வாங்க ராமலக்ஷ்மி. என்னாச்சு..... நான் வழக்கம்போல வேர்டு பேடில் இடுகையை எழுதி வச்சேன். வச்சேனா ..... அப்புறம் அதுக்கு 'தேவை'யான படங்களை தேர்ந்தெடுத்தேன். எடுத்தேனா..... டேஷ் போர்டு திறந்து இடுகையை காப்பி அண்ட் பேஸ்ட் செஞ்சேன். செஞ்சேனா..... படங்களை அப்லோடு செஞ்சேன்.... அப்பத்தான் தகராறு ஆரம்பிச்சது. ஃபெயிலியர் ஃபெய்லியர்ன்னு சொல்லி அதுலே ஒரு பத்தைத் தள்ளிருச்சு. தள்ளிருச்சா...... மீதி இருந்ததை இடுகையில் சேர்த்து ஸேவ் செஞ்சால்... நீ வேறொரு இடத்தில் லாக் அவுட் செஞ்சுப்புட்டே.... திரும்பி லாகின் பண்ணுன்னு சொல்லுச்சு. எங்கே வேறொரு இடம் போனேன்? இங்கென தானே குத்துக்கல்லாட்டம் குந்தி இருக்கேன்? சரின்னு அது காமிச்ச இடத்தில் க்ளிக் பண்ணினால்.... திரும்ப டேஷ் போர்டு வாசலில் கொனாந்து விட்டுருச்சு. விடாமுயற்சி செஞ்சப்போ....ஒரு சமயம் திருவினை செய்யறேன்னு செஞ்சு எனக்கு செய்வினை வச்சுருச்சுப்பா......... பாராவை எல்லாம் கலைச்சுபோட்டு அதிஷ்டத்துக்கு பாரா அமைச்சு படங்களை எல்லாம் டபுள் டபுள் பாரா எல்லாம் ட்ரிபிள் ட்ரிபிள்ன்னு ட்ரபுள் கொடுத்துருச்சுப்பா. எடிட் பண்ணிக்கலாமுன்னு உள்ளே கால் வைக்க விடலை. என்னாச்சு.... ..... நான் வழக்கம்போல வேர்டு பேடில் இடுகையை எழுதி வச்சேன். வச்சேனா .....
ந்யூ ப்ளாகர் வந்த பிறகும் ஓல்ட் பிளாகரை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை வழங்கியிருந்த வரை எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை எனக்கு. நோட் பக்கமே போகத் தேவையின்றி அதன் html ஆப்ஷனிலேயே அழகாய் பதிவை ரெடி செய்திட முடிந்தது. பழைய வெர்ஷனை ஒருநாள் தூக்கி விட்டார்கள். புதுசில் வரி பிரிப்பு, பத்தி பிரிப்பு எல்லாவற்றுக்கும் அவற்றோடு நாமும் தாண்டவம் ஆடிதான் ஒருவழிக்குக் கொண்டு வர வேண்டியிருக்கிறது:(!
13 comments:
எங்க ஊட்டு அம்மாவிடவா படுத்தமுடியும் ?
பொறுத்துப்போங்க...
பொறுத்தார் பூமி ஆள்வார்.
சுப்பு தாத்தா.
ஏன்? என்னாச்சு?
தலைப்பு இல்லா விட்டாலும், இந்தப் பதிவு சரியாய் வந்திருக்கே.
எப்பவும் ஒரே மாதிரி இருந்திட்டா, கடவுளை மறந்திருவோமில்ல, அதுக்குத்தான் அப்பப்போ சோதனை?
துளசி என் பழைய பதிவு ஒன்றில் பின்னூட்டங்க்காள் இருக்கின்றன பதிவைக் காணொம்.
நாச்சியார் திறக்கிறாள். நகர மாட்டேன் என்கிறாள்:)
வாங்க சுப்புரத்தினம் ஐயா.
எங்கூர் பூமிக்கு அவ்ளோ பொறுமை இல்லீங்களே:(
செப்டம்பர் 2010க்கு ஆட ஆரம்பிச்ச பூமித்தாய் இன்னும் ஆடிக்கிட்டேதான் இருக்காள். இந்த நிமிசம்வரை 13,165.
அப்ப நானும் கொஞ்சமாவது ஆடினாத்தானே நல்லா இருக்கும் இல்லையா?
உங்க யூட்யூப் பொறுமையை கோபாலுக்கும் காமிச்சேன். ரொம்பப் பிடிச்சுப் போச்சாம்:-))))
என்ன ஆச்சு?? ஹாஹா, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையமா? :))))))))
வாங்க பழனி கந்தசாமி ஐயா.
கடவுளை எங்கே மறந்தோம்? அப்படி மறக்க விட்டுருவாரா அவர்? என்னமோ போங்க..... பில்லி சூனியம் வச்சுட்டாங்களோ ப்ளொக்கருக்குன்னு இருக்கு. பின்னூட்டத்துக்கு பதில்போடக்கூட விடமாட்டேங்குது பாருங்க:-)
வாங்க வல்லி.
ப்ளொக்கருக்கு சனிதிசை நடக்குதோ என்னவோ!!!!!
வாங்க ராமலக்ஷ்மி.
என்னாச்சு..... நான் வழக்கம்போல வேர்டு பேடில் இடுகையை எழுதி வச்சேன். வச்சேனா .....
அப்புறம் அதுக்கு 'தேவை'யான படங்களை தேர்ந்தெடுத்தேன். எடுத்தேனா.....
டேஷ் போர்டு திறந்து இடுகையை காப்பி அண்ட் பேஸ்ட் செஞ்சேன். செஞ்சேனா.....
படங்களை அப்லோடு செஞ்சேன்....
அப்பத்தான் தகராறு ஆரம்பிச்சது. ஃபெயிலியர் ஃபெய்லியர்ன்னு சொல்லி அதுலே ஒரு பத்தைத் தள்ளிருச்சு.
தள்ளிருச்சா...... மீதி இருந்ததை இடுகையில் சேர்த்து ஸேவ் செஞ்சால்...
நீ வேறொரு இடத்தில் லாக் அவுட் செஞ்சுப்புட்டே.... திரும்பி லாகின் பண்ணுன்னு சொல்லுச்சு. எங்கே வேறொரு இடம் போனேன்? இங்கென தானே குத்துக்கல்லாட்டம் குந்தி இருக்கேன்?
சரின்னு அது காமிச்ச இடத்தில் க்ளிக் பண்ணினால்.... திரும்ப டேஷ் போர்டு வாசலில் கொனாந்து விட்டுருச்சு.
விடாமுயற்சி செஞ்சப்போ....ஒரு சமயம் திருவினை செய்யறேன்னு செஞ்சு எனக்கு செய்வினை வச்சுருச்சுப்பா.........
பாராவை எல்லாம் கலைச்சுபோட்டு அதிஷ்டத்துக்கு பாரா அமைச்சு படங்களை எல்லாம் டபுள் டபுள் பாரா எல்லாம் ட்ரிபிள் ட்ரிபிள்ன்னு ட்ரபுள் கொடுத்துருச்சுப்பா.
எடிட் பண்ணிக்கலாமுன்னு உள்ளே கால் வைக்க விடலை.
என்னாச்சு.... ..... நான் வழக்கம்போல வேர்டு பேடில் இடுகையை எழுதி வச்சேன். வச்சேனா .....
hi, varave illai! :)))))
நடுவுல கொஞ்சம் இடுகையைக் காணோம். ஒரு வேளை ப்ளாகரோட முட்டை ஆம்லேட்டுல அடிபட்டிருக்குமோ :-)))))))
ந்யூ ப்ளாகர் வந்த பிறகும் ஓல்ட் பிளாகரை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை வழங்கியிருந்த வரை எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை எனக்கு. நோட் பக்கமே போகத் தேவையின்றி அதன் html ஆப்ஷனிலேயே அழகாய் பதிவை ரெடி செய்திட முடிந்தது. பழைய வெர்ஷனை ஒருநாள் தூக்கி விட்டார்கள். புதுசில் வரி பிரிப்பு, பத்தி பிரிப்பு எல்லாவற்றுக்கும் அவற்றோடு நாமும் தாண்டவம் ஆடிதான் ஒருவழிக்குக் கொண்டு வர வேண்டியிருக்கிறது:(!
போனஸ் மீண்டும் வந்துவிட்டதே ஹா. ... ஹா.
Post a Comment