Friday, August 12, 2011

ஜூனாவுக்குள்ளே ஒரு ப்ராச்சீனா! ........... (ராஜஸ்தான் பயணத்தொடர் 39)

இளவரசி சித்தி(Siddhi)குமாரியின் (மஹாராஜ நரேந்திர சிங் ஜியின் மகள்) ஐடியா இந்த ப்ராச்சீனா ம்யூஸியம். கி.பி 2000 வருசத்தில் ஆரம்பிச்சது. இந்தத் தலைமுறையில் வெளிநாட்டுத் தொடர்புகள், போக்குவரத்துகள் அதிகரிச்சு இருப்பதால் சரித்திரத்தின் முக்கியத்துவம் புரிஞ்சுக்கிட்டது நமக்கும் நல்லதாப்போச்சு.

பிகானீர் ராஜாக்கள் அணிஞ்சுருந்த உடைகள், கடந்தகால மன்னர்களின் படங்கள், கலை கலாச்சாரம் சம்பந்தமுள்ள குடும்பப்பழக்கங்கள், பாரம்பரிய முறைகளில் இருந்து எப்படி மெள்ளமெள்ள மேற்கத்தைய வழக்கங்களைக் கடைப்பிடிக்கும் மாற்றம் வந்த விவரங்கள்ன்னு பலதையும் சிந்திச்சு அருமையா அமைச்சு இருக்காங்க. நமக்கும் அந்தக் கால வாழ்க்கை முறை எப்படி இருந்ததுன்னு தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு. (நம்ம பக்கங்களில் சோழமன்னர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்குமுன்னு தெரிஞ்சுக்க இப்படி ஒரு வாய்ப்பு இல்லாமப்போச்சேன்னு மனசு துக்கப்பட்டது உண்மை)
ஜூனாகட் கோட்டை வளாகத்துலேயே முந்தி ஒர்க்ஷாப்பா இருந்த கட்டிடத்தைக் காட்சியகமா மாத்திட்டாங்க. நல்ல உயரமான கதவுகளுடன் கோட்டைக்குள் கோட்டையாக் கட்டிடம் தனியே நிக்குது.

மதர் ஆஃப் பேர்ல்ன்னு சொல்வோமே அந்தவகைச் சங்குச்சிப்பிகளால் ஆன டீ செட்! கூம்புகூஜாவுக்கு 'டீ கோஸி' போல வெல்வெட் சொக்காய்! கூஜாதானா...இல்லை லாட்னாவுக்குப் பதிலா ராணிக்கான ஆயுதமா?
(லட்னா= பூரிக்கட்டை)

அட! நம்ம ரயில் கூஜா! கூடவே (பித்தளை) தேள்! ஆஹா....விருச்சிகராசிக்காரிக்காக ஸ்பெஷலா வச்சுருக்காங்க:-)))

அடுக்களைச்சாமான்கள்ம் அஞ்சரைப்பொட்டி(எல்லாம் பித்தளை) சாமி மாடம், கோளாம்பி, விலை உயர்ந்த நவரத்தினக் கற்கள், அரசவிருந்துக்கான அலங்காரப் பாத்திரங்கள் வரிசையைப் பார்த்துக்கிட்டு நகரும்போதே விதவிதமான ஒயின் க்ளாஸ்கள்.
வெள்ளியில் நாலடுக்கு டிஃபன்கேரியர். 'இந்த' ராசாவுக்கு(ம்) எடுப்பு சாப்பாடா?வெள்ளிக்குடத்துக்குப் பக்கத்துலே நம்மூர் குத்து விளக்கு ஒன்னு நிக்குது!


அந்தக் கால அரச உடுப்புகள் எல்லாம் கண்ணாடிக்குப் பின்னே ! சிகப்பும் மஞ்சளும், ஆரஞ்சுமா எல்லாமே அடர்ந்த நிறங்களில் நிறைய கொசுவம் வச்ச பாவாடை, அதுக்கேத்த சின்ன டாப், கூடவே ஒரு துப்பட்டா!.இவ்வளோ சின்ன உடம்பா ராணிகளுக்கு!!!!

இங்கே புடவைகள் கூட' தயாரிச்சு' விக்கறாங்க. ஆன்லைன் ஷாப் இருக்காம். புடவை பார்க்கணுமுன்னா(!) இங்கே போங்க.

முன்புறத் தோட்டத்துலே இருக்கைகள் போட்டு வச்சு சின்னதா ஒரு 'டீக்கடை' ம்யூஸியம் கஃபே. நாங்களும் ஒரு 'ராயல் டீ' குடிச்சுட்டுக் கிளம்பினோம். அறைக்கு வந்து நம்ம ப்ரதீபை நல்லா ஓய்வெடுத்துக்கச் சொல்லிட்டு( மறுநாள் கொஞ்சம் நீண்ட பயணம் இருக்கு) ஏற்கெனவே இந்த ஊரில் பார்க்க வேண்டிவைகளுக்காகன்னு எழுதிவச்சுருந்த பட்டியலை எடுத்துக்கிட்டு வெளியே வந்து ஆட்டோ கிடைக்குமான்னு விசாரிச்சுக்கிட்டு இருந்தப்ப,
அங்கே வந்த ஆட்டோக்காரரிடம் பட்டியலில் இருக்கும் அஞ்சாறு இடத்தைப் பார்க்க ஒரு தொகை பேசிக்கலாமுன்னா.... எட்டரைவரைதான் ஆட்டோ ஓட்டுவாராம். சரி. ரெண்டு மணி நேரம் இருக்கே. பார்க்க முடிஞ்சவைகளைப் பார்க்கலாமுன்னு முதலில் மூல்நாயக்ஜி கோவில் போங்கன்னா...... அப்படி ஒன்னு இங்கே இல்லவே இல்லைன்னு சாதிக்கிறார். வைஷ்ணவக் கோவிலுன்னதும் 'ஓ அதுவான்னுட்டு இருவத்தியஞ்சு நிமிசம் டுங்கர்கட் சாலையில் டடக் டடக்ன்னு ஓட்டிட்டுக் கொண்டுபோய் விட்டார்.
1486லே கட்டுனமாதிரி தெரியலையேன்னு சிங்கத்தின் வாய்க்குள்ளே நுழைஞ்சோம். நேரா ஒரு புள்ளையார் தாமரையில் உக்காந்து 'வா வா'ன்னார். அவருக்குப்பின்னாலே ஒரு சின்னக் குன்றின் முகட்டில் சிவன். இது வைஷ்னோதேவி கோவில். நல்ல அம்யூஸ்மெண்ட் பார்க் போல செயற்கை நீர்வீழ்ச்சி எல்லாம் வச்சுக் குகை குகையாக் கட்டி இருக்காங்க.
ஆஹா..... இது நாம் ஏற்கெனவே பஞ்சாபிலும் ஹரித்வாரிலும் தரிசித்த வைஷ்ணோதேவி கோவிலா!!!!



ஸ்ரீ காடூ ஷ்யாம் ப்ரபுன்னு நாலு வெள்ளைக்குதிரைகள் பூட்டிய தேரில் கரும்பளிங்கில் கிருஷ்ணன். படம் எடுக்கலாமான்னு அனுமதி கேட்டால்....... 'நோ ஒர்ரீஸ். எடுத்துக்கோ'ன்னாங்க. விநாயகர்கள், ஆஞ்சநேயர் சிலைகளை வச்சு அவர்களுக்கு முன்னால் கரும்பளிங்கில் சிவன், லிங்க ரூபமாய் தலையில் நாகாபரணத்தோடு! பக்கத்துலே ஒரு குடம் தண்ணீரும் ஒரு சின்ன லோட்டாவும். பக்தர்கள் சொம்பிலே நீர்மொண்டு சிவனுக்கு அபிஷேகம் செஞ்சுக்கலாம். நல்ல ஏற்பாடு இல்லை? மஞ்சளணிஞ்ச கங்காமாதா இன்னொரு சந்நிதியில்.
ஒரு கையில் காலாக்னியும் மறு கையில் துண்டித்த தலையும், மற்றொரு கையில் உடுக்கையும் இன்னுமொரு கையில் முள்வச்ச Gகதையுமா பைரவர் (முத்துலக்ஷ்மி சொல்லிட்டாங்க) அவர் காலருகில் கொலைவெறியும் சிவந்தகண்களுமா ஒரு நாய்பைரவர் முன்னங்கால்களை மடிச்சுப்போட்டு உக்கார்ந்துருக்கார்.
குழந்தைகுட்டியுடன் சனம் ஜேஜேன்னு மலைமேலே ஏறிப்போறதும், குகைக்குள்ளே போய்வாறதுமா இருக்காங்க. சட்னு பார்த்தால் திருவிழா நடப்பதுபோலத் தெரியுது. நமக்கு நேரம் இல்லைன்னு குன்றின்மேல் ஏறாமல் கீழே இருந்தே சிவனுக்கு ஸல்யூட் போட்டுட்டுக் கிளம்பிட்டோம். வெளியே இருக்கும் கோவில் சம்பந்தமான கடைகண்ணிகளில் பெண்கள் கூட்டம் வளைகள், பொட்டு, நகைநட்டு, அலங்காரச்சாமான்கள்ன்னு பூந்து விளையாடிக்கிட்டு இருக்காங்க..

ஷிவ்பாரி மந்திர் அடுத்த ஸ்டாப். இந்தக் கோவிலுக்கு அஃபீஸியல் பெயர் ஸ்ரீ லாலேஷ்வர் மஹாதேவ் மந்திர். மஹாராஜா டுங்கர் சிங்ஜி தன்னுடைய தகப்பனார் லால் சிங்ஜி அவர்களின் ஞாபகார்த்தமா ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டிய கோவில். நல்ல உயரமான மதில்களோடுள்ள பெரிய வாசல் கதவுகளைத் தாண்டினால் பிரமாண்டமான வெளி முற்றம் இதன் நடுவிலே கோவில்ஒரு பத்துப்பனிரெண்டு படிகள் ஏறிப்போகும் உயரத்தில் ஒரு மாளிகைபோல இருக்கு. முழுசும் சிகப்பு மணல் கற்கள். இருட்டிப் போனதால் முழு அழகும் தெரியலை.பகலில் பார்த்தால் செந்தழலா ஜொலிக்கலாம்!
பூஜை ஆரம்பமானதுக்கு அடையாளமா காண்டாமணியின் ஓசை கணீர் கணீர்ன்னு ஒலிக்குதேன்னு பாய்ஞ்சு படியேறிப் போனோம். நேரெதிரா நட்ட நடுவில் கருவறையில் மனித ரூபத்தில் சிவன். நல்ல கரும்பளிங்குச்சிலை. அவருக்கு முன்னே பித்தளையில் ஒரு பெரிய நந்தி! அசந்து நின்னுட்டேன்....என்ன ஒரு வேலைப்பாடு!!! கழுத்தில் மணிகள் வரிசைகட்டி மாலையாக இருக்க முன்னங்கால்களை ஒய்யாரமா மடக்கி, விஷ்க்ன்னு அந்த வாலைச் சுழற்றிக் கொண்டுவந்து பின்னங்கால்களுக்கிடையில் வச்சு ஒரு பார்வை பார்க்குது பாருங்க....... சொக்கிப்போயிட்டேன்!

கோவிலைச் சுற்றி வரும்போது நான்கு திசைகளிலும் கருவறை திறப்பு. ஒன்னொன்னிலும் அதே சிவன். கர்நாடகாப் பயணத்தில் சதுர்முக் பாஸாடியில் நான்கு பக்கமும் புத்தரைப் பார்த்தோமே அதே போல் நாலு திக்கும் சிவன் இருக்கார்! நந்தி மட்டும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு! அலங்காரத்தூண்களும் அதிலுள்ள வேலைப்பாடுகளும் சுற்றிலும் சித்திரங்களுமா ஏதோ கலைக்கூடத்துக்குள்ளே வந்துட்டோமோன்னு ஒரு நிமிஷம் திகைச்சுத்தான் போனோம். படம் எடுக்க அனுமதி இல்லைன்னு போர்டு பார்த்ததா கோபால் சொன்னார்,

நின்னு ரசிக்க நேரமில்லை. நேரம் ஏழேகாலாகப் போகுது:(

தொடரும்................:-)





16 comments:

said...

கலக்கல் ட்ரிப் - படங்களும்!

said...

//கூஜாதானா...இல்லை லாட்னாவுக்குப் பதிலா ராணிக்கான ஆயுதமா?//

அதுல சந்தேகமென்ன?? ராஜா இதுக்கு பயந்தே நல்ல டீயா போட்டுக்கொடுப்பாரில்ல(மனைவிக்கு மட்டும்):-))))))

அந்த ட்ரெஸ்ஸெல்லாம் பார்த்தா அனார்கலிக்கு சித்தி மாதிரி தோணுது
:-))

said...

படமெடுக்கமுடியலன்னாலும் நந்தியின் அழகை உங்க வர்ணனையில் அறிந்தோம்..:)

said...

அருமை அம்மா.
வாழ்த்துக்கள்.

said...

இந்தப் பக்கங்களெல்லாம் ப்ராச்சீன்... ந்னு சொல்லிடறாங்க... புதுசா இருந்தாக் கூட...

நிறைய புகைப்படங்களோட நல்ல பகிர்வு.... தொடரட்டும் எங்களது[!] ராஜஸ்தான் பயண்ம்..... :)

said...

சுவாரசியமான பயண கட்டுரை.

said...

வாங்க சித்ரா.

கூட(வே) வருவதற்கு என் நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ராஜாக்கள் எல்லாம் செழிப்பா இருந்துருக்காங்க. அதான் 'சித்தி' மாதிரி தோணுது:-)

said...

வாங்க கயலு.

'படம் எடுக்கத் தடா'ன்னதும் பாதி உயிர் (எனக்கு) போயிருதுப்பா:-)

said...

வாங்க ரத்னவேல்.

வருகைக்கு நன்றி

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

காலம் தெரியலைன்னா ( அது முந்தாநாளா இருந்தாலும் சரி) ப்ராச்சீந்தான்:-)))))

said...

வாங்க பலேனோ( சரியா?)

முதல் வருகைபோல இருக்கே!

பயணக்கட்டுரைகள் விருப்பமானால் மீண்டும் மீண்டும் வருக.

நன்றிகள்.

said...

புடவைகளைக் காட்டி மயக்க வைக்கிறீங்களே :)

மலைமேல் கோயில் அழகாக இருக்கிறது.

said...

மதிப்புக்குரிய ரீச்சர்,
பலேனோ( சரியா?) சரி.
இதற்க்கு முதல்
"மரணத்தைக் கொண்டாடினர்" என்ற உங்கள் பதிவில் உங்கள் பாராட்டை பெற்றவன் நான்.

said...

வாங்க மாதேவி.

எனக்கு(ம்) வந்த மயக்கம் விலையைப் பார்த்ததும் தெளிஞ்சுட்டது தானாவே:-)))))

said...

என்னங்க பலேனோ,

அப்போ அம்மாநாள் கழிச்சா வர்றீங்க?

அடிக்கடி வந்து போகணும் அப்பத்தான் பெயரைப் பிழை இல்லாம எழுதிப் பழகுவேனோ :-)))))

இதற்க்கு = இதற்கு

(டீச்சர் வேலையும் கொஞ்சம் பார்க்கணும்,பாருங்க அதான்....)