Monday, January 28, 2013

கடலின் அக்கரை போவோமே...கட்டமரத்துலே போவோமே.....

இன்னொருக்கா   செக் லிஸ்ட்டை சரிபார்த்தேன். பகல் சாப்பாட்டுக்கு சாண்ட்விச், பழங்கள்,  பிஸ்கெட்ஸ் ஓக்கே. இன்ஹேலர்ஸ் ரெண்டு எடுத்து  ஒன்னு தோள்பையிலேயும் ஒன்னு என் ஜாக்கெட்  பைக்குள்ளும்  ஆச்சு.  டேஷ் மாத்திரையை சரியா ஏழரைக்கு ரெண்டுஎடுத்து விழுங்கியாச்சு.  பயணத்துக்கு  இன்னும் ரெண்டு மணிநேரம் இருக்கும்போது  போகும் பயணத்தில் டேஷ் வராமல் இருக்க இதை  முழுங்கணுமுன்னு உத்தரவாகி இருக்கு. எதுக்கும் இருக்கட்டுமுன்னு  அந்த ஸ்ட்ரிப்பை   தோள்பையில் போட்டு வச்சுருக்கு.  நல்லவேளை கோபால் , நம்ம வீட்டில் இருந்து கிளம்பும்போதே  என் ஜாக்கெட், கைக்கான  க்ளவுஸ் எல்லாம்  பொட்டியிலே முன் ஜாக்கிரதையா எடுத்து வச்சுருந்தார்.  எதுக்கு வீண் சுமை? கோடைதானே ஒரு லைட் வெயிட் ஜெர்ஸி போதுமுன்னு இருந்தேன். இப்படி அதீத நம்பிக்கை வைக்கலாமோ?   குடை இருக்கா? இருக்கு.  கேமெராவுக்கு ஒரு ஸ்டேண்டர்ட் லென்ஸ் போதும். நாம் எடுக்கும் அழகுக்கு வர்றது வரட்டும்.


நேற்று இரவு ஆரம்பிச்ச பெருமழை இன்னும் விடலை:(


இன்னிக்கு (Rakiura) ரகியூராவுக்குப் போறோம். இது ஸ்டீவர்ட் ஐலண்டுக்கான மவொரி பெயர். இங்கே நியூஸியில் எல்லா நகரங்களுக்கும் மவொரி பெயர் ஒன்னு இருக்கு. மவொரி மொழியும் இந்த நாட்டு அதிகாரபூர்வமான  மூன்று மொழிகளில் ஒன்று. ஆங்கிலம், மவொரி மொழிகள் மட்டுமே முந்தி இருந்தவை. இப்போ 2006 முதல்  New Zealand Sign Language என்றதை செவிப்புலன் குறைந்தவர்களுக்காக சேர்த்துருக்காங்க.

ஒன்பதரைக்கு படகு புறப்படும். அரைமணிக்கு முன்னே செக்கின் செய்ஞ்சுக்கவேணும்.  நேத்து டிக்கெட் புக் செய்யும்போதே  கால்மணிக்கு முன்னால் வர்றோமுன்னு சொல்லி வச்சுருந்தோம்.  இங்கே அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. இண்டர்நேஷனல் ப்ளைட்டுக்கே ஒரு மணி நேரத்துக்கு முன்னால் போனால் போதும்.


Murihiku (இன்வெர்கார்கில்) வில் இருந்து,  இங்கே    Motupohue (ப்ளஃப் )வரணுமுல்லே  Rakiura ( ஸ்டீவர்ட் ஐலேண்ட்) வுக்குப் போகணுமுன்னா?   சொல்லிப்பாருங்க...நாக்கெல்லாம் சுளுக்கிக்கிது இல்லை? அதான் ஆங்கிலப்பெயர்களே போதுமுன்னு எல்லோரும் இருக்கோம்:-)

இலவசக் கார் பார்க்கிங் ஒன்னும் கிடைக்கலை. போயிட்டுப்போகுதுன்னு  ஒரு நாளுக்கு 7 டாலர் கட்டணம் வசூலிக்கும் கார்பார்க்கில் (இது படக்குத்துறைக்கு எதிரில் இருக்கு) வண்டியை விட்டுட்டு  படகுத்துறை அலுவலகத்தில் நுழைஞ்சு பயணச்சீட்டைக் காமிச்சு, போர்டிங் பாஸ் வாங்கிக்கிட்டோம். ஒரு ஆளுக்கு ரெண்டு பெட்டிகள்வரைதான் அனுமதி. மேற்கொண்டு இருந்தால் கூடுதல் கட்டணம் உண்டு.  Bicycle, Kayak,Dinghy,motorbike விருப்பப்பட்டால் தனிக்கட்டணம் கட்டிக் கொண்டு போகலாம். இதோ இப்பப்போயிட்டு மாலை திரும்பிவரப்போறோம். இதெல்லாம் நமக்கெதுக்கு?

 ஒன்பதரைக்குப் படகு  டாண்ன்னு கிளம்பிருச்சு. சுத்தும் முத்தும் பார்த்தால்  அந்நிய(நாட்டு) முகங்கள். பலர் அருமையான  ட்ரெக்கிங் ஷூஸ் போட்டுக்கிட்டு இருக்காங்க.  காடுமலையேறும் முடிவோடுதான் இருக்காங்க போல.

23 மீட்டர் நீளமுள்ள கட்டமரன். பயணிகளுக்கு 100 இருக்கைகள். கேப்டன் தவிர  மூணு உதவியாளர்கள். பின்னால் உள்ள டெக்கில் லக்கேஜ் அடுக்கும் இடம், டாய்லெட், நின்னு வேடிக்கை பார்க்க  கம்பித்தடுப்புகள். கண் போகும் இடத்தில் எல்லாம் ஸிக் பேக் வச்சுருக்காங்க. நம்மைப்போல் டேஷ் கேஸ்கள் ஏராளம் இருக்கு!

படகினுள்ளே காஃபி, டீ போட்டுக் குடிக்க வசதி. எதாவது சாப்பிடணுமுன்னா  ஸ்நாக்ஸ் விற்பனைக்கு வச்சுருக்காங்க.பிக்னிக் லஞ்சு வேணுமுன்னா டிக்கெட் புக் பண்ணும்போதே சொல்லிட்டால் அதுக்கு தனிக் காசு வாங்கிக்கிட்டு ஏற்பாடு பண்ணி, படகு விட்டு இறங்கும்போது கையில் கொடுத்துருவாங்க.

பாதுகாப்பு வசதிகள். லைஃப் ஜாக்கெட் போட்டுக்கும் முறைன்னு (விமானத்தில்  டெமோ கொடுப்பதுபோல்) இங்கேயும்  காமிச்சார்  ஒரு ஊழியர். நல்லா வேடிக்கை பார்க்கணுமுன்னு முன் வரிசையில் போய் உட்கார்ந்திருந்தோம்.  ஆனா பெஸ்ட் ஸீட் கேப்டனோடதுதான்.

முன்னால் வரிசையில் ரொம்ப தூக்கித் தூக்கிப்போடும். அதனால் கொஞ்சம் பின்வரிசைகளில் பரவலா உக்காருங்கன்னார் கேப்டன்.  100 பேர் போகும் படகில் எண்ணிப்பார்த்தால் இப்போ வெறும் 13 பேர்தான்.  அடிக்கும் மழையில்  வெளிக்காட்சிகள் ஒன்னுமே கண்ணுக்குப் படலை.  போதாக்குறைக்கு இன்னிக்குக் கடல் கொந்தளிப்பு அதிகம். பெரிய அலைகள் எழுந்து அப்படியே கண்ணாடியில் வந்து அடிக்குது. ரொம்ப நல்லநாளாப் பார்த்து வந்துருக்கோமேன்னு இருக்கு:(அடிக்கும் மழையும்  ராட்சஸ அலைகளுமா படகை உண்டு இல்லைன்னு பண்ணுது. வானத்துக்கும் தண்ணிக்குமா போய் வர்றோம்.  விமானத்துலே டர்புலன்ஸ் போல தண்ணீரில் தள்ளாட்டம். ஒரு விநாடி எழுந்து நின்னு  ஒரு படம் எடுக்க முடியலை.  இதுலே டேஷைப்பற்றிய பயம் வேறு வயித்தைக் கலக்குது!

சரியா ஒரு மணி நேரப்பயணம். முப்பத்தியஞ்சு  கிலோமீட்டர். ஹாஃப் மூன் பே (Half Moon Bay) ஓபான்  (Oban) படகுத்துறையில் வந்திறங்கினோம்.  வெளியேஒரு அம்பது மீட்டர் தூரத்தில் தகவல் நிலையம். வழிகாட்டி நம்மை நடத்திக் கூட்டிப்போய் தீவைச்சுற்றிக் காமிக்கும் டூர் ஒன்னு இருக்கு.  ரெண்டு மணி நேரம்.  51 டாலர் ஒரு நபருக்கு. குறைஞ்சபட்சம் ரெண்டு பேர் இருந்தால்தான் டூர் கொண்டு போவாங்க.  ரெண்டு பேர் இருக்கோம். பிரச்சனையும் ரெண்டேதான்.  அடாத மழையும், பொருத்தமான காலணி இல்லாமையும்.இந்தத் தீவுக்கு நடக்கணுமுன்னே வெளிநாட்டு மக்கள்ஸ் வர்றாங்க.சின்னதா பத்து நிமிட வாக் முதல்  5 நாட்கள்  நடை வரை உண்டு.  அஞ்சு நாள்  நாம் நடக்க கட்டணம் 1995  டாலர் மட்டுமே!

அக்கம்பக்கமா சிலபல தீவுகள் இருக்கு. மட்டன்பர்ட் தீவு   உல்வா தீவு(Ulva Island) Port William, Horseshoe Bay இங்கெல்லாம் போய் பார்த்துவர   Water Taxi கூட இருக்கு. இந்தத் தீவுகளிலு குறிப்பாக தேசிய பூங்காவின்  அக்கரை ஓரங்களிலும்  அஞ்சு வகை பெங்குவின்கள், மூணுவகை ஆல்பட்ராஸ் பறவை இனங்கள், அண்டார்க்டிக் பறவைகள், கிவி பறவைகள்  இப்படி ஏராளமானவைகளைப் பார்க்கலாம். டால்ஃபின்ஸ், ஸீ லயன்ஸ் இப்படி  சிலஇனங்களும் உண்டு.

இந்த ஸ்டீவர்ட்  தீவின் பரப்பளவு  மொத்தம்  1570 கிமீ. இதுலே 85 %  மலையும் காடுகளுமே. ரகியூரா தேசிய பூங்கா.  கடலையொட்டி இருக்கும் சின்ன நிலப்பரப்பில்  சின்னச் சின்ன கிராமங்கள்.பெரிய ஊர் (டவுன்)என்று சொன்னால் இந்த ஓபான் (Oban) தான்.  மக்கள் தொகை இந்த முழுத்தீவுக்கும் சேர்த்து  வெறும் (400) மட்டுமே!

இங்கே அதிகம் விலை உயர்ந்த  ஒன்னு மின்சாரம்! நியூஸியின் மற்ற பகுதிகளைவிட நாலுமடங்கு அதிகம். எல்லாம் டீஸல் பவர் என்பதுதான் காரணம். மற்றபடி ஒரு சூப்பர் மார்கெட், போஸ்ட் ஆஃபீஸ்,  நாலைஞ்சு  சாப்பாட்டுக்கடைகள்,  ஒரு ம்யூஸியம்,  வார் மேமோரியல் , ரெண்டு சர்ச்சுகள் , நூலகம், சில ஹொட்டேல்கள், பேக் பேக்கர்ஸ்க்கு  நாலைஞ்சு லாட்ஜ்கள் இப்படி இருக்கு.  செல்ஃபோன் சர்வீஸ் பல சமயங்களில் வேலை செய்யாது.

டாக்  அலுவலகம்(Doc.  Department ofConservation)  பக்கத்து தெருவில்(!) இருக்குன்னு அங்கே போனோம். எல்லாம் மழையில் முக்கால்வாசி நனைஞ்சுக்கிட்டேதான். சின்ன குடையில் ரெண்டு குண்டூஸ்க்கு இடமில்லை:-)


மழைக்கு இதமா  கதகதன்னு இருக்கு இடம். ஹீட்டர்கள் ஓடிக்கிட்டே இருக்கு. உள்ளே நல்ல கூட்டம்.  காடுசுற்றிகள் அடைமழையில் காடுகளுக்குள் போக முடியாமல் இங்கே வந்து காலநிலை மற்ற விவரங்களுக்காகவும் கொஞ்சம் ஓய்வெடுக்கவுமா காத்து நிக்கிறாங்க. ட்ராக் கண்டிஷன்ஸ், அடுத்த சில நாட்களின் காலநிலை எல்லாம் அப்பப்ப எழுதிப்போட்டுக்கிட்டே இருக்காங்க.


தேசியப்பூங்காவுக்குள் நுழைய அனுமதி இலவசம் என்றாலும் முதலில் டாக் அலுவலக்ம் போய் நம்ம பெயரைப்பதிஞ்சு கொண்டு எதற்காக வந்துருக்கோம். எத்தனை நாளில் காட்டுக்குள் இருக்க உத்தேசம், அங்கிருந்து வெளிவரும்நாள் எப்போது என்றெல்லாம்    இன்டென்ஷன் ஃபார்மில் எழுதிக்கொடுக்கணும். அப்பதான் குறிப்பிட்ட நாளில் நாம் திரும்பி வரலைன்னா தேடிக்கண்டுபிடிக்க ஆள் அனுப்புவாங்க. .

இங்கே ஊர்வன (அதாங்க  பெருசு, பெயர் சொல்லாதது)  சிங்கம் புலி கரடின்னு  ஒன்னும் இல்லாததால் காட்டுக்குள்ளே பயமில்லாமல் போகலாம். மலைகளும் அடர்ந்த காடுகளுமா இருக்கு.  Mount Anglem மலைச்சிகரத்துக்கு  979  மீட்டர் உயரம் ஏறிப்போகணும். இதுதான் அதிக உயரமான சிகரம் இந்தத் தீவில்.

அந்தக்கால காடோடிகள் மலைஏறிகள் கொண்டு போன பொருட்கள். அவுங்க வாழ்க்கைமுறை, இருப்பிடம் இப்படி சில அங்கே டிஸ்ப்ளே வச்சுருக்கு. சாமான்களைப்பார்த்தால்...சிம்பிளான வாழ்க்கைக்கு இதுவே போதுமுன்னு தோணிப்போகுது. மவொரிகள் சமைக்கும் முறை, உணவுகளை ரெண்டு மூணு வருசம் கெடாம எப்படிப் பாதுகாத்து வச்சாங்க என்றெல்லாம் பார்க்கும்போது வியப்புதான் மிச்சம்!!!


மழை நிக்கட்டுமேன்னு கொஞ்ச நேரம் உக்கார்ந்திருந்தால்.... அந்த இளம்சூட்டுக்கு அப்படியே கண்ணைச் சுத்திக்கிட்டு வருது தூக்கம்.  வேலைக்காகாதுன்னு கிளம்பி வெளியே வந்தோம்.  மழை விடாமல் பேய்ஞ்சால் பூமிக்கடியில் இருக்கும் புழுப்பூச்சிகள் வெளியில் வந்துருமாம். வாத்துகளுக்கு நல்ல வேட்டை.

கடலை ஒட்டிப்போகும் தெருவில் நுழைஞ்சு நடக்கும்போது , ம்யூஸியம் போகும் வழின்னு போட்ட அம்புக்குறிக்குள் பாய்ந்தோம். அடிக்கும் மழையில் கெமெராவைக் காப்பாற்றக் கஷ்டப்பட்டுத்தான் போனேன்.

தொடரும்.......:-)

PINகுறிப்பு:  போனவருசம் (சரியா ஒன்னரை வருசத்துக்கு முன்) இந்தப்பதிவை வெளியிட்டபோது ப்ளொக்கர் படுத்திய பாடால் கன்னாபின்னா என்றானதை  இன்று ஜூலை 1, 2014 சரி செய்து மீண்டும் வெளியிட்டுள்ளேன்.

17 comments:

said...

oops.... poRuththaruLga.

said...

பொருத்தமான காலணி போட்டுக்கிட்டா அடாத மழையிலும் விடாது ஊர் சுத்தலாம் :-)

said...

எழுத்துப் பிழைகளும் நிறைய இருக்கே துள்சிக்கா.. என்னாச்சு????

said...

வந்தேன், படித்தேன், ரசித்தேன்

said...

வாங்க அமைதிச்சாரல்.

இன்றைக்கு 'ப்ளொக்கர் படுத்தல்' என்று என் ஜென்ம ராசிக்குப் பலன் போட்டுருக்கு.

எடிட் பண்ணக்கூட உள்ளே நுழைய விடலைப்பா:(

யூ ஹேவ் லாக்டு அவுட் ஃப்ரம் அனதர் லொகேஷன்னு கூசாமச் சொல்லுது.

said...

சாதனைப் பயணம் தான் ...

said...

வாங்க புதுகைத் தென்றல்.

தேன் தேன் தேன்!!!!

நன்றீஸ்:-)))

said...

அருமை. சில பாராக்கள் இரண்டு முறை வந்திருக்கே டீச்சர்....

இன்னும் சரி செய்ய முடியலையா?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சிலபத்திகளை விழுங்கிட்டு சில பத்திகளைத் தானாவே ரெண்டு முணுமுறை ரிப்பீட்டுது ப்ளொக் ஸ்பாட்.

சொந்த சாஹித்யம்:(

சரிபண்ணிட்டு அப்டேட் பண்ணினாலும் அப்டேட் ஆவதில்லை.

ரெண்டு நாளஐதோடு மல்லுக்கட்டிக்கிட்டு நிக்கறேன்.

வாட் டு டூ??????

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

பயணம் சாதனையோ என்னவோ இந்தைடுகை சாதனை பண்ணிடும்போல இருக்கே!!!!

படத்துடன் ஒன்னு படங்கள் இல்லாமல் ஒன்னு.

ரெண்டுலேயும் வரிகளை ஒரு பெரிய பாட்டிலில் போட்டுக் குலுக்கிப்போட்ட மாதிரி சொற்கள் எல்லாம் ஜம்பிளாகிக்கிடக்கு!!!!

படிச்சுப் புரிஞ்சுக்கிட்ட கண்மணிகளுக்கு போனஸ்மார்க் அம்பது கொடுக்கலாம்:-))))

said...

You have problems too?
en blog enakke open aakalai. blogspot not respomding message.
teacher pathiviliye thakararu:)
appa naanga entha moolai:)
Inspite of everything nallaathaan irukku .nallaave irukkum.

said...

அடாது மழை பெய்தாலும் விடாது பயணம்.படங்கள் இல்லாமல் உங்க பதிவை பார்க்க கஷ்டமாக இருக்கு மேடம்.

said...

அடாத மழையிலும் ஊர் சுற்ற எங்களையும் அழைச்சிட்டு போறீங்க டீச்சர்...நன்றி.

said...

வாங்க வல்லி.

டீச்சருன்னா...சனி பிடிக்காதா!!!!!

said...

வாங்க ரமாரவி.

எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு.

வலை ஏத்துன 15 படங்களை காக்கா தூக்கிட்டுப் போயிருச்சே:(

வாட் டு டூ?????

said...

வாங்க ரோஷ்ணியமா.

மழைக்கோட்டு, ஒரு குடை எடுத்துக்கிட்டீங்கதானே?

இன்னும் ரெண்டுமூணு நாளைக்கு மழையில்தான் நடக்கப்போறோம்.சரியா?

said...

உங்க மழையில் நனைந்து எங்க வெய்யிலில் காய்ந்து வருகின்றோம்.:)