ஊருலகம் முழுசும் கூப்பிட்ட வீட்டுக்கெல்லாம் ஓடவேண்டிய தினமாம். 'சட் புட்டுன்னு எதையாவது செஞ்சு தா'ன்னான். ஆஹா.... நோ ஒர்ரீஸ்ன்னு தெரிஞ்சமாதிரி ஒரு அவல், தயிர்சாதம், முறுக்கு, அப்பம் நாலும் செஞ்சு அஞ்சாவதாக் கொஞ்சம் பழங்களும் கொடுத்தேன்.
கொடுத்ததுக்கு சாட்சி?
இந்தப்படம்தான், வேறென்ன?
எல்லாம் க்ருஷ்ணார்ப்பணம்!
அனைவருக்கும் கண்ணன் பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
PIN குறிப்பு: எங்கூர் ஹரேக்ருஷ்ணா கோவில் நிலநடுக்கத்தால் இடிஞ்சு விழுந்துருச்சு. ஆனால் புதுசா ஸ்வாமி நாராயண் கோவில் ஒன்னு முளைச்சுருக்காம் ஜூலை 26 இல் ( ஆஹா.... என்ன ஒரு ஒத்துமை பாருங்களேன் நாமும் அன்னிக்குத்தான் இங்கே மீண்டும் காலடி எடுத்து வச்சோம்!) அது போகட்டும்.....புதுசாக் கோவிலாக் கட்டி இருக்காங்களா, இல்லை ......வீடு ஒன்னு எடுத்துக் கோவிலாக்கி இருக்காங்களா என்ற முழுவிவரம் கிடைக்கலை. ஆனால் இன்னிக்கு மாலை அஞ்சுக்கு அங்கே ஜென்மாஷ்டமி பூஜைக்கு அழைப்பு வந்துருக்கு. போயிட்டு வந்து சொல்றேன் மீதிக்கதையை!
எல்லாம் க்ருஷ்ணார்ப்' 'பணம்'!!!!
Sunday, August 21, 2011
கண்ணன் வந்த நேரம்!
Posted by துளசி கோபால் at 8/21/2011 03:06:00 PM
Labels: அனுபவம் Sri Krishna Janmashtami
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
{{எல்லாம் க்ருஷ்ணார்ப்' 'பணம்'!!!! }}
வாஸ்தவம்தான். படத்தில் உள்ள தவழும் கிருஷ்ணன் வடிவம் வெகு அழகு.
பக்ஷணமெல்லாம் ரொம்பக் கம்மியா இருக்கு. உங்கள் வீட்டுக்”கோபாலனுக்கு?”
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
எல்லாம் கிருஷ்ணார்ப்”பணம்”!!! பகிர்வின் முடிவில் உங்கள் ட்ரேட்மார்க் நகைச்சுவை...
நாங்க பார்த்தே தெரிந்து கொண்டோம் உங்கள் வீட்டு கிருஷ்ணரை...
என்னோட வலைப்பூவில் தான்சேன் வந்து காத்துக் கொண்டு இருக்கார் உங்களுக்காக....
வாழ்த்துக்கள் அம்மா.
இனிய நேரம் கண்ணனுக்கு படைத்த பிரசாதங்கள் எடுத்துக்கொண்டோம்.
கண்ணன் பிரசாதம் கொடுத்துட்டான். நெய்முறுக்கு அவனுக்கும் ரொம்ப பிடிச்சிருந்ததாம் :-)
//வீடு ஒன்னு எடுத்துக் கோவிலாக்கி இருக்காங்களா என்ற முழுவிவரம் கிடைக்கலை. //
பாரிஸில் இது மாதிரி வீடே கோவிலான வை நிறைய இருக்கின்றன, நல்ல வசூல் வேட்டையாம். யோகன் பாரிஸ் ஐயா என்னிடம் சொன்னார்
:)
/எல்லாம் க்ருஷ்ணார்ப்' 'பணம்'!!!!/
:)
:(
then kulazal nalla irukku. athirasam mii sizela iruku. but its looks good. enga athukku nalaikkuthan varar kannan.
sarvam krishanarppanam.
intha pathivum serththu
வாங்க பிரகாசம்.
ரெண்டு பேருக்கு இந்த அளவே யதேஷ்டமில்லையோ?
கோபாலனுக்கு விளம்பியபிறகுதான் படம் எடுத்தேன். அதனால் 33.3 சதம் படத்தில் இல்லை:-)
அவசரத்தில் அள்ளித் தெளிச்சாலும் கோலம் அருமையா அமைஞ்சுருச்சு இந்தக் கலிகாலத்தில்:-)))))))
வாங்க வெங்கட் நாகராஜ்.
மதுரா விருந்தாவனத்தில்தான் 'அவர் குரு' கண்ணனுக்காகப் பாடிக்கிட்டே இருக்காரே!
இதோ வர்றேன் உங்க வீட்டுப்பக்கம்.
வாங்க ரத்னவேல்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
வாங்க மாதேவி.
அக்ஷயபாத்திரத்தில் இருக்கும் பிரசாதம், இது அள்ள அள்ளக் குறையாது:-))))
வாங்க அமைதிச்சாரல்.
மிருதுவாகவே இருந்துச்சு நெய்முறுக்கு.
மாடு மேய்க்கப் போகும்போது அம்மா யசோதா இப்படித்தான் செஞ்சு தருவாங்கன்னு 'கொசுவத்தி' ஏத்திவச்சுக்கிட்டுப்போனான்:-))))
வாங்க கோவியாரே.
உண்மைதான். எங்கூர் ஹரே க்ருஷ்ணா கோவில்கூட ஒரு பெரிய வீட்டின் உட்புறத்தை மட்டும் மாற்றி அமைச்சதுதான்.
ஆனால்..... கோவிலுக்கு வருமானம் அவ்வளவா இல்லை:( இந்த அழகில் நிலநடுக்கத்தின்போது இடிஞ்சு விழுந்துருச்சு:(
வாங்க அருணா.
எல்லாம் கடைசியில் வந்து முடியும் இடம் இந்த மூணெழுத்துலேதான்:-)
வாங்க பித்தனின் வாக்கு.
அது முள்ளு முறுக்கும் உன்னி அப்பமும்.
அதிரசத்துக்குப் போடும் அதே அரிசிமாவும் வெல்லமும்தான்:-))))
உங்க வீட்டுப் பிரசாதங்கள் வகைகளைக் கண்ணனுக்கு விளக்கிச் சொல்லுங்க. அவனுக்கு நியூஸியில் பயங்கர கன்ஃப்யூஷனாகி இருக்கலாம்:-)
\\கொடுத்ததுக்கு சாட்சி? \\
சாட்சி சிம்பிளாக அழகாக இருக்கு ;-)
வாங்க கோபி.
அதுதான் நம் கொளுகை. சிம்பிள் அண்ட் ஸ்வீட்:-)
Post a Comment