பதினைஞ்சு நிமிசத்துலே படுக்கையைவிட்டு எழுந்து குளிச்சு ரெடியாகி ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குப் போக முடியுமா? சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடியுமுன்னு சொல்லுதே! ஹொட்டேலில் இறக்கிவிட்டதும் பேரைப் பார்த்தால் Langham ன்னு போட்டுருக்கு. வரவேற்பில் பார்த்த சீருடையையும் நம்ம அறையில் இருந்த கப் அண்ட் சாஸர் டிசைனையும் பார்த்தவுடன் சந்தேகம் க்ளியர்டு! மாட்சிமை தாங்கிய மகாராணியம்மாவின் நாட்டு நிறுவனம்.
வெறும் 410 அறைகள்தான் இருக்காம். போய் லஞ்சு சாப்புடுங்கன்னு ஒரே உபசரிப்பு. பசி இல்லைன்னு தலையாட்டினாலும் லஞ்சுக்குப் போங்க, இப்பவே நேரம் அதிகமாயிருச்சுன்னு........... ( அதீத உபசரிப்பின் காரணம் அப்புறம் தெரிஞ்சது! ) சாப்பிடப்போகாமல் நேரா அறைக்குப் போயி கொஞ்சநேர ஓய்வுக்குப்பிறகு குளிச்சுட்டு நம்மூர் சேதியைத் தேடிக்கிட்டு இருந்தோம். இன்னும் ஏர்ப்போர்ட் திறக்கலை. பயணிகள் முடக்கப்பட்டுருக்காங்க. கிறைஸ்ட்சர்ச்தான் தெற்குத் தீவுலே பெரிய நகரம். பன்னாட்டு விமான நிலையம் என்பதால் சுத்துப்பட்ட பதினெட்டுப்பட்டிக்காரர்களும் இங்கே தான் ப்ளேன் பிடிக்க வருவாங்க. சாலைகள் எல்லாம் பனி மூடி இருப்பதால் அவுங்களைத் திருப்பி அனுப்பவோ அல்லது நகரத்துக்குள்ளே ஹொட்டேல் ஏற்பாடு செய்யவோ முடியாமப் போயிருக்கு.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நோட்டீஸ் வந்துச்சு. ராத்திரி சாப்பாட்டுக்கு எட்டுக்குப் போணுமாம். ஒரு நபருக்கு லஞ்சுக்கு முப்பத்தியஞ்சு டாலர், டின்னருக்கு அறுபது, காலை ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு முப்பதுன்னு நிதி ஒதுக்கி இருக்காங்க நமக்கு. இதுலே குடிவகைகள் சேர்த்தி இல்லை. அதுக்கு நீங்களே காசு கொடுத்துருங்கன்னு அந்தக் காகிதம் சொல்லுது. அஞ்சு நிமிசத்துக்கு டோல் கால் கூடப் பேசிக்கலாமாம். 'டிஸ்ரப்டட் சிங்கப்பூர் ஃப்ளைட் 'என்ற பெயரில் நாங்க இருந்தோம்.
இங்கே நாலைஞ்சு ரெஸ்ட்டாரண்ட் இருக்கு. ஆனால் டிஸ்ரப்டடுக்கு 'எயிட்'. அருமையா இருக்கைகள் போட்டு அமர்க்களமா இருக்கு. ஸாலட் பார்தான் இருந்ததில் சூப்பர். கண்ணைப்பறிக்கும் அழகுடன் காய்கறிகளை சீரா நறுக்கி வச்சுருக்காங்க. நமக்கு என்னென்ன வேணுமுன்னு சொன்னால் அதையெல்லாம் ஒரு பாத்திரத்தில் போட்டுக் குலுக்கிக் கலந்து ட்ரெஸ்ஸிங் போட்டு ஒரு குடுவையில் போட்டுக் கொடுக்கறாங்க.
இறைச்சி மீன் கோழின்னு எல்லாம் அடுக்கி வச்சுருக்கு. எதுவேணுமுன்னு சொன்னால் எடுத்துச் சுட்டுத் தர்றாங்க. ஏகப்பட்ட வகைகள் இதுலே. காய்கறிகள் வகை தனியா இன்னொரு பக்கம். ஜாப்பனீஸ் யூரோப்பியன் சாப்பாடுகள் . சீன டிம்சிம், நூடுல்ஸ் வகைகள் ஒரு பக்கம். நம்ம இந்தியன் வகைகளில் சன்னா, வெஜிடபிள் பிரியாணி, நான், குருமா இப்படி ஏழெட்டு தினுசுகள். டிஸர்ட்டுகளும் எக்கச்சக்கம். இங்கே வேலை செய்யும் ஒரு ஃபிஜி இந்தியப் பெண் 'யஷோதா'விடம் கொஞ்சம் ஹிந்தியில் பேசி என் 'போஜ்புரி ஹிந்தி'யைப் புதுப்பிச்சுக்கிட்டேன்:-)
ஒரு பிடி பிடிச்சுருக்க வேண்டியது..... ஆனா டிஸ்ரப்டட் ஃப்ளைட் ஆகிப்போனதால் ஏற்பட்ட மனக்குழப்பத்தில் சரியாச் சாப்பிடத் தோணலை:( மகளிடம் (சொந்த ஃபோனில்) பேசி நிலவரம் கேட்டால் பனிமழை நின்னுருச்சு இப்போதைக்கு என்ற சேதி. கதவிடுக்கு வழியா இன்னொரு நோட்டீஸ்.
காலையில் அஞ்சே முக்காலுக்கு அலார்ம் எழுப்பும். ஆறு மணிக்கு ப்ரேக் ஃபாஸ்ட். ஆறரைக்கு டாக்ஸி ஏற்பாடு செஞ்சுருக்கு. அதுலே கிளம்பி ஏர்ப்போர்ட் வந்துருங்க. பயணிகள் தங்க ஏற்பாடான ஒவ்வொரு ஹொட்டேலுக்கும் ஒரு SIA staff இருக்காங்க. அவுங்ககிட்டே மேல்விவரம் வேணுமுன்னா கேட்டுக்குங்க.
நாம்தான் முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்களாச்சே! அஞ்சு மணிக்கு எழுப்பச் சொல்லிட்டு குளிச்சு முடிச்சு பொட்டிகளை ஏறக்கட்டிட்டு ஆறு மணிக்குக் காலை உணவுக்காக அதே 'எட்டு'க்குப் போனோம். ஒரு (நல்ல) காஃபி குடிச்சதும் உயிர் வந்துச்சு. காலையில் அவ்வளவு சீக்கிரம் கொட்டிக்க முடியாது:( கொஞ்சூண்டு ம்யூசிலி தின்னுட்டு அறையை விட்டுக் கிளம்பினோம். பொட்டிகளைக் கீழே கொண்டுபோக ஆளைக் கூப்பிட்டா, நேத்து மதியம் இன்னொரு நபர் கேட்ட அதே கேள்வியை இவரும் கேட்டார். 'இத்தனையும் உங்க பொட்டிகளா?
ஆமாம்ன்னு தலையாட்டினேன். நாம் என்ன டூரிஸ்ட்டா, லேசாப் பயணப்பட? 'மூவிங் பேக்'குன்னா இப்படித்தான்! வாசலில் டாக்ஸிகள் வரிசைகட்டி வரவர குடும்பங்கள் போய்க்கிட்டே இருக்கு. இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்குப் போயிருங்கன்னு நமக்கு உத்தரவாகி இருந்தது. அரைமணி நேரப்பயணம் சிட்டியிலிருந்து அங்கே போக. பலபலன்னு பொழுது விடியும் சமயம் (குளிர்காலம் என்பதால் காலை ஏழரைக்குத்தான் சூர்யோதயமாக்கும், கேட்டோ) விமானநிலையத்தில் இறக்கிவிடப்பட்டோம். நேத்து நமக்கு உதவி செஞ்ச அம்மிணிதான் இன்னிக்கும் ட்யூட்டி போல. ஸ்பெஷல் ட்யூட்டின்னு அப்புறம் சொன்னாங்க. பெட்டிகளை செக்கின் செய்ய உதவினாங்க. புது போர்டிங் பாஸ் அதே இருக்கை எண் போட்டுக் கிடைச்சது.
மஃப்பின்ஸ், கேக் துண்டுகள், சாக்லேட்டுகள், ஜூஸ் தண்ணீர் எல்லாம் நாலைஞ்சு ட்ராலியில் பெட்டிபெட்டியா நிறைச்சு வச்சு எடுத்துக்குங்கன்னு ஒரே உபசரிப்பு. அவுங்க மனசு கோணும்படியா நடந்துக்கிட்டா நல்லாவா இருக்கும்?
அரைமணி நேரக் காத்திருப்புக்குப் பின் பஸ்ஸுலே ஏத்தி எல்லோரையும் லோகல் ஏர்ப்போர்ட்டுக்குக் கொண்டு போனாங்க. அம்மிணியும் கூடவே வந்தாங்க. எப்படி எதுலே போகப்போறோம் என்பதே சஸ்பென்ஸ்! செக்யூரிட்டி செக்கப் முடிச்சு எங்களை (KORU)கோரு க்ளப் லவுஞ்சுக்குக் கூட்டிப்போய் விட்டாங்க. உதவி செய்யும் அதீத ஆர்வத்தில் என் கேபின் பேகைக்கூட அவுங்களே தூக்கிட்டு வந்து லவுஞ்சில் வச்சாங்க:-) கிளம்பும் நேரத்தில் வந்து கூப்பிடறேன்னு சொல்லிட்டு இன்னொருத்தருக்கு சேவை புரியக் கிளம்பிட்டாங்க.
நாங்க கப்புச்சீனோ குடிச்சுட்டு மடிக்கணினி வச்சுக்கிட்டு ஊர் நிலவரம் பார்க்கரதும்,. அப்பப்ப மறந்துறாம முகத்தைக் கவலையா வச்சுக்கறதுமா இருந்தோம். அநேகமாப் பத்து மணிக்குக் கிளம்பிறலாமுன்னு சேதியோட வந்தாங்க அம்மிணி. நாங்களும் கிடைச்ச நேரத்தை வீணாக்காம வலை மேய்ஞ்சுக்கிட்டும் நண்பர்களுக்கு மெயில் அனுப்பிக்கிட்டும் தேவுடு காத்தோம்.
பத்தரைக்கு வந்து மறுபடி என் கேபின் பேகைக் கையில் எடுத்துக்கிட்டு வாங்க போகலாமுன்னு 21 வது கேட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போறாங்க. சீனியர் சிட்டிஸனுக்கு உதவும் மகிழ்ச்சியோ!!!! அப்ப வழியில் இன்னொரு சகபயணியின் மூணுவயசு மகன் வாந்தி வரும் பாவனையில் நிக்க, அவுங்க அம்மா டிஷ்யூப் பேப்பர்களில் அவன் வாயிலிருந்து வரும் சரக்கை வாங்கிக்கிட்டு அல்லாடுறாங்க. அம்மிணி அவுங்ககிட்டே, 'இவுங்களை விட்டுட்டு இதோ வந்துடறேன்'ன்னு சொல்லவும் எனக்கு பேஜாராப் போச்சு. 'அந்தப் பெட்டியைக் கொடுக்க. நாங்க போய்க்கிறோம். நீங்க அந்தம்மாவுக்கு உதவுங்க'ன்னு நன்றிகள் சொல்லிக் கழட்டி விட்டோமுன்னு வையுங்க.
கேட்டைக் கடந்தால் இன்னொரு பஸ். விமானத்துக்குக் கொண்டு போறாங்க. விமானத்தில் வச்சுருக்கும் கம்பளிப் போர்வையைக் இடுப்புக்கு ஒன்னும் தோளுக்கு ஒன்னுமாக் சுத்திக்கிட்டு ஒரு பயணி! நேத்து இறங்கும்போது குளிரா இருந்தால் கம்பளியை எடுத்துக்கிட்டுப்போய் மறுநாள் கொண்டுவரச் சொல்லிட்டாங்களாம். பரவாயில்லை. SIA நல்ல கரிசனத்தோடுதான் இருக்கு.
பஸ் புறப்பட்டு அதுபாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கு. கிறைஸ்ட்சர்ச்சுக்கே கொண்டு போறாங்களோன்னு நினைக்கும்போது உள்நாட்டு விமானநிலையம் தாண்டி பன்னாட்டு விமான நிலையத்தின் ஒரு மூலையில் அம்போன்னு நின்னுருந்த சிங்கை விமானத்துக்கருகில் கொண்டுபோய் நிறுத்துனாங்க. நேத்து நாம் வந்த அதே விமானம்தான். ஏணி. ஏர்ப்ரிட்ஜ் இல்லை.
அடடா..... உள்ளே அதே இருக்கைகள். நேத்து வச்சுட்டுப்போன நட்ஸ் பாக்கெட்கூட அப்படியே இருக்கு. பேசாம நம்ம பொட்டிகளை இதுலேயே விட்டு வச்சுருந்துருக்கலாம்.எதுக்கு அனாவசியமாக் கட்டிவலிச்சோமோ:(
பாதுகாப்பு கருதி வெளியே எடுத்துட்டாங்களாம். எதுக்கு இந்த அலைக்கழிப்பு? இதுலேயே திரும்பிப் போறோமுன்னா காலையில் எதுக்கு நம்மை உள்நாட்டு விமானநிலையம் கொண்டு போனாங்களாம்? அதுக்கும் ஒரு பதில் தயாரா வச்சுருந்தாங்க. இங்கே இருந்து போனால் இமிகிரேஷன் குழறுபடி வந்துருமாம். அதான் நேத்தே கடவுச்சீட்டுலே பதிஞ்சாச்சே! என்னவோ போங்க.........
கம்பளிப்போர்வையும் புன்னகை முகங்களுமா பயணிகள் விமானத்துக்குள்ளே நிறைய ஆரம்பிச்சாங்க. பத்தே முக்காலுக்கு ஒரு வழியா நகர ஆரம்பிச்சுக் கிளம்பி வானத்தில் பாய்ஞ்சது விமானம்.
PIN குறிப்பு அடுத்த பகுதியில் நிறைவு.
Friday, August 05, 2011
இங்கே அங்கே இங்கேன்னு அலையவிடணுமா? ( Haunted House 2 (தொடர்ச்சி) )
Posted by துளசி கோபால் at 8/05/2011 09:05:00 AM
Labels: NZ அனுபவம் Singapore airlines
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
/PIN குறிப்பு அடுத்த பகுதியில் நிறைவு.
/
அது ஏர்போர்டில் இறங்கும் வரைதானே. வீட்டுக்குப் போகும் படலம்ன்னு மூணு நாலு பதிவு வராது? :)
ஹைய்யோ!!!!! வாயைக் காமிங்க கொஞ்சம் சாக்லேட்டை அள்ளிப்போடறேன்! உங்களுக்கேத்த வகைதான்!
15 நிமிசத்துல எந்திருச்சு தலையை சீவிக்கிட்டு கிளம்பிடுவாங்கன்னு நினைச்சிருப்பாங்களா இருக்கும்..குளிச்சி கிளம்புவாங்கன்னு நினைக்கல போல :))
அலைந்தால்தான் பயணம் போலும் :(
ஒருவாறு நியூசி ஆரம்பம்...
என்னது 15 நிமிசத்துல கிளம்பரதாவது, விளையாடுறாங்களா என்ன. மற்றபடி படங்களும் பதிவும் அருமை.
vanthen
அடடா..... உள்ளே அதே இருக்கைகள். நேத்து வச்சுட்டுப்போன நட்ஸ் பாக்கெட்கூட அப்படியே இருக்கு. பேசாம நம்ம பொட்டிகளை இதுலேயே விட்டு வச்சுருந்துருக்கலாம்.எதுக்கு அனாவசியமாக் கட்டிவலிச்சோமோ:(
...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
நல்லா எழுதி வரீங்க, மேடம்.
//எதுக்கு இந்த அலைக்கழிப்பு? இதுலேயே திரும்பிப் போறோமுன்னா காலையில் எதுக்கு நம்மை உள்நாட்டு விமானநிலையம் கொண்டு போனாங்களாம்?//
வாசிச்சுட்டே வரச்சே எனக்கும் இதான் தோணிச்சு. அப்றம் விளக்கம் படிச்சு தெளிஞ்சுக்கிட்டேன் :-)))
இங்கே அங்கே இங்கே அதிகம்தான். ”அங்கே” போய் செட்டில் ஆன சேதியுடன் நிறைவு செய்யுங்க.
ஒன்றுவிடாமல் நோட் பண்ணிய அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
எப்படியோ பயணம் த்ரில்லிங்காக இருந்தது போலும் ,
முதன் முறையாக தமிழில் டைப் பண்ணுகிறேன் , ( நீங்கள் சண்டிகரில் வகுப்பு எடுப்பதாக சொன்னீர்கள் ஆனால் சொல்லி தரவில்லை ) தவறு இருப்பின் மன்னிக்கவும். :-)
துளசீம்மா! எப்படித்தான் இத்தனை அழகா எழுதறீங்களோ? உங்களுக்கே வெளிச்சம்!
எனக்கு ரொம்ப நாளா ஒரு சின்ன டெளட். நீங்க அம்மா வழியில் பாலக்காடு பக்கமா? சில வார்த்தைப்பிரயோகங்களை கவனித்துக்கொண்டு வருகிறேன். இந்தப்பதிவில்.....’எதுக்கு அனாவசியமா கட்டி வலிச்சோமோ?’ கட்டிவலிக்கிறது நம்ம பக்கத்தில் தான்! அதாவது பாலக்காடோ நாஞ்சில் நாடோ.
அன்புடன்,
பாரதி மணி
எத்தனை எத்தனை விஷயங்கள் ஒரு பகிர்வில்..... தொடரட்டும்...
நியுசி-ல எல்லாம் செட்டில் ஆயாச்சா?
வாங்க கயலு.
ஒருவேளை தூங்கியே இருக்கமாட்டோமுன்னு நினைப்போ என்னவோ!
வாங்க மாதேவி.
ரொம்பச்சரி.
நியூஸி ஆ....'ரம்பம்'தான்:-))))))
வாங்க நாராயணன்.
புதுவரவுக்கு நன்றிகள். நலமா?
வாங்க புதுகைத் தென்றல்.
வந்துட்டீங்கள்ளே...அது போதும்:-)))
வாங்க சித்ரா.
நம்ம பொழைப்பு சிரிப்புதான்.....ஆட்டி அலைக்கழிச்சுட்டாங்கப்பா.
வாங்க அமைதிச்சாரல்.
ஆனா ஒன்னு.... எனக்குத் தெரிஞ்சவரை மற்ற ஏர்லைன்ஸைவிட ரொம்ப நல்லாக் கவனிச்சுக்கிட்டாங்கப்பா! ஏர் இண்டியாவில் போன பயங்கரத்தை முந்தியே புலம்பி இருக்கேன். ஆனா அது கோபாலுக்கானது என்பதால் அவ்வளவா தாக்கலை:-))))
வாங்க ராமலக்ஷ்மி.
செட்டில் ஆனதையும் சேர்த்தால் கொத்ஸின் ஹேஷ்யம் பலிச்சுறாதா?
அடுத்த பதிவோடு இப்போதைக்கு ஸ்டாப்பு:-))))
வாங்க இராஜராஜேஸ்வரி.
நடந்தது நடந்தபடியாக்கும்.....கேட்டோ:-)))))
வாங்க சுடலை முத்து.
நானும் சண்டிகர் தமிழ்ச்சங்கத்துலே வகுப்பெடுக்க ரொம்ப ஆர்வமாத்தான் இருந்தேன். நம்ம ராஜசேகரிடமும் சொல்லிக்கிட்டே இருந்தேந்தான். நிலமை சரியில்லாமப்போச்சே!
இப்பப்பாருங்க ...சுயமுயற்சியால் நீங்களே தட்ட ஆரம்பிச்சுட்டீங்க!
தவறா.....நோ நோ
நூத்துக்கு நூறு!
தொடர்ந்து தட்டுங்க. தட்டிவிடுங்க:-))))
வாங்க பாரதி மணி ஐயா.
அப்பாவும் சித்தப்பாவும் ஒலவக்கோடு ரயில்வே ஒர்க்ஷாப்பில் வேலையில் இருந்தாங்க. ரெண்டு பேரும் எப்பவுமே மலையாளத்தில்தான் சம்ஸாரம். ஒருவேளை அதனால் வந்த பந்தமோ ஆவோ:-)
வாங்க வெங்கட் நாகராஜ்.
அனுபவங்கள் நமக்குன்னே கூடைகூடையா வந்து கொட்டுதே!
செட்டில் ஆக வழக்கத்தைவிடக் கூடுதல் நாட்களாகுமுன்னு நினைக்கிறேன். இப்போ ஒருவழியானாலும் கண்டெயினர் சாமான்கள் மூணு மாசத்தில் வந்ததும் இன்னுமொரு ஆட்டம் ஆடத்தானே வேணும்:-)))
Post a Comment