Wednesday, August 31, 2011

அழிவில் இருந்து மீண்டு(ம்) உயிர்த்தெழுகின்றோம் Christchurch Earthquake 1

அது ஒரு சனிக்கிழமையாக இருந்தது. 2010 செப்டம்பர் மாதம் நாலாம் தேதி. மகளின் பிறந்த நாள். நியூஸியில் பொழுதுவிடியட்டுமுன்னு காத்திருந்து 'தொலை'பேசினோம் பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொன்னவுடன் நன்றி. கொஞ்சநேரத்துக்கு முன்னே நிலநடுக்கம் ஏற்பட்டது என்றாள். 7.1 அளவுன்னதும் ஆடிப்போயிட்டோம். இத்தனைக்கும் இது நம்மூரில் இருந்து நாப்பது கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டது.

அதிகாலை 4.35 மணி என்பதால் மக்கள் அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்துருப்பாங்க. தெருக்களில் கார்களின் நடமாட்டம் இல்லாததால் பாதிப்பு ஒன்னுமில்லை(யாம்) விடாமல் 40 விநாடிகளுக்கு பூமி ஆடி இருக்கு. என்ன ஆச்சோன்னு வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்த ஒருவர் மேலே அவர் வீட்டு புகைபோக்கி இடிஞ்சு விழுந்து கையில் அடி. இதே போல் இன்னொரு நபருக்கு எங்கிருந்தோ பாய்ஞ்சு வந்து விழுந்த கண்ணாடிச் சில்லால் காயம். ஒரு நபர் மாரடைப்புலே இறந்தார். எமனும் எர்த்க்வேக்கும் ஒரே நேரத்துலே கிளம்பி வந்துருந்தாங்க.

நிறைய இடங்களில் கம்பங்களும் லைன்களும் பழுதாகிப்போனதால் மின்சாரம் இல்லாமல் போச்சு. நல்லவேளை இந்தமட்டோடு போச்சேன்னு எல்லோருக்கும் கொஞ்சம் நிம்மதி. ஆனாலும் அவசரநிலை அறிவிச்சது அரசு. ராணுவம் உதவிக்கு வந்து தேவையானவைகளைச் செஞ்சது.

அப்பப்ப லேசா ஆஃப்டர்ஷாக்ஸ் வர்றதும் போறதுமா இருந்த நிலையில் மக்கள் ஏறத்தாழ இதை மறந்தே போயிட்டாங்க.

அஞ்சரை மாசம் கடந்துபோனதும் ஒரு செவ்வாய்க் கிழமை பகல் 12.51. கிறைஸ்ட்சர்ச் ஹரே க்ருஷ்ணா கோவிலில் பகல் நேர பூஜை பாதி வழியில். ஊதுபத்தி, தீபம், மலர், கைகுட்டை, விசிறின்னு ஒவ்வொன்னா சேவை காண்பிச்சு ஆரத்தி எடுக்கும் சமயம். இடது கையால் வெங்கலமணியை ஆட்டிக்கிட்டே வலது கையின் மயிலிறகு விசிறியால் சைதன்ய மஹாப்பிரபு, நித்யானந்த மஹாப்பிரபு தெய்வச்சிலைகளுக்கு விசிறிக்கிட்டு இருக்கார் பண்டிட் சிவானந்த தாஸர். லேசா ரெண்டு சிலைகளும் முன்னும்பின்னுமா ஆடுது. என்னவோ ஏதோன்னு கையில் இருந்த மணியையும் விசிறியையும் விசிறிப்போட்டுட்டுச் சிலைகளின் இடுப்புகளை ரெண்டு கைகளாலும் அணைச்சுப் பிடிக்கிறார். அடுத்த நொடி மூணுபேருமா பளிங்குத்தரையில் விழுந்து கிடக்கறாங்க.

தலையைத் திருப்பமுடியாமல் அப்படி ஒரு வலி. சிரமப்பட்டு கண்ணை ஓட்டுனா கடவுளர்களின் உடைந்த பாதங்களும் கைகளும் கண்ணுலே தென்படுது. இந்தப்பக்கம் பார்த்தால் தலையும் உடலுமா...... அட ராமான்னு எழுந்திருக்க முயலும்போது தலைக்கு மேலே விர்ன்னு பறந்து போய் விழுது மூலவர் நிற்கும் ஸ்வாமி மண்டபம். தடதடன்னு சாமியாட்டம்!
முன்பு
பின்பு

( இது ,சம்பவம் பற்றி அவர் எழுதி வச்சுருந்த பதிவில் இருந்து )



தோழியின் பாட்டனாருடைய இறுதிச்சடங்குக்குப் போயிட்டு மகள் நகருக்குத் திரும்பி வந்துக்கிட்டு இருக்காள். சீராக ஓடிக்கிட்டு இருந்த வண்டி ஒரு குலுக்கலோடு நின்னு மறுபடி கிளம்பி இருக்கு. எஞ்சின்லே கோளாறா இருக்கலாம். செக் பண்ணனும் நல்லவேளையா அந்த கிராமத்துச் சாலையில் வேற வண்டிகள் ஒன்னுமே வரலை.

சிங்கப்பூர் பார்க் ராயல் ஹொட்டேலில் நாம் தங்கி இருந்த அறைக்கு எழுத்தாளர் தோழி ஜெயந்தி சங்கர் என்னைச் சந்திக்க வந்துருக்காங்க. இன்னிக்கு லேடீஸ் டே அவுட் எங்களுக்கு. கோபால் அவருடைய ஆஃபீஸ் வேலை விஷயமா நியூஸியில் இருந்து சிங்கை வழியாப் பயணம் செய்யும் மேலதிகாரியை சந்திக்கக் கிளம்பிக்கிட்டு இருக்கார். முதல்நாள் விமானத்தில் கிளம்பி வந்தவர். இங்கே சில வேலைகளை முடிச்சுட்டு தாய்லாந்து போறார். அவருக்கு அடுத்த விமானம் பிடிக்க நாலைஞ்சு மணி நேரம் இருக்கு. இடைப்பட்ட நேரத்தில் ஒரு முக்கிய மீட்டிங்.

தற்செயலா டிவியை ஆன் செஞ்ச கோபால்...... 'ஐயோ கிறைஸ்ட்சர்ச்சில் எர்த் க்வேக்'ன்றார். கட்டிடங்கள் இடிஞ்சு கிடக்கும் படங்களைக் காமிச்சுக்கிட்டு இருக்காங்க. என்னவோ ஏதோன்னு பதறி அடிச்சுக்கிட்டு மகளை அலைபேசியில் கூப்பிட்டால் தொடர்பு கிடைக்கலை. தரை வழியில் கூப்பிட்டாலும் தொடர்பு இல்லை. மற்ற நண்பர்கள் யாருக்காவது தொலைபேசி விவரம் கேட்கலாமுன்னா....மனக்கலவரத்தில் யாருடைய தொலைபேசி எண்களுமே நினைவில் இல்லை. சுத்தம்:(

நகரின் முக்கிய தேவாலயம் இடிஞ்சு விழுந்துருக்கு.

விடாம திரும்பத்திரும்ப எண்களை அமுக்கி கடைசியில் ஒருவழியா மகளைப் பிடிச்சோம். 6.3 அளவில் வந்துருக்கு. பாதிப்பு விவரம் ஒன்னும் சொல்லலை. ஆனால் நகரின் பல இடங்களில் மின்சாரம் தண்ணி ரெண்டும் இல்லை. அவசர நிலை அறிவிச்சு இருக்காங்க. டிவி வரலை. ரேடியோவில்தான் செய்தி வருது. நிலமை மோசமாத்தான் இருக்கு எல்லோரும் வேடிக்கை பார்க்கன்னு கிளம்பிவராம அவுங்கவுங்க வீட்டில் பத்திரமா இருங்க. குழாய்த்தண்ணீரை அப்படியே குடிக்காமல் நல்லாக் காய்ச்சிக்குடிங்கன்னு சொல்றாங்க என்றாள். கோபாலும் மனக்கலக்கத்தோடே மீட்டிங் கிளம்பிப்போனார்.

நிலநடுக்கம் வந்து நின்ன சில விநாடிகளில் இடிஞ்சு விழுந்த கட்டிடங்களின் சிமெண்டும் காங்க்ரீட்டும் புகையாக் கிளம்புது.
ஜெயந்தி சங்கர் ஆறுதல்களாச் சொல்லி என்னைத் தேற்றிக்கிட்டே இருந்தாங்க.. கொஞ்சம் மனபாரத்தை குறைக்க வெளியே போகலாமுன்னு நானும் ஜெயந்தியுமா கிளம்பி கிருஷ்ணன் கோவிலுக்குப் போனோம்.

மீட்டிங் முடிஞ்சு திரும்பிவந்த கோபால், அவருடைய மேலதிகாரி பயணத்தைத் தொடராமல் திரும்பி நியூஸி போறாருன்னு விவரம் சொன்னார். அவரையும் இந்த நிலநடுக்க சேதி நடுங்க வச்சுருக்கு. சம்பவம் நடந்தப்ப அவரும் பறந்துக்கிட்டு இருந்தாரே. அவருடைய மனைவியுடன் பேசினாராம். எல்லாம் கதிகலங்கி இருக்காங்க. ரெண்டுச் சின்னக்குழந்தைகள் வேற அவருக்கு. ஏராளமான ஆஃப்டர்ஷாக்ஸ் வர்றதாயும் மக்கள் ஊரைவிட்டுக் கிளம்பிப் போய்க்கிட்டு இருக்காங்கன்னும் சேதி. அவருடைய மனைவியும் காரில் குழந்தைகளை அள்ளிப்போட்டுக்கிட்டு தாய்வீடு இருக்கும் வெலிங்டன் நகருக்குக் கிளம்பிட்டாங்களாம். விமான நிலையம் பூராவும் பயங்கரக் கூட்டம் எப்படியாவது ஊரைவிட்டு எங்கியாவது போக பயணச்சீட்டுக்கு சனம் அல்லாடுதாம்.

இதையெல்லாம் கேட்டதும் மகளுக்கு மீண்டும் தொலைபேசி கிளம்பி சிங்கைக்கு வந்துரு. இந்தியாவில் கொஞ்ச நாள் இருந்துட்டு அப்புறம் பார்க்கலாமுன்னா......... வர்ற ஆபத்து எங்கிருந்தாலும்தான் வரும். அதுக்காக ஊரைவிட்டுப்போறதான்னு கேக்கறாள். உண்மைதானே?
என்ன ஒரு தெளிவு பாருங்க இளைய தலைமுறைக்கு! வீட்டுக்கு எதாவது ஆகி இருக்கான்னா...... அப்படி ஒன்னும் தெரியலை. இன்னும் வெளியே போய் வீட்டைச் சுத்திப் பார்க்கலைன்னு பதில் வருது. சாலைகள் எல்லாம் உடைஞ்சும் கிழிஞ்சும் கிடக்காம்.
மறுநாள் ஹொட்டேல் லாபியில் தெரிஞ்ச முகங்களைப் பார்த்தோம். கிறைஸ்ட்சர்ச் குடும்பம். அந்த குடும்பத்தலைவியின் தாயும் கூட இருந்தாங்க. தகப்பன் இறந்துட்டாராம். அவருடைய இறுதிக்கடன்களைச் செய்ய அஸ்தியுடன் இந்தியாவுக்குப் போய்க்கிட்டு இருக்காங்க. அவுங்க ஊரைவிட்டுக் கிளம்புன ஒன்னரை மணி நேரத்தில் நிலநடுக்கம் நடந்த சேதியை பைலட் அறிவிச்சாராம். பிள்ளைகளை விட்டுட்டு வந்தோமேன்னு..... பதைச்சல். விமானம் தரை இறங்குனதும் தொலைபேசி இருக்காங்க. அவுங்களும் தெரிஞ்சவங்க வீட்டுக்குப் போயிட்டோம். இங்கே கொஞ்சம் பழுது ஆனமாதிரிதான் இருக்குன்னாங்களாம். கவலை படிந்த முகங்கள் மனசை என்னவோ செஞ்சது நிஜம்.

நாங்களும் ரெண்டு நாளில் கிளம்பி சண்டிகர் போயிட்டோம். கெட்ட சேதிகளா வந்துக்கிட்டு இருக்கு. இங்கே நியூஸிக்கு இங்கிலீஷ் படிக்கன்னு சிலபல நாடுகளில் இருந்து மாணவர்கள் வர்றது வழக்கம். நிறைய ஆங்கிலப்பள்ளிகள் இருக்கு. இதுலே ஒன்னு நகரின் மையத்தில் ( Central business district) சி டி வி பில்டிங் ( Canterbury Television Building) என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் 6 மாடிக் கட்டிடத்துலே இருக்கு. இந்தக் கட்டிடம் பூராவும் இடிஞ்சு தரைமட்டமா ஆகிக்கிடக்கு. இதுக்குப் பக்கத்துலே இருந்த Pyne Gould Corporation என்ற இன்னொரு அஞ்சு நிலைக் கட்டிடமும் தரைமட்டம். அந்தப்பகுதியில் இருந்த பலகட்டிடங்களுக்கும் இதே கதி என்றாலும் நிறையப்பேர் உள்ளே இருந்த கட்டிடங்கள்தான் இப்போ சொன்ன ரெண்டும்.
இந்த நிலநடுக்கத்தில் ஏறக்கொறைய 200 பேர் மரணம் அடைஞ்சுருப்பாங்கன்னு ஊகங்கள் வர ஆரம்பிச்சது. ஆங்கிலப்பள்ளியில் மட்டும் ஆசிரியர்களும், இருவது நாட்டைச்சேர்ந்த மாணவர்களுமா 64 பேர் உயிரிழந்தாங்க.

இந்தப் பேருந்துகளில் பயணிச்சவர்களில் எட்டுப்பேர் உயிரிழந்துருக்காங்க.

தொடரும்.........................:(

24 comments:

said...

நல்ல பதிவு ங்கோ

said...

நல்ல பதிவு ங்கோ

said...

இயற்கையிடமிருந்து எப்படி மீள்வது... படங்களை பார்க்கும்போது நாளை என்பதே வெறும் கனவுதான் போலும்...

said...

//ஜெயந்தி சங்கர் ஆறுதல்களாச் சொல்லி என்னைத் தேற்றிக்கிட்டே இருந்தாங்க.. கொஞ்சம் மனபாரத்தை குறைக்க வெளியே போகலாமுன்னு நானும் ஜெயந்தியுமா கிளம்பி கிருஷ்ணன் கோவிலுக்குப் போனோம்./

நீங்கள் அப்போது சிங்கையில் இருந்த போது, இந்தியாவில் இருந்து வல்லியம்மா பதட்டத்துடன் உங்க போன் நம்பரைக் கேட்டும், என்னிடம் நிலமை குறித்தும் விசாரிக்கச் சொன்னார்கள். இன்னும் நினைவில் இருக்கு, உங்களுக்காக பலர் துடிப்பது இணையத்தில் எழுதுவதால் கிடைத்த வரம் என்றே நினைக்கிறேன்.

said...

தொடர்பு செய்யமுடியாமல் தவிப்பதுமிக வேதனையான விசயம்..

படங்கள் பயங்கரமாத்தானிருக்கு..

இளைய தலைமுறை... தெளிவுதான்.

said...

//வர்ற ஆபத்து எங்கிருந்தாலும்தான் வரும். அதுக்காக ஊரைவிட்டுப்போறதான்னு கேக்கறாள். உண்மைதானே? //
உங்க பெண்ணின் மன உறுதி பாரட்டுக்குரியது.

said...

”தொடர்பு எல்லைக்கு அப்பால்” என்று கேட்கும்போது எவ்வளவு கஷ்டம், அதுவும் இது போன்ற ஒரு நிலையில்.... நிச்சயம் கஷ்டம் தான்..

இயற்கைச் சீற்றம் என்பது எவ்வளவு பயங்கரம் என்று அவ்வப்போது புரிகிறது....

said...

செய்திகளை பார்த்து விட்டு எவ்வளவு எளிதாக கடந்து போய் விடுகிறோம்...அதுவே நாமோ,நமக்கு தெரிஞ்சவங்களோடதுங்கிற போது மட்டுமே தாக்கம் புரிகிறது.

So sad.வெறும் வார்த்தையல்ல டீச்சர்.

said...

படங்களே அங்க நடந்த பயங்கரத்தை சொல்லிடுது :-(

இளைய தலை முறைக்கு இருக்கற மன உறுதி நமக்கும் இருந்தா நல்லாத்தான் இருக்கும். ஆனா, சில சமயங்கள்ல முடியறதில்லையே..

said...

இந்தியாவுல புஜ், லாத்தூர் நில நடுக்கங்கள் ஆனப்பவும் மனசுல 'என்னத்தை வாழ்க்கை'ன்னு ஒரு வெறுமை ஏற்படத்தான் செஞ்சது. ஆனா, காலம் ஒரு அருமையான மருந்தாச்சே..

said...

வாங்க கார்த்திகேயனி.

நலமா?


முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

வாங்க குடந்தை அன்புமணி.

இயற்கை பொங்கிருச்சுன்னா நாமெல்லாம் தூசு :(

நிலையாமையை இப்படி வந்து சொல்லிட்டுப் போகுதோ?

said...

வாங்க கோவியாரே.

//உங்களுக்காக பலர் துடிப்பது இணையத்தில் எழுதுவதால் கிடைத்த வரம் என்றே நினைக்கிறேன்//

இணைய உலகம் கொடுத்த கொடை இதெல்லாம்! இத்தகைய அன்புக்கு என்ன கைம்மாறு செய்யமுடியும்?

இந்த நிலநடுக்கக் குழப்பத்தால் தான் 'அந்த' சிங்கைப்பயணம் இன்னும் எழுதப்படாமல் நிக்குது.

said...

வாங்க கயலு.

இளைய தலைமுறை பல சமயங்களில் என்னை வியப்பில் ஆழ்த்துவதென்னமோ உண்மை!! அந்த வயதில் நான் எப்படி இருந்தேன்னு சொன்னால் வெட்கம்:-)

சின்ன நாடாக இருப்பதால் ஒரு உயிர் போனாலும் பெரிய இழப்புதான்:(

said...

வாங்க ராம்வி.

ஆமாங்க. எதையும் ப்ராக்டிக்கலாப் பார்த்தால் மனத்தளர்ச்சி வராதில்லை?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

'நான் இருக்கேன். மறந்துடாதீங்க'ன்னு இந்த இயற்கை அப்பப்ப வந்து இப்படி மிரட்டணுமா?

said...

வாங்க ராஜநடராஜன்.

என் வருத்தத்தை பகிர்ந்து கொண்டதற்கும் ஆறுதல் தரும் சொற்களுக்கும் நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

கோழை மனசா இருக்கேப்பா....... :(

இயற்கை தாண்டவம் ஆடுனா நாம் என்ன செய்வது?

காலம், அரு மருந்தான மறதியை மட்டும் கொடுக்காமல் இருந்தால்........ ஐயோ.....பைத்தியம் பிடிச்சுப் பாயைச் சுரண்டிக்கிட்டுக் கிடப்போமே:(

நன்றி.

said...

படங்களும், நிகழ்வுகளும் கலங்க வைக்கிறது.

said...

இப்பொழ்து நடந்த மாதிரி இருக்கு துளசி. நில நடுங்கியதோ மனம் நடுங்கியதோ.:(

said...

வாங்க மாதேவி.

படங்களைப் பார்த்ததும் நானும் துடிச்சுப் போயிட்டேன்ப்பா:(

said...

வாங்க வல்லி.

சம்பவம் நடந்த இடங்களை இப்போ நேரில் பார்க்கும்போது
மனசுக்குள் ஒரு வலி. கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியலைப்பா எனக்கு:(

said...

படங்களை பார்க்கும் போதே பயமா இருக்குங்க. இயற்கைக்கு எதிரா நாம ஒண்ணும் செய்ய முடியாது என்றாலும், அந்த சமயத்தில் மனது படும் பாடு இருக்கிறதே....

ரொம்ப கொடுமைங்க...

said...

வாங்க கோவை2தில்லி.

புரிதலுக்கு நன்றிகள்.

எதுவும் நம்ம கையில் இல்லைன்னு தெளிவு வந்துருச்சு:(