ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னே நியூஸி இருந்துருக்குமா? பின்னே? வேற எதாவது பெயரிலோ இல்லை பெயரே இல்லாமலோ இருந்துதானே இருக்கணும். அப்போ அந்தப் பெயரில்லாததுக்கு, தாடி வந்து போயிருப்பாரோ? ச்சான்ஸே இல்லையாக்கும் கேட்டோ:-)
நம்மூர்லே நல்ல பெயரையும் கெட்ட பெயரையும் கணக்கு வழக்கில்லாம ஒரே நேரத்துலே சம்பாரிச்சது EQC.( Earth Quake Commission) இதுலே நம்ம நகரத்துக்கு இப்ப முழுப்பொறுப்பும் ஸெராவுக்குத்தான். CERA(Christchurch Earthquake Recovery Authority)
பாதுகாப்பு காரணமா ஒரு கடையையோ, இல்லை கட்டிடத்தையோ, இல்லை வீட்டையோ இடிக்கணுமுன்னு ஸெரா சொல்லிட்டா.... அதை எதிர்த்து யாரும் கோர்ட்டுக்குப்போய் அப்பீல் பண்ணிக்கிட்டோ ஸ்டே ஆர்டர் வாங்கிக்கிட்டோ இருக்க முடியாது. நகரின் பாதுகாப்பைப் பொறுத்தவரை இவுங்கதான் முழுக்க முழுக்க முழு அத்தாரிட்டி.
நம்மிடங்களைப் பழுதுபார்க்க EQC நமக்கு அனுப்பும் வேலையாட்கள் நல்லவங்களா நமக்கு அமைஞ்சுட்டாங்கன்னா அதைவிட அதிர்ஷ்டம் வேறொன்னு இருக்கமுடியாது.(டச் வுட்) உள்ளூர் வேலையாட்கள் போதலைன்னு வெளியூர் ஆட்கள் இங்கே வந்து ஒப்பந்தம் போட்டு பணிகளைச் செய்யறாங்க. அதிலும் வெளிநாட்டு ஆட்கள்/கம்பெனிகள் பல தாற்காலிகமா இங்கே வந்து டேரா போட்டுருக்கு. இதுலே சிலர் Rude cats:(
(எனக்கு எல்லாத்துக்கும் எடுத்துக்காட்டு பூனைதான்)
'தாடி' பேச்சைக் கடைப்பிடிக்க ஆரம்பிச்சு, இப்ப எல்லாமே விளையாட்டுதான் எங்களுக்கு. எப்பவும் ஜெயிக்கவே முடியாத ஒரு அலகிலா விளையாட்டு. ஆட்டத்தை வச்சு இன்னொரு ஆட்டம் போட ஒருத்தர் ஐடியா கொடுத்துட்டாரு:-)))))
அந்த ஆட்டம் போரடிச்சா இனி இந்த ஆட்டம் ஆடணும். இதுக்குப்பெயர் க்வேக்கோப்போலி (Quakopoly) . இதுக்கு வம்சாவளி நம்ம Monopoly Game :-)))))
ஆடத் தேவையான பொருட்கள்: 2 Dice & இதிலுள்ள படத்தின் Print out. கூடி விளையாட யாருமில்லைன்னாலும் பரவாயில்லை. தனியாவும் விளையாடலாம். விளையாட்டில் வெற்றி, தோல்வி எல்லாம் சகஜமப்பான்னு இனி யாரும் நாக்குமேலே பல்லுப்போட்டுச் சொல்லமாட்டாங்க:-)))))
ஆடிப்பார்த்துட்டுச் சொல்லுங்க:-)
தாடி அன்றே சொன்னார்....இடுக்கண் வருங்கால் நகுக!!!!!!!
Friday, January 06, 2012
'தாடி' சொன்னா, கேப்போம்!
Posted by துளசி கோபால் at 1/06/2012 10:54:00 AM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
wow! எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!
அட, அந்தக் காலத்தில் நாங்க நாட்கணக்காக விளையாடும் மோனோபோலி:)!
:))
ரூம் போட்டு யோசிப்பாங்களோ :-)))))
தாடி வந்து போயிருப்பாரோ? ச்சான்ஸே இல்லையாக்கும் கேட்டோ:-)
தாடி அன்றே சொன்னார்....இடுக்கண் வருங்கால் நகுக!!!!!!!
எதுக்குங்க தாடியை இழுத்தீங்க
இந்தப் பதிவுக்கு?????
தனியாவும் விளையாடலாமா... ஆச்சரியமான ஆனா சுவாரஸ்யமான விளையாட்டுதான்,
வாங்க அப்பாதுரை.
யோசிக்க வைக்குதுங்க இந்த நடுக்கம். இன்னிக்கு 13. அதுலே ரெண்டு கொஞ்சம்(!)பெருசு. 4.9 அண்ட் 4.7.
வாங்க ராமலக்ஷ்மி.
நாங்களும் ஆடி ஆடி சொத்துக்களையும் ஹோட்டல்களையும் ஊரையும் வாங்கிக் குவிச்சுருக்கோம் ஒரு காலத்தில். அதுலே நியூஸி வெர்ஷன்லே லோகல் பெயர்கள் எல்லாம் இருக்கும்:-))))
வாங்க கயலு.
சிரிச்சுப்போச்சு நம்ம பொழைப்பு.
சிரிப்பானுக்கு நன்றி. நெவர் வின் சிசுவேஷன்!
வாங்க அமைதிச்சாரல்.
இடிஞ்ச கட்டிடத்துக்கு எதிரில் இருந்தும் யோசிச்சிருக்க வாய்ப்பிருக்கு:-)))))
வாங்க இராஜராஜேஸ்வரி.
அடடா.... இந்த தாடி 'அந்த ' தாடி இல்லைங்க.
துளசிதளத்தில் சில செல்லப்பெயர்கள் இருக்கு. நம்ம வீட்டில் பாட்டன் முப்பாட்டன்னு இருந்த முன்னோர்களைச் செல்லப்பெயரில் சொல்வதுபோல் இலக்கிய மேதைகளைச் சொந்தம் கொண்டாடுவேன்.
தாடி= திருவள்ளுவர்
முண்டாசு = பாரதி.
வாங்க கணேஷ்.
விளையாட்டுதானேங்க முக்கியம். தனியா இருக்கும்போது பைத்தியம் பிடிச்சுப் பாயைச் சுரண்டாம இதை விளையாடித் தலையை உடைச்சுக்கலாம் பாருங்க:-)))))
நானும் தாடி ன்னதும் யாரைச் சொல்றீங்அன்னு யோசிச்சேன்:)
நல்ல ஐடியாதான். இது விளையடும்போது ஆட்டம் கண்டுக்கிட்டா இஷ்டத்துக்கு இடம் மாற்றிக் கொள்ளலாம்:)
சுவாரஸ்யமான விளையாட்டு.
தனியா இருக்கும்போது பைத்தியம் பிடிச்சுப் பாயைச் சுரண்டாம இதை விளையாடித் தலையை உடைச்சுக்கலாம் பாருங்க//
:) rasichen
இடுக்கண் வருங்கால் நகுக! - என்னமா சொல்லி வைத்திருக்கிறார் தாடி!
ஆனால் முடிவதுதான் இல்லை....
ஜார்ஜ் புஷ் மேல ஷூ வீசிய பிறகு அது போன்ற விளையாட்டுகள் இணையத்தில் வந்தன. மக்களுக்கு பிரச்சனைகளை விளையாட்டாக எடுத்துகச் சொல்லித்தராங்களோ என்னவோ
:)
இடுக்கண் வருங்கால் நகுக! - என்னமா சொல்லி வைத்திருக்கிறார் தாடி!
ஆனால் முடிவதுதான் இல்லை....
நிலமெல்லாம் நடுங்குகையில், கட்டடங்கள் தகர்ந்து சரிகையில்,
யார்முகத்தில் பொங்கிவரும் சிரிப்பு!!!
ஹா..... வல்லி யூ டூ........!!!!
எஸ் யூ ஆர் 1000% கரெக்ட்டு. எப்படியும் இது நெவர் வின் கேம். ஹிஹி....
வாங்க காஞ்சனா.
சுவாரசியம்.....உண்மை!!!!
நன்றி.
வாங்க புதுகைத்தென்றல்.
தினமும் உங்க நினைப்புதான் எனக்கு!
எல்லாம் அந்த சமையல் ட்ரிக்தான்.
ஹாட் கேஸ் தயிர் அட்டகாசம்:-)))))
வாங்க வெங்கட் நாகராஜ்.
முடிவு எப்போ வரும் என்று மண்டையை உடைச்சு யோசிக்கிறாங்க(ளாம்) விஞ்ஞானிகள்!
வாங்க கோவியாரே.
மனமுடைஞ்சு நின்னு முழிக்காம எதையும் சுலபமா எடுத்துக்க இது(வும்) ஒரு பயிற்சிதான்.
பொதுவா நியூஸி ஆட்கள் கொஞ்சம் naive தான்.
வாங்க இராஜராஜேஸ்வரி.
உண்மைதான். அப்போ அலறிக் கத்திட்டு ஓய்ஞ்சுருவோம். பத்து நிமிசம் கழிச்சு பொங்கும் சிரிப்போடு கண்ணை அகலமாத் திறந்து வியந்துக்கிட்டே விவரிப்புதான். அதான் இந்த முறை தப்பிட்டோமுல்லேன்னு:-))))
தாடி என்று படித்ததும் யார் ?? யோசனை வந்தது...
ஆகா நல்லா இருக்கிறதே :)))
வாங்க மாதேவி.
ஆஹா..... ரசனைக்கு நன்றி:-)))))
Post a Comment