தென் துருவத்தை நோக்கி ஒரு பயணம் போக வேணும் என்று எப்போதும் நினைத்திருக்கும் எண்ணம் இப்படி சட்னு ஆரம்பிக்குமுன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை. வெள்ளிக்கிழமை மாலை ஒரு ஆறுமணி இருக்கும்போது, இன்னும் ஒரு வாரம் கோபாலின் விடுமுறை பாக்கி இருக்கேன்னு......... எங்கியாவது போகலாமா? போலாமேன்னார், பொறியில் மாட்டப்போவதை அறியாமல்:-)
இன்வர்கார்கில் போகலாம். அப்படியே விண்ட்டன், ப்ளஃப், ஸ்டீவர்ட் தீவு . ஓக்கேதானே? கூகுளில் பார்த்தால் ஏழரை மணி நேர ட்ரைவ். அங்கங்கே ஓய்வெடுத்து, வேடிக்கை பார்த்துக்கிட்டே போனால் எப்படியும் பத்துமணி நேரம் ஆகும். வழியில் தெக்கப்போ ஏரி வருது, அதை ஒரு ரவுண்டு பார்க்காமல் போக மனசு வராதே......
பேசாம விமானத்தில் போயிறலாமேன்னால் அங்கே ஊர் சுத்த வண்டி? ஒவ்வொரு விஷயமா முடிவு செய்யலாம் நின்னு நிதானமா யோசிக்க நேரமில்லை. முதல்லே எப்பப் போறோம்? எத்தனை நாள்? எங்கே தங்கல்?
விமான டிக்கெட் கிடைக்குமான்னு வலையில் பார்த்தால் ஞாயிறு காலை ஃப்ளைட் இருக்குனுச்சு. திரும்பி வர , வியாழன் காலை. இந்த வருசம் ரெண்டு நாள் அடுத்த வருசம் ரெண்டு நாள்! புது வருசத்தை வேற ஊரில் கொண்டாடினால் ஆச்சு.
வலையில் தேடினதில் அகப்பட்டது க்வெஸ்ட் சர்வீஸ்டு அபார்ட்மெண்ட். மற்ற மோட்டல்கள் எல்லாம் நிறைஞ்சு வழியுதாம். இப்போதானே நியூஸியின் கோடை காலம். பயணிகள் உலகமெங்கிலும் இருந்து வர்ற சமயமாச்சே!
சின்னதா ஒரு 1.3 இல்லை 1.6 வண்டி கிடைச்சால் போதுமுன்னு பார்த்தால் அதுவும் பிரபலமா இருக்கும் நிறுவனங்களில் கிடைக்கலை. எல்லாமே ஃபுல்! தேடு தேடுன்னு வலைவீசுனதில் பெகாஸஸ் கம்பெனி கண்ணில் பட்டது. விவரம் அனுப்பினால் , நீ கேட்கும் சைஸில் வண்டிகள் எல்லாம் ஏற்கெனவே வெளியில் போயிருச்சுன்னு பதில் வருது. தொலைபேசினால்.....
கொஞ்சம் பெரிய வண்டி மிட்சுபிஷி இருக்கு, அது வேணுமுன்னா.... சரி. எடுத்துக்கறோம். தேவையை அனுசரிச்சு ரேட் உயருது. டபுள் டபுள்:(
ச்சலோ!
என்னுடைய மாணவி ஒருத்தர் விண்ட்டனில் இருக்காங்க. கிறைஸ்ட்சர்ச்காரர்தான் என்றாலும் ஒரு ரெண்டு வருசம் இடமாறி இருக்காங்க, மகளுக்கு உதவியாக இருக்க. பேத்தியைப் பார்த்துக்க ஆள் இல்லை. வர்றேன்னு தொலைபேசினேன். எத்தனை மணிக்கு லேண்டிங்ன்னு கேட்டதுக்கு இன்வர்கார்கில் வந்துட்டு போன் செய்யறேன்னு சொன்னேன். என்ன... வந்த பிறகா? நாங்க உடனே கிளம்பினாலும் அரைமணி நேரம் ஆகுமே?
பரவாயில்லை. பெட்டிகளை அறையில் போட்டுட்டு நாங்களே ரெண்டல் காரில் கிளம்பி விண்டன் வர்றோம் என்றதும்......... என்னது மோட்டலில் தங்கப்போறீங்களா? இங்கே நம்மவீட்டில் அறைகள் காலியாத்தானே இருக்கு . தோழியின் குரலில் ஏமாற்றம். தமிழ் படிக்க என்னிடம் மாணவியாக வந்து சேர்ந்து அப்புறம் நெருங்கிய தோழியாக ஆனவர் இவர்.
கொஞ்சம் சீக்கிரம் எழுந்திரிக்கணுமுன்னு அலாரம் வைக்கப்போனால்.... காப்பிக்கடை எல்லாம் ஆரம்பிக்காம சட்னு குளிச்சுட்டுக் கிளம்பிடலாம். அங்கே லவுஞ்சில் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டால் ஆச்சுன்னு கோபால் சொல்லிட்டார். மகானுபாவன். நல்லா இருக்கணும்:-)
உள்நாட்டு விமானப் பயணம் கடைசியா எப்போ போனேன்னு யோசிச்சேன். அது ஒரு 9 வருசத்துக்கு முன்னே.... அதுக்கு நம்ம கருவேப்பிலைச் செடி வயசு இல்லையோ!
புதுசா மினுக்கி வச்சுருக்காங்க இந்த டெர்மினலை! ஜிலோன்னு காலியாக்கிடக்கும் கவுண்ட்டர்கள். நாமே பொட்டிகளையும் நம்மையும் செக்கின் பண்ணிக்கணும். அதுக்கு எட்டெட்டு கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் வச்சு வட்ட வட்டமா மூணு அமைப்பு. நாமே பேக்கேஜுக்கு உண்டான பட்டியை ஒட்டி கன்வேயர் பெல்ட்டில் எடுத்து வச்சால் ஆச்சு. பேருக்கு ஒரு உதவியாளர் (நாம் சரியா நம்ம வேலையைச் செஞ்சோமான்னு பார்க்க) அங்கே தேமேன்னு நிக்கறாங்க. விமானத்தில் ஏறுமுன் அங்குள்ள ஸ்கேனரில் நாமே போர்டிங் பாஸைக் காமிச்சுட்டு உள்ளே போய் உக்கார்ந்துக்கணும். நல்ல வேளை நீயே ப்ளேனை ஓட்டிக்கிட்டுப் போன்னு சொல்லலை:-))))
பொட்டியை அனுப்பிட்டு போர்டிங் பாஸோடு கோரு க்ளப் லவுஞ்சுக்குப் போனோம். அதுக்குப்போகும் முன் செக்யூரிட்டி செக் ஆச்சு. தயிர் ம்யூஸ்லியும் கப்புச்சீனோவும் முடிச்சுக்கிட்டு நம்ம கேட் இருக்கும் பாதையில் போனால்.............. அது நம்மை வெளியே கொண்டு வந்து துப்பிருச்சு. அப்ப செக்யூரிட்டி செக் எல்லாம் அம்பேலா? யாரு வேணுமுன்னாலும் எதையும் எடுத்துக்கொண்டு போகலாம் போல இருக்கே! இது என்னாங்கடா பாதுகாப்பு?
நாட்டின் தென் கோடிக்குப் போற விமானம் எல்லாம் விமானதளத்தின் ஒரு கோடியில் இருக்கு. அங்கே போய்ச் சேர்ந்தால் பென்சில் போல ஒரு நீண்ட சின்ன விமானம். காத்தாடி முள் போல ப்ரொப்பெல்லர். இது சுத்தி, நம்மைக் கொண்டு போகப்போகுதான்னு ஒரு சம்சயம் !
ரெட்டை இருக்கைகளா ஒரு 18 வரிசை. 72 ஸீட். (எல்லாமே ஃபுல்!) நடுவில் நடைபாதை. போலிப் புன்னகை இல்லாத ரெண்டு பணிப்பெண்கள். காஃபி, டீ, தண்ணீர், பிஸ்கெட்(குக்கீஸ்) முட்டாய் கொடுப்பதோடு வேலை முடிஞ்சுருது. அந்த முட்டாய் சப்ளை வேலை கூட ப்ளைட்டில் வரும் எதாவது ஒரு பொடிசு கையில் குட்டிக் கூடையோடு கொண்டு வந்து நீட்டும்போது கூட நடந்தால் போதும்.
படிக்க வச்சுருந்த ஏர் நியூஸிலேண்ட் மேகஸின் முழுசும் ஹாப்பிட் புராணம்தான். இன்னும் படம் பார்க்கலை. . போரடிக்குதேன்னு சும்மா க்ளிக்கிட்டு இருந்தேன். கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து டிமரு வரை ஏதோ ரூலர் வச்சுக் கோடு போட்டது போல நிலத்தின் ஓரம் ஒரே நேர் கோடா இருக்கு!!
சரியா ஒரு மணி நேரப் பயணத்தில் இன்னும் அரைமணி பாக்கி. அதுவரை நாம் போய் இறங்கும் ஊரைப்பற்றிப் பார்க்கலாமே. இன்வர்கார்கில், நியூஸியின் தெற்குப்பகுதியில் உள்ள கடைக்கோடி நகரம். இந்தத் தென் பகுதியை சவுத்லேண்ட் ரீஜன் என்று சொல்றாங்க. வியாபார முக்கியத்துவம் உள்ள ஊர். ப்ரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் நியூஸி பூமி புத்ரர்களான மவோரிகளுக்கும் ஒப்பந்தம் (வைட்டாங்கி ஒப்பந்தம்) கையெழுத்தாகி அமலுக்கு வந்தது 1840. அதுக்குப்பிறகுதான் மாகாணங்களைப்பிரிச்சு , அங்கங்கே முக்கிய வியாபாரத் தலங்களை ஒன்னொன்னா உருவாக்கிக்கிட்டு இருந்துருக்காங்க.
நகரத்துக்கான இடம் தெரிவு செஞ்சபிறகு அதைப்பார்வையிட சீஃப் சர்வேயர் ஜே டி.தாம்ஸன் (J.T.Thomson) வந்தார். சரியான இடமுன்னு தோணலை(வாஸ்து சரி இல்லையோ என்னவோ!) ஊஹூமுன்னு தலையாட்டிட்டு அவர் தேடிக் கண்டு பிடிச்ச இடத்தில்தான் இப்போ ஊர் இருக்கு. படகுத்துறை அமைக்க ஏதுவா ஒரு இடம் வேண்டி இருக்கே. வியாபாரம் எல்லாம் கப்பல் போக்குவரத்தை நம்பித்தானே கிடக்கு.
ஊருக்குப்பேரு வைக்க ரொம்ப சிரமப்படலை. ஊர் அமையப்போகும் இடம் ரெண்டு நதிகளின் கூடல் இருக்கும் சங்கமம். இதுக்கு அவுங்க மொழியில் 'இன்வர்' என்று சொல்வாங்களாம். அப்போ ஒடாகோ (Otago) பகுதியில் சூப்பரின்டெண்டடாக இருந்தவர் வில்லியம் கார்கில் William Cargill. ரெண்டையும் சேர்த்து இன்வர்கார்கில் (Invercargill) என்று வச்சுருங்கன்னு முன்மொழிந்தவர் அந்தக் காலக்கட்டத்தில் (1856) நியூஸி கவர்னராக இருந்த ஸர் தாமஸ் கோர் ப்ரௌன். (Sir.Thomas Gore Browne)
என்ன கவர்னரோ..... தன் பெயரை வச்சுக்காம அந்தப்பகுதியில் இருக்கும் முக்கிய அதிகாரி பெயரைப் போய் வச்சுருக்கார்! இதே சவுத் லேண்ட் பகுதியில் Gகோர் என்றொரு ஊர் இருக்கு. ஒருவேளை தன் பெயருக்கு ஒரு ஊர் போதுமுன்னு நினைச்சிருந்துருப்பார் போல:-)
நகரை வடிவமைக்க வேண்டிய பொறுப்பு நம்ம சீஃப் சர்வேயருக்குத்தான். ஒரு சதுர மைல் பரப்பில் நாலு பார்க்குகளோடு நெடுக்கு, குறுக்குச் சாலைகளோடு டிஸைன் செஞ்சார். முக்கிய வீதிகள் எல்லாம் நல்ல அகலமா 131.232 அடிகள்.(40 மீட்டர்) முக்கிய வீதிகள் மொத்தமே ரெண்டுதான் கேட்டோ:-) ஆங்கில எல் வடிவத்துலே நெடுக்கே ஒன்னு குறுக்கே ஒன்னு. நெடுக்கே போறது டீ (Dee) தெரு. குறுக்கே போறது டே ( Tay) தெரு. இந்த டீ & டே ரெண்டுமே ஸ்காட்லாந்தில் ஓடும் நதிகளின் (River Dee & River Tay) பெயர்கள்தான். (அதான் சொன்னேன்லெ பேருக்காக ரொம்ப மெனெக்கெட மாட்டாங்கன்னு)
நாலு பார்க்குகளில் ஒன்னு ரொம்பப்பெருசா இருக்கட்டுமுன்னு அதுக்கு ஒரு 200 ஏக்கர். மாட்சிமைதாங்கிய மகாராணிக்கு சமர்ப்பிக்கணுமுன்னு முடிவு,அதனால் இதுக்கு குவீன்ஸ் பார்க்ன்னு நாமகரணம் ஆச்சு. (நாடே அவுங்க வசம்தான், இன்னும்! )
விமானம் நிலம் தொட்டது. பொட்டியை வெளியே போய் எடுக்கணும். வெளியேன்னா உண்மைக்குமே வெளியே!!!! கட்டிடத்தை விட்டு வெளியேறி கார்பார்க்குக்கு வந்தால் அங்கே வாசல் வச்ச கூடத்துலே பொட்டிகள் வரும் பெல்ட். யார் வேணுமுன்னாலும் வந்து நாலு பொட்டிகளைத் தூக்கி வண்டியில் போட்டுக்கிட்டுப் போயிடலாம்!!! இன்னும் இந்த நிலைக்கு மக்கள் வரலை என்பது நமக்கு மன சமாதானம்.
ரெண்டல் வண்டி கம்பெனி சொன்னதுபோல கார் பார்க்கில் நின்னு அவுங்களுக்கு மொபைல் ஃபோன் போட்டால் அங்கெனெதான் இருக்கேன்னு ஒருத்தர் வந்து கூட்டிக்கிட்டுப் போனார். மிட்சுபிஷி டயமண்ட் வேகன். பழைய்ய்ய்ய்ய மாடல். ரெண்டல் வண்டிக்கான மஞ்சள் நம்பர் போர்ட் இல்லை. (கார்க்காரரின் சொந்த வண்டியாகத்தான் இருக்கணும். நாலு நாளைக்குக் காசு வரட்டுமேன்னு கொடுக்கறார்ன்னு தோணல் எனக்கு. பின்னால் தாராளமா ரெட்டைக் கட்டில் போட இடம் இருக்கு. தெரிஞ்சுருந்தா, தனியா அறை எடுத்திருக்க வேணாம்,இல்லை?)
எங்களைக் கூட்டிக்கிட்டு அவருடைய ஆஃபீஸுக்குப் போனார். ஃபார்மாலிட்டின்னு ஒன்னு இருக்கே! கையெழுத்துப் போட்டதும் வண்டிச் சாவியைக் கொடுத்து உங்க தங்குமிடம் எதிர்வாடையில் வலப்பக்கம் ஒரு நிமிஷ ட்ரைவில் இருக்கு. திரும்பி ஊருக்குப் போகும்போது போன் பண்ணுங்க. நான் இங்கே ஆஃபீஸுக்கு வந்துருவேன். உங்களைக்கொண்டு போய் ஏர்ப்போர்ட்டில் விட்டுடறேன்னார்.
டீ தெருவும் டே தெருவும் சந்திக்கும் மூலையில் டீ தெருவில் இருக்கு நாம் தங்கப்போகும் க்வெஸ்ட் சர்வீஸ்ட் அபார்ட்மெண்ட். இந்த மூலைக்கு பேங்க் கார்னர் என்று பெயர்.
சரி வாங்க அறைக்குப்போய் சாமான்களை வச்சுட்டு தோழி வீட்டுக்கு போகலாம்.
தொடரும்..........:-)

41 comments:
Happy New Year, Teacher!
Quite interesting as usual.
-Ezhilarasi Pazhanivel
//விமானத்தில் ஏறுமுன் அங்குள்ள ஸ்கேனரில் நாமே போர்டிங் பாஸைக் காமிச்சுட்டு உள்ளே போய் உக்கார்ந்துக்கணும். நல்ல வேளை நீயே ப்ளேனை ஓட்டிக்கிட்டுப் போன்னு சொல்லலை:-))))//
"யாருமே பைலட்டுன்னு ப்ளேனை ஓட்டிக்கிட்டு போக வேண்டிய தேவை இருக்காது அப்படின்னு சொல்றாக
எதிர்காலத்துலே !! அதாவது இன்னும் ஒரு பத்து வருசத்திலே நடக்கப்போற மாற்றங்களை எல்லாம் ஒரு
ஃபிக்ஸன் மாதிரி இருந்தாலும் உண்மையா நடக்கும்போல தான் தெரியுது."
" அப்படியா ! இருந்தாலும் ஃபுல்லா ரோபட் ட்ரிவன் ப்ளேன்லே நம்பிக்கை மக்களுக்கு உடனே வராது அப்படிங்கறதாலே
இப்போதைக்கு ஒரு பைலட்டும் ஒப்புக்கு இருப்பாராம். கூட ஒரு ஹைலி ட்ரைன்டு நாயும் ( dog ) இருக்குமாம்.
அடே !! இன்னாது நாய் எதுக்கு காக் பிட்டுலே ???!!! " அப்படின்னு கேட்டபோது,
இருங்க... ஃப்ளை பண்ணும்பொழுது இந்த பைலட் என்ன செய்யணும், நாய் என்ன செய்யணும் அப்படின்னு
விலா வாரியா சொல்றேன் அப்படின்னு சொல்றாங்க...
என்னாது ?
பைலட் அப்படின்னு அடையாள அட்டை மாட்டிட்டு உட்கார்ந்து இருக்கறவரு ஒரு பிரிட்டானியா மேரி கோல்டு
இல்லைன்னா ஒரு பெட் பிஸ்கட் பாக்கெட் வச்சுக்கிட்டு புட்டு புட்டு அத நாய்க்கு முன்னாடி போட்டுக்கிட்டு இருக்கணுமாம்.
எதுக்கு ?
நாய்க்கு பசிக்குமில்ல ?
அப்ப நாய்க்கு என்ன ஜோலி ?
இந்த பைலட் மறந்து போய்கூட எந்த ஸ்விச்சையும் தொட்டு விடக்கூடாதே அப்படின்னு உசாரா பாத்துகிட்டே
இருக்குமாம். அந்த ட்ரைனிங்க் நாய்க்கு...
சரிதான்...
மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா ரோபட் மேலே நம்பிக்கை வந்தப்புறம் இந்த் அரேஞ்ச்மென்டை வித்ட்ரா
பண்ணிடு வாங்களாம்.
அப்ப அந்த பைலட்டா நான் போறேங்க... என்றாள் மீனாட்சி பாட்டி.
என்னது. ? அப்ப நாயா என்னை இருக்கச்சொல்றியா ? : " ளொள் என்று குறைத்தது சுப்பு தாத்தா.
subbu rathinam
meenachi paatti.
கூடவே வரோம்.
ம்ம்...
கூடவே வந்த உணர்வு. தொடர்கிறோம்.
haiya!! Happy new year teacher, Gopal sir and Madhu!
போங்க, போங்க, போயிட்டு வாங்க! காதிலே, மூக்கிலே புகையோடு வாழ்த்தறேன். :)_)))))
பேருக்கு ஒரு உதவியாளர் (நாம் சரியா நம்ம வேலையைச் செஞ்சோமான்னு பார்க்க) அங்கே தேமேன்னு நிக்கறாங்க. விமானத்தில் ஏறுமுன் அங்குள்ள ஸ்கேனரில் நாமே போர்டிங் பாஸைக் காமிச்சுட்டு உள்ளே போய் உக்கார்ந்துக்கணும். நல்ல வேளை நீயே ப்ளேனை ஓட்டிக்கிட்டுப் போன்னு சொல்லலை:-))))//
நல்ல நகைச்சுவை உணர்வு.
சரித்திர பின்னனிகளையும் அழகாய் சொல்கிறீர்கள்.
தொடர்கிறேன்.
தென் துருவம் நோக்கி நாங்களும் உங்களுடன் பிரயாணித்து வந்து கொண்டிருக்கிறோம்.
ரூம் எப்படி இருக்குமோ?
சாப்பாடு எப்படியோ....துளசி டீச்சர் தான் துணை!
அருமையான பதிவு, எப்போது அடுத்த பதிவு வரும் என்று ஏங்க வைக்கிறது. இன்றிலிருந்து தங்களை தொடர ஆரம்பித்து விட்டேன்......நன்றி !
தென் துருவ பயணம் .....
தெவிட்டாத பகிர்வு ...
//விமானத்தில் ஏறுமுன் அங்குள்ள ஸ்கேனரில் நாமே போர்டிங் பாஸைக் காமிச்சுட்டு உள்ளே போய் உக்கார்ந்துக்கணும். நல்ல வேளை நீயே ப்ளேனை ஓட்டிக்கிட்டுப் போன்னு சொல்லலை:-))))//
இன்னும் கொஞ்ச காலம் போச்சுனா அதையும் சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்.
அருமையாக இருக்கு பதிவு, படங்கள் தகவல்கள் எல்லாமே. தொடர்ந்து தென் துருவத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.
Goodo Good
சௌதர்ன் தீவு தான் கடைசி எல்லை போல இருக்கு நிலப்பகுதிக்கு இந்த உலகத்துலே
இதுக்கு அப்பாலே எப்படி சௌத் போலுக்கு போறதுன்னு கூகிள்ளே வழி கேட்டென்.
இதுக்கு அப்பாலே வழி இல்ல. இருந்தாலும் கொஞ்சம் பொறுத்துக்குங்க.. இங்ஙன துளசி அம்மா
வந்திருக்காக. அவங்க ஹஸ்பெண்டு வந்திருக்காக... அவங்க தோழி மாரெல்லாம் வந்திருக்காக...
அவங்கள விசாரிச்சு சொல்றேன் அப்படின்னு சொல்றாக...
எப்படி போறது சௌத் போலுக்கு அப்படின்னு விலா வாரியா எழுதுங்க.. நானும் வாரேன்.
இந்த கிழவன் உபத்திரவம் தாளெல்ல. மார்கழி மாச குளிரில்லே காலைலே குளிச்சுட்டு,கோதை ஆண்டாள் திருப்பாவை பாசுரம்
வல்லி அம்மா எழுதறதை ப்பாரு, படி, பாடு அப்படின்னு சொல்றாரு...
பேசாம நானும் சௌத் போலுக்கு வந்துடறேன்.
மீனாட்சி பாட்டி.
/ கையெழுத்தாகி அமுலுக்கு வந்தது 1840./
அப்புறம் ரீச்சர், அமலுக்கு வந்ததுன்னுதான் சொல்லணும். நாட் அமுல். (ரீச்சரா இருந்தாலும் இதெல்லாம் சரியாப் பிடிப்போமுல்ல)
ஊரு எவ்ளோ அழகா இருக்கு மேல இருந்து பார்க்கவே.. வந்துட்டோம் சுற்றுரதுக்குக் கூடவே.
அதானே கயல்,நீபோகும்போது நானும் வரேம்மா.
ஆனாலும் சுத்தத்துக்கும் அழகுக்கும் போட்டிப்பா.
என்ன அழக்கா இருக்கும். யம்மாடி எம்மாம் பெரிய வண்டி. தெரிஞ்சிருந்தா முன்னால்யே வந்திருப்போமே:)
அருமையன பயணம். அதைவிடஅழகானஎழுத்துநடை. நன்றி துளசி.
கொண்டாந்த லக்கேஜெல்லாம் ரூம்ல போட்டாச்சு. கூடவே ஊர் சுத்தறதுக்காக உங்களுக்காக வெயிட்டிங் :-))
வாங்க எழிலரசி.
வாழ்த்துகளுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சுப்பு ரத்தினம் ஐயா & மீனாட்சி அக்கா.
நல்லா சிரிக்க வச்சீங்க.
அக்கா, நீங்க கொடுத்து வச்சுருக்கீங்க. இப்படி சிரிப்பு மூட்டும் மறுபாதியால் வாழ்க்கையே ரசனைதான்:-)))))
ஆனா ஒன்னு நாமே ஓட்டுறோமுன்னா சின்னச்சின்ன சைஸு விமானம் வேணும்.
ஆளாளுக்கு அவுங்க ஊருக்குதான் முதலில் போகணுமுன்னா வம்புதானே?
இல்லே பெரிய ப்ளேனில் அவுங்கவுங்க அவுங்க ஊருக்கு மட்டும் தானே ஓட்டிக்கிட்டுப்போய் நிப்பாட்டிட்டு போயிட்டா அடுத்த ஆள் பைலட் ஸீட்டைப் பிடிச்சுக்கணுமோ!!!
வாங்க குமார்.
கூடவே வர்றதுக்கு நன்றி.
வாங்க கொத்ஸ்.
இந்த ம் ம் பார்த்தவுடனே சொதப்பிட்டேனோன்னு நினைச்சேன். எல்லாம் அகராதி படிச்ச மாணவனா இருக்கீங்களே:-)
இலக்கணம் வேற சொல்லித்தர்றீங்க புத்தகம் போட்டு!!!!
அமல் அமுலாகிருச்சு:(
போகட்டும் பிழையைக் கண்டுபிடிச்சுச் சொன்னதுக்கு நன்றி. வகுப்பிலே இப்படித்தான் விழிப்புணர்வோடு இருக்கணும்.
ஆமா...இந்த அமல், தமிழ்ச் சொல்லா?
வாங்க ஆடுமாடு.
கூடவே வாங்க. அங்கேயும் ஆடு மாடு இருக்கே!!!!
வாங்க பொற்கொடி,
வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க கீதா.
நீங்க வட துருவம் போறதால்(தான்) நான் தென் துருவம் போறேன்:-)))))
வாங்க கோமதி அரசு.
சரித்திர டீச்சரா இருந்துக்கிட்டு கொஞ்சமாவது சரித்திரம் சொல்லலைன்னா நானே சரித்திரம் ஆகிடமாட்டேனோ????
தொடர்ந்த ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி.
வாங்க ரஞ்ஜனி.
ரூம் எப்படி இருக்குன்னு நாளைக்குத் தெரிஞ்சுரும்:-))))
சாப்பாடு எனக்கு .... ரெண்டாம் பட்சம்தான்! அட்'ஜீ'ஸ்ட் பண்ணால் ஆச்சு!!!!
வாங்க சுரேஷ் குமார்.
வணக்கம்.
முதல் வருகை போல இருக்கே!!!! நன்றி. நன்றி.
நானும் 'தொடருவேன்' நீங்களும் தொடர்ந்து வருகை தரணும்.

வாங்க இராஜராஜேஸ்வரி.
தொடரும் ஆதரவுக்கு நன்றி.
வாங்க ராம்வி.
உங்க எதிர்பார்ப்பை சரியாக நிறைவேற்றணுமே என்ற பொறுப்பு வந்துருச்சுங்க:-)))
வாங்க பழனி கந்தசாமி ஐயா.
உங்க பக்கம் பின்னூட்டவே முடியலையே. தபால்பெட்டியைக்கூடக் காணோம்?
பக்கம் லோட் ஆவதில்லை பல சமயங்களில். எதாவது பிரச்சனையா?
இல்லே எனக்கு மட்டும்தானா?
வாங்க மீனாட்சி அக்கா.
இப்பதான் வாத்துச்சிறகு நிறைச்ச விண்டர் ஜாக்கெட் ஸேலில் இருக்கு.
நீங்க வந்தவுடன் ஆளுக்கு நாலு வாங்கிக்கிட்டு பொடி நீச்சலா போயிடலாம். எந்தப்பக்கம் போகணுமுன்னு சொல்ல அங்கே ஒரு மரம் இருக்கு:-))))
வாங்க கயலு.
மேலே இருந்து பார்க்கும்போது எல்லா ஊர்களுமே ஒருஅழகுதான். இங்கே வீடுகள் ரொம்பக்குறைவு பாருங்க. அதான் இன்னும் அழகாத் தெரியுது:-)
நீங்கெல்லாம் கூட வர்றது எனக்குத் தெம்பா இருக்கு.
வாங்க வல்லி.
கூட்டம் இல்லாததால் குப்பையும் குறைவு. அதான் சுத்தம்:-))))
அதுவுமில்லாம நகரசபை மாய்ஞ்சு மாய்ஞ்சு ஊரைச் சுத்தம் பண்ணிருதுங்களே!
வாங்க அமைதிசாரல்.
இதோ.... நாளைக்கே ஊர் சுத்தக் கிளம்பிடலாம். காத்திருப்புக்கு நன்றி.
Madam,
I used to read your posts regularly. As usual this posting is also good reading with nice photos. I look forward to read your experiences.
G. Subramanian
I used to read your posts regularly. As usual this posting was nice with good photos. I look forward to next post on this tour.
வாங்க சுப்ரமணியன்.
முதல் வருகையோ????
வணக்கம். தொடர்ந்து வருகையை எதிர்பார்க்கின்றேன்.
நன்றி.
தீடீர் பயணமாக மீண்டும் கிராமம் செல்ல வேண்டி இருந்தது. உறவினர் இழப்பு.
இப்போதுதான் பயணத்தில் தொடர முடிந்தது தொடர்கின்றேன்.
வாங்க மாதேவி.
உறவினர் இழப்புக்கு வருந்துகின்றேன்.
மற்றபடி குடும்பம் நலம்தானே?
வருகைக்கு நன்றிப்பா.
Post a Comment