Wednesday, January 09, 2013

பேட்மேனுடன் ஒரு சந்திப்பு.


அவனை சின்னக்குழந்தையா  போட்டோவில்தான் பார்த்திருந்தேன்.  அதே நினைப்புடன் இவனை சந்திக்கப்போனபோது........... அடேயப்பா.... என்னமா வளர்ந்துட்டான்!!!!! இவனா இவனான்னு  கேட்டு திகைச்சு நின்னதைப்பார்த்து  சுநிதாவுக்கு சிரிப்பு தாங்கலை:-)


க்வெஸ்ட்டில்  நுழைஞ்சதும் வரவேற்புப் பெண்மணி  செக்கின் டைம் பகல் 2 மணிக்குன்னதும்  ஐயோன்னு கூவிட்டேன்(போல). ஆனால் உங்களுக்கு  ஒதுக்கப்பட்ட அறையில் நேற்று யாரும் கெஸ்ட் இல்லாததால் தயாராகவே இருக்குன்னு சாவியைக் கொடுத்து மனசில் பால் வார்த்தாங்க.  வேலை நேரம் முடிஞ்சபிறகு அபார்ட்மெண்ட் உள்ளே வர தனியா ஒரு  பார்கோடு போட்ட அட்டைத்துண்டு வேற.  கெஸ்ட்டுக்கான க்வெஸ்ட்டு பார்க்கிங், கட்டிடத்தின்  வலப்புறம் தனியா இருக்கு. அதுக்கு ஒரு மாதிரி பின் தெரு வழியாச் சுத்திக்கிட்டுப் போகணுமாம்.

கார் பார்க்  கண்ணை நோவடிக்காமல் இருக்க தெருப்பார்த்த அலங்காரம்.


முதல் மாடியில் அறை.  என்ன வ்யூன்னு ஜன்னல் திரைச்சீலையைத் தள்ளினதும்  கட்டிடத்தின் பின்பகுதியின்  மெட்டல்கூரை கண்ணில்பட்டது:(  அறை என்னமோ நல்ல வசதியாத்தான் இருக்கு.  மைக்ரோவேவ்,  டோஸ்டர், எலெக்ட்ரிக் கெட்டில்,  சின்னதா ஒரு ஃப்ரிட்ஜ், சின்ன பாட்டில் பால், காஃபி, டீ போட்டுக்க பொடிகள், சக்கரை,  ஒரு குக்கீ, சமைக்க எலெக்ட்ரிக் ஃப்ரைபேன், கொஞ்சம் பாத்திரங்கள்,  வெவ்வேற  பயனுக்கு நாலைஞ்சு கத்திகள், கட்லெரி, தட்டு  டம்ப்ளர்ஸ்,  கப்புகள்,  கிண்ணங்கள் இப்படிச் சாமான்கள். ஸிங், அதுக்கடியில் உள்ள கப்போர்டில்  சுத்தம் செய்ய க்ளீனிங் ஸ்டஃப்ஸ், கிச்சன் டவல்,  ஃபுட் ராப், காய்கறி வெட்டிக்க பலகை இப்படி சகலமும் அடங்கிய கிச்சனெட்.   டிவி, டிவிடி ப்ளேயர் இப்படி பொழுதுபோக்கும் சாதனங்கள். நாட் பேட்.  அஞ்சு நட்சத்திர  அந்தஸ்த்துன்னு  சொல்லிக்கறாங்க.


எனக்கு என்ன ஆச்சரியமுன்னா  இத்துனூண்டு கப்போர்டில்  சமைக்கத் தேவையான சகலமும் அடங்கிரும்போது  நம்ம வீட்டு 16 சதுர மீட்டர் கிச்சன் ஏன் பத்தமாட்டேங்குது?


தொலைபேசி கூப்பிட்டது. கீழே வரவேற்பில் இருந்துதான். எல்லாம் வசதியா இருக்கான்னு கேட்டாங்க. எல்லாம் இருக்கு ஒன்னு மட்டும் இல்லைன்னேன்.  வியூ !! தெருப்பக்கம்  இருக்கும் அறை வேணுமுன்னா இருக்கு. பகல் 2 மணிக்கு மாத்தித் தரவா?  தெருவில் போக்குவரத்துச் சத்தம் கொஞ்சம் இருக்கும் பரவாயில்லையான்னதும்   வேணவே வேணாம். அமைதியான  அறைதான் வேணுமுன்னுட்டார் கோபால்.  நான் கூடவே இருக்கேன்  தொணப்ப என்பதை  மறந்துட்டார் போல:-)


இந்தப்பக்கங்களில் பாருங்க..... எந்த ஊருக்குப் போனாலும் அதைப்பற்றிய விவரங்கள், அக்கம்பக்கம் பார்க்க வேண்டிய இடங்கள், ஊரோட  வரைபடம், சரித்திர முக்கியத்வம் உள்ள இடங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள்  இப்படிச் சுற்றுலாப்பயணிகளுக்கான தகவல்கள் கொட்டிக்கிடக்கு. இன்ஃபர்மெஷன் இஸ் வெல்த் என்பதை நல்லாவே புரிஞ்சு வச்சுருக்காங்க. எல்லா மோட்டல்/ஹொட்டேல்களிலும்  முக்கிய சாலையின் நடைபாதைகளிலும், தகவல் மையங்களிலும்   வண்ணப்படங்களுடன் அச்சுப்போட்டு  வச்சுடறாங்க.  நம்ம இந்தியாவில் இதெல்லாம்  கொஞ்சம்  காப்பியடிக்கக் கூடாதான்ற ஏக்கம்தான்.


டீ தெருவும் டே தெருவும் நல்ல அலங்காரங்களுடன் நடந்து முடிஞ்ச கிறிஸ்மஸ் விழாவை அடுத்துப் புதுவருசத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கு. பேங்க் ஆஃப் நியூ சவுத்வேல்ஸ் கட்டிடம்  நமக்கு எதிர்ப்புற மூலையில். பேங்க் கார்னரின் விளக்கம் புரிஞ்சது. 1856 ஆண்டு முதல்  வங்கி வேலை செஞ்சுக்கிட்டு இருக்கு.

  ரெண்டு தெருக்களும் சேரும் முனையில்  ஒரு  ரவுண்ட்  அபௌட்டும் நடுவில்  மணிக்கூண்டும் அதன்மேல் நிற்கும் வீரரும்.  ட்ரூப்பர்ஸ் மெமோரியல். சவுத் ஆஃப்ரிகன் போயெர் வார் நடந்தபோது அதில் கலந்து  சண்டை போட்டு வீரமரணம் அடைந்தவர்களின் நினைவுக்காகவும், உயிருடன் திரும்பி வந்த வீரர்களை மரியாதை செய்யவும் வச்ச  28 அடி உயர நினைவுச்சின்னம்.

ரெண்டு முறை இந்த போயெர் வார் நடந்துச்சுன்னாலும் (1880 - 1881  &  1899 - 1902 ) ரெண்டாவது போரில்தான் பிரிட்டிஷ் காலனி நாடுகள் கலந்து சண்டைக்குப் போனாங்க.

1903 வது ஆண்டு நினைவுச் சின்னம் வேணும் என்ற கோரிக்கையை  போரில் மரித்தவர்களின் குடும்பம் வச்சது.  செஞ்சுருவொம்னு  ஏற்பாடுகள் நடந்துச்சு.  வேலை முடிய வருசம் அஞ்சாச்சு. ஜூன் மாசம் 3 ஆம் தேதி  1908 இல்  இங்கே கால்பந்து விளையாட்டுப்போட்டியில்  பங்கெடுக்க வந்த ப்ரிட்டிஷ் ஃபுட்பால் டீம் முன்னிலையில் ஊர்மக்கள் அனைவரும் கூடி  திறப்புவிழாவை நடத்துனாங்க. மதர்லேண்டு பிரதிநிதிகள்ன்னு அந்த டீமுக்கு ஏகப்பட்ட மரியாதை!

ஆரம்பத்தில்  இங்கே கடிகாரம் இல்லை. குடிதண்ணீர்  நீரூற்று அமைப்பு மட்டும் வச்சுருந்தாங்க. மக்கள் தண்ணீர் குடிக்கத் தலை குனியும்போது போரைப்பற்றிய விவரங்கள், இறந்தவர்களின் பெயர்கள் எல்லாம்  அவர்கள் கண் பார்வையில் படும்படி ஒரு ஏற்பாடு.   பட்ஜெட் 800 பவுண்ட். ஆனால்  எந்தக்காலத்தில்தான் பட்ஜெட்படி வேலை நடக்குது? கடைசியில் 2000 பவுண்ட் ஆனது.  இதில்  வீரர் சிலையை தூக்கி வைக்கும்போது தவறி விழுந்து சிலை உடைஞ்சு போய் மீண்டும் ஒரு  புதிய சிலையை வடிக்கும்படி ஆனதும் சேர்த்தி.  பலவருசங்கள் கழிச்சு (1986)தான் கடிகாரம் பொருத்துனாங்க.


இது இல்லாம இன்னொரு வார் மெமோரியலும் இருக்கு இங்கே. இது உலகப்போர்களில் கலந்து வீரமரணம் எய்தியவர்களுக்காக.  இந்தப் பக்கங்களில்  சின்ன ஊரோ பெரிய ஊரோ  அந்த ஊர் மக்களில்  ஒரே ஒருவர் போரில் வீரமரணம் அடைஞ்சு இருந்தால் கூட  ஒரு போர் நினைவுச் சின்னம்  சின்ன அளவிலாவது நிறுவி, பின் வரும் தலைமுறைக்கு  அவர்கள் தியாகத்தை நினைவுபடுத்தறாங்க. இது பாராட்டப்பட வேண்டிய அம்சம்.


நம்ம தங்குமிடத்தையொட்டி  திறந்த வெளியில் ஒரு சின்னச்சதுக்கம் . இதுக்கு  Wachner Place என்று பெயர்.  நகர சபையைச் சேர்ந்தது.  சதுக்கத்தின் ஒரு பக்கம் பஸ்  நிலையம்.  பொதுமக்களுக்கான ஓய்வறைகள், குளிக்கும் வசதியுடன்  இதுக்குள்ளே அமைச்சுருக்காங்க.  சதுக்கத்தில்  ஒரு மணிக்கூண்டு  இருக்கு. கடிகாரத்தின் பாகங்கள் எல்லாம்  நாம் பார்க்கும்படி கண்ணாடி அமைப்பின் உள்ளே. ஒவ்வொரு கால் மணிக்கும் டிங்டாங்  ஒலி எழுப்புது இது.  மணி கூண்டுக்கு நேரெதிரா போகும் தெரு (ESK Street)  சதுக்கத்துக்குள் நுழையுமிடத்தில்  நாலு பக்கமும் பிரமாண்டமான தூண்கள் வேற!


தோழி வீடு இருக்கும் விண்ட்டனுக்கு  டீதெருவில்  நேராப்போய்க்கிட்டே இருக்கணும். அரைமணி ஆனதும் ஊர் வந்துரும். வரைபடம் கையில் இருந்தால் தொலைஞ்சு போக சான்ஸே இல்லை:-) தோழியும் கணவரும் எதிர்பார்த்துக் காத்துருந்தாங்க.  அஞ்சு மாசமாச்சு அவுங்க இங்கே வந்து. இந்த ஊர்  ரொம்பச் சின்னதுதான். மக்கள் தொகை 2000. எல்லாரையும் எல்லாருக்கும் தெரியும்:-)   தெருவில் அங்கங்கே  க்ரெஸெண்ட்  ( பிறை நிலா?) அமைப்பில் உள்தெருக்கள். எல்லாமே ஒருவழிப்பாதை.  அதனால் எல்லார் வீட்டுக்கு முன்னாலும்  தெருவைத்தாண்டுனா பொதுவா ஒரு அரைவட்டத் தோட்டம். ஏதோ பார்க்குலே இருக்கும் உணர்வு. இந்த ஊருக்குக்கூட  சரித்திர பாரம்பரியம்  விவரங்கள் அடங்கிய  ஒரு  ப்ரோஷர் போட்டு வச்சுருக்காங்கன்னா பாருங்க!  ஹெரிட்டேஜ் ட்ரெய்ல்.




தோழியின் மகள் குடும்பமும் வந்து பகல் சாப்பாட்டில் எங்களோடு கலந்துக்கிட்டாங்க. டிஸ்ஸர்ட்க்கு  ச்சீஸ் கேக் . அட்டகாசம்!  இன்னும் நாலு நாளில்  ரெண்டாவது  பொறந்தநாள் கொண்டாடப்போகும் குழந்தை நிஷா எங்களோடு ஒட்டிக்கிச்சு.  நாய்ப்படங்கள் உள்ள புத்தகம் காமிச்சு நாயோட வகைகள் எல்லாம் சொல்றாள்.  அப்பாவும் அம்மாவும் வெட்ஸ்.பின்னே ஏன் சொல்லாது:-))))

 பக்கத்துலே வெட்னரி  க்ளினிக் ஒன்னு,  இன்னும் மூணு வெட்னரி ஃப்ரெண்ட்ஸுடன் சேர்ந்து சொந்தமா நடத்துறாங்க. ஒரே பேட்ச்சில் படிச்சவுங்க.  தோழியின் மகள் மாடு ஸ்பெஷலிஸ்ட்.  இப்போ ஆடுகளின் பிரசவக்காலம் முடிஞ்சு மாடுகளின் பிரசவம் ஆரம்பிக்குதாம்.  இது சம்பந்தமான வேலைக்கு காலை 3 மணிக்குப் பண்ணைகளுக்குப்போய்  பசுக்களுக்கு ஸ்கேன் எடுக்கணுமாம். நாலரைக்குள்ளே முடிஞ்சால்தான் அஞ்சு மணிக்கு பசுக்கள் பால் கறக்க போக சரியா இருக்குமாம்.  அஞ்சரைக்கு பால் வண்டி (டேங்கர்) வந்துருமே.  'ஆ..'ன்னு பிளந்த வாயோடு எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு  இருந்தேன்.  இந்தப் பொண்ணு  எனக்கும் மகள் தான்.  இவுங்க கல்யாணம் பற்றிக்கூட முந்தி ஒருக்கா எழுதி இருக்கேன்.  வேணுமுன்னா சுட்டியை க்ளிக்குங்க:-)))

தோழி மகள் பெரிய குடும்பி.  குழந்தை நிஷா உட்பட  மொத்தம் 17 பேர் வீட்டுலே! தோழியும் கணவரும் இதில் சேர்த்தி இல்லை. அவுங்க தனியா வீடெடுத்து வசிக்கிறாங்க. மற்ற குடும்ப அங்கத்தினர்களைப் பார்க்கணும் எனக்கு. எல்லோரும் கிளம்பிப் போனோம்.  நாம் திரும்பி  இன்வர்கார்கில் போகும் வழியில்  கிளை பிரியும்  தார் ரோடில்  கொஞ்சம் உள்ளே போகணும். இங்கொன்னும் அங்கொன்னுமா  பெரிய காலி இடங்கள், பண்ணைகள். நடுவில்  வீடுகள்.


வண்டியை விட்டு இறங்குனதும்  மிகாவும் வொம்பிளும் ஓடிவந்து மோந்து பார்த்து வாலாட்டினாங்க.  மிகாவை எனக்கு ஏற்கெனவே தெரியும்.  மிலி மட்டும் சின்னக்கால்களால்  வீட்டு வாசக்கதவுவரை  வந்து எட்டிப்பார்த்தது. இவளை எனக்கு ரொம்ப வருசமாவே நல்லாத் தெரியும். மகள் வேறெங்காவது பயணம் போகும்போது  இவளை நம்மூரில் தோழி வீட்டில்  விட்டுட்டுப்போறது வழக்கம்.


கோக்கோ கிட்டே வந்து பார்த்துட்டு தன்னுடைய பீடத்தில் ஏறி உக்காந்துக்கிட்டது. பிர்மன் வகை. கவர்ச்சியான நீலக்கண்கள். வீட்டில் வச்சுருந்த கிறிஸ்மஸ் அலங்காரங்களை  யாரும் ஒன்னும் உபத்திரவிக்கலை!!!! மதியம் முதல் மழையும் குளிரும்தான் சல்லியம். இந்த வாரம் முழுக்க மழைதானாம்.  தெரியாம வந்து மாட்டிக்கிட்டோம். வெய்யில் இருந்தால் லீவு இல்லை.லீவு இருக்கும்போது வெய்யில் இல்லை:(

வீட்டுக்குள்ளே இவுங்க ஏழுபேர். வெளியில்   மற்ற 10 பேர்கள்.  ஹெய்டன்(மருமகன்)  ரொம்ப ஜாலியானவர்.  வேட்டையாடுதல் பொழுது போக்கு. கோபால்  ஷூட்டிங் சமாச்சாரங்கள் எல்லாம்  ஆர்வமாக் கேட்டுக்கிட்டார்.  இவுங்க பேச்சில் மிலி மட்டும் ஓசைப்படாமவந்து கோபாலின் மடியில் சாய்ஞ்சு உக்கார்ந்து ஒரு தூக்கம் போட்டது.  இவரும்  பாண்டு வில்லன் பூனையைத் தடவித்தருவதுபோல்  தலையை நீவிக்கிட்டே (மிலியின் தலையை!)  பேச்சு சுவாரசியத்தில் இருந்தார்.   முகம்  ஒருவித நிறைவை(கோபாலின் முகம்!) காமிச்சது.  பேசாம ஒரு நாக்குட்டி வாங்கிக்க அடிபோடணும்.




ஓனரைச் சட்டைசெய்யாம என்னமோ இவருடைய  நாய் என்பது போல ஒட்டிக்கிச்சு பாருங்க! 


மழை விடாது போல் இருக்கு.  நேரமாகுதுன்னு ஹெய்டனின்  மழைக்கோட்டு போட்டுக்கிட்டு  வீட்டுப்பின்புறம் யார்டுக்குப் போனோம். வொம்பிள் (ஹௌண்ட் இனம்) மாத்திரம் கூடவே வந்தான்.  மத்ததுங்க எல்லாம்  மழைக்கு பயந்து வீட்டுக்குள்ளே. சரியான பயந்தாகொள்ளிகள்.


சுநிதா (தோழியின் மகள்)வைப் பார்த்ததும் பேட் மேன் ஓடி வந்தான். யாக் வகையும்  மாடும் சேர்ந்து செய்த கலவை!  கூடவே ஒரு ஆடும் ஒரு புள்ளி மானும். அடுத்த  பக்கம் ஒரு பெரிய  வராகமும். இன்னொரு பேடக்கில்  சுநிதாவின் குதிரையும்.  இவுங்களுக்கெல்லாம் ஹை அண்ட் பை சொல்லிட்டு அடுத்த பகுதிக்குப் போனோம்.

இங்கே 3 பேர். இதுலே ஒருத்தர்  நிறைய போட்டிகளில் கலந்து பரிசுகள் வாங்கி முதலிடத்தில் இருக்கார். சின்னக் குதிரைகள்  Pony வகை.  பக்கத்து கூண்டில்  கோழிகள் இருந்தன.  மொத்தக்கூட்டமும் செல்லப்பிராணிகளே!




மிகாவின் சோஃபா:-)


மழைக்கு சூடா ஒரு டீ குடிச்சுட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம்.

கொஞ்சநேர ஓய்வுக்குப்பின் கிளம்பிப்போய் மறுநாளைக்கு  ப்ரேக்ஃபாஸ்ட்க்கானவைகளை சூப்பர் மார்கெட்டில் வாங்கிக்கிட்டு ( இட்லி தோசைக்கு அரைக்கலாமுன்னா ஒரு ஆட்டுக்கல்லை , நம்ம  அறையிலே வைக்கலை பாருங்க.....) அப்படியே ராச்சாப்பாட்டுக்கு  ஒரு ஹெல் பீட்ஸா.


இப்போ நியூஸியின்  கோடைகாலமானதால் ராத்திரி பத்தரை வரை  ட்வைலைட் வெளிச்சம் இருக்கும் என்றாலும் இந்த மழை வந்து எல்லாத்தையும் மப்பாக்கி வச்சுருக்கு. நல்லவேளை படுக்கையில் எலெக்ட்ரிக் ப்ளாங்கெட்  இருப்பதால்  நிம்மதியா  தூங்கலாம்.  ரூம் ஹீட்டர்ஸும் ஓடிக்கிட்டுத்தான் இருக்கு.

குட்நைட்.


தொடரும்.............:-)





20 comments:

said...

நீங்க //தோழியின் மகள் குடும்பமும் வந்து பகல் சாப்பாட்டில் எங்களோடு கலந்துக்கிட்டாங்க.//னு சொன்னதுமே எனக்கு அது சுனிதா அன்ட் கோ தான்னு புரிஞ்சுடுச்சே.. பின்ன எத்தனை தடவை படிச்சுருப்பேன் அதெல்லாம்.. :D எப்படி தான் இத்தனை செல்லங்கள் பார்த்துக்க முடியுதோ, ரொம்ப வேலை இல்லியா? நிஷா க்யூட்.

said...

வெகு அருமையான இடம்.வேலையில்லாவிட்டால் சிரமம் இல்லை?
இவர்கள் நல்ல இடத்தை தேர்ந்தெடுத்துவந்திருக்கிறார்கள். சுனீதாவின் பாப்பா ரொம்ப க்யூட்.


நாய் விஷயத்தில் விசயத்தில் உற்சாகம் காட்டுங்கள்.
நல்லது நடக்கட்டும்.

இத்தனை உயிர்களையும் பாதுகாக்கும் சுனிதா அவரது கணவருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
வாழ்வு இந்தாக இருக்க வாழ்த்துகள்.

said...

ஆஹா சூப்பர்,

நல்லா எஞ்சாய் செஞ்சீங்கன்னு தெரியுது..

said...

படங்களும், பகிர்வும் அருமை.
செல்லங்கள் எல்லாம் அழகு.

said...

சுற்றுலாப்பயணிகளுக்கான விவரங்கள் அறையில் வெச்சிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயமே. அப்டியே அந்த கிச்சனையும் போட்டோ எடுத்துப் போட்டுருக்கலாம். இத்துணூண்டு இடத்தில் எப்படி சமாளிக்கலாம்ங்கற மேஜிக்கை நாங்களும் தெரிஞ்சுக்கிட்டிருப்போம் :-))

நாக்குட்டியும் பூச்சக்குட்டியும் ரொம்பவே அழகாருக்கு.

said...

வாங்க பொற்கொடி.

இந்தச் செல்லங்களில் ஒன்னு மட்டும்தான் வேலை 'வாங்கும்' அது கோக்கோ:-)

பூனைக்குத்தான் மனிதர்க்ள் சேவை செய்யணும். மற்றவைகள் பிரச்சனை இல்லை. வெளியே இருப்போர்க்கு தாராளமா இடம் இருந்தாலே போதும். இங்கென்ன புல்லுக்கா குறைச்சல்!!!

said...

வாங்க வல்லி.

சுநிதா வீடு ஒரு மினி ஜூ:-)))))

இன்னிக்கு ரொம்ப சோகமா இருக்கேன். நம்ம ராஜலக்ஷ்மி வீட்டாளுங்க காலி பண்ணிக்கிட்டு இருக்காங்க. ரெண்டு நாளா ரஜ்ஜுவைக் காணோம். முதலிலேயே செல்லங்களை பேக் பண்ணி அனுப்பிட்டாங்களோன்னு இருக்கு.

பக்கத்து வீட்டில் ஆள் நடமாட்டம் இருக்கு. போய் கேக்கலாமுன்னா கோபால் கூடவே கூடாதுன்றார்.

பயந்துக்கிட்டு எங்காவது ஒளிஞ்சுருந்தான் என்றால் தானே வருவான். அப்போ நாம் எடுத்துக்கலாமாம்.

போங்கப்பா..... மனசே.....

said...

அற்புதமாக இருக்கு மேடம் தகவல்கள்.மணிகூண்டு, கால்நடை தகவ்ல்கள் சுவாரசியம்.படங்கள் அழகு...


//இவரும் பாண்டு வில்லன் பூனையைத் தடவித்தருவதுபோல் தலையை நீவிக்கிட்டே (மிலியின் தலையை!) பேச்சு சுவாரசியத்தில் இருந்தார். /ஹ..ஹா..

(அந்நியாயம்!! இப்படி சாரை கலாட்டா செய்கிரீங்களே??)


said...

வாங்க புதுகைத் தென்றல்.

அடாது மழையிலும் விடாது கூடியவரை எஞ்சாய் செய்தோம்தான்:-))))

கோபால் முன் எச்சரிக்கையாக ஜாக்கெட், கார்டிகன் எல்லாம் எடுத்து வச்சதால் தப்பிச்சேன்.

கோடை காலம் இதெல்லாம் எதுக்குக் கட்டி வலிக்கணுமுன்னு முதலில் தகராறு செஞ்சது நாந்தான்:(

said...

வாங்க கோமதி அரசு.

எல்லாம் இயற்கை அழகே அழகுன்னு இருக்குதுகள்.ஒரு மேக்கப் உண்டா என்ன? :-))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆஹா.... எடுத்து வச்சதைப் போட மறந்துட்டேனே:(

தண்டனையா அறையையே ஒருமாதிரி கோடி காமிச்சுட்டேன் இப்போ. 3 படங்கள் சேர்த்தாச்சு.

நினைவூட்டியதுக்கு நன்றிப்பா.

ரஞ்ஜனி வேற அறை எப்படி இருக்குமோன்னு கவலைப்பட்டாங்க:-)))

said...

பாண்டு வில்லன் பூனையைத் // :))

இதைச்சொன்னா நாக்குட்டிக்கிடைக்குமா..

said...

வாங்க ராம்வி.

ஸார், நம்ம வடிவேல் மாதிரி. எவ்ளோன்னாலும் ( வீரத்துடன்) தாங்கிக்குவார்ன்னு எனக்கு தோணல்:-)

said...

வாங்க கயலு.

ஓ அந்தக் கோணத்துலே பார்க்கணுமோ!!!!

அடடா..... நான் வைர நெக்லெஸ் போட்டுருக்கும் பூனையைத் தடவுற வில்லனைச் சொல்றேனேப்பா.

என்ன ஒரு செல்வச் செழிப்பு!!!

said...

ரஜ்ஜு வந்துவிட்டான்:)
க்வெஸ்ட் நல்லதான்பா இருக்கு. மார்ரியாட் கிச்சன் இன்னும் பெரிசா இருக்கும்.
ஊருக்கேத்த அளவு.

said...

வணக்கம் ஜயராமன்.

உங்க பின்னூட்டத்தில்சில சொந்த சமாச்சாரங்கள் இருப்பதால் எடிட் செய்து வெளியிடுகிறேன்.

//எனக்கு என்ன ஆச்சரியமுன்னா இத்துனூண்டு கப்போர்டில் சமைக்கத் தேவையான சகலமும் அடங்கிரும்போது நம்ம வீட்டு 16 சதுர மீட்டர் கிச்சன் ஏன் பத்தமாட்டேங்குது?//

ரொம்ப நாள் கழிச்சு உங்க பிளாகுக்கு வந்தேன். அங்கே எல்லோரும் சௌக்கியமா?

குக்கிங் அறை பற்றிய உங்கள் கருத்து உண்மையில் சிந்திக்க வைக்கிறது. நம்ம ஊரிலே குக்கிங் அறை அங்கே குக்கிங் டேபிளா இருக்கு.



தவிர நீங்க என்னோட வலைப்பதிவுக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு. முன்னே ஒரு முறை "முள்ளங்கி கழுவுற இடத்தை பாருங்க' என்ற பதிவுக்கு அருமையான பின்னூட்டங்கள் போட்டதோடு சரி. அடிக்கடி வாங்கம்மா..

said...

// பசுக்களுக்கு ஸ்கேன் எடுக்கணுமாம். //

பிறக்கப்போற குட்டிங்க கடாகன்னா, காளையா அப்படின்னு அந்த நாட்டுலே தெரிஞ்சுக்க முடியுமா இல்ல‌
அதெல்லாம் தெரிவிக்கப்படாதுன்னு சட்டம் இருக்குதா ?

மீ.பா.

said...

குடும்ப அங்கத்தவர்கள் எல்லோரும் ஸ்மாட்டாக இருக்கிறார்கள். இனிய பொழுது.

said...

வாங்க மீனாட்சி அக்கா.

இங்கே மனுச ஸ்கேன் கூட பிரச்சனை இல்லை. என்ன குழந்தைன்னு தெரிஞ்சால் குழந்தை அறையை அலங்கரிக்கவும் துணிமணிகள் வாங்கிக்கவும் எளிது என்பதால் பெற்றோர் வரவேற்கிறார்கள்.

ஆண் என்றால் நீலம். பெண் என்றால் பிங்க்.
அம்புட்டுதான். மற்றபடி பிரச்சனை ஒன்றுமில்லை. எதா இருந்தாலும் வரவேற்புதான்.

said...

வாங்க மாதேவி.

ஒரு மேக்கப் கிடையாதுப்பா. எல்லாம் இயற்கை அழகின் ஜொலிப்பு:-))))