தலைப்பே எல்லாத்தையும் சொல்லி இருக்கணுமே! குழிப்பணியாரத்தை எப்படி சுலபமா, ரொம்ப மெனெக்கெடாமச் செஞ்சு பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்: குழிப்பணியாரச் சட்டி.(ரொம்ப முக்கியமான ஐட்டம் இதுதான்) வெளிநாட்டு நண்பர்கள், லீவில் ஊருக்குப்போகும்போது சோம்பல்படாம ஒன்னு கையோடு வாங்கிக்கிட்டு வந்துருங்க. நல்ல 'நான் ஸ்டிக்' வகை(ப்ரீமியர் கம்பெனி) சின்னதும் பெருசுமான அளவில் கிடைக்குது.
அரிசிமாவு : 4 குழிக்கரண்டி
உளுந்தமாவு : 1 குழிக்கரண்டி.
ஈஸ்ட் : ஒரு சிட்டிகை
சர்க்கரை: கால் தேக்கரண்டி
கடலைப்பருப்பு : ஒரு குழிக்கரண்டி
உப்பு : முக்கால் தேக்கரண்டி இது எங்க வீட்டு அளவு. உங்களுக்கு BP தேவைக்கு மேலே இல்லைன்னா இன்னும் ஒரு காலோ அரையோ தேக்கரண்டி உங்க ருசிக்கு சேர்த்துக்கலாம்.
வெங்காயம் : பெருசா ரெண்டு
பச்சை மிளகாய் : நாலு இல்லை அஞ்சு
இஞ்சி ஒரு செ.மீ துண்டு
கறிவேப்பிலை : ஒரு இணுக்கு
பெருங்காயத்தூள் : அரைத்தேக்கரண்டி.
கடுகு அரைத் தேக்கரண்டி
சீரகம் அரைத் தேக்கரண்டி
எண்ணெய்
செய்முறை சொல்லுமுன் சில குறிப்புகள்:-)))))
இது ஒரு NRI ஸ்பெஷல் ரெஸிபி. இந்தியப் பலசரக்குக் கடைகளில் அரிசிமாவு, உளுந்து மாவு எல்லாம் இப்போ நல்லாவே கிடைக்குது. சில இடங்களில் குழிப்பணியாரச் சட்டியும் கிடைக்கலாம். நம்ம ஊரில் இப்போதான் சப்பாத்தி மேக்கர்,சுமீத் மிக்ஸி, ப்ரெஸ்டீஜ் ப்ரெஷர் குக்கர். நான்ஸ்டிக் தோசைக்கல்லுன்னு வர ஆரம்பிச்சுருக்கு.
ஏற்கெனவே வீட்டில் இட்டிலி மாவு இருந்தால் அதைக்கூடப் பயன்படுத்திக்கலாம் ஆனால் ரொம்பப் புளிச்சது வேணாம். சரி இப்போ.... செய்முறை பார்க்கலாம்.
ஒரு அரை டம்ப்ளர் இளஞ்சூட்டு நீரில் ஈஸ்ட் ஒரு சிட்டிகை & கால் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து ஒரு பக்கம் வச்சுருங்க. குளிர் ஊர்க்காரர்கள் மட்டும் கடைப்பிடிக்கவும். உஷ்ணப்பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு இது தேவை இல்லை..
அரிசி மாவையும் உளுந்து மாவையும் கொஞ்சம் உப்புச் சேர்த்து இட்டிலிமாவுப் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக் கலந்து வைக்கணும். குளிர்மக்கள்ஸ் இப்போ அந்த ஈஸ்ட் கலவையையும் சேர்த்துக்கலாம். ஈஸ்ட் இல்லைன்னா கவலைப்படேல். ஒரு கரண்டி தயிர் இருந்தாலும் போதும்.
கடலைப்பருப்பைக் கழுவிட்டுக் கூடவே சேர்த்துக் கலந்தால் இன்னொரு வேலை மிச்சம். நான் கடலைப்பருப்பை மறந்துட்டு, கடைசி நிமிசத்தில் ஞாபகம் வந்து தொலைச்சதால் தனியா அரைவேக்காடு வேகவச்சு, நீரை வடிகட்டிட்டு சேர்த்தேன்:(
அஞ்சாறு மணி நேரம் கழிச்சுப்பார்த்தால் மாவு பொங்கி இருக்கும் (இருக்கணும்)
ஒரு வாணலியை அடுப்பில் ஏத்தி ரெண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊத்தி கடுகு சீரகம் பெருங்காயம் தாளிச்சு, அதுலே பொடியா அரிஞ்ச வெங்காயம் பச்சை மிளகாய். இஞ்சி, கருவேப்பிலை ( இதையும் பொடியா அரியணும் கேட்டோ!) சேர்த்து மூணு நிமிசம் வதக்கிட்டு மாவுலே சேர்த்துக் கலக்கிக்குங்க. இப்பப் பணியார மாவு தயார்.
பணியாரச் சட்டியை அடுப்பில் ஏத்தி குழிகளில் ஒவ்வொரு தேக்கரண்டி எண்ணெய் ஊத்திருங்க. அடுப்பு சிறு தீயா வச்சுக்குங்க. எண்ணெய் சூடானதும் சின்னக்கரண்டியால் மாவை எடுத்து குழிகளில் நிரப்பணும். ரெண்டு நிமிட்டில் லேசா ஒரு பக்கமாக் குத்தி நடுவில் இருக்கும் மாவு சரிஞ்சு குழியில் இறங்குவதுபோல் செய்யணும். இதைச் செய்யலைன்னா குண்டுப் பணியாரமாக் கிடைக்காது.:-) இதுக்குக் கரண்டி எல்லாம் தேவை இல்லை. மூங்கில் குச்சி (Bamboo skewer) ரெண்டு போதும். சரிஞ்சமாவு ஒரு நிமிட் வெந்ததும் குச்சியால் முழுசாத் திருப்பி விட்டுருங்க. இப்ப இன்னும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் குழிக்குள் ஊத்தணும். பொன் நிறமாக வெந்ததும், அதே குச்சியால் குத்தி வெளியே எடுத்துடலாம்.
நாலைஞ்சு முறை செஞ்சு பார்த்துட்டேன். அட்டகாசமா வருது! Easy peasy Gol Gol Ball
விருப்பப்பட்டால் இனிப்புப் பணியாரமாகவும் செஞ்சுக்கலாம். கலந்து வச்ச மாவு லேசாப் புளிச்சதும் வெல்லப்பாகு, (Golden syrup) தேங்காய்த் துருவல், நெய்யில் வறுத்த & வதக்கிய முந்திரி திராட்சை, ரெண்டு சிட்டிகைச் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் அரைத் தேக்கரண்டி சேர்த்து பணியாரமாச் சுட்டு எடுத்துக்கலாம். வெல்லம் , கடலைப்பருப்பு ஏலக்காய் சேர்ந்திருப்பதால் போளி/சுகியன் மணம் கிடைக்கும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
ஒரு முறை செஞ்சு சரியா வந்ததும். கற்பனைக் குதிரையை ஓடவிடுங்க. 'பயங்கர வகை'களில் செஞ்சு அசத்திடலாம்.
வெற்றி உமதே!
PIN குறிப்பு: வீட்டுக்கு வந்திருந்த இலங்கைத் தோழி, செய்முறை எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு இதுக்கு எங்க ஊரில் 'குண்டு தோசை'ன்னு பெயர் என்று சொன்னாங்க.
Tuesday, January 10, 2012
ஈஸி பீஸி Gகோல் Gகோல் Bபால் Bபால்
Posted by துளசி கோபால் at 1/10/2012 03:23:00 PM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
தமிழ் மணத்தில் இணைக்க முடியலை:(
யாராவது உதவுங்க ப்ளீஸ்.
சுவையான, சுலபமான பணியாரம் செய்யும் விதம் பற்றிய குறிப்புக்கு நன்றி மேடம்.படங்கள் அழகாக இருக்கு.
பேரைப்பாத்துட்டு ஏதோ புதுசா இருக்கேன்னு வந்தேன். எங்க வீட்ல எல்லாருக்கும் இனிப்பு பணியாரம்னா ரொம்பவே பிடிக்கும். அப்பப்போ இட்லிமாவு மீந்துபோகும் சமயம் காரம் பண்ணிடுவேன். சுவையான குறிப்புக்கு நன்றி.
தமிழ் மணத்தில் இணைச்சுட்டேன்.
கடைசி போட்டோ பார்த்தா ஆசையா இருக்கு. நீங்க இந்தியாவில் அதுவும் சென்னையில் இருந்தா வந்து
சாப்பிட்டுருப்பேன் டீச்சர் !
My wife is an expert in preparing this.
என் மனைவிக்கு பிடித்தது நீங்கள் சொன்ன மூறையில் செய்து பார்க்கிறேன் நல்லா வந்தா பாரு என் திறமையை என்றும் நல்ல வரவில்லை என்றால் உங்கள் தலையில் பழி போட்டு தப்பி விட வேண்டியதுதான். படங்கள் அழகாக வந்துள்ளதை பார்க்கும் போது நான் உங்கள் முறையை கடைபிடித்து நல்ல பெயரி வாங்கிவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஹீ...ஹீய்
ஆஹா க்ராண்ட் ஸ்வீட்ல நாம சாப்பிட்ட குழிப்பணியாரம் கூட இவ்வளவு நல்லா இல்லையே . என்ன கலர், என்ன உழைப்பு. சூப்பர் பா.
என்ன எங்க பேத்தி சொல்கிற ஈசிபீசியை நீங்களும் சொல்றீங்களே:)))))
tq for the easy receipe
வாங்க லக்ஷ்மி.
தமிழ்மணத்தில் சேர்த்துவிட்டதுக்கு என் மனமார்ந்த நன்றி.
அட்ரெஸ் பாரில் blogspot.com வராம blogspot.co.nz வந்துக்கிட்டே இருந்துச்சுங்க. அதனால் தமிழ்மணம் நீ இங்கே இல்லைன்னு தள்ளிருச்சு. நான்வேற ஒரு க.கை.நா. அதனால் என்ன காரணத்தால் அப்படி வந்துச்சுன்னு தெரியலை .
மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.
வாங்க ராம்வி.
ரசிப்புக்கு நன்றிப்பா.
வாங்க மோகன் குமார்.
உங்க தங்ஸ் எக்ஸ்பெர்ட்டா? அப்பா நான் சென்னை வரும்போது இதுக்காகவே உங்க வீட்டுக்கு விஸிட் அடிக்கப்போறேன்.
முன்னறிவிப்பு கட்டாயம் தருவேன்:-)
வாங்க அவர்கள் உண்மைகள்.
இது foolproof ரெஸிபி. வெற்றி உமதே. நல்லாத்தான் வரும். நம்ம புகழை தங்க்ஸ்க்குச் சொல்லுங்க:-))))
வாங்க வல்லி.
அது வெறும் நவ்வாலு. இங்கே அள்ளிக்கோ அள்ளிக்கோதான்:-)
இந்த ஈஸிபீஸி சொல்றதே ரொம்ப ஈஸிப்பா. எல்லாம் ஒரு வெள்ளைக்கார எதுகைமோனை.
'ஈஸிபீஸி இண்டியன் குக்கிங்' என்ற பெயரில் ஒரு சமையல் புத்தகம் வெள்ளையர்களுக்குப் போடப்போறேன். அதுக்கு காப்பிரைட் வாங்கியாச்சு கேட்டோ:-))))
வாங்க கமல்.
செஞ்சு பார்த்துத் தீர்ப்பு சொல்லுங்க:-))))
அசத்தர ரெசிபி. ஆனல் சட்டி இல்லயே. வேறே ஏதானா பயன்படுத்தலாமா?
குழிப் பணியாரம்... காரைக்குடில அழகப்பால படிக்கறப்ப அடிக்கடி சாப்பிட்டு ரசிச்சது. இங்க படங்களப் பாத்து மேட்டர் படிச்சதும் உடனே சாப்பிடத் தோணுது. (செய்யச் சொல்லி) சாப்ட்டுப் பார்த்துடறேன்... அருமை.
பணியாரம் நல்லா புஸ்புஸ்ன்னு இருக்குக்கா..ஈஸ்ட் சேர்த்து பணியார மாவு புளிக்கவைத்து செய்ததில்லை.
வாங்க வெற்றி மகள்.
வேற சட்டி........... ஊஹூம்... சரிப்படாது. மஃப்பின் ட்ரேயில் வச்சு பேக் செஞ்சு பரிசோதிக்கலாம். இப்ப சிலிகன் கப் கேக்ஸ் மோல்ட் வருது. அதுலே வச்சு மைக்ரோவேவினால் வருமோ என்னவோ!!!!
வாங்க கணேஷ்.
ஆசைப்பட்டதைச் சட்னு சாப்பிட்டுடணும்:-)))) அதான் செய்ய தங்ஸ் இருக்காங்களேன்னு இருக்காம நீங்களே முயற்சி செய்யலாம், ஒரு சேஞ்சுக்கு!!!!
வாங்க மேனகா.
சமையல் ராணி வந்தது ரொம்ப மகிழ்ச்சி. இந்த ஊரு குளிருக்கு துளி ஈஸ்ட் போடத்தான் வேணும். எனக்கு இந்த ஈஸ்ட் மணமே பிடிக்காது. ஆனால்.....வேற வழி இல்லை:(
இந்த 4:1 அரிசி& உளுந்தமாவுக் கலவையில் இட்லி செஞ்சு பரிசோதிச்சேன். அதிலும் வெற்றிதான். ஆனால்..... செஞ்ச அன்னிக்கே சாப்பிட்டு முடிக்கணும். ஃப்ரீஸ் செஞ்சால் அவ்வளவா சுவை இல்லை. தோசைக்கும் இது நல்லாவே வருது. நான் ஸ்டிக் தோசைகல்லில் இல்லாம சாதாரணத் தோசைக்கல்லில் ஊத்துனா மெலிஸா செய்யலாம்.
இப்ப மும்பையில் இருக்கற 11 டிகிரி குளுருக்கு இது மாதிரி சூடா செஞ்சு தந்தா நல்லாத்தான் இருக்கும் :-)
பாரம்பரியமா செய்யணும்ன்னுட்டு இரும்பு குழிப்பணியார பாத்திரத்தை வாங்கிட்டு வந்துட்டு, அதை மனசாட்சியே இல்லாம ஓரமா தூக்க்கி போட்டிருக்கேன். அடுத்தாப்ல இட்லி மாவு மீந்து போறப்ப பணியாரம் செஞ்சா ஆச்சு :-)
குண்டு தோசை... :) நல்ல பெயர்....
அம்மணி அப்பப்ப செய்வாங்க.... :)
வாங்க அமைதிச்சாரல்.
இந்த ஊருக்கு வந்த புதுசுலே ஒரு கடையில் தற்செயலா ஒரு குழிப்பணியாரச் சட்டி இரும்புலே(நல்ல காஸ்ட் அயர்ன்) கனமா ஒன்னு கிடைச்சது. எப்படி இந்த ஊருக்கு வந்துச்சுன்னே தெரியலை. நீளமா வால் போல் ஒரு கைப்பிடி கூட இருக்கு. நல்ல கனம்.சீன சமாச்சாரமோ என்னவோ! அதைத்தான் இத்தனை வருசங்களாப் பயன்படுத்திக்கிட்டு இருந்தேன், முக்கியமா கிருஷ்ண ஜயந்திக்கு அப்பம் செய்ய:-)
இந்த இந்தியப்பயணத்துலே வாங்குனதுதான் இந்த நான்ஸ்டிக்.
எங்களுக்கு இப்ப சம்மர். 15 டிகிரிதான் கேட்டோ:-)))))
வாங்க வெங்கட் நாகராஜ்.
அம்மணி நல்லாச் செய்வாங்கன்னா.... அடுத்த முறை உங்க வீட்டுக்கு ஒரு விஸிட் அடிச்சே ஆகணும்:-))))
ஆமா சரியாகத் தகவல்சேகரித்தீர்கள்.:))
குண்டு தோசை, குண்டு பணியாரம் என்று சொல்வோம்.
வாங்க மாதேவி.
குண்டுப்பணியாரம் ஓக்கே! காரணப்பெயர்ன்னு வச்சுக்கலாம்.
ஆனால்..... குண்டு தோசை????? இதுலே தோசை எங்கெப்பா வந்துச்சு!!!!
குழிபணியாரம் மிக அருமை.
ஈஸ்ட் சேர்த்ததில்லை. சேர்த்து பார்க்கீறேன்
எனக்கு இனிப்பு குழி பணியாரம் தான் ரொம்ப பிடிக்கும்..
வாங்க ஜலீலா.
குளிர்நாடா இருக்குதேன்னுதான் இந்த ஈஸ்ட் சேர்க்கும்படி ஆகுது.
ஈஸ்ட் போடாம இட்லி மாவு புளிக்கவைப்பது ஒரு ஈவண்ட்!!!!
தயிர் தோய்ப்பது இன்னொரு சல்லியம். நம்ம புதுகைத்தென்றல் டிப்ஸ் இப்போதைக்குக் கைகொடுக்குது. இன்னும் ஒரு மாசம் எங்களுக்கு சம்மர் பாக்கி இருக்கு. அதுக்குப்பிறகும் 'டிப்ஸ் தயிர்' தோயுமா என்று தெரியலை:(
எனக்கும் இனிப்புப் பணியாரம்தான் பிடிக்கும். ஆனால்.... கோபால் இனிப்புக்கு எதிரி:-)
நான் இன்டாலியத்தில் குழி பணியார சட்டி வாங்கினேன்.அதை எப்படி பழக்குவது
Post a Comment