வானவில்லுக்கு இன்னும் நாலு பாக்கின்னு சொல்லிக்கலாமா? போனவாரம் கடை விஸிட்டில் கண்ணில் பட்டது இந்தக் 'காலி'ப்பூ! கண்ணுக்கு மட்டுமா கலர் வேண்டி இருக்கு? இப்பெல்லாம் வயித்துக்கும்தான் கேட்டோ:-)
ஒரு மூணு வருசத்துக்கு முன்னே இப்படி ஒரு பதிவு போட்டுருந்தேன். அதை மீண்டும் நினவு'படுத்தும்' குற்றம் புரிந்தது இந்த பூவுதான் மை லார்ட்!
சாப்பாட்டுத்தட்டில் ஒரே மாதிரி வெள்ளையாப் பார்த்துப் போரடிச்சுப்போய் சிலபல ஆராய்ச்சிகள் செய்து ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்fடு பிடிச்சதாம். நாம் இப்போ ஆரஞ்சு வண்ணத்தில், பொதுவாப் புழங்கும் கேரட்(24???) ஹாலந்து நாட்டின் அரச குடும்பத்தைக் கௌரவிச்சுப் போற்றிக் கொண்டாடன்னே டச்சு நாட்டு விவசாய நிபுணர்களால் கண்டு பிடிக்கப்பட்டதாம். அதுக்குமுன்னே? வெறும் வெள்ளை, இளமஞ்சள், பர்ப்பிள்ன்னு இருந்துச்சாமே!!!
பொதுவா பச்சை நிறமுள்ள காய்கறிகள் உடம்புக்கு நல்லது. ஆரஞ்சு வண்ணத்தில் இருப்பதில் வைட்டமின் A அதிகம் இருக்கு. ரத்தச்சிகப்பு பீட்ரூட்டு தின்னால் உடம்பில் ரத்த விருத்தின்னு சொல்லக்கேட்டிருக்கோம். அதைப்போலவே புது வண்ணத் தயாரிப்பில் வெற்றிகண்ட விவசாய நிபுணர்கள் சொல்வது, 'கலர் காலிப்'பூ' வில் வெள்ளையைவிட சத்து கூடுதல்'! (மார்கெட்லே சரக்குக்கு மார்க்கெட் வேணுமுல்லே?)
வேகவைத்த காய்களை மட்டும் தின்னும் ஆட்களுக்கு மன மகிழ்ச்சி ஊட்ட இப்போ ஆரஞ்சு இளம்பச்சை, வெள்ளை, பர்ப்பிள் ( இதுலே கடும் பர்ப்பிள் , இளம் பர்ப்பிள், இது ரெண்டுக்கும் மீடியமா இடைப்பட்ட பர்ப்பிள்ன்னு மூணு வகை இருக்கு.) எல்லாத்தையும் ஒரே அளவில் ஒன்னு போல வெட்டி ஆவி பிடிச்சுக் கொடுத்தால் டின்னர் ப்ளேட் பார்க்க கலர்ஃபுல்லா அமர்க்களமா இருக்கும். வெந்தாலும் சாயம் போகாது. எல்லாம் கெட்டிச்சாயம்!! (கூடுதல் நிறமாக் கடும்பச்சை வேணுமுன்னா...ப்ரோக்கோலியையும் சேர்த்துக்கலாம்.
நம்வீட்டு வழக்கபடி இதை வச்சு ஒரு சமையல் முடிச்சேன். சுலபச் சமையல்தான். காரமில்லாத காலிப்பூ கறி.
தேவையான பொருட்கள்.
பர்ப்பிள் காலி - அரை ( ஒரு 350 கிராம் இருக்கும்)
பாசிப்பருப்பு - கால் கப்
தேங்காய்த்துருவல்: 2 மேசைக்கரண்டி.
காய்ஞ்ச மிளகாய் - மூணு ( சின்ன துண்டுகளா கிள்ளி வச்சுக்கணும்)
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
சீரகம் - அரைத்தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
உப்பு- முக்கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி.
செய்முறை:
பாசிப்பருப்பு(பயற்றம் பருப்பு) ஒப்ரு கிண்ணத்தில் போட்டுக் கழுவிட்டு அதன் தலையில், கொஞ்சம் தண்ணீரைக் கொதிக்க வச்சு ஊத்தி ஒரு தட்டுப்போட்டு மூடி வச்சுருங்க. சமையல் முடிக்கும்போது எடுத்துக்கலாம்.
காலிப்பூவை நல்லாக் கழுவிட்டு சின்னத்துண்டுகளா நறுக்கி வச்சுக்குங்க. ஒரு வாணலியை பத்த வச்ச அடுப்பில் ஏத்தி லேசா சூடானதும் அதில் ரெண்டு மேசைக்கரண்டி எண்ணெயை ஊத்துங்கோ.. எண்ணெய் காய்ஞ்சதும் மிளகய்த் துண்டுகளைப்போட்டு நல்லா வறுத்துட்டு ஜல்லிக்கரண்டியால் மிளகாய்களைக் கோரி எடுத்துத் தனியா ஒரு தட்டில் வச்சுருங்க. இப்ப அதே வாணலியில் சீரகத்தையும் கருவேப்பிலையையும் சேர்க்கவும். படபடன்னு வெடிக்க ஆரம்பிச்சதும் பெருங்காயம், உப்பு சேர்த்துக் கிளறி நறுக்கி வச்சக் காலிப்பூக்களைப் போட்டு வதக்குங்க. அரை வேக்காடா இல்லாம முழு வேக்காடா காய் இருக்கணுமுன்னா ஒரு கால் டம்ப்ளர் தண்ணீரை சேர்த்துக்கலாம். தட்டுப்போட்டு மூடி வச்சு ஒரு நாலு நிமிசத்துலே தண்ணீர் எல்லாம் வற்றிக் காய் வெந்து போயிருக்கும்.
பாசிப் பருப்பில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி, அந்தப் பருப்பையும் தேங்காய்த்துருவலையும் சேர்த்து ரெண்டு நிமிட் கிளறிட்டுத் தட்டு போட்டு மூடிவச்சுட்டு அடுப்பை அணைச்சுருங்க. அம்புட்டுதான்.
நான் பர்ப்பிள் மட்டும் வாங்குனதால் இப்படி ஆச்சு. அடுத்த முறை வேற நிறங்களில் உள்ளவைகளையும் சேர்த்து வானவில் கறி ஆக்கிடலாம். ருசியில் ஒரு வித்தியாசமும் இல்லை. வெள்ளை போலத்தான் இருக்கு. ஆனாலும் ஒரு ஃபேன்ஸி ஐட்டம் கிடைச்சால் விடலாமா?
PIN குறிப்பு: அநேகமா இந்த வாரம் சமையல் வாரம்

34 comments:
டைட்டிலை பார்த்தா ஏதோ கவிதைன்னு நினைக்கத்தோணுது..
என்னதான் வண்ணமயமாகி இருந்தாலும் சமைச்சவுடன் வண்ணம் மாயமாகிவிடுகிறது.
இங்கிட்டும் வண்ண வண்ண உருளை, கோஸ், டர்னிப்பெல்லாம் வருது விலை கொஞ்சம் கூடுதல்.
பல வண்ணங்களில் பெரிசு பெரிசா பூக்கும் கோழிக்கொண்டை பூ நினைவுக்கு வருது. நிறம் மாறிய பூக்கள் அழகு. ருசியான குறிப்புக்கும் நன்றி.
//பொதுவா பச்சை நிறமுள்ள காய்கறிகள் உடம்புக்கு நல்லது. ஆரஞ்சு வண்ணத்தில் இருப்பதில் வைட்டமின் A அதிகம் இருக்கு. ரத்தச்சிகப்பு பீட்ரூட்டு தின்னால் உடம்பில் ரத்த விருத்தின்னு சொல்லக்கேட்டிருக்கோம்//
இது எல்லாவத்தையும் எப்ப வாங்கி எப்ப செஞ்சு எப்ப உடம்ப சரி பண்ரது ?
இது எல்லாத்தையும் ஒரு ஜூஸா பண்ணித் தர எதுனாச்சும் கம்பெனி முன் வருதா அப்படின்னு
வைட் பண்ணிட வேண்டியது தான்.
அது சரி. இந்த காலி ஃப்ளவர்லே புழு நிறைய இருக்குமே !! அத வாங்கி ஒவ்வொண்ணா பிரிச்சு, ஒரு
பாத்திரத்திலெ போட்டு, நல்ல சுடு தண்ணீரிலே கொஞ்ச நேரம் போட்டுப் பாருங்க !!
உலகத்துலே இருக்கற எல்லா ஜீவ ராசிகளும் ஒவ்வொண்ணா வெளில வரும்.
உண்மையா சொல்லப்போனா நல்லா கழுவிப்போடாத காலி ஃப்ளவர் ஒரு நான் வெஜ் வெஜிடபிள்.
மீனாட்சி பாட்டி.
வாய்க்கு மட்டுமல்ல.. கண்ணுக்கும் விருந்தா இருக்கணும்ன்னு மெனக்கெடுற 'அவங்க' கொள்கையை நிச்சயமா பாராட்டணும்..
குறிப்பும் நல்லாருக்கு.
அடடா... கலர் கலரா பாக்கறதுக்கு நல்லாத்தேன் இருக்கு... சாப்பிட்டுப் பாத்தாதான் தெரியும். இங்கிட்டுல்லாம் வெள்ளை நிறம் மட்டும்தேங்... (சமையல் வாரமா... கலக்குங்க)
இலகுவான செய்முறை; ருசிதான் எப்படி இருக்குமோ!!!
கிள்ளி வச்சுக்கணும்)
பக்கத்திலே இருக்கறவங்களையும் கிள்ளிவச்சிருவீங்களா?????
நிறம் மாறும் 'பூ'க்கள்."
வண்ணமயமான பகிர்வு..
சமையல் வாரத்துக்கு வாழ்த்துகள்..
அட கலர்கலரா காலி ஃபிளவர்.. எனக்குக் கூட இந்த தில்லியில் ஒரே நிறத்தில் பார்த்துப் பார்த்து போரடித்துவிட்டது....
இந்த வாரம் சமையல் வாரம்... - ரொம்ப நல்லது...
சமையல் குறிப்பு சிறப்பாக இருக்கு.படங்கள் அற்புதமாக இருக்கு.
இதுபோலவே முட்டைக்கோசு, சிம்லா மிரிச்சி எல்லாமும் பல கலர்களில் கிடைக்குது.
மீனாட்சிப் பாட்டி சொல்கிற மாதிரி நம்ம ஊர்ல ஜீவன்களும் உள்ள இருக்கும்:)
இன்னிக்கு வெள்ளை காலிப்பூ தான் சமையல்.
புழு இல்லை. குளிர்காலத்தில் நல்ல வெள்ளையாத்தான் இருக்கு.
இந்த வாரம் சமையல் வாரமா. அசத்துங்கம்மா அசத்துங்க.
வாங்க சி.பி.செந்தில்குமார்.
பொதுவா எனக்கும் கவிதைக்கும் காத தூரம். இப்போ அது கொஞ்சம் தலைப்பால் குறைஞ்சுருச்சே:-))))))
வருகைக்கு நன்றி.
வாங்க கோவியாரே.
இது கெட்டிச்சாயம். கேரண்டீ இருக்கு:-))))
சமைச்சால் நிறம் மாறுவதில்லையாக்கும்!
விலை கொஞ்சம் கூடுதல்தான். எப்பவாவதுதானே வாங்கறோமுன்னு இப்பக் கொஞ்சம் தாராளமா இருக்கேன்:-)))))
வாங்க ராமலக்ஷ்மி.
எனக்குக் கோழிக் கொண்டைப்பூக்கள் ரொம்பப் பிடிக்கும். பூச்சாடியில் வச்சால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்கும். இங்கேதான் கிடைப்பதில்லை:(
வாங்க மீனாட்சி அக்கா.
அந்த வெந்நீரில் கொஞ்சம் உப்பும் சேர்த்து அதில் பூக்களைப் பிரிச்சுப் போட்டா புழுவார் சட்னு வெளியே வந்துருவார். (அவருக்கு உப்பு ஆகாதாம். அவரோட டாக்குட்டர் சொல்லி இருப்பார் போல!)
இங்கேயும் வெந்நீரில் போட்டு வைப்பதுதான். ஆனால் புழுக்கள் இருப்பதில்லை. வெறும் வெஜ்தான்:( செலவில்லாம 'நான்வெஜ்' திங்க முடியலையேக்கா:-))))))
நாமே ஜூஸாப்போட்டுக் குடிக்கலாம். பிரச்சனை என்னன்னா ஜூஸரை நாமே கழுவி வைக்கணும் கேட்டோ:(
வாங்க அமைதிச்சாரல்.
வண்னமில்லா வாழ்க்கை பாழ்! இதுக்குத்தான் எல்லோரும் மெனெக்கெடறாங்க:-)))))
வாங்க கணேஷ்.
சாப்பிட்டவங்க இதோ அஞ்சு நாளாகியும் அழிவில்லாம இருக்கோம்.
தைரியமாத் திங்கலாம்:-))))
வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம சமையல் வாரமுன்னு சொல்லிட்டேன். இப்ப இதுக்காகவே தினம் சமைக்க வேண்டி இருக்கு!!!!!
வாங்க சந்திர வம்சம்.
ருசியில் வேறுபாடு ஒன்னும் இல்லை. கண்ணுக்குப் பழகணும் அம்புட்டுத்தான்:-))))
வாங்க வெங்கட் நாகராஜ்.
கூடிய விரைவில் அங்கும் 'கலர்' வந்துரும்!
சாம்பார் ரசம் குழம்புன்னு இல்லாம வேற எதாவது செய்யணுமுன்னு அல்லும் பகலும் தீராத யோசனையில் இருக்கேன்:-))))
வாங்க ராம்வி.
உங்கள் ரசனைக்கு இனிய பாராட்டுகள்:-)
வாங்க லக்ஷ்மி.
உண்மைதான். அந்த முட்டைக்கோசுதான் சமைச்சால் இருளோன்னு போயிருது:(
சிம்லா மிர்ச்சி ஸ்பெஷல் இன்னைக்கு!
கட்டாயம் வரணும்,கேட்டோ!
வாங்க வல்லி.
பதிவரா ஆனதால் சமையலைக் கைவிடலைன்னு பின்னே எப்படி அறிவிப்பதாம்? அதான்.....:-)))))
வாங்க இராஜராஜேஸ்வரி.
கிள்ள ஆசைதான். ஆனா.... பக்கத்தில் யாரும் இல்லையே:( முந்தின்னா நம்ம கோகி கூடவே இருப்பான். அவனை ஒரு கிள்ளு கிள்ளுனா பதிலுக்கு அவனும் கிள்ளி வைப்பான். ஏகதந்தன் ஆனதால் நோ கடி:-)
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
உங்க வீட்டுக்கு சாப்பிட வரலாமா? ஹிஹி..
வாங்க அப்பாதுரை.
நெசமாவாச் சொல்றீங்க!!!!!!
ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி:-))))
எமனையே பாடம்கேக்க வச்சவராச்சே!
கட்டாயம் வாங்க வாங்க வாங்க.
சப்பாத்தியும் நிறம் மாறும் பூக்களும்...
உடலுக்கு ஹெல்தியான குட் டயட்.
வாங்க மாதேவி.
இன்னிக்கு முச்சூடும் நம்மூட்டுலேதானா:-))))))
வாங்க வாங்க. ஹெல்த்தி சமையல்தான் தினமும்!
ஆகா சூப்பரா இருக்கு..:)
வாங்க கயலு.
கிடைச்சால் விடவேண்டாம், கேட்டோ!
Really colorful- cauliflower and the blog content
வாங்க Layman.
Welcome to Thulasidhalam.
Thanks for the comment.
அடடா. செம கலர்புல்லா இருக்கே. எல்லா கலரிலும் ஒன்னு பார்சல் :-).
இப்போ கோஸ் கூட கலர் கலரா வருது. சீக்கிரம் கலர் பென்சில் மாதிரி எல்லாமே எல்லா கலரிலும் கிடைக்கும் போல :-)
Post a Comment