரு நாள் ஒதுக்கணும். நமக்கு இப்பக் கைவசம் ஒன்னரை மணிதான் இருக்கு. அதுக்கு என்ன கிடைக்குதோ அது....
காலையில் ஒன்பதுமுதல் மாலை ஆறுவரை திறந்து (!!!) வைக்கிறாங்க! டிக்கட் கவுன்ட்டரைத்தான்.... அது வாங்கினால்தான் உள்ளே போக வழி கிடைக்கும்.
சமணமத சந்யாஸிகள் இப்படிக் கல் மலையில் இந்தக் குகைகளை வெட்டி எடுத்து அங்கே வசிச்சுருக்காங்க. எல்லாம் முதலாம் நூற்றாண்டு சமாச்சாரம்தான். அசோகர் வந்து கலிங்கப்போரில் வென்று, அப்புறம் மனம் மாறி புத்தமதத்துலே சேர்ந்து அந்த மதத்தைப் பரப்பியதற்கெல்லாம் முன்னாலே இந்தப் பகுதிகளில் அப்பெல்லாம் சமணமதம்தான் பரவி இருந்துருக்கு!
அடுக்குமாடிக் குடியிருப்புகள் போல அபார்ட்மென்ட் வெட்டி யிருக்காங்க. ஒன்னுரெண்டுன்னு விட்டுடாமல் ஒரு மலையையே இப்படி மாத்த எவ்ளோ காலம் எடுத்துருக்குமோ? சாமியாருங்களுக்கு இவ்ளோ உடல்வலிமையா இருந்துருக்கும்? துளைச்செடுத்து வச்சுருக்காங்க!
(வெஜிட்டேரியன்.... பலமுண்டு... கேட்டோ...)
முதல் குகை ராணிக் குகை. கும்ஃபான்னு தகவல் பலகை சொல்லுது. அப்படின்னா குகைன்னு நாம் புரிஞ்சுக்கலாம். வடக்கில் பயணம் செஞ்சப்ப... அங்கெல்லாம் குகையை குஃபான்னு சொல்றதைக் கேட்டுருக்கோம். அதுக்கொரு 'ம்' சேர்த்தால் ஒடிஸி பாஷை போல :-)
இருப்பதில் ரொம்பப் பெருசு ராணிகுகைதான். ச்சும்மா வெட்டிவைக்காம, வேலைமெனெக்கெட வேலைப்பாடுகளைச் செதுக்கி அழகுபடுத்தி இருக்காங்க. யானை, குதிரை, அரசன், மக்கள்னு என்னமோ கதை இருக்கு..... என்னன்னு தெரியலையே.....
சுத்திவரத் திண்ணை, எதிரிலே பெரிய முற்றம்னு அட்டகாசமா இருக்கு!
பார்க்கப்பார்க்க.... ஒரு மெஷீனும் இல்லாத காலகட்டத்துலே எப்படி இப்படின்னு மலையைப் பார்த்து மலைச்சு நின்னது உண்மை!
சனம் ஏராளம். எல்லா இடத்துலேயும் ஏறிப்போய் நின்னு பார்க்கும் கூட்டம். நமக்கோ கால் தகராறு என்பதால் ரொம்பவே அடக்கி வாசிக்க வேண்டியதாப் போச்சு.
முற்றத்துலே இருந்து பார்க்கும்போது அந்தாண்டை உச்சாணியில் ஒரு கோவில் ! வெள்ளைப் பெயிண்ட் அடிச்சு வச்சுருக்காங்க. மேலே ஏறிப்போகணும் போலன்னு ராணி குகையை விட்டுக் கிளம்பிப் காட்டுப்படிகளில் ஏறிப் போறோம்.
கொஞ்ச தூரம், படிகள், அப்புறம் பாதைகள்னு மாறிமாறி வருது. யானையைப் பார்த்ததும் மனசுக்குள்ளே மகிழ்ச்சி. கால்வலி கூட கொஞ்சம் காணாமப்போயிருச்சு:-) கணேஷ் குகை!
அறைக்குள்ளே சுவரில் யானைகள் இருக்குன்னாலும் கம்பித்தடுப்பு இருந்ததால், கெமெராக் கண்ணை அனுப்பிப் பார்த்தேன். வெளிச்சம் போதாது.... படம் மசமசன்னு வந்தது.... இதுவும் முதலாம் நூற்றாண்டு குகைன்னு தகவல் பலகை சொல்லுது. வேலையைச் சலிப்பில்லாமல் செஞ்சுக்கிட்டே இருந்துருக்காங்க போல... இந்தத் துறவிகள்!!!
யானைக்குகை, புலிக்குகை, பாம்புக்குகைன்னு பெயர்கள்!
யானைக்குகைக்கு (ஹாத்தி கும்ஃபா) வந்துருந்தோம். இது இயற்கையாகவே அமைஞ்ச குகை மாதிரி தெரியுது. வாசலை மட்டும் சமீப காலத்துலே கட்டிவிட்டுருக்காங்க போல.... நல்லவேளை... கண்ணைக்கடிக்காமல் இருக்கு!
இன்னும் மேலே ஏறிப்பார்க்கப் படிகள் அமைச்சுருக்காங்க.
அநேகமா இதுதான் உச்சாணி போல. கீழே நம் கண்ணில் பட்ட கோவில் எதிரில் இருக்கும் கந்தகிரி மலையில் ! திகம்பரர் ஜெயின் கோவில்னு பெயர். இருபத்திநாலு தீர்த்தங்கரர்களின் சிலைகள் இருக்காம். இங்கிருந்து அங்கே போக நேரடியான வழி இல்லை. கீழே இறங்கிப்போய், அடுத்த மலைக்கு ஏறிப்போகணும். மலைத்தேன்! முடியற காரியமா?
உதயகிரி மலைக்குகைகளைப் பார்த்ததே போதும்னு கீழே இறங்கிப்போறோம். ஒரு சரிவுப்பாதை போட்டுருக்காங்க. ரெண்டுபக்கங்களிலும் கைப்பிடிக்கம்பிகள் போட்டு வச்சவங்க நல்லா இருக்கணும்! நிதானமா இறங்கிப்போனால் வாசல் கேட்டாண்டை போயிடலாம்.
போற போக்கிலே இன்னும் சில குகைகளையும் க்ளிக்கினேன். இவ்ளோ மனுஷக்கூட்டம் இருக்கும் இடத்தில் ஒரே ஒரு செல்லம் மட்டும் சூப்ரவைஸரா இருக்கு:-)
களைப்பு போக ஆளுக்கொரு இளநி. இந்த இளநியை மட்டும் பார்த்தால் விடப்டாது. கலப்படமில்லாத சமாச்சாரம். கிளம்பலாம், இன்னும் எதாவது கிடைச்சால் பார்த்துடலாமா?
கந்தகிரி மலையில் இன்னும் அழகான சிற்பங்கள் இருக்குன்னு விக்கியண்ணன் சொல்றார். நீங்க அந்தப் பக்கம் பயணம் போனால் குகைகளுக்குன்னு ஒரு முழுநாள் ஒதுக்கி ரெண்டு மலைகளையும் நல்லாப் பார்த்துட்டு வாங்க.
தொடரும்.... :-)

14 comments:
இருந்தாலும் கோபாலுக்கு தைரியம் அதிகம்தான் பழனி மலையில் என்னிடமிருந்த கூல் ட்ரிங் பாட்டிலைப் பறித்துக் கொண்டு போய் அழகாய் மூடியைத் திறந்து கூல் ட்ரிங் கை காலி செய்தது மறக்க முடியாது எனக்கு குரங்குகளைக் கண்டால் பயம்
இதெல்லாம் அந்தப் பகுதிகளை ஆண்ட ராஜாக்கள், ஜமீந்தார்கள் இந்த சமண முனிவர்களுக்குச் செஞ்சு கொடுத்திருப்பாங்க. சிற்ப வேலைப்பாடுகளும் அவங்க வேலையாத்தான் இருக்கும். சமணம சாமியார்களுக்கு எதுக்கு பொம்பளை சிற்பம் செய்யற வேலை?
பார்க்க பிரமிப்பா இருக்கு. ஆனா அங்க ஒரு நாள் நம்மால கல் படுக்கைல நிம்மதியா படுத்துக்க முடியுமோ?
அம்மா என் அடுத்த பதிவு பார்த்துவிட்டு சொல்லுங்க
http://gangaisenthilprasad.blogspot.com/
அருமையா இடம் அவசியம் பார்க்கவேண்டியது நன்றி அம்மா இந்த இடங்களை காமிச்சதுக்கு
பல வருடங்களாக பார்க்க ஆசைப்பட்ட இடம். உங்களால் இன்று காணும் வாய்ப்பு.
You should not be feeding wild life. I would even say even strays should not be fed.
கற்குகைகள் பலவும் ஓரிடத்தில்.
வாங்க ஜிஎம்பி ஐயா,
இந்தக் குரங்குகள் மனிதர்களோடு நல்ல இணக்கம் காமிக்கின்றன! பழக்கம் அதிகமா இருக்கே!
கோபால், பெங்களூர் கோகோ கோலாவில் வேலை செய்த சமயம், முழுவதும் நிரம்பாத பாட்டில்களை விற்பனைக்கு அனுப்ப முடியாதே என்று நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம். பாதி பாட்டில் கோக், ஃபேன்ட்டாவை ஜன்னல் கட்டையில் வச்சால் சின்னக் கைகள் மெல்லா எடுத்து முழுசுமாக் குடிச்சுட்டு மெள்ள எடுத்த இடத்துலேயே வச்சுட்டுப் போகும் :-) அப்போ டின், ப்ளாஸ்டிக் எல்லாம் வரலை. கண்ணாடி பாட்டில்கள் மட்டுமே!
வாங்க நெல்லைத்தமிழன்!
நீங்க சொன்னது ரொம்பச் சரி !
வாங்க செந்தில்பிரசாத்,
உங்க பதிவு நல்லாவே வந்துருக்கு !
வாங்க ஜம்புலிங்கம் ஐயா,
சந்தர்ப்பம் கிடைச்சால் விட்டுடாதீங்க !
வாங்க கொத்ஸ்,
காடு காடா இருந்தவரைக்கும் நாம் யாரும் காட்டுக்குள் போய் தீனி கொடுக்கலை. எல்லா இடத்தையும் நாடாக்கின பின், அவுங்களும் நாட்டுமக்களாகிட்டாங்க. சம்பாரிக்கத் தெரியாம இருந்தால் எப்படி சாப்பிடுவது?
பலதலைமுறையா மக்கள் கொடுக்கறதுதான் உணவு. பாவம் இல்லையா?
வாங்க மாதேவி.
இவ்ளோ குகைகள் பார்த்து ப்ரமிப்புதான்! இத்தனை சாமியார்களா ?
ரெண்டு கையிலும் பழங்கள். 'அப்பா, இந்தா உனக்கொன்னு எனக்கொன்னு' :-)...
அடடா என்ன ஒரு பந்தம்
ரொம்பப் பெருசு ராணிகுகைதான்..வாவ்
குகை கோவில் ஆஹா மிக அழகு மா ...
Post a Comment