Wednesday, October 25, 2017

குமரி, அன்றைக்குப் பார்த்தபடியே .... இருக்குமா? (இந்திய மண்ணில் பயணம் 67)

ஒரு இருபத்தியொன்னு கிமீ அம்பது நிமிட்.... கணக்கு சரியா வருதா பாருங்க. திருப்பதிசாரத்துலே இருந்து கிளம்பி, சுசீந்த்ரம் வழியாப் போனாலும் எங்கேயும் நிறுத்தாம  கன்யாகுமரிக்குப்போய் ஸீவ்யூலே செக்கின் ஆச்சு. எல்லாம் புது ஆட்கள்.  அதானே....  போனமுறை வந்தது 2009 இல். இன்னுமா அதே மக்கள்ஸ் இருப்பாங்க?
வரவேற்பில் வைக்கும் உருளி அலங்காரம் மட்டும் இன்னும் தொடருது போல!  பழைய அழகும் கவனமும் இல்லையோ....
அறைக்குப் போனவுடன், ஐயனை க்ளிக்கினேன். பவர்கட்   அவருக்குமா?  ரொம்பவே மசமச.....
கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு, கெமெரா பேட்டரிகளைச் சார்ஜரில் போட்டு வச்சுட்டுக்  குமரியைப் பார்க்கக் கிளம்பியாச்சு.  காலார நடக்கணும்.  வழியெல்லாம் எப்பவும் போலவே பயங்கரக் கூட்டம்! புதுசுபுதுசா பல வியாபாரங்கள். எங்கே பார்த்தாலும் இட்லிசட்டி!

மல்லிப்பந்துகளைப் பார்த்தா விடமுடியுதா?
கோவில்வாசலும் கலகலன்னு இருக்கு.  இங்கேயும் உள்ளே போகும் வழியெல்லாம்  மாற்றி வச்சுருக்காங்க. பக்கவாட்டுலே  வாசல். வர்ற கூட்டத்தை இப்படியெல்லாம்தான் சமாளிக்கணும் போல....
இங்கே அங்கேன்னு நுழைஞ்சு போய், கடைசியா குமரியம்மன் தரிசனம் ஆச்சு. சந்நிதியில் அவ்வளவாக் கூட்டம் இல்லை. போத்திகள்தான் குறுக்கும் நெடுக்குமாப் போய் அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.  ஆனாலும் அம்மன் அதே சிரிச்ச முகத்தோடு சந்தனக்காப்பில் மின்னிக்கிட்டு  இருக்காள்.  அவளை அதிகாரம் பண்ணாமல் இருந்தால் சரின்னு இருக்காள் போல!
வெளியே வரும் வழியில் ஒரு மண்டபத்தில் நிறைய சித்திரங்கள் வரைஞ்சு வச்சுருக்காங்க. போனமுறை பார்த்த நினைவில்லை. ஏழு வருச இடைவெளின்றதை ஞாபகப்படுத்திக்கணும். க்ளிக்கிய படங்கள் சுமாராத்தான் வந்துருக்கு.
போயிட்டு வாங்கன்னார்  பக்தர்!

வெளியே கடற்புரத்தில் மக்கள் கூட்டமும் கடைகளின் கூட்டமும் ஒன்னுக்கொன்னு போட்டி போடுது!

இருட்டிலேயே நிக்கறார் ஐயன்.  முகம் தெரியலை... :-(
கடற்கரை மணலில் கொஞ்சம் நடந்துட்டு ஹொட்டேலுக்குத் திரும்பினோம்.  இங்கே இருக்கும் ரெஸ்ட்டாரண்டில்  ராச்சாப்பாடு முடிஞ்சது.


போனமுறைப்பயணம் கொஞ்சம்((!) இங்கே :-)

காலையில் சீக்கிரம் எழுந்தால் சூர்யோதயம் பார்க்கலாம்!  போனமுறை சொல்லி வச்சதும் பெட்காஃபியோடு வந்து எழுப்புனாங்க. இப்ப ஊழியர்கள் எல்லாம் வடக்கீஸ்.  இப்பெல்லாம்  தமிழ்நாட்டுப் பாரம்பரியம் இதுதான்....  ஒன்னும் சொல்றதுக்கில்லை...

அறை ஜன்னலில் இருந்து பார்த்தால் கீழே ஒரே கட்டட நெரிசல். காலையில் பார்க்கலாம், என்ன ஏதுன்னு....

அஞ்சரைக்கெல்லாம் எழுந்து, சட்னு உடையை மாத்திக்கிட்டு மாடிக்குப் போறோம். ஆறுமணிக்கு உதயமாம். நமக்கு ரொம்பவே அதிர்ஷ்டம் இருப்பதால்  ஆறடிக்குமுன் மழை ஆரம்பிச்சது. மொட்டைமாடியில் இருந்த மக்கள்ஸ் எல்லாம்  கலைஞ்சு ஓடறாங்க. நாங்க மாடிப்படிக் கதவாண்டை ஸன்ஷேடுக்குக்கீழே  ஒண்டிக்கிட்டு நிக்கறோம்.

மழை வலுத்தாப்போல இருந்ததா.....   நின்னு காரியம் ஒன்னும் ஆகப்போறதில்லைன்னு அறைக்கே திரும்பியாச்சு.  அதான் ஒரு பக்க சுவர் நீளத்துக்கு  ஜன்னல் இருக்கேன்னு  அங்கே இருந்து கீழே பார்த்தேன்....
பளபளக்கும் கொடிமரத்தோடு புதுசா சர்ச் ஒன்னு முளைச்சுருக்கு!

ஆறு இருபத்தியாறு..... மந்திரம் போட்டாப்போல் மழை நின்னு  அதோ சூரியன்  மேலேறி நின்னு பார்த்துக்கிட்டு இருக்கான்.



நாங்க சட்னு குளிச்சு தயாராகி, பரபரன்னு நடந்து கோவிலுக்குப் போயிட்டு வந்தோம்.  அஞ்சே நிமிச நடை!   பாதையில் கூட்டம் கூட ஆரம்பிக்கலை.... எல்லோரும் கடற்கரையில் மீன்பிடி படகுகளை வேடிக்கை பார்க்கப் போயிட்டாங்க போல !

ஹொட்டேலில் ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு. சீனிவாசனும் ரெடி ஆகிட்டார்.  குமரிமுனையை ஒரு சுத்து சுத்திட்டு ஊரைவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்.

காந்தி மண்டபத்தாண்டை வண்டியை நிறுத்திட்டு, ஸ்நானகட்டத்துக்குப்  போனோம். மணி எட்டே முக்கால்தான்!  சுறுசுறுப்பா சின்ன வியாபாரிகள் கடைகளைத் தொறந்துட்டாங்க. எதையெடுத்தாலும் முப்பது ரூபாயில் எட்டிப்பார்த்து, நம்ம ஜன்னுவுக்கும் க்ருஷ்ணாவுக்கும் ரெண்டு நகைகள்.
பார்த்தாலே பளிச்ன்னு சுத்தமா   இருக்கும் பாத்திரங்களோடு  இருக்காங்க இட்லிக் கடை போட்டுருக்கும் பெண்மணி.
நமக்கு  ஆளுக்கொரு இளநீர் !!
ஒருமணி நேரம் ச்சும்மா சுத்தியடிச்சுட்டு  ஹொட்டேலுக்குத்  திரும்பிட்டோம். விவேகானந்தர் பாறைக்குப் போகும் படகுகள் போக்குவரத்து நடந்துக்கிட்டு இருக்கு.

ஒன்பதே முக்காலுக்கு செக்கவுட் செஞ்சுட்டுக் கிளம்பிட்டோம். நாலைஞ்சு நாட்கள் தங்கி இருந்தால் நல்லாத்தான் இருக்கும். ஆனால்..... பகலெல்லாம் மொட்டை வெயில்.  எங்கே சுத்தறது?

ஹைவே பிடிச்சாச்சு.  போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்.  மருத்துவ மலை, நாங்குநேரி   சுங்கச்சாவடி  கடந்தாட்டு,  நெடுஞ்சாலையில் நியூ மசாலா கஃபே பார்த்துட்டு,  சீனிவாசனை டீ சாப்பிடச் சொன்னார் நம்மவர்.  அடிக்கடி டீ குடிக்கிற பழக்கம் ட்ரைவர்களுக்கு  இருக்குல்லே!  கூடவே கம்பெனி கொடுத்தார்  நம்மவர்.
பொட்டிக் கடையிலே  கோவில்பட்டி கடலை முட்டாய் இருக்கான்னு பார்க்கச் சொன்னேன்.  கோவில்பட்டின்னு  பெயர் இல்லை. ஆனால் முட்டாய் இருக்குன்னதும்  ஒரு நாலைஞ்சு வாங்கிக்கச் சொன்னேன்.  இருந்துட்டுப் போகட்டும்.

கோவில்பட்டி வழியாத்தான் போறோமுன்னாலும்....  ஊருக்குள்ளே போக மாட்டோம்.  போன முறை ரயிலில் சென்னைக்குப் போனபோதும் முட்டாய் மிஸ் ஆகிப்போச்சு. ....

சிவகாசி தாண்டும்போது சரியா பகல் பனிரெண்டு. நெடுஞ்சாலையில்  ஒரு பத்துப் பனிரெண்டு பட்டாஸ் கடைகள்.  ராம்கோ சிமென்ட்ஸ், விருதுநகராண்டை இருக்கோமுன்னு சொல்லுது.  ஊருக்குள்ளே போயிருந்தால்...  நல்லா இருக்கும். வாய்க்கலை....

மதுரைக்கு முன்னாலேயே வேலம்மாள்  மல்டி குசீன் போர்டு பார்த்துட்டு,  அங்கே போய் லஞ்ச் முடிக்கலாமுன்னு  அங்கே போயிட்டோம். ஆஸ்பத்ரியைச் சேர்ந்ததுன்றதால் சுத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கைதான்.

நம்மவரும், சீனிவாசனும் தாலி மீல்ஸ். எனக்கொரு  ஸ்வீட் லஸ்ஸி.  சாப்பாடு ஆனதும் கிளம்பும்போது மணி ரெண்டு. இன்னும் ரெண்டு மணி நேரப்பயணம் பாக்கி இருக்கு!
ரொம்பக் கஷ்டமில்லாம பயணம் ஆச்சு. நாலு மணிக்குக் காவேரிப் பாலம் கடந்து  ஸ்ரீரங்கத்துக்குள்  நுழைஞ்சோம்.  ரங்கா..... வந்துட்டேன் !
அம்மா மண்டபம் ரோடு ஹொட்டேல் ஹயக்ரீவாவில் செக்கின் செஞ்சோம்.  முதலில் காமிச்ச அறையில் வ்யூ சரி இல்லை. பக்கத்தாத்து   முற்றம். அடுத்த அறை  கொல்லைப்புறம்.  மூணாவது  பரவாயில்லை. மரங்கள் எல்லாத்தையும் மறைச்சுருது :-)   ஜன்னலைத் திறக்காதேன்னார் நம்மவர் !

ஹயக்ரீவாவில் ட்ரைவர்களுக்கான அறைதான் சூப்பர்!  மொட்டை மாடி, அருமையான காத்து, கோபுர தரிசனம் எல்லாம்  அங்கேதான் !

கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு,  கீழே பாலாஜி பவனில்  ஒரு காஃபி குடிச்சுட்டுக் கோவிலுக்குப் போகலாமா?

தொடரும்.......  :-)

   PINகுறிப்பு :   கன்யாகுமரி காட்சிகள் இங்கே  ஆல்பத்தில் இருக்கு :-)




14 comments:

said...

குமரிக்கு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் போயிருக்கிறேன். நண்பர்களுடன் திருமணம் ஒன்றுக்குச் சென்றதால் கோவிலுக்கு எல்லாம் செல்லவில்லை. விவேகானந்தர் பாறை சென்று வந்தோம்! அவ்வளவே.

நம்ம நண்பர் இன்று புகைப்படத்தில் இடம் பெற்று விட்டார்!

குமரியிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு ஒரே ஓட்டத்தில் வந்து விட்டீர்கள்!

said...

குமரி அன்னையைத் தரிசித்துக்கொண்டேன். கன்யாகுமரியில் சாப்பாடு எங்கேயுமே நல்லா இருக்காதே. நெல்லை வரும் வழியில் வள்ளியூர் அருகே நெடுஞ்சாலை ரெஸ்டாரென்ட் (சரஸ்வதி?) உணவு நல்லாருக்கும். அதுக்கு முன்னால நாகர்கோவில் ஆர்யாஸ் நல்லாருக்கும்.

குமரியிலிருந்து அரங்கம் வரை வரும்போது, இந்தத்தடவை எந்தக் கோவிலுக்காகவும் நிறுத்தலை போலிருக்கு. அரங்கம்தான் நிறைய தடவை சேவித்துள்ளீர்களே. விட்டுப்போன ஒரு கோவில் எது?

said...

ஆஹா...குமரி...கன்னியாகுமரி


பசங்க இப்போ போகணும் ஆசைப்படுற இடம் ...

அரபிக்கடல், வங்களாவிரிகுடாவும் பார்த்துட்டாங்களாம்...

இந்தியபெருங்கடல் பார்க்கணுமாம்...

சோ எங்க டூர் பிளான்ல முதல் இடத்தில் இருக்கு...

said...

அருமை வெகுசிறப்பு நன்றி

said...

குமரி அழகு

said...

பல முறை கன்னியா குமரிக்குச் சென்றிருந்தாலும் சூரியோதயம் காண முடியவில்லை கன்னியகுமரியும் நிறையவே மாறி இருக்கிறது

said...

கன்னியாகுமரி வந்தோம் உங்களோடு, புகைப்படங்கள் மிகவும் அருமை.

said...

வாங்க ஸ்ரீராம்.

ஏற்கெனவே பார்த்த இடங்கள் என்பதால் வேறெங்கும் போகலை. நேரா (பூலோக ) வைகுண்டம்தான் :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ஸீ வ்யூலே சாப்பாடு நல்லாவே இருக்கு. போனமுறை ரயிலுக்கு போக சாப்பாடு கட்டிக் கொடுத்தாங்க. நல்ல சர்வீஸ்.

எங்கே .... ரங்கன் விடமாட்டேன்றானே..... எத்தனை முறை போனாலும் இன்னும் அலுக்கவே இல்லை!

said...

வாங்க அனுராதா.

ஒரு நாலைஞ்சு நாள் தங்கறமாதிரி ப்ளான் பண்ணிக்குங்க. மழை சீஸனில் போவது அத்தனை சுகமில்லை. கால நிலை பார்த்துக்குங்க.

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி!

said...

வாங்க ராஜி,

குமரியின் அழகைச் சொல்ல சொற்களே இல்லையேப்பா !!!!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அதிகாலையில் தினமும் ஃபோகியாத்தான் இருக்கு. அஸ்தமனம் பார்த்தாச்சு. இன்னும் உதயம் நானும் பார்க்கலை... :-(

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசித்தமைக்கு நன்றி!