Friday, January 27, 2012

கப்பலுக்கொரு (கட்ட) பஞ்சாயத்து! ( கப்பல் மினித்தொடர் 3)

அடப்பாவமேன்னு ஆகிருச்சு. எட்டுமாசமா சம்பளம் கொடுக்கலையாம்! வேலைக்குப் போகமாட்டோமுன்னு 'வீட்டுலே' இருக்கமுடியாது. நடுக்கடலில் குதிச்சு நீந்தவா முடியும்? இதோ அதோன்னு இழுத்தடிச்சுக்கிட்டு இருக்கார், க்ரீஸ் நாட்டு மொதலாளி. கப்பலைச்சுத்திக் கடன் வச்சுக்கிட்டுக் கலக்கமில்லாம எப்படித்தான் தூங்கறாரோ?

அவசரத்தேவைக்கு கைவசம் வச்சுருந்த காசை அங்கங்கே துறைமுகங்களில் நிக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாச் செலவழிச்சுக்கிட்டே வந்து இப்போ..... சுத்தம்:( நல்லவேளையா வெவ்வேற துறைமுகங்களில் கப்பலுக்குன்னு இருக்கும் ஏஜண்ட் புண்ணியத்தில் மளிகைச் சாமான்கள் மட்டும் முடங்காம 'இதுவரை' கிடைச்சு வந்துருக்கு. இனிமேப்பட்டு என்ன செய்யறதுன்னு புரியலையாம். இது எல்லாத்துக்கும் கேப்டந்தான் பொறுப்புன்னாலும் ரிஸர்வு காசு தீர்ந்துட்டா அவரும்தான் என்ன செய்வார்? அவருக்கும்தானே சம்பள பாக்கி நிலுவையில் கிடக்கு.

இது ஒரு பக்கமுன்னா.... கப்பலில் வர்ற சரக்குக்கு ஏற்கெனவே பணம் கட்டி வாங்குனவங்களுக்கு பொருட்கள் போய்ச்சேரத் தாமதம் ஆகுதுன்னு அவுங்க ஏஜண்டும் கப்பலுக்கான ஏஜண்டும் முட்டிமோதிக்கிட்டு இருக்காங்க.
இந்தக் கப்பல் ஒரு பல்க் கேரியர் . இப்ப அதுலே இருப்பது முழுசும் நிலக்கரி. அதை எதிர்பார்த்து உள்ளூர் கம்பெனி காத்துக்கிடக்கு. கடைசியில் கோர்ட்டுக்குப் போச்சு இந்தக் கேஸ். தரைச்சட்டம் எல்லாம் தண்ணியிலே செல்லுபடியாகாது. அதுவேற இதுவேற இல்லையா? (Maritime law)

கட்டப்பஞ்சாயத்து நடந்துச்சு. மொதலாளிகிட்டே இருந்து காசு ஒன்னும் பெயராதுன்னு தெரிஞ்சு போச்சு. பேசாமக் கப்பலை காயலான் கடையில் எடைக்குப் போட்டுட்டு அதுலே வர்ற காசை தொழிலாளர் சம்பளம், துறைமுக வாடகை, ஏற்கெனவே கப்பலுக்கு டீஸல் ரொப்பின கம்பெனி பாக்கி, கேஸ் நடந்ததுக்கு வக்கீல்களுக்கான கூலி, நீதிமன்ற செலவு, கப்பல் தரகர்களுக்கான கூலின்னு ஏகப்பட்ட செலவுக்கு எடுத்துக்கணுமுன்னு தீர்ப்பு. கப்பல் வேற 25 வருசப்பழசு. மெயிண்டனன்ஸ் செலவு இழுத்துக்கிட்டுப் போயிருமுன்னு ஓனர் ஓசைப்படாமல் இருந்துட்டார்.

சரக்கை வெளியே எடுக்கணுமேன்னு துறைமுகத்துக்குள்ளே கொண்டுவந்து கப்பலை நிறுத்துனாங்க. ஒரு பத்து நாள் போல அங்கே நின்னுச்சு.
நாங்களும் ஒரு நாள் 'கப்பல் பார்க்க'ன்னே போனோம். உள்ளே போய்ப் பார்த்தால்..... ஏதோ கால்பந்தாட்ட மைதானத்துலே நிக்கறமாதிரி 'ஹோ'ன்னு பரந்து விரிஞ்சு கிடக்கு. நிலக்கரி எல்லாம் வெளியே எடுத்தாலும் தரையெல்லாம் கரகரன்னு கரித்தூள். பெரிய எலிகள் நாலைஞ்சு சாவகாசமா நடந்து போய்க்கிட்டு இருக்குதுங்க.

' இப்பக் கொஞ்சம் மெலிஞ்சு போச்சுங்க. முந்தி கோதுமை ஏத்திக்கிட்டு வந்தப்ப நல்லாத்தின்னு கொழுத்துக்கிடந்துச்சுங்க'ன்னார் சரவணன். இரும்புக்கம்பி ஏணி வழியா கீழே எஞ்சின் ரூமைப்போய்ப் பார்த்தோம். ஒரே சத்தம். பயங்கர சூடு வேற! நம்ம திரு, முகமெல்லாம் கரி பூசிக்கிட்டு கருப்பு அப்பின உடுப்போடு வந்து நலம் விசாரிச்சார். முதல்லே யாருன்னு அடையாளமே தெரியலை! தமிழ் கேட்டதும்தான் மனசிலாச்சு:-) இவர் மதுரைக்காரர்,
அப்புறம் மேல்தளத்துக்குப்போய், கப்பல் ட்ரைவர்(!!) இருக்கும் ப்ரிட்ஜ் ரூம் எல்லாம் வேடிக்கை பார்த்துட்டு, நாமே கப்பலை ஓட்டுவதாய் கற்பனை செஞ்சுக்கிட்டேன். பாவம்.... கப்பல். அடிமாடாப் போகுதேன்னு ஒரு வருத்தம்தான்.

எனக்குக் கப்பலுன்னா ஒரு தனி ஆசை. படகுப்பயணம் உடம்புக்கு ஒத்துக்கறதைல்லையே தவிர ச்சும்மா வேடிக்கை பார்க்கக் கசக்குதா? நம்மூர் கடற்கரைக்குப்போனாலும் கப்பல் எதாவது தெரியுதான்னே கண்ணை நட்டுக்கிட்டு இருப்பேன். இந்த ஆசையில்தான் ஒரு முறை கார் விபத்து ஒன்னுகூட எனக்கு ஏற்பட்டுருச்சு:( ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்தர் சொன்னது நெசம்தான்!

ஒரு நாள் 'கப்பல்காரவுஹ' வந்தப்ப பகல் சாப்பாட்டுக்குப் பிறகு உள்ளூர் ஹேக்ளி பார்க்கைச் சுத்திக் காமிக்கக் கூட்டிட்டுப் போனோம். அங்கே என் ஃபேவரிட் இடமான கள்ளிச்செடிகளைப் பார்த்து ரசிச்சுக்கிட்டு இருந்தப்ப...... பக்கத்துலே வந்து நின்ன ஒரு இளம்பெண்....சிநேகமாப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே 'நீங்க தமிழா'ன்னு தமிழில் கேட்டதும்.................. 'ஆமாம்....எப்படித்தெரியுமு'ன்னு அசட்டுத்தனமாக் கேட்டு வச்சேன். தொணதொணன்னு ஓயாம கள்ளிகளை விளக்கோ விளக்குன்னு விளக்குனது காதில்'விழுந்துருக்கு'!!!!

பொண்ணு சிங்கப்பூர். இங்கே படிக்க வந்துருக்கு. ரொம்ப சந்தோசமுன்னு தொலைபேசி எண்ணைக் கொடுத்துட்டுக் கப்பல்காரவுஹளை பஸ் ஏத்தி விட்டுட்டு வீட்டுக்கு வந்தோம். அஞ்சே நிமிசம். தொலை பேசி அடிக்குது. கூப்ட்டது சிங்கைப் பொண்ணுதான். பேச்சுக்கிடையில் என்ன சமையல் செஞ்சீங்கன்னு கேட்டதுக்கு, வெஜிடபிள் பிரியாணியும் மசால் தோசையுமுன்னு அப்பாவியாச் சொன்னேன்.

மசால் தோசையான்னு கேக்கும்போதே அந்தப் பக்கம் நாக்கில் எச்சில் ஊறுவது இங்கேயே எனக்குப் புரிஞ்சு போச்சு. வீட்டுக்கு வர்றியான்னு (ஒரு பேச்சுக்குக்) கேட்டதும், 'வர்றேன். வழி சொல்லுங்க'ன்னுது பொண்ணு. ஒரு பத்துத் தெருதள்ளி வசிக்குதாம். நானே வந்து கூட்டிட்டுப்போறேன்னு சொல்லிட்டுப்போய்க் கூட்டியாந்தேன்.

அதுக்குப்பிறகு நிறைய தடவை வந்து போச்சுன்னு வையுங்க.அடுத்த மூணு வருசங்களில் ஒரு தொடருக்கான சம்பவங்கள் (கிளைக்கதை ஒன்னு இப்போ இங்கே கிளைக்குது) .இருக்கு. இந்தக் கச்சேரியை இன்னொருநாள் வச்சுக்கலாம். இப்போ 'நம்ம' கப்பலைக் கவனிக்கணும்.

ஒரு நாள் சரவணன் ஃபோனில் கூப்பிட்டு அவருடைய டிவிக்கு 150 விலை வந்துருக்கு. கொடுத்துறவான்னார். லிட்டில்டன் (துறைமுக ஊர்) அடகுக்கடையில் ' டிவி இருக்கு விலைக்கு வேணுமா'ன்னு கேட்டுருக்கார். என்ன டிவி, எவ்ளோ பழசுன்னு விசாரிச்சால்..... இங்கே வர்றதுக்கு முன்னால் போன ஜப்பான் துறைமுகத்தில் வாங்குனதாம். JVC 22" ஊருக்குக் கொண்டு போக வாங்கி இருக்கார். புத்தம் புதுசு. இன்னும் பொட்டியில் இருந்து வெளியில் எடுக்கலை.

அப்போ இங்கே நம்மூரில் டிவி எல்லாம் பயங்கர விலை. அறுநூறுக்குக் கொறைஞ்சு ஒன்னும் இல்லை. நம்ம வீட்டில் ஒரு 26 இஞ்ச் GE இருக்கு. அதனால் நமக்கு வேணாம். ஆனாலும் 150 அநியாயம். வேற யாருக்காவது வேணுமுன்னா கேட்டுப்பார்க்கலாமுன்னு நினைச்சு டிவி உங்ககிட்டேயே இருக்கட்டும். ரெண்டொருநாளில் சொல்றேன்னு கோபால் பதில் சொன்னார்.

"இல்லீங்க, நாளான்னிக்குக் கப்பலை டிமரு என்ற ஊருக்கு ஓட்டிட்டிப்போய் விடணும். ரெண்டொரு நாளில் அங்கே நமக்கு பணம் செட்டில் செஞ்சுருவாங்க. அதை வாங்கிக்கிட்டு உங்கூருக்கு வந்து, ஊருக்குப்போக விமானம் பிடிக்கணும். ப்ளேனில் போறதாலே கூடுதலா லக்கேஜ் ஒன்னும் கொண்டு போக முடியாது. அதுக்குக் கட்டுற கட்டணம் கூடுதல். அதான் வந்த விலைக்குப் போட்டுடலாமுன்னு......"

கோபாலுக்கு மனசு கேக்கலை. 'சாயந்திரம் வந்து பார்க்கறேன். அந்த அடகுக்கடையில் இன்னும் ஒரு அம்பது கூடுதலாக் கேட்டு வையுங்க'ன்னார். சாயங்காலம் கப்பலாண்டை போனபோது Pawn shop காரர் 150 மேல் தரமுடியாதுன்னாட்டாராம். சரவணனோட அறைக்குப்போய் டிவியைப் பார்த்தோம். இதுக்கு நூத்தியம்பதுதானா? கோபாலுக்கு மனசே ஆறலை. 'ஏம்மா...பேசாம நாமே வாங்கிக்கலாம். புது மாடலா இருக்கு. பெட் ரூமுக்கு ஆச்சுன்னு 250 எடுத்து சரவணன் கையில் வச்சார்.

(இந்த டிவி இன்னும் நம்மூட்டுலே இருக்கு. நல்லவே வேலை செய்யுது. ஆனா இந்த வருசம்தான் கடைசியாம். நம்ம நாட்டுலே டிவி காமிக்க டிஜிட்டல் ட்ரான்ஸ்மிஷன் மாத்தறாங்களாம். இனிமேல் இந்த டிவி எல்லாம் பயன்படாதுன்னு அரசாங்கம் சொல்லுது. இருந்துட்டுப் போகட்டும். தமிழ்சினிமா பார்க்க வச்சுக்கிட்டால் ஆகாதா? இப்பவே நம்ம ஜிம் அறையில் அதை வச்சுத்தான் தமிழ்ப்பாட்டு டிவிடி போட்டுட்டு நடைப்பயிற்சி செய்யறோம்.)


தொடரும்...................:-)

24 comments:

said...

கப்பல்னா இத்தன விஷயங்களான்னு மலைப்பா இருக்கு.
நிறைய கத்துகிட்டேன்!

said...

:) வழக்கம் போல ந்ல்லா இருக்கு டீச்சர்

said...

You can use a set top box (converter) for Analog TV even if you are receiving digital transmission.

said...

அழகான படங்களுடன் கப்பலை சுத்திக் காண்பித்ததற்கு நன்றி மேடம்.

said...

அருமையான பிக்னிக் .தேங்க்ஸ் துளசிக்கா .
அந்த ஸ்டூடன்ட் கொடுத்து வச்சவங்க .{masal dosa )
நமக்கு இன்னி வரைக்கும் ஒரு தமிழ் குரலும் கேக்க மாட்டேங்குது நம்மை சுத்தி ஒன்லி பஞ்சாப் அண்ட் குஜராத் .என்னதான் நாமே சமைச்சாலும் எக்ஸ்பெர்ட் கையால் சாப்பிடருது ஆஹா !!
நீங்க சாட்டிலைட் டிஷ் கனெக்ஷன் கொடுத்து அந்த டிவிய பயன்படுத்தலாம் .இங்கும் மாத்திட்டாங்க நாங்க ஒரு டிவிய சாட்டிலைட் வச்சு தான் பயன்படுத்தறோம்

said...

இனிமேல் இந்த டிவி எல்லாம் பயன்படாதுன்னு அரசாங்கம் சொல்லுது. இருந்துட்டுப் போகட்டும்

உங்க டிவிக்கு ஒரு மெகா ஆபர் இங்கே வந்து பாருங்க
http://youtu.be/xu-Donpyq7I


subbu rathinam

http://menakasury.blogspot.com

said...

//நம்மூர் கடற்கரைக்குப் போனாலும் கப்பல் எதாவது தெரியுதான்னே கண்ணை நட்டுக்கிட்டு இருப்பேன். இந்த ஆசையில்தான் ஒரு முறை கார் விபத்து ஒன்னுகூட எனக்கு ஏற்பட்டுருச்சு:( ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்தர் சொன்னது நெசம்தான்!//

மரம் மறைக்காத இடமாப் பார்த்து முதல்லேயே காரைப் பார்க் செஞ்சுருந்தா போலீஸ் அடி மாதிரியான ஊமை அடி பட்டிருக்காது இல்லியா..

மாசக்கணக்குல கப்பல்ல கஷ்டப்பட்டாலும் சரவணன் &கோ வுக்கு நல்லபடியாத் தாயகம் திரும்பி வர முடிஞ்சதே.. அதுவே சந்தோஷம்.

said...

அடாடா... சம்பளம் இல்லாம எத்தனை மாதம் இருந்து இருக்காங்க பாவம்...

தொடர்ந்து கப்பலில் இருப்பதும் ஒருவித தண்டனை தான். நண்பர் ஒருவர் சமையல் கலை படித்து விட்டு மெர்ச்சண்ட் நேவியில் இப்படித்தான் கடலாறு மாதம் நிலம் ஆறு மாதம் என்று இருக்கிறார்....

தொடரட்டும்...

[இன்று பயிற்சி நல்லபடியாக முடிந்தது... :)]

said...

என்னமா நெனவு வெச்சிருக்கீங்க. வீட்டுல வல்லாரைத் தோட்டம் இருக்கா? :)

எரியுற வீட்டுல பிடுங்குற மட்டும் லாபம்னு அந்த அடகுக் கடைக்காரர் நெனச்சிருப்பாரு. அந்த டிவி இன்னும் நல்லா வேலை செய்யுதே. சப்பான் சாமானாச்சே.

said...

இன்னும் எனக்கு கூட கப்பல்/கடல் ஆசை தீராமல் இருக்கு.
நாகப்பட்டினம் ஆசையோ அல்லது பூர்வ ஜன்மம் ஆசையோ!

said...

வாங்க வெற்றிமகள்.

சொன்னது ஒரு சதம்கூட இருக்காது.
ஏகப்பட்ட விஷயங்கள் கொட்டிக் கிடக்கு, அது ஒரூ தனி உலகம்.

said...

வாங்க நான் ஆதவன்.

நன்றி:-)

said...

வாங்க தெய்வா,

அதுக்குக் கொடுத்த காசுக்குமேலே வேலை செஞ்சுருச்சு. இந்த செட் அப் பாக்ஸ் வாங்கறதுன்னா இங்கே நிறைய காசு செலவாகும் அதே காசுக்கு ஒரு புதிய 32" ப்ளாட் ஸ்க்ரீன் ப்ளாஸ்மா வாங்கிடலாம். இடமாவது மிஞ்சும். டிவி விலை குறைஞ்சுக்கிட்டே போகுது.

இன்னும் ஒரு நாலைஞ்சு மாசம் இது பயனில் இருக்கும்.

said...

வாங்க ராம்வி.

கடற்பயணம் கொஞ்சம் தெரிஞ்சுக்கணுமுன்னா நரசய்யா வாசிக்கலாம்.

கடல் கணேசன்னு கூட ஒருத்தர் எழுதி இருக்கார்.

படு சுவாரசியமானவை.

said...

வாங்க ஏஞ்சலீன்.

சாட்டிலைட்டெல்லாம் வச்சுக்கும் அளவுக்கு பெரிய ஸ்கேல் இல்லையேப்பா!

தமிழ் பேச்சு மட்டுமில்லைப்பா....மலையாளம் பேசிட்டு வசமா, சுற்றுலா வந்த ஒரு குடும்பத்துடன் தொடர்பு ஏற்பட்டுப்போச்சு:-))))))

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா & மீனாட்சி அக்கா.

ஆஃபர் அருமை. இன்னும் ரெண்டு பாக்கெட் எக்ஸ்ட்ரா எடுத்து வையுங்க. ஒரு தையல்மெஷீனும் கொண்டு வர்றேன்":-))))))))))))

பெல்ட் லூஸாப்போச்சு. அதைக்கூட மாத்த முடியாது இங்கே.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆஹா .....ஆஹா..... வகுப்புலே இப்படித்தான் சுட்டியும் கையுமாச் சூட்டிகையா இருக்கணும்:-)))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆஹா.... பயிற்சி முடிந்து வெற்றிகரமா ரிட்டர்ன் டு ப்ளாக்!!!!!!

ஒரு முறைக் கடலுக்குப்போனா.... திரும்பத் திரும்பக் கடல்தான். அது என்னமோ கஷ்டம் இருந்தாலும் ஒரு வஸீகரம் இருக்கு அங்கே!

said...

வாங்க ஜீரா.

வல்லாரை எல்லாம் இல்லை. துளசிக்குப் பலமும் பலவீனமும் ஒன்றே!!!!

சப்பான்...சும்மாச் சொல்லக்கூடாது.... 30 வருசம் முன்னே வாங்குன ரைஸ்குக்கர், டோஸ்ட்டர், வேக்குவம் க்ளீனர் எல்லாம் இப்பவும் குறைவில்லாமல் வேலை செய்யுது. அப்க்ரேடு செஞ்சு தூக்கிப்போட மனசு வரலை. உழைக்கும் வரை உழைக்கட்டும் (டச் வுட்)

said...

வாங்க குமார்.

கப்பலுக்கும் கடலுக்கும் ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்யுது.

போன ஜென்மத்தில் நான் திமிங்கிலம்:-)

said...

கப்பலை நல்லா சுத்திப் பார்த்தோம்....

said...

வாங்க கோவை2தில்லி.

ரசிப்புக்கு நன்றி,.

said...

கப்பல் எல்லாம் ஓட்டி காண்பித்து விட்டீர்கள் :))

அருமை.

said...

வாங்க மாதேவி.

கையில் (மட்டும்)கிடைக்கட்டும். ஓட்டிறலாம்:-))))