கவனமா பார்த்துப் பறக்கணும். கொஞ்சம் தாழ்வாப் போகும் போது சிலுவை இடிக்காமப் பார்த்துக்குங்கன்னு விமான ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விட்டுக்கிட்டே இருக்காங்க. ஊருலேயே உசந்த கட்டிடம். செப்புத்தகடு போர்த்திய கிண்ணக்கூரையும் அதுக்கு மேலே இருக்கும் சிலுவையும் விமானநிலையத்துலே இறங்கி ஊருக்குள்ளெ வரும்போதே கண்ணில் பட்டுருது.
வெள்ளையர்கள் வந்து குடியேறி நகர் உருவாக ஆரம்பிச்சது 1853. கோவிலின் தேவையை முன்னிட்டு 1864 இல் கத்தோலிக்கர்களுக்கான கோவில் உருவாச்சு. மக்கள் தொகை பெருகப்பெருக எல்லாமே விரிவடையணும்தானே? செயிண்ட் மேரீஸ் தேவாலயம் பெரிய அளவில் 1905 கட்டிமுடிச்சாங்க .
எங்கூர் தேவாலயத்தை Cathedral of the Blessed Sacrament Christchurch Basilica, (பார்படோஸ் ஸ்ட்ரீட் சர்ச்சுன்னு உள்ளுர் மக்கள் சொல்வோம். எங்களுக்கு கதீட்ரல் என்றால் நகரின் நட்டநடுவில் இருப்பது/இருந்தது தான் சட்ன்னு நினைவுக்கு வருது) டிஸைன் செஞ்சு கட்டியவர்தான் இந்த இன்வெர்கார்கில் கோவிலையும் டிஸைன் செஞ்சு கட்டினார்.
எங்கூர் கோவில் இப்போ இந்த நிலையில் (மேலே உள்ள படங்கள் அன்றும் இன்றும்)இருக்கு. நாற்பது வினாடிகள் நிலம் ஆடுனதில் எங்கூர் சர்ச்சுகளில் ஒன்னு ரெண்டைத்தவிர எல்லாமே தரைமட்டம். இப்ப என்னத்துக்கு அதைப் பற்றின்னா.... பார்க்கப்பார்க்க மனசு ஆறலையே:( முழுவிவரம் தெரிஞ்சுக்க நேரம் இருந்தால் இங்கே பாருங்க.
காலையில் போனப்ப பூட்டிக்கிடந்துச்சே. இப்பப் போய்ப் பார்க்கலாமுன்னு போனோம். கோவிலுக்கு முன்னால் குறுக்குவாட்டமா ரயில் பாதை. யாரும் பயன்படுத்தலைன்னு பயணிகளுக்கான ரயில்சர்வீஸை நிறுத்தி பலவருசமாச்சு. சரக்கு வண்டிகளுக்கு மட்டுமே இப்போ.
சின்னக்கோவில்தான். ஆனா அழகா அம்சமா இருக்கு . முன் ஹாலில் மேரிமாதா கைகூப்பி சுவருச்சி மாடத்தில் நிக்கிறாங்க. உள்ளே பெரிய ஹால். நேரெதிரா நடுவில் கருவறை. ஆல்டர் மேடையை புதுப்பிச்சுருக்காங்களாம். அருமையான புது டிஸைனில் வட்டச் சன்னல். சிம்பிள் அண்ட் ஸ்வீட்.
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு அலங்கரிச்ச நேட்டிவிட்டி ஸீன்லே ஒரு நாய்க்குட்டி!!ஹௌ ஸ்வீட்!!
ஆல்டருக்கு ஒரு பக்கம் உள்ளே தள்ளிய ஒரு பெரிய மாடத்தில் Our Lady of Fatima (ஃபாதிமா) சிலை. இதே சிலை நம்ம வீட்டில் இருக்கு. நம்ம பழைய வீட்டு பரணில் அகப்பட்டது. ஹைய்யோ.....ன்னு எடுத்து சாமி அறையில் வச்சுக்கிட்டேன். யாருமில்லாத ஏகாந்த சேவை நமக்கு. கொஞ்ச நேரம் அமைதியா உக்கார்ந்து நிசப்தத்தை உணர்ந்தேன். மனசு லேசா இருப்பதுபோல் ஒரு உணர்வு.
ஆல்டருக்கு வெளிப்புறச் சுவரில் ரெண்டு பக்கமும் வளைவு மாடத்தில் மேரிமாதாவும் ஜோஸஃபும் போல ரெண்டு சிலைகள். ஆனா உத்துப்பார்க்கும்போது மாதா பிதாவாக இருக்காது என்றொரு தோணல். யாரையாவது கேட்கலாமுன்னா....யாரை? கொஞ்சம் கிளிக்கிட்டு வெளியே வந்தோம்.
தரையிலும் ஓடுவேன், தண்டவாளத்திலும் ஓடுவேன்னு எதிரில் இருக்கும் ரெயில்வே லைன் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கிட்டுப் போகுது லைன் இன்ஸ்பெக்டர் வண்டி. ட்ராலி தள்ளும் ஆட்களையும் லைன்மேன்களையும் நம்ம நாட்டில் சின்ன வயசில் பார்த்த நினைவு. தண்டவாளத்தின் மேல் ட்ராலியைக் கையால் தள்ளிக்கிட்டே போய் வேகம் எடுத்ததும் தாவிக்குதிச்சு ஏறிக்குவாங்க.
நாம் போற போக்குலேயே முடிஞ்சவரை ஹெர்ரிடேஜ் இடங்களையும் பார்த்துக்கணும். செயிண்ட் மேரீஸ் பார்த்துட்டுப் பக்கவாட்டில் இருக்கும் தெருவில் திரும்பினால் நகரத்துக்குள் இருக்கும் நாலு தோட்டத்தில் ஒன்னு இருக்கு. Otepuni Gardens.பரப்பு 9.4 ஹெக்டேர். இதுக்கு நடுவில் வாய்க்கால் ஓடுது. நடைபாதைகளும் இருக்கைகளுமா சுத்தமாவும் அழகாவும் இருக்கு.
நகரசபை நிர்வகிக்கும் தோட்டங்களில் இதுவும் ஒன்னு. நகர சபைன்னதும் நினைவுக்கு வருகிறார் இந்த ஊர் மேயர். டிம் ஷட்போல்ட். Tim Shadbolt இவர் தந்தையாகவே (நகரத்துக்கு) இருக்கப் பிறந்தவர்.வேறெந்த வேலையும் செய்யமாட்டார்:-) இவரைப்பற்றி முந்தி ஒரு சமயம் எழுதுனது இங்கே.
வெவ்வேற ஊர்களில் இருந்துட்டு (மேயராகத்தான்) இங்கே வந்து 1993 - 95 வரை ஒரு டெர்ம் மேயரானார். அடுத்த டெர்ம் வேற யாரோ ( மிஸ்டர் ஹாரிங்க்டன்) போட்டியில் ஜெயிச்சுட்டாங்க. அதுக்கு அடுத்த தேர்தல் 1998. மீண்டும் தேர்தலில் நின்னு வெற்றி பெற்றார். இவரே மேல் என்று மக்களுக்குத் தோணியிருக்கும் போல. (இங்கே நியூஸியில் சிட்டிக்கவுன்ஸில் அங்கம், மேயர் எல்லாம் நேரடித் தேர்வுதான். போஸ்ட்டல் ஓட்டுதான் எல்லாமே. வீட்டுக்கு ஓட்டுச்சீட்டு வந்துரும். மூணு வருசத்துக்கு ஒரு முறை தேர்தல்.) இப்போ அஞ்சு டெர்மா இன்னிக்கு வரை (15 வருசம்) இவரேதான் மேயர்.
சும்மாச் சொல்லக்கூடாது , ஊரைப் பார்த்தாவே பளிச்ன்னு இருக்கு. கிறிஸ்மஸ் அலங்காரங்கள் கூட இந்த அளவுக்கு எங்க கிறைஸ்ட்சர்ச்சில் இல்லை:( இத்தனைக்கும் எங்கூர்தான் தெற்குத் தீவின் மிகப்பெரிய ஊர். மூணரை லட்சம் மக்கள் இருக்கோம். தலைவன் திறமையால்தான் ஊரே ஜொலிக்குது போல.
இப்போ எங்கூருக்கு மேயரா இருப்பவர்.........ப்ச். அப்பவே அவரைத் தூக்கி இருப்பாங்க. நிலநடுக்கம் வந்து இவர் பதவியைக் காப்பாத்திருச்சு. அவசரக்காலத்தில் கொஞ்சம் உழைச்சு பேர் வாங்கிட்டார். ஆனா ரொம்ப நாளைக்கு தாங்கமாட்டார். அடுத்த தேர்தலுக்குக் காத்திருக்கோம். பேச்சும் படாடோபமும் அதிகம். ரேடியோ டாக் ஷோ ஆள். கேக்கணுமா?
டிம் ரொம்ப ஜாலியானவர். ஸ்போர்ட்டிவ். அடக்கம், பணிவு, உதவும் மனப்பான்மை, எளிமை இப்படி .... சொல்லிக்க்ட்டே போகலாம். போனவருசம் செயிண்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் சர்வீஸுக்காக நிதி சேர்க்க , உலகத்துலேயே நீளமான டிவி நேர்காணலில் பங்கெடுத்து ரெக்கார்ட் உண்டாக்கிட்டார். 28 மணி நேரம்! அம்மாடியோவ்!!!! 28 மணி நேரம் சிரிச்ச முகத்தோடு இருக்கணுமுன்னா...... செத்தேன் நான்:-)
டிம் ஷட்போல்ட் மூணு முறை கல்யாணம் கட்டுனவர். சட்டப்படி விவாகரத்துகள் செஞ்சபிறகுதான். இப்ப இருக்கும் மனைவி இந்தியர். வக்கீலமா. (கொசுறுத்தகவல்)
இந்த ஊரின் முதல் ப்ரெஸ்பைட்டீரியன் சர்ச் இது. பூட்டி இருக்குன்னு வெளியே சுத்திப்பார்த்தோம். (சரித்திரம் நம்பர் 12.) 10 ஃபிப்ரவரி 1915 வது வருசம் கட்டிமுடிச்சு முதல் பூஜை. பத்து லட்சம் செங்கற்கள். மொத்த செலவு 18,181 பவுண்ட். பெல் டவர் 32 மீட்டர் உசரம். நல்லா ஸாலிடா நிக்குது. தெருப் பார்த்த ரெண்டு நுழைவாசல்களையும் செங்கல் வச்சு மூடி இருக்காங்க. வாஸ்து தான் காரணமோ?
சுவரில் பதிச்ச சேதி ஒன்னில், 1844 வது ஆண்டு ஜெர்மனி நாட்டு மிஷனரி Rev. J F H Wohlers என்பவர் தன் மனைவியுடன் இந்த ஊருக்குப்பக்கம் ருஆபுகெ தீவில் ( Ruapuke island 15 KM from Bluff) வந்திறங்கினார். மவோரி இனத்துக்கு நிறைய சேவைகள் செய்தாரென்ற தகவல் இருக்கு.
ஊருக்கு தண்ணி (குடிதண்ணீர்) சப்ளை செய்ய ஒரு வாட்டர் டேங்க் வேணுமுன்னு 1888 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிச்சு 1889 இல் கட்டி முடிச்சதுதான் இந்த வாட்டர் டவர். முதலில் எல்லா ஊருலேயும் இருப்பதுபோல இரும்புக்கம்பி கட்டி ஏத்தி வச்சதுதான் இந்த மேல்நிலைத் தண்ணித்தொட்டி. 1887 -1888 களில் மேயராக இருந்த டாப்பர் E.A. Tapper , இதை ஏன் கலை அழகோடு கட்டக்கூடாதுன்னு ஐடியா கொடுத்தார். ததாஸ்த்து!
நாப்பது மீட்டர் உயரத்துலே தண்ணி உக்கார்ந்திருக்கு. மூணு லட்சம் செங்கற்கள் என்று சொல்லிட்டுப் போகமுடியாதபடி நல்லாக் கல்லுக்கணக்கு வச்சுருக்காங்க. நல்ல உறுதியானவைகள். சாதாரண செங்கற்கள் 2லட்சம். சிகப்பு நிறமுள்ள கற்கள் ஒரு 80 ஆயிரம். மஞ்சள் நிறத்திலொரு பதினைஞ்சாயிரம், கறுப்பு நிறத்தில் ஒரு நாலாயிரம், (ஆயிரம் குறையுதே...யாரைக் கேக்கலாம்? ) இப்படி ஸாலிடா கல் கணக்கு. மேலே ஏறிப்போக உள்ளேயே 112 படிகள். அங்கிருந்து பார்த்தால் ஊர் முச்சூடும் தெரியுமாம்.
ஹெரிட்டேஜ் ப்ரோஷர் முகப்பில் கூட இதன் படம்தான்.
ஞாயிறுகளில் மட்டும் உள்ளே போய்ப்பார்க்க ஒரு ஏற்பாடு இருக்கு. நாம் போனது திங்கட்கிழமை என்பதில் எனக்குப் பரம சந்தோசம். இல்லைன்னா, நம் வீட்டு கருடர், கட்டாயம் ஏறிப்பார்க்கக் கிளம்பி இருப்பார். எல்லாம் போன ஜென்ம வாசனை:-)
பழைய டேங்க் ஒரு பக்கம் கோபுரமா நிக்க, பெருகிவந்த மக்கள் தொகை அனுசரிச்சு இன்னும் புதுசா ரெண்டு வட்ட டேங்குகள் முன்பக்கப் புல்தரையில் உக்கார்ந்துருக்குகள். பிரமாண்டமான வட்டம். நம்ம கெமெராவில் அடங்காத பிடாரிகள் :-(
தொடரும்..........:-)

25 comments:
பார்த்து, படித்து, ரசித்தேன்.
படத்துக்குக் கீழே நீங்கள் குறிப்பிட்டபின்தான் நாய்க்குட்டியைக் கவனித்தேன். (அவ்வளவு கவனம்!)
ஏகாந்த சேவை.... ஹா...ன்னு இருக்கு ஹா.........ல்!
தண்ணீர்த் தொட்டி(யிலும் கூட) அழகு!
//நம் வீட்டு கருடர், கட்டாயம் ஏறிப்பார்க்கக் கிளம்பி இருப்பார். எல்லாம் போன ஜென்ம வாசனை:-)//
ஏன்...... அவர் பாவம் டீச்சர்.... :)))
படங்களும் பகிர்வும் அசத்தலா இருக்கு டீச்சர்.
அத்தனை படங்களும் சூப்பர்.சர்ச் ரொம்ப அழகு.இதையா சின்ன சர்ச் னு சொன்னீங்க:)
அமைதியா அப்படியே அடங்கிடலாம் போல இருக்கு. தண்ணித்தொட்டியும் தான் கலைஅம்சத்தோட விளங்குது. இதென்ன செங்கல் கணக்கு. அந்த மேயரைப் போய்க் கேட்டிருக்கலாமில்ல:)
கருடர் அனுமார் எல்லாம் பதிவிலியே வந்துட்டாங்க!!
படங்களெல்லாம் பட்டையைக் கிளப்புது.
//நம் வீட்டு கருடர், கட்டாயம் ஏறிப்பார்க்கக் கிளம்பி இருப்பார். எல்லாம் போன ஜென்ம வாசனை:-)//
துள்சிக்கா.. அவ்ளோ உசரத்துல ஏறி நின்னுக்கிட்டு, நம்ம காலடியில் கிடக்கிற ஊரைப் பறவைப்பார்வையில் பார்க்கற சுகமே தனிதான் தெரியுமோ? அதுவும் ஆளைத்தள்ளுற காத்துல நின்னுக்கிட்டு :-)))))
படங்களும் பதிவும் சிறப்பாக இருக்கு. முதலில் குறிப்பிட்டுள்ள சர்ச் படம் மனதை கலங்க வைத்தது. உங்க ஊர் மேயர்களைப் பற்றிய தகவல்கள் சுவாரசியம்.
அருமை.... அருமை..... நான் அந்த இடத்திற்கு சென்று வந்தது போல இருந்தது. தொடரட்டும்.....
இப்ப இருக்கும் மனைவி இந்தியர். வக்கீலமா. (கொசுறுத்தகவல்)
ரொம்ப இண்டரஸ்ட்டிங் தகவல் ....
படங்களும் பகிர்வும் சூப்பர் டீச்சர்.
ஊரே பளிச்னு இருக்கே....பொறாமையா இருக்கு...:)
படங்களை எல்லாம் ரொம்ப துல்லியமா அகல கோணத்திலே எடுத்திருக்கீங்க ....! என்ன கேமிரா பயன்படுத்துறீங்க..?
சர்ச் ரொம்ப அழகாக அமைதியாக இருக்கின்றது.
டீச்சர். நடுவுல நீங்க கொஞ்ச நாள் பதிவு எழுதலையே.. நானும் படிக்காம இடைவெளி விட்டுட்டேன். இப்பப் பாத்தா அஞ்சு பதிவு படிக்காம இருக்கு. :)
அடி வாங்குறது தவிர்க்க முடியாது. ஆனா அதுக்கப்புறம் எழுந்து நிக்குறதுதான் வீரம். அந்த வீரம் நியூசியில் இருக்கு.
படங்கள் அவ்வளவு அழகு.
ஒங்கூர்லயுமா ஒரு வாய்ச்சொல் அரசியல்வாதி இருக்காரு? ம்ம்ம். வீட்டுக்கு வீடு பருப்புப்பொடிங்குறது எவ்வளோ சரியா இருக்கு!
வாங்க பழனி கந்தசாமி ஐயா.
அத்தனைக்கும் நன்றிகள்.
வாங்க ஸ்ரீராம்.
ஆட்டுக்குட்டிதான் நானும் இதுவரை பார்த்தது.இப்போ முதல்முறையா நாய்க்குட்டி:-)))
வாங்க வெங்கட் நாகராஜ்.
ஏற்கெனவே கருடர் பற்றி எழுதுனது இங்கே.
http://thulasidhalam.blogspot.co.nz/2011/10/blog-post_31.html
அதான்........ :-)))))
ரசனைக்கு நன்றிகள்.
வாங்க வல்லி.
பெரிய திருவடி இருக்குமிடத்தில் .....
சிறிய திருவடி ஆட்டோமேடிக்கா வந்துடமாட்டாரா?:-)
கல் ஆர்டர் பண்ணி வாங்கும்போதே ஒரு லோடுன்னு கணக்கு வச்சுக்குவாங்கல்லே. அது இந்தப்பக்கங்களில் எண்ணிக்கையா இருக்கு போல!
ஆனா ஒன்னு, கணக்கு ரொம்ப முக்கியம்.கணக்குக் கேட்டவங்களாலே எப்படியெல்லாம் தமிழ்நாடு மாறுச்சுன்னு தெரியாதா உங்களுக்கு:-)))
வாங்க அமைதிச்சாரல்.
அண்ணனுக்கு சப்போர்ட்!!!! ஒவ்வொரு படியும் உசரம் கூடுதல். அதுவும் சின்ன குறுகலான இடத்தில் கட்டி இருக்காம்.
கூடப்போனால் முட்டி கழண்டுரும்:(
மேலே இருந்து காலடியில்பூமி பார்க்கணுமுன்னா என் ச்சாய்ஸ் ஹாட் ஏர் பலூன்தான்!
வாங்க ரமா ரவி.
நாற்பது விநாடி குலுக்கலில் 173 வருச சரித்திரம் காணாமப் போயிருச்சு எங்க ஊரில்:(
இன்னும் அநேகமா 15 வருசத்தில் புது ஊர்! இடிபாடுகளை முக்காலே மூணுவீசம் அகற்றியாச்சு.
வாங்க சுரேஷ் குமார்.
ச்சான்ஸ் கிடைச்சால் இந்தப்பக்கம் நேரில் வந்து பாருங்க. புது அனுபவம்.
வாங்க இராஜராஜேஸ்வரி.
நாட்டைவிட்டு வெளியில் வந்துட்டால் அந்த இந்தியர் என்ற சொல்லுக்கு இனிப்பு கூடுதல்:-)
வாங்க ரோஷ்ணியம்மா.
கூட்டம் இல்லை பாருங்க. அதான் பளிச் பளிச்.
வாங்க ஜயராஜன்.
படங்கள் நிஜமாவே நல்லா இருக்கா?
பெருமை எல்லாம் Canon 1100D EOS க்கு:-)
வாங்க மாதேவி.
அமைதியே ஒரு அழகுதானேப்பா!
வாங்க ஜிரா.
சில பருப்புப்பொடியில் உப்பு காரம் கொஞ்சம் தூக்கும். இங்கே காரம் கம்மி:-))))
வாய்ச்சொல் வீரர்கள் எங்கேயும் இருப்பார்கள்தானே?
கூட்டம் இல்லாததால் எங்கோ ஒன்னு:-)
சர்ச்சின் அமைதி புகைப்படத்திலும் தெரிகிறது.
தண்ணீர் தொட்டி இத்தனை கலைநயத்துடனா? அதிசயிக்க வைக்கிறது.
படங்கள் அருமை!
Post a Comment