பதினாலு வயசு ஜெயமால்யதாவைப் பார்த்த திருப்தியே போதும்! அச்சோ.... என்ன அழகு! ஸ்மார்ட் கேர்ள் :-)
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வெளிமண்டபத்துலே ஒய்யாரமா நிக்கிறாள்! என் செல்லம் !
உள்ளே ஓடிப்போய் நாச்சியாரை ஸேவித்து, தூமணி மாடத்து மனசுக்குள் பாடி, 'கிணத்தில் எட்டிப்பார்த்து, வெளியே வரும்போதுதான் நம்ம ஜெயமால்யதா தரிசனம் ஆச்சு :-)
நந்தவனத்துக்குள் போய் 'பிறந்த இடம்' பார்க்கலை. நேராப்போய் நின்னது தாய்ச்சுண்டு இருக்கும் வடபத்ர சாயி சந்நிதியில்! போனமுறை தைலக் காப்புன்னு முகம் காமிக்கலை. நல்லவேளை இப்போ.... குளிச்சு முழுகி பளிச் பளிச் :-)
பால்கோவாக் கடைகளைப் ' பார்க்காமல் கடக்க' ச்சான்ஸே இல்லை.... வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நிறைஞ்சு இருக்கும் ஊர்!
எங்கே பார்த்தாலும்.... 'என்னை'க் கொட்டிக்குமிச்சு வச்சுருக்காங்க :-)
அங்கேதான் ராணியைப் பார்த்தேன். பார்வை இல்லாத கணவருடன் உக்கார்ந்துருக்காங்க. மனசு பளிச்ன்னு இருக்குன்னு முகம் சொல்லுது :-)
ஒரு ரெண்டு நிமிசம் நின்னு பேசிட்டு வந்தேன்.
ஸ்ரீவியில் என் மனசுக்குப் பிடிச்ச இன்னொரு சமாச்சாரம் மல்லி! ஹைய்யோ என்ன ஒரு அடர்த்தியாக் கட்டி இருக்காங்க! வாங்காம வர முடியுமோ?
கோவிலைப்பத்தி விஸ்தாரமா ஒன்னும் எழுதப்போறதில்லை இப்போ. முந்தி எழுதுனதே போதும்தானே?
இங்கேயும்
இங்கேயும்
சுதந்திரப்போராட்ட வீரர், தியாகி காந்தி அரங்கசாமி ராஜாவின் பெயர்த்தி கவிதாயினி மதுமிதா, நம்ம நெருங்கிய தோழின்றதை ரொம்பப் பெருமையாச் சொல்ல வேண்டிய நேரம் இது !
ராஜபாளையத்தைக் கடந்து போகும்போதெல்லாம் அவுங்க நினைவு வந்துரும். நெருங்கிய தோழின்னு சொல்லிக்கிட்டே எட்டிப் பார்க்காமப் போறேன்னா.... அதுக்கு(ம்) ஒரு காரணம் இருக்கே! சென்னையிலேயே அவுங்களைச் சந்திச்சுருவேன் எப்பவும். நம்ம லோட்டஸ் இருக்கும் இதே பேட்டைதான். தி நகர்!
இந்த முறை அவுங்க ராஜையில் இருக்காங்க என்பதால் சொந்த ஊரில் தரிசனம் ஆச்சு !
நமக்காக சாப்பிடாமல் காத்துக்கிட்டு இருக்கப் போறாங்களேன்னு நம்மவருக்கு ஒரு பதைப்பு. ரொம்பக்கிட்டதானே.... வெறும் 14 கிமீ. ஒரு காமணியில் போயிடமாட்டோமா.....
வீடு போய்ச் சேர அரைமணி ஆச்சு. செல் இருக்க பயம் ஏன்? வழி கேட்டுக்கிட்டே போறோம். அதுக்குள்ளே வீடு இருக்கும் தெருமுனையில் வந்து வரவேற்பே கொடுத்துட்டார் கவிதாயினியின் அன்புக் கணவர்!
யம்மாடி..... இவ்ளோ வகைகள் அதுவும் நம்ம வடையிலே இத்தனை வகைன்னு தெரிஞ்சுருந்தால் நேரா மதுரையில் இருந்தே இங்கே வந்துருப்பேனே!!!
ஒண்டியா சமைச்சு நிரப்பி இருக்காங்க! இப்படித்தான் எப்பவும்..... புத்தகங்கள் கூட பாருங்க..... எக்கச்சக்கமா எழுதித் தள்ளி இருக்காங்க நம்ம காற்றுவெளி மதுமிதா! இவுங்க புத்தகம் ஒன்னு சினிமாவில் நடிச்சு இருக்குன்னு சொன்னால் நம்புங்க !
சமஸ்கிரதத்தில் இருந்து(ம்)மொழி பெயர்ப்புகள் செஞ்சுருக்காங்க. இந்த மொழிமாற்று எவ்ளோ கஷ்டமுன்னு எனக்குப் புரியும்!! மூலத்தில் இருக்கும் உணர்வு, அழகு , பொருள் இவையெல்லாம் மாறாமல் தமிழில் கொண்டு வர்றது..... லேசுப்பட்ட வேலை இல்லையாக்கும், கேட்டோ!
மேஜைமேல் இருந்த சாப்பாட்டு வகைகளை ஒரு கட்டு கட்டிட்டு, அதெல்லாம் ஜீரணமாக ஒரு டம்ப்ளர் பாயஸத்தையும் உள்ளே தள்ளிட்டு, புண்ணியம் செய்த பாக்யசாலிகளைத் தேடிப்புறப்பட்டோம். பத்து வினாடி நடக்க வேண்டியதாப் போச்சு!
அங்கே வீட்டு அடுகளையைப் புதுப்பிக்கும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு. அதுக்கெல்லாம் பயந்துருவமா என்ன?
தன்மகளைச் சான்றோரெனக் கேட்ட பெற்றோர்! அப்பா ஹேர்ஸ்டைல் சட்னு நம்ம கலாம் ஐயாவை மனசுக்குள் கொண்டு வந்தது உண்மை!
ரெண்டே மகள்கள்தான் என்றபடியால் மூணாவதா அங்கே ஐக்கியமானேன் :-)
அப்படி என்னதான் பேச்சோ...... மொத்தமா மூணு மணி நேரம் ஓடிப்போயிருந்துச்சு :-)
சமீபத்திய வெளியீடான 'வேமன மாலை'யை அன்பளிப்பாகக் கொடுத்து உறவைப் புதுப்பிச்சாங்க. சரியான கருமி நான்..., இப்படித்தான் அவுங்க புத்தகங்களை சேகரிச்சு வச்சுக்கிட்டு இருக்கேன். இது நமக்குள் ரகசியமா இருக்கட்டும் :-)
நாலுமணி ஆனதும் கிளம்பலாமுன்னு இருந்து ஒரு நாலே காலுக்குக் கிளம்பினோம்.
மாலை நேர அலங்கரிப்பு முடிச்சுக்கிட்டுதான் :-)
தொடரும்..... :-)

16 comments:
காலையிலேயே பால்கோவா (அதுவும் பெரியாழ்வார், ஆண்டார் கடைகள்), மதியம் கலந்த சாதங்கள், வடைகள் எனப் பரப்பி, வடபத்ரசாயி, ஆண்டாள் ரங்கமன்னார் தரிசனம் பின்னுக்குப் போக வச்சுட்டீங்களே.
பார்வையில்லாதவரைப் பற்றி எழுதி ஒரு விநாடி மனதை நெகிழ வைத்துவிட்டீர்கள்.
நட்பை விவரித்த விதம் சிறப்பு. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சமவெளியில் பரவும் நதியின் தளுக்குப் போல் மென்மையான எழுத்து நடை!
ஸ்ரீ வில்லிபுத்தூர் போனதில்லை
நன்றி அருமை
எண்பதுகளின் இறுதியில் நான் வேலை பார்த்த ஊர்!
ம்ம்ம். ஒரு முறை கூட இங்கே செல்ல வாய்க்கவில்லை. தொடர்கிறேன்.
Madurai Malligai poo......... eedu inai yillatha poo.
ரசனையான பதிவு.
நட்புகள் சந்திப்பு சுவாரசியம்
வாங்க நெல்லைத் தமிழன்,
எதைச்சொல்ல எதை விடன்னு ஆகிப்போச்சு !
வாங்க உமா.
ரசித்தமைக்கு நன்றி !
வாங்க விஸ்வநாத்.
ரொம்பவே அழகான கோவில். சந்தர்ப்பம் கிடைத்தால் விட்டுடாதீங்க!
வாங்க ஸ்ரீராம்.
கொசுவத்தி ஏத்திட்டேனோ!!!
வாங்க வெங்கட் நாகராஜ்.
ஒரு சமயம் குடும்பத்தோடு விஸிட் செஞ்சுருங்க. அதுக்கான வேளை விரைவில் கிடைக்கட்டுமென ஆண்டாளிடம் நான் மனுப்போட்டாச் :-)
வாங்க ஜான் கென்னடி.
உண்மை உண்மை !!!
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
வருகைக்கு நன்றி!
வாங்க ஜிஎம்பி ஐயா!
நண்பர்களுடன் இருக்கும்போது சுவாரசியத்துக்கு என்ன குறைச்சல்? அமோகம் தான்!
Post a Comment