Monday, January 16, 2012

உண்மையான **** கலைஞருக்கு அழகு?

ஒரு முக்கிய அறிவிப்பு: சமையல் வாரத்தை வெற்றிகரமா 'ஆக்கிய' பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு இந்த ஈஸி பீஸி சக்கப்ரதமனை சமர்ப்பிக்கின்றேன்.

தேவையான பொருட்கள்:


ஒரு டின் பலாப்பழம்
வெல்லப்பாகு முக்கால் கப்
பால் 2 கப் ( விருப்பம் என்றால் தேங்காய்ப்பால் சேர்க்கலாம்)
ஏலக்காய் 4
முந்திரி 15
திராட்சை ஒரு மேசைக்கரண்டி.
நெய் 2 மேசைக்கரண்டி

செய்முறை:

டின்னில் வரும் பலாப்பழத்தை எடுத்து மிக்ஸியில் போட்டுக் கொஞ்சம் பால் சேர்த்து அரைத்துக்கொள்ளவேணும். (ஃப்ரெஷ் பழம் கிடைச்சது என்றால் கொஞ்சம் வேகவச்சு எடுத்துக்கணும்)

ஒரு நான் ஸ்டிக் வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊத்தி சூடாக்கு முந்திதி திராட்சையைப் பொன்வறுவலா வறுத்த்யுத் தனியே எடுத்து வச்சுக்கணும்.
அதே வாணலியில் அரைச்ச பலாப்பழ விழுதைப்போட்டு 'கோல்டன் சிரப்' என்ற வெல்லப்பாகு ஒரு முக்கால் கப் ( இனிப்பு கூடுதலா வேணுமுன்னா உங்க ருசிக்கு) சேர்த்து அஞ்சு நிமிசம் சிறுதீயில் இளக்கிட்டு, பாயஸம் என்ன 'திக்' கில் இருக்கணுமோ, அவ்ளோ பாலையும் ( காய்ச்சின பால்) சேர்த்துக் கலக்கிட்டு ஏலக்காய்த்தூள் தூவி, எடுத்துவச்ச முந்திரி திராட்சையையும் போட்டு ஒரு கலக்குக் கலக்கினால்......... பலாப்பழப் பாயஸம் ரெடி..


அடுத்து..........



எப்படி? எப்படி? சமைச்சது எப்படி?ன்னு சமையலையும் சமைச்சதையும் சொல்லிக்கொடுக்கும்போதே அப்பப்ப நேரம் சேமிக்கவோ, வீட்டு வேலைகளைச் சுலபமா (!!) ஆக்கிக்கவோ கொஞ்சம் டிப்ஸ்களையும் சொல்லித்தந்தால்தான் முழுமையான சமையல் புத்தகம் 'ஆக்கும்' வேலை முடியும் என்ற 'நியதி'யின்படி.......................

இந்த இருபத்தினாலு வருஷக் குளிர் தேச வாழ்விலே, நேரம் சேமிக்க நான் செய்த வித்தைகள் உங்களுக்கும் உபயோகமா இருக்கும்னு நினைத்து இதை எழுதுகிறேன்.

இன்னொண்ணு, அடிக்கடி ஊருக்குப் (வீட்டுலே மத்தவங்களை விட்டுட்டு)போற ஆளுங்களா இருந்தா, அவுங்க, சாப்பாட்டுக்கு அவ்வளவாக் கஷ்டப்பட வேண்டாம்.



சாம்பார், ரசத்துக்குப் பருப்பு வேகவைக்கும்போது எப்பவுமே, 'குக்கரில்' நிறைய ( ஒரு 3 கப்) வேகவைத்து, சூடாக இருக்கும்போதே கரண்டியால் நன்கு மசித்துவிட்டு, அன்றைக்குத் தேவையானது போக, பாக்கியை சிறு 'பிளாஸ்டிக் கன்டெயினர்' சிலவற்றில் நிரப்பி, 'ஃப்ரீஸரில்' வைத்தால், இன்னொரு நாள் ரசம்,
கூட்டு போன்றவை செய்துகொள்வது எளிது.

வெள்ளைக் கடலை ( காபூலிச் சனா), காராமணி இவைகளையும் கொஞ்சம் கூடுதலாக முதல் நாள் இரவே ஊறப் போட்டுவிட்டு, மறுநாள் அடுப்பின் மீதே வைத்து வேகவிடலாம். சீக்கிரமே வெந்துவிடும். அவைகளையும் சின்னச்
சின்ன ஃப்ரீஸர் பைகளில் நிரப்பி ஃப்ரீஸ்ஸரில் வைத்து, காய்கள் பொரியல் செய்யும்போது சேர்க்கலாம்.

வெள்ளைகடலைக்கு இன்னொரு உபயோகம் இருக்கு. அரிசி உப்புமா செய்யும்போது சேர்க்கலாம். ருசி அட்டகாசமா இருக்கும்.

'மஹாராஷ்ட்ரா'வில் பச்சையாகச் செடியுடன் இந்தக் கடலை 'ஸீசன்'லே கிடைக்கும். அப்போது எங்க மாமி இதை அரிசி உப்புமாவிலே போடுவாங்க. இங்கே, அப்படிச் செடியோட பச்சையாக் கிடைக்காததுக்கு, இப்படி
வேகவச்சதைப் போட்டாலும் ஏறக்குறைய அதே ருசி கிடைச்சிடும்!

கீரை வகைகள், கொத்துமல்லிக் கட்டு போன்றவைகளை, கிடைக்கும் சமயம் கொஞ்சம் நிறைய வாங்கி, அவைகளை ஆய்ந்து,கழுவி சுத்தம் செய்து, நம் குடும்பத்துக்கு ஒரு வேளைக்கு வேண்டிய அளவுகளாகப் பிரித்து,ஃப்ரீஸர்
பைகளில் நிரப்பி ஃப்ரீஸ்ஸரில் வைத்துக்கொண்டால்,எப்போது வேண்டுமானலும் கீரைப் பொரியல் ஒரு ஐந்தே நிமிஷத்தில் செய்யலாம்.

தண்ணீரிலே அலசிய கீரைகளிலிருந்து, தண்ணீரை வடிக்க 'ஸாலட் ஸ்பின்னர்' இருந்தால் அதில் போட்டு ரெண்டு சுற்று சுற்றினால் ஈரம் இல்லாமல் இருக்கும். 'ஃப்ரீஸ்' செய்தாலும் உதிரி உதிரியாக வரும்!

கருவேப்பிலைக்கும் இதே சிகிச்சைதான்.

இப்பல்லாம்,இந்திய மாம்பழக்கூழ் 'டின்'லே கிடைக்கிறதல்லவா? அதை 'ஐஸ்க்யூப் ட்ரே'யில் ஊற்றி உறைந்ததும் எடுத்து
ஃப்ரீஸர் பையில் வைத்துக்கொண்டால், மில்க்ஷேக் தேவையான போது, ஒரு தம்ப்ளர் பாலுடன், மூன்று ஐஸ்க்யூப், 2 டீஸ்பூன்
சக்கரையுடன் சேர்த்து 'மிக்ஸி'யில் ஒரு 10 வினாடி சுற்றினால் சுவையான மாம்பழ மில்க் ஷேக் ரெடி!
இதற்குத் தனியாக 'ஐஸ்' சேர்க்கவும் தேவையில்லை!

உரித்த பூண்டு, பச்சைமிளகாய் வகைகளை, ·ப்ரீஸர் பைகளில் போட்டு, ஃப்ரீஸ் செய்துகொண்டால் வேணும்போது அப்படியே
எடுத்து உபயோகிக்கலாம். இதெல்லாம் தன்னாலேயே 'ஃப்ரீ ஃப்ளோ'வாக ஆகிவிடும்.

இஞ்சி மலிவாகக் கிடைக்கும் சமயம் வாங்கி, சுத்தம் செய்து, 'ஃபுட் ப்ராஸசர்'லே போட்டு, சின்னத்துண்டுகளாக வெட்டி ஃப்ரீஸ் செய்யலாம்.

சமைக்கறப்போ மிகவும் தேவையான இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மசாலாவையும் (எல்லாம் சம அளவு) அரைத்து
'ஐஸ்க்யூப் ட்ரே'யில் நிரப்பி, மறுநாள் 'ப்ளாக் ப்ளாக்'காக எடுத்து, ஃப்ரீஸர் பையில் வைத்துக்கொண்டால், சமைக்கும்போது,
தேவைக்கு ஏற்ப ஒன்றோ, இரண்டோ 'க்யூப்' எடுத்துக் கொள்ளலாம். அசைவச் சமையலுக்கு இன்றியமையாத ஐட்டம் இந்த இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய். க்ரீன் மஸாலான்னு இதுக்கு பெயர்!

புளி கரைக்கணுமுன்னா முதலில் மிக்ஸி எங்கேன்னு பார்த்து எடுத்து வச்சுக்குவேன். பருப்பை மட்டும் குக்கரில் வைக்கும் தினமானால் கூடுதலா இருக்கும் குக்கர் ஸ்பேஸில் ஒரு கிண்ணத்தில் ஒரு கால் கிலோ புளி வச்சு, கால் கப் தண்ணீரும் ஊத்தி பருப்புக்கு மேலா வச்சுடலாம். இல்லை கைவசம் நேரம் இருந்தால் புளிக்காகவே குக்கரை வச்சுக்கலாம். ரெண்டே விஸில் போதும்.

கொஞ்சம் ஆறினதும் மிக்ஸியில் பாதி அளவு சேர்த்து கொஞ்சம் தண்ணீரையும் விட்டு நாலு சுத்து. அரைச்செடுத்ததை ஒரு காய்வடிகட்டியில் ஊத்துங்க. நல்ல திக்கான pulp கீழே இறங்கும். இதே போல் பாக்கி உள்ள புளியையும் அரைச்சு பல்ப்P எடுத்துக்குங்க. இப்ப வடிகட்டியில் இருக்கும் புளியை இன்னொரு முறை மிக்ஸியில் சேர்த்து ஒரு டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒரு நாலு சுத்து. வடிகட்டியில் சேர்த்துருங்க. இங்கே புளி விக்கிற விலையில் ஒட்டப் பிழிஞ்சுக்கிட்டாக் கொடுத்த காசுக்குக் கேடில்லை..

இந்தப் புளிக்கரைசலை 'ஐஸ் க்யூப் ட்ரே'யில் ஊற்றிவச்சுட்டு மறுநாள் ஒரு ஃப்ரீஸர் பையில் ஐஸ் கட்டிகளா எடுத்து வச்சுக்குங்க. குழம்பு ரசத்துக்கு மூணோ நாலோ கட்டிகளை எடுத்துப் போட்டால் ஆச்சு. கொதிக்கும்போது தானே கரைந்துவிடும். ஏற்கெனவே குக்கரில் வெந்த புளியானதால்...புளி வாசனை போகும்வரை கொதிக்கவைக்கணும் என்ற அவசியமும் இல்லை கேட்டோ! சட்னி அரைக்கும்போது ரெண்டு கட்டிகளை எடுத்துக்கலாம்.


அடைக்கு அரைக்கும்போது, கொஞ்சம் அதிகமான அளவில் அரைத்துக் கொண்டு அந்த மாவையுமே 'ஃப்ரீஸ்' செய்யலாம். மாலை டிஃபனுக்கு வேண்டுமானால், காலையிலேயே எடுத்து வெளியில் வைத்துவிட்டால், மாலையில் மாவு ரெடி. தோசைமாவையும் இப்படி எடுத்து வைக்கலாம். இட்லி மாவு மட்டும் இந்த முறையில் சரியாக வருவதில்லை. ( இதெல்லாம் குளிர்
ஊருக்கு மட்டும்) ஆனால் இட்லிகளாக தயாரித்து பின்பு ஃப்ரீஸரில் வைத்துக் கொண்டு தேவையானபோது மைக்ரோ வேவ் அவனில்
சூடு செய்யலாம்.
நாலோ அஞ்சோ (தேவையான எண்ணிக்கை) ·ப்ரீஸர் பைகளில் போட்டுவைத்து கொண்டால் இன்னும் எளிது.

நிறைய சாதம் மீந்துபோனால் அதைக்கூட ·ப்ரீஸ் செய்யலாம். வேண்டும்போது, ·ப்ரீஸரில் இருந்து வெளியி
ல் எடுத்து வைத்துவிட்டு,
(சாப்பிட ஒரு மணிநேரம் முன்பு) மைக்ரோ அவனில் சூடு செய்யலாம். அப்போதுதான் சமைத்த மாதிரி
இருக்கும். அல்லது 'வடாம்'
செய்யலாம். அதன் செய்முறை இங்கே:-)))

தேங்காயைத் துருவி ஃப்ரீஸரில் வைக்கலாம். அதைவிட இன்னும் சுலபமானது, 'டெஸிகேட்டட் கோகனட்'. வேணும்போது
கொஞ்சம் சுடுதண்ணீரில் பிசறி வைத்துவிட்டால். 15 நிமிஷம் கழித்து 'அப்போதுதான் துருவிய ஃப்ரெஷ்' தேங்காய் ரெடி!

இந்த மாதிரியெல்லாம் செய்வதால்தான், இங்கே நம் வீட்டில் எல்லா சமையலுக்கும்சேர்க்கவேண்டிய அனைத்தையும் முறைப்படிச் சேர்த்துக்
'குறையொன்றுமில்லை கண்ணா' என்று இருக்கமுடிகிறது!

என்ன ஒன்று, 'ஃப்ரீஸர்'அளவு பெரியதாக இருக்க வேண்டும். தனியாக உள்ள 'ஃப்ரீஸர்' என்றால் உத்தமம்.

மறுபடியும் சொல்றேன். இதெல்லாம் எங்களைப் போல குளிர் நாட்டில் இருப்பவர்களுக்கும், அதிகமாக நாள், கிழமை பார்க்காமல்
இருப்பவர்களுக்கும்தான்.

கொசுறு டிப்ஸ்:

சப்பாத்திகளையும் ·ப்ரீஸ் செய்து உபயோகிக்கலாம். சுவையில் வித்தியாசம் இருக்காது.

·ப்ரீஸ் செய்து உபயோகிக்க முடியாதது ( ருசி மாறுபடுவது)

மோர்க் குழம்பு
இன்னும் ஏதாவது இருக்கும், ஞாபகம் வரும்போது எழுதுவேன்!

உண்மையான சமையல் கலைஞருக்கு அழகு = டிப்ஸ்(??) கொடுப்பது:-))))

PIN குறிப்பு:
நன்றி மரத்தடி. அங்கே 'பெண்ணே உன் சமர்த்து' என்று எழுதி வச்ச பதிவைக் கொஞ்சம் தட்டிக்கொட்டி இங்கே போட்டுருக்கேன்.

அனைவருக்கும் இன்றைய 'நம்' பொங்கல் பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள். ஜல் ஜல் ஜல்..... என்னும் சலங்கை ஒலி ம்ம்ம்ம்மா......வ்

40 comments:

said...

ஏற்கனவே பருப்பு உசிலி வேணும் அப்படின்னு சொல்லி அடம் புடிச்சு சாப்பிட்டு வயத்தை
ரிப்பேர் பண்ணியாச்சு. இப்ப பலாப்பழம் பாயசம் வேற கேட்குதா ?

வயசான காலத்துலே வாய கட்டுப்படுத்தணும், வாய கட்டுப்படுத்தணும் அப்படின்ன மனசை
ஒரு நிலையிலே வச்சுக்கணும்.

துளசி மாலையை கையில் எடுத்துண்டு கோபாலா, மாதவா, மதுசூதனா, நாராயணா அப்படின்னு
ஜெபம் பண்ணுங்க. முடியலேன்னா,

இரண்டு துளசி இலையை எடுத்து அந்த கோபாலனுக்கு காலடிலே வச்சுட்டு,
நாராயணா எல்லாம் நீயே அப்படின்னு சொல்லுங்க..

என்னது !! இத்தனை சொல்றேன்... பலாப்பழ பாயசம் இப்பவே பண்ணனுமா !!
நம்ப பருப்பு உசிலி பண்ணின கதைக்கே துளசி அம்மா பதில் போடல்லைய
மீனாட்சி பாட்டி.

said...

மறுபடியும் சொல்றேன். இதெல்லாம் எங்களைப் போல குளிர் நாட்டில் இருப்பவர்களுக்கும், அதிகமாக நாள், கிழமை பார்க்காமல்
இருப்பவர்களுக்கும்தான்.//

ஆம். குளிர் நாட்டில் இருப்பவர்களுக்கு, மின்சாரம் தடை இல்லாமல் வருபவர்களுக்கு உதவும் அருமையான குறிப்புகள்.

said...

ஈஸி பீஸி சக்கப்ரதமன் அருமை.

பலாப்பழ பாயசத்தை பற்றி சூரி ஐயா சொல்வது நன்றாக இருக்கிறது.

said...

நாளும் கரண்டு கட்டு, இதுல பீரீசருல வைக்கிற அய்டியா தரும் துளசியை என்ன செய்யலாம் :-(

said...

பொங்கல் வாழ்த்துக்கள் டீச்சர் ;-)

said...

ஊர்ல கல்யாண சீசன் தொடங்கியாச்சு.. சக்கைப் பிரதமன் இல்லாத விருந்தே கிடையாது. இந்தச் சமயத்துல ஊர்லயும் இல்லாம, டின் சக்கை கிடைக்கிற இடத்துலயும் இல்லாம, இருந்தா இப்படி நியூஸிலேர்ந்து வர்ற சக்கைப்பிரதமனைப் பார்த்து ஜொள் விட்டுக்க வேண்டியதுதான். வேற வழி
;-)

//இரண்டு துளசி இலையை எடுத்து அந்த கோபாலனுக்கு காலடிலே வச்சுட்டு, நாராயணா எல்லாம் நீயே அப்படின்னு சொல்லுங்க..//

செம :-))))))))))

said...

ஆஹா எந்தக்கலைஞரை சொல்றீங்கன்னு ஒருவேளை அந்தக்கலைஞரோன்னு பார்க்க முதல்ல வந்தேன் கலிஞர்னா அவர் தானேங்க?:) ஈசி சக்கைப்ப்ரதமனை செஞ்சிட்டுதான் மறுவேலை அப்படி ஒரு ஆர்வம் வந்துட்டது உங்க குறிப்பு. அந்தக்குறிப்புகள் திரும்ப்பப்டிச்சிட்டேன் நன்றி!!

said...

இருக்கிற சீமாட்டி என்னவோ செய்யலாம். நாங்க ஃப்ரீசர் கண்டோமா இல்ல இருக்கிற ஃப்ரிட்ஜ் தொடர்ந்து ஓடற மாதிரி கரண்டாவது வரதா:)
துளசி இலையும் கோபால சாமியைக் க்ம்பிடறதும்தான் நாங்க செய்யணும்!!!
ஆனாலும் சூப்பர் டிப்ஸ்களை ஃப்ரீசர் இருக்கிற பொண்ணுக்கு அனுப்பறேன்.:)))

said...

நல்ல குறிப்புகள்....

உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் டீச்சர்....

said...

//ஜல் ஜல் ஜல்..... என்னும் சலங்கை ஒலி//

சல சல எனவெனும் சாலையிலே!எதிர்ப்பாட்டது டீச்சர்:)

காலையிலிருந்து உங்க பதிவுல உட்கார்ந்துகிட்டிருக்கேன்.இப்பத்தான் வாழ்த்து சொல்ல முடிந்தது.

பொங்கல் வாழ்த்துக்கள்.

said...

நாள் கிழமை அவ்வளவாகப் பார்க்காதவர்களுக்குன்னு சொன்னது அருமை :)

said...

அடடா.. என்னென்னவோ நினைவுகளைக் கிளறிட்டீங்களே?! இப்ப அந்தப் பக்கத்து வீட்டு மோளே எங்கே இருக்காளோ என்ன செய்யுறாளோ? வருஷா வருஷம் எனக்கு மட்டும் ஒரு தட்டில் போளியும் சபிரதமனும் கொடுத்த அன்புள்ளம்...

said...

புஸ்தகத்தை விடுங்க.. ஒரு டிவி ஷோ சின்டிகேட் பண்ணுங்க. அட்டகாசமா இருக்கு ரெசிபிங்கள்ளாம் (நீங்க பண்ணது தானே ? :)

said...

பருப்பு, தேங்காய் துருவல் சேமிப்பதுண்டு :)))

தேங்காய் இல்லாவிட்டால் நம்நாட்டில் சமையல் கிடையாது.

said...

நல்ல பயனுள்ள சமையல் குறிப்புகள். சக்கைப்பிரதமன் செய்து பார்க்க ஆவல் ஏற்பட்டு விட்டது.ந்ன்றி பகிர்வுக்கு.

said...

வாங்க மீனாட்சி அக்கா.

பாவங்க்கா...அத்திம்பேரை இப்படி வாங்குவாங்குன்னு வாங்குன்னா எப்படிக்கா?

சாப்பிடறதுக்கு மட்டுமுன்னே இன்னொரு ஜென்மம் எடுத்து வரமுடியுதா?

லேசா அப்பப்பக் கொஞ்சம் கருணை காட்டுங்க அக்கா, நான் கோபாலுக்கு அருள்'வதை'ப்போல:-)

துளசியைத்தான் விடாமல் அந்த நாராயணனே கழுத்துலேன்னா போட்டுண்டு இருக்கர். (அவளும் கழுத்துலே ஏறி உக்காந்துண்டு இருக்கள் !)

துளசி இலை இங்கே..... சுத்தம். செடி சம்மர் போனதும் போய்ச் சேர்ந்துரும். ரெண்டு முறை வச்சுப் பார்த்துட்டு இப்ப மாடம் மட்டும் சும்மாக்கிடக்கு.

உசிலிக்கு உடனே (ஊசிப்போறதுக்கு முன் )பதில் போடாததுக்கு மாப்பு.

said...

வாங்க கோமதி அரசு.

ஆமாம்....இந்த மின்சாரத்தடை ஒன்னு எப்பவும் பயமுறுத்துறதே:(

சுப்புரத்தினம் ஐயா & மீனாட்சி அக்கா ஜோடியின் ரஸிப்பு எப்பவுமே அட்டகாஸம்தான்:-)))))

said...

வாங்க உஷா.

ப்ச்....சாரிப்பா. இதுலே என் ஆர் ஐ. களுக்கு மட்டுமுன்னு குறிப்பிட்டு இருக்கணுமோ:(

said...

வாங்க கோபி.

உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.(அடுத்த பொங்கலுக்கு இப்பவே)

said...

வாங்க அமைதிச்சாரல்.

அடடா.... சரி .... கண்ணாலே தின்னுங்க என்னைப்போல! பயணத்துலே நான் முக்கால்வாசி இப்படித்தான்:)

அந்த ரெண்டு துளசி இலையைச் சட்னு வாயில் போட்டு மென்னுக்கிட்டே அதுக்குத் தொட்டுக்க என்ன செஞ்சேன்னு கேப்பாரே உங்க கோபால் மாமா!

said...

வாங்க ஷைலூ.

கலைகள் அறிஞ்சவர் கலைஞர் இல்லையோ! நீங்க ஊகித்தவருக்கு 'அடுப்பு' ஒன்னுக்கு மேலே. சமையல் வகைகள் பிரச்சினையே இல்லை:-)

ஒருநாள் பிரதமன் செஞ்சுட்டுச் சொல்லுங்கோ!

said...

வாங்க வல்லி.

இங்கே திரும்ப வந்ததும் கரண்டு கட்டை எப்படி மறந்தேன்!!!!!!
'ஸோ...சாரிப்பா:(

உண்மைதான்ப்பா. சண்டிகர் வீட்டுலே பழக்கதோஷத்தில் பொருட்களை ஃப்ரீஸரில் வச்சு அது பவர் கட்டால் வீணாகித் தூக்கிப்போட்டதுதான் ஏகத்துக்கும்.

சென்னையில் அங்கே பேக்கப் பவர் இருந்ததால் அவ்வளவாப் பிரச்சனை இல்லை. ஆனால் அங்கே எல்லாமே அன்னன்னிக்கு ஃப்ரெஷாக் கிடைச்சது.
பாதி நாள் சாப்பாடு வெளியில்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இப்ப இல்லைன்னாலும் என்னிக்காவது பயனாகுமுன்னு (குறிப்புகளை) எடுத்து வையுங்க:-)

இனிய பொங்கல் வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ராஜ நடராஜன்.

எசப்பாட்டுக்கு நன்றி:-)

//காலையிலிருந்து......//

அச்சச்சோ.... சமையல் தொண்டையில் மாட்டிக்கிச்சா??????

said...

//"உண்மையான **** கலைஞருக்கு அழகு?"//

அவங்க போட்டிருக்கும் அழகான மேக்கப் தான்
என்று எதோ படம் போட்டு சொல்லப் போறிங்கன்னு நினைச்சேன்

said...

வாங்க மதுரையம்பதி.

உண்மையை 'உரக்கச் சொல்லவேணும்'தானே??

ஒத்துக்குங்கோ.....

ஒத்துண்டார்:-)

said...

வாங்க அப்பாதுரை.

இப்படி அன்புள்ளம் கொண்ட மோளை, காணாமப் போக்கலாமோ???? அடடா....

ரெஸிபி& சமையல்& ஃபோட்டோஸ் எல்லாம் நானேதான். வேணுனுன்னா துப்பட்டாவைப் போட்டுத் தாண்டறேன்:-)

டிவிலே வந்து சமைக்கலாமுன்னா.... கோபாலுக்குத்தான் செலவு கூடுதல். தினம் ஒரு புதுப் பட்டுப் புடவை கட்டுப்படியாகுமோ அவருக்கு:-)

said...

வாங்க மாதேவி.

கொலஸ்ட்ரால் அரக்கனைக் கண்டபின் தேங்காய் அளவு பாதியாப்போச்சு நம்மூட்டுலே!

said...

வாங்க ராம்வி.

நாலுபேருக்கு பயனாகுதுன்னா...எதுவும் தப்பே இல்லை:-))))

ஒருநாள் பிரதமனைச் செஞ்சு ஜமாய்ச்சுருங்கோ!

said...

வாங்க கோவியாரே!

உண்மையைச் சொன்னால்.... 'அந்த ஒப்பனைக் கலைஞர்களுக்குத்தான்' எல்லாப் புகழும்!!!!

ஐயமே இல்லை:-)

said...

அடைபிரதமன் தான் சாப்பிட்டிருக்கேன்.எனக்கு மிகவும் பிடித்தது. சக்கப்பிரதமன் சாப்பிட்டதில்லை.....

வீட்டின் அருகில் பலாமரம் இருக்கிறது. காயாக பறித்து சப்ஜி செய்து தான் சாப்பிடுகிறார்கள். பழுக்குமா? பெரிதாகுமா? பழத்தை சாப்பிடலாமா என்று கேட்கிறார்கள்.:(((
கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.

said...

என்னாங்க இது... டிவியில முகத்தையும் கிச்சனையும் தான் படமெடுப்பாங்க.. நீங்க சரியான ஐடியா போடுறீங்களே? ம்ம்ம். வாஸ்தவம் தான்.. சப்ஜியா சாரியானு பேர் வச்சிருங்க.. ரெண்டுத்துல மக்களுக்கு எது பிடிக்குதோ எடுத்துக்கட்டும்.

said...

வாங்க கோவை2தில்லி.

சண்டிகரில்கூட மார்கெட்டில் பச்சைப்பலாக்காய் ஏகத்துக்கும் விக்கறாங்க. அதுவும் நாம் வாங்கியவுடன் நம் கண் முன்னால் அழகாத் தோலைச் செதுக்கிட்டு துண்டு போட்டும் கொடுத்துடறாங்க. ஜாலியோ ஜாலின்னு நோகாம சமையல் செஞ்சுக்கிட்டு இருந்தேன்.

இவ்ளோ காய்கள் கிடைக்குதே. அப்பப் பழமும் கிடைக்குமுன்னு பார்த்தால் வருசம் ஆனதும்கூட கண்ணுலே காட்டலை. உங்க பின்னூட்டம் பார்த்ததும்தான் தெரியுது ..... பழத்தைச் சாப்பிடலாமுன்னு தெரியாத மக்கள்ஸ்ன்னு:( அட ராமா...........

said...

வாங்க அப்பாதுரை.

ஸப்ஜியா ஸாரியா !!!! தலைப்பு சூப்பரா இருக்கு:-)))))

தாய்க்குலம் ஸாரிக்கே ஓட்டுப்போடும் என்று நினைக்கிறேன்!!!!

said...

ரொம்ப நல்ல இருக்கு

அதுவும் பலப்பழத்துடன் சூபப்ர்

said...

டின்னில் பலாப்பழம் எங்கு கிடைக்கிறது.

said...

வாங்க ஜலீலா.

இங்கே இருக்கும் சூப்பர் மார்கெட்டில் பலா, கொய்யா, மாங்கான்னு பழங்கள் தாய்லாந்து புண்ணியத்துலே கிடைக்குதுங்க. என்ன ஒன்னு..... எல்லாத்தையும் சீனி சிரப்பிலே போட்டு ஊறவச்சுருக்கும்:(

எதுக்கும் நீங்க இண்டியன் கடைகளில் தேடிப்பாருங்க.

said...

சர்க்கரை பிரதமன் பிடித்தமான ஒன்று. எளிய செய்முறைக்கு நன்றி.

கொட்டிக் கொடுத்த அத்தனை டிப்ஸுக்கும் நன்றீஸ்:)!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

எல்லாம் உமக்கே!!!!!

நன்றி.

said...

நிஜமாவே எல்லாம் ரொம்ப உபயோகமான டிப்ஸ். உங்க லிஸ்டைப் பார்த்தால் உங்ககிட்ட 100 லிட்டர் ஃப்ரிட்ஜும், 1000 லிட்டர் ஃப்ரீசரும் இருக்கறமாதிரி இருக்கு.
சாம்பார்/சாத்துமதுக்கு உண்டான பருப்பையும், கொத்தமல்லியையும் முயற்சித்துப் பார்க்கிறேன்.