முதலில் போனது பிந்த்யா/ பித்யா பாஸினி கோவிலுக்கு! இவுங்களுக்குத்தான் வ வராதே .... வித்யா பாஸினி.... வித்யா வாஸினி.... ஒரு வேளை சரஸ்வதியோ? இல்லையாமே... துர்கா கோவில்னு சொன்னார் துர்கா:-) ஊருக்குள்ளே பிஸியான கடைவீதிப்பகுதியிலே சட்னு எழும்பி நிக்கும் ஒரு மேட்டில் கோவில். பூஜை சாமான்கள், நினைவுப்பொருட்கள், பாசிமணிகள் விற்கும் கடையாண்டை இறங்கி மாடிக்குப் போறது போல் படிகளில் ஏறிப்போனோம்.
கொடிமரம் போல் ஒரு மேடையில் பெரிய த்ரிசூலம், இடுப்பில் உடுக்கை கட்டிக்கிட்டு நிக்க, பக்கத்தில் இன்னொரு மேடையில் நந்தி ஸார். அவருக்கு எதிரில் கோவில் (!) கட்டடம். கேரளா ஸ்டைலில் ஓடு போட்டு இருக்கு.
ஒரு பெரிய ஹால். நேரா நடுவில் நம் கண்ணுக்கு எதிரில் கம்பித் தடுப்புக்கு அந்தாண்டை ஒரு மேடை மேல் பெரிய பித்தளை கங்காளம். அதுலே சிவலிங்கம் சின்னதா! நீச்சல் குளம்:-) பக்கத்துலே இன்னொரு சிவலிங்கம், நிறைய பூக்கள் அலங்காரத்தோடு! அவருக்கு தாராபிஷேகம் நடத்திக்கத் தூக்கி மாட்டுன அபிஷேகநீர் பாத்திரம்! பேக் ட்ராப்.... பெயிண்டிங் நடராஜர்! சமீபத்துலே கட்டுன கட்டடம்தான்.
வளாகத்தில் நிறைய மரங்கள். பெரிய மரங்களைச் சுத்தி மேடை வேற! அரசமரம் ஒன்னு..... சரடு(கயிறு) கட்டிக்காம நிக்குது. நம்ம பக்கங்களில் இருக்கும் ப்ரார்த்தனை நூல்கள் இங்கே இன்னும் பழக்கத்துக்கு வரலை போல! சொல்லி வாய் மூடலை.... 'இங்கே என்னைக் கொஞ்சம் பாரேன்'னு இன்னொரு மரம் கூப்டது!
நந்தி ஸாரோடு செல்ஃபி எடுத்துக்கிட்டு இருந்தார் ஒரு இளைஞர் :-)
இந்த நேபாளில் மணிகளும் கொடிகளும் கோவிலுக்கு ரொம்பவே முக்கியம். ப்ரேயர் ஃப்ளாக்ஸ் (Prayer Flags) கலர்கலரான துணிகளில் பிரார்த்தனைகளை அச்சடிச்சு விக்கறாங்க. அதை வாங்கி ஒரு கயித்துலே தோரணமாக் கட்டிக் கோவில் கோபுரம், தாழ்வாரம் இப்படி எல்லா இடத்திலும் கட்டி விட்டுடறாங்க. காத்தடிக்கும் போது படபடன்னு பறக்கறது(ம்) ஒரு அழகுதான்! ஆளே இல்லாத மலைப்பகுதிகளில் இருக்கும் கோவில்களில் கூட இப்படிக் கொடிகட்டி விடறது ஒரு சம்ப்ரதாயம். காற்றே நம்ம பிரார்த்தனைகளைக் கொண்டுபோய் கடவுளின் காதில் போட்டுருதே!!!
ஒரு அறுகோணத்தூண் வச்சு அதோட உச்சியில் ஒரு அறுகோண அமைப்பு. அதுக்கு மேலே 'ஓம்' னு பித்தளையில் செஞ்சு, தாமரைப்பூவில் வச்சுருக்காங்க. கூடவே காத்தாடி அமைப்பு இருக்கு என்பதால் அது தன் இஷ்டத்துக்குச் சுத்துது. தூணின் ஆறுபக்கங்களிலும் ஹிந்தியில் என்னவோ எழுதி வச்சுருக்காங்க. தூரத்துலே இருந்து வாசிக்க முடியலை. துர்கையையோ இல்லை சிவனையோ பாடிப்புகழும் ஸ்தோத்திரமாக இருக்கலாம்.... யார்கிட்டேயாவது கேட்டுருக்கலாமோ..... விட்டுட்டேனே... :-(
சரி, வாங்க கோவிலின் முக்கிய சாமியைப் பார்க்கலாம் இப்போ.
பிந்தியாபாஸினி சந்நிதிக்குப்போகும்போது வளாகத்தின் நடுவில் ஒரு தூணின் உச்சியில் மலர்ந்து நிற்கும் தாமரை. அதுலே நம்ம பதினொருதலையார் குடைபிடிக்க பெருமாளும் தாயாரும்! பெருமாளா இவர்னு உத்துப் பார்த்தால் கண்ணாடி போட்டுருக்கார்! கோவிலைக் கட்டிய புண்ணியவான்! சித்தி நாராயன் ஷா. கடைசியா கஸ்கி நிலப்பகுதியை ஆண்ட மன்னர். ( Last king of Kaski state )அப்புறம் போர் வந்தது. இந்த நிலப்பகுதி நேபாள மன்னர்களுக்குப்போயிருச்சு. காலக்கட்டம் 1784.
பிந்தியாபாஸினி எட்டுகைகளோடு ஜேஜேன்னு இருக்காள். அஞ்சாறு படிகள் ஏறிப்போய்க் கும்பிடலாம். சிம்மவாஹினி! கருவறைக்கு முன்னால் வாஹனம், நாக்கை நீட்டி, பற்களைக் காமிச்சுக்கிட்டு , வலது கையைத் தூக்கி வா வான்னு கூப்பிடுது! அற்புதம்! பித்தளைச் சிலைதான்! சனம் வாலில் ப்ரார்த்தனைக்கயிறு கட்டிவுட்டுருக்குபா.......
ப்ரிவ்யூ காமிக்கும் முகப்பு அருமை! எட்டுக்கைகளில் எட்டுவிதமான போர்க்கருவிகளை வச்சுக்கிட்டு பிந்தியாபாஸினி. அவளுக்கு வலப்பக்கம் புள்ளையார். இடப்பக்கம்? காலடியில் இருக்கும் வாகனம் மயிலோன்னு ஒரு நிமிட் மயங்கினேன். தோகை போல வால் நீளம். அப்புறம் பார்த்தால் முருகன்னு நான் நினைச்ச உருவம் நாலு கைகளோடு, ஜெபமாலை, சின்ன கூஜாபோல ஒரு செம்பு, (கலசம்?)இன்னொரு கையில் எதோ பூ, விசிறி போல மூணாய்ப் பிரியும் என்னமோ ஒன்னு.... மயில் இல்லைன்னா இது அன்னப்பறவையா இருக்கணும். அப்போ ப்ரம்மாவோ? கையில் எதுக்கு கூஜா..........?
புள்ளையாருக்கு இந்த குழப்பம் எல்லாம் இல்லை. அவர்பாட்டுக்கு ரெண்டு மூஞ்சூறுகள் மேல் ஏறி நின்னு ஆட்டம்தான் :-)
வாசலில் ரெண்டு சிம்மங்கள் ! த்வார சிம்மம் :-)
பக்கத்துலேயே புள்ளையாருக்கும் ஒரு தனி சந்நிதி. பாஸினியின் கருவறை ஸ்டைலில்!
வாசலில் த்வாரமூஞ்சூறுகள். கையில் மோதகம்! எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. சந்நிதி வாசல் மூடி இருந்துச்சு. ஆனால் முகப்பு ப்ரீவ்யூதான் இருக்கே! இவருக்கு ரெண்டு பக்கமும் சிறகு வச்சுருக்கும் பெண் தேவதைகள்! வெயில் காரணம் முகப்பு நிழல் விழுந்துருக்கு. படம் தெளிவா வரலை :-(
இன்னொரு மேடைப்பகுதியில் துளசிமாடம் போல ஒன்னு. நாலுபக்கமும் குட்டியா மாடங்களில் சிலைகள். சூரியன் இருக்கான். சரஸ்வதி, மஹாவிஷ்ணு, சிவன் எல்லோரும் அவரவர் வாகனங்களோடுதான் இருக்காங்க.
இந்த ரெண்டு சந்நிதிகளும் பழைய காலத்து சமாச்சாரம். பகோடா ஸ்டைலில் சமீபத்துலே கட்டுன இன்னொரு கட்டிடத்தில் மூணு சந்நிதிகள். லக்ஷ்மிநாராயண், ராதாக்ருஷ்ணா, சீதா ராம்! பளிங்குச்சிலைகள் .
வெளியில் ஒரு சின்ன மேடையில் குத்துவிளக்கு மாதிரி ஒன்னு.
மாதிரிதான்.... விளக்குப்போடும் வசதி இல்லை. ஆனால் என் கண்ணுக்குப் பார்க்க குத்துவிளக்கு போல. அதில் புள்ளையார் என்னமாத்தேன் ஆடறார்னு பாருங்க..... நல்ல வேலைப்பாடு! பித்தளைதான்.
கோவிலில் எதோ விசேஷம் வருதாம். பந்தல்போட்டு அலங்கரிக்கும் வேலை நடந்துக்கிட்டு இருந்தது.
நல்லவேளை நாம் இங்கே சனிக்கிழமை வரலை. வந்துருந்தால்..... கெடா வெட்டுதான்! ஆடு, கோழி வாத்துன்னு ஒன்னும் விடறதில்லை!
பாவம்....துர்கா... அவளை இப்படி ரத்தம் குடிக்க வச்சுட்டாங்களே....
மேலே இருந்து பார்க்கும்போது பொகரா நகரம் முழுக்க அட்டகாசமாத் தெரிஞ்சது! இதைப் பார்க்கவே உள்ளூர் மக்கள் அதிகம் வர்றாங்களாம்! நம்ம துர்கா சொன்னார்:-)
படிகள் இறங்கிக் கீழே வரும்போது எதிர்வீட்டு மாடியில் என்னமோ காயவைக்கிறாங்க. காக்கா குருவியை விரட்ட ஒரு ஆள் கையில் குச்சிகளோடு உக்கார்ந்துருக்கார். ஆனால் ஆடாமல் அசையாமல் இருப்பாரே! இவரைப் பார்த்துப் பறவைகள் பயப்படுமா என்ன? :-)
தொடரும்............ :-)

16 comments:
//. அதுலே நம்ம பதினொருதலையார் குடைபிடிக்க பெருமாளும் தாயாரும்//
They look like army people. Army helmet on the man's head, full hand, and short trousers; turban on the lady; Jus what I see from that foto; sorry if wrong.
வித்யா வாசினின்னா கலைமகள் வணங்கும்னு பொருள் வரும்னு நினைக்கிறேன். ஒருவேளை வித்யா உபாசனின்னு இருந்து கூட மாறியிருக்கலாம். இராமநாதன்னு சொன்னா அது இராமனுடைய நாதன் சிவனைக் குறிக்கும்னு சொல்வாங்களே. அந்த மாதிரி.
அந்த இன்னொரு ஆள் கார்த்திக்னு நெனைக்கிறேன். துர்காபூஜால கொல்கத்தால துர்க்கைக்கு ரெண்டு பக்கமும் பிள்ளையாரையும் கார்த்திக்கையும் வைக்கிறாங்களே.
துர்க்கையும் அட்டகாசம். சிங்கங்களும் அட்டகாசம். பிள்ளையார் கோயில் மூஞ்சூறுகள் பாக்கவே பாவமா அப்பாவியா இருக்கு.
அந்த நந்தி கூட செல்பி எடுக்குறவரு செருப்பு போட்டிருக்கிற மாதிரி இருக்கே. செருப்பு போட்டுக்கலாமா அங்கல்லாம்?
டீச்சர் ...
விந்திய மலை தொடர் மறந்துட்டீங்களா?
விந்திய மலையில் வாழும் (வாஸம் செய்யும்) மலை மகள் தான் எங்க விந்திய வாஸினி!
மற்றபடி படங்களிலும் எழுத்து நடையிலும் உங்களை நீங்களே ஜெயிக்கும் மற்றுமோர் அருமையான பயணப்பதிவு :)
கோவில் வாசலில் எடுத்த படங்களில் வெயில் மண்டையைப் பிளக்கிறது! சித்தி நாராயன் ஷாவை சட்டெனப் பார்த்தால் எம் ஜி ஆர் மாதிரி இருக்கு!
எல்லாப் படங்களும் நல்லா இருக்கு. நீங்கள் இந்தக் கோவிலெல்லாம் டிரிப்பில் முன்பே தீர்மானிக்கிறீர்களா அல்லாது "ஒரு நாள் பொக்காரா தங்கல்" மட்டும்தான் தீர்மானித்து, அங்குபோய், கைடு சொல்லும் இடங்களுக்கெல்லாம் சென்றுவருகிறீர்களா? கோவில்களுக்குத்தான் முன்னுரிமை போலிருக்கு.
எதிர்வீட்டு மாடியில் என்னமோ காயவைக்கிறாங்க. காக்கா குருவியை விரட்ட ஒரு ஆள் கையில் குச்சிகளோடு உக்கார்ந்துருக்கார். ஆனால் ஆடாமல் அசையாமல் இருப்பாரே! இவரைப் பார்த்துப் பறவைகள் பயப்படுமா என்ன? :-) டீச்சர் அது ொம்மையா டவுட்டு?
நாராயண் ஷா - எம்.ஜி.ஆர்.! எனக்கும் அப்படியே தோன்றியது!
சிறப்பான விவரங்களோடு வித்யா வாசினி.... அடுத்த பதிவுக்கும் இதோ போய்ட்டே இருக்கேன்....
ஆமாம்... த்வாரமூஞ்சூறுகள் ரொம்ப அழகா இருகாங்க...
வாங்க விஸ்வநாத்.
கோவிலைக் கட்டிய மன்னரும் அவருடைய பட்டமகிஷியும்தான் அந்தச் சிலையில் :-) மன்னர்கள் ராணுவ உடை அணிவதும் ஒரு மரபுதான்.
அரசர் கடவுளுக்குச் சமமாம்!!!
வாங்க ஜிரா.
காலாண்டை மயில் இருப்பதால் கார்த்திக்காக இருக்க வாய்ப்புண்டு. இங்கே ட்ரேட் எய்ட்னு ஒரு கடையில் உலகநாடுகளின் கைவினைப்பொருட்களை முக்கியமா பெண்கள் செய்வதை விக்கறாங்க. அப்போ ஒரு சமயம் நடுவில் துர்கை, ரெண்டு பக்கமும் லக்ஷ்மி சரஸ்வதி, அப்புறம் புள்ளையார் முருகன் இப்படி ஒரு டெர்ரகோட்டா சிற்பம் சுவரில் மாட்டும் டிஸைனாக் கிடைச்சது.
வாங்கியாந்தேன் :-)
மூஞ்சூறு சரியா நீளமா இருப்பதைக் கவனிச்சீங்களோ!!!!
கோவில் வளாகம் முழுசும் மக்கள் செருப்புக்காலோடுதான் அலையறாங்க. சந்நிதிக்குள் போகும்போது மட்டும் செருப்பை வெளியில் விட்டுட்டுப் போறாங்க.
வாங்க ரமேஷ்.
விந்திய மலை இங்கே நம்ம பக்கம் இல்லையோ! பாஸினி இருப்பது இமயமலைத் தொடருக்கு சமீபமாச்சே!
வித்யையை உபாசிக்கிறவளா இருக்கக்கூடும் என்றுதான் நினைக்கிறேன்.
மலை கலை அலை எல்லாம் ஒரே கடவுளின் வெவ்வேற உருவங்கள்தானே :-)
வாங்க ஸ்ரீராம்.
நல்ல வெயில்தான். ஆனால் குன்றின்மேல் இருப்பதால் அவ்வளவாக உறைக்கலை.
எம்ஜியாரா...... ஹாஹா.....
அவர் படத்தில் கண்ணாடி போட்டு நடிச்ச நினைவு இல்லையே....
வாங்க நெல்லைத் தமிழன்.
நேபாளைப் பொறுத்தவரை காத்மாண்டு லெமன்ட்ரீ ப்ரகாஷ் ஏற்பாடுதான் அத்தனையும். முழுப்பொறுப்பையும் அவரிடமே ஒப்படைச்சுட்டோம். கோவிலுக்குத்தான் முன்னுரிமை.
மேலும் நானும் கொஞ்சம் வலையில் தேடி சில இடங்களைக் குறிச்சு வச்சுருந்தேன். பிரகாஷ் போட்ட லிஸ்ட்டில் இவை எல்லாமும் இருந்தது சுவாரசியம் :-)
வாங்க ஜயலக்ஷ்மி.
முதல் வருகையோ? நன்றி.
அவர் பொம்மைதான்ப்பா. காக்காய்க்குப் பழகிப்போயிருக்காது? :-)
வாங்க வெங்கட் நாகராஜ்.
உங்களுக்கும் எம்ஜியாரோ!!!! பேஷ் பேஷ்..... எனக்கு அப்போ தோணலை. இப்ப நீங்களும் ஸ்ரீராமும் சொன்னபின்னே.... மறுபடியும் படத்தைப் பார்த்தால் எம்ஜிஆர் மாதிரிதான் தெரியறார் :-)
வாங்க அனுராதா ப்ரேம்.
மூஞ்சூறு உடல் அமைப்பு சரியாவே வந்துருக்குல்லே :-)
Post a Comment