Tuesday, August 23, 2011

பேரென்னங்க பேரு? பொல்லாத பேரு!!!

பெயரில் அப்படி என்னதான் இருக்கு? சில சமயங்களில் பெயர் வைக்க என்ன பாடுபடவேண்டி இருக்கு பாருங்க. முதல்லே மனசுக்கு விருப்பமான பெயர்களை எழுதிவச்சுக்கிட்டு ஆணா பொண்ணான்னு ஒரு விவரம் கிடைச்சவுடன்'' அதுலே இருக்கும் ஆண் இல்லேன்னா பெண் பெயர்களை வடிகட்டி அதுலே இருந்து ஒரு அழகான பெயரை செலக்ட் பண்ணறதுக்குள்ளே போதும்போதுமுன்னு ஆயிருதாம்.

கவனிச்சுப்பார்த்தா..... ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள்ளே பொறந்தவங்களுக்கு அப்போ பேஷனா இருக்கும் பெயர் வாய்ச்சுருது. சுமன், ஷோபனா, சந்தியா ன்னு ஒரு குழந்தைகள் வரிசை ஒன்னு இருக்கும். இதில்லாம அந்தந்தக் காலகட்டங்களில் இருந்த சினிமாக்காரர்களின் பெயரில் இன்னொரு வரிசை நிக்கும்.

ஃபிஜி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் புதுசுபுதுசாப் பேர் வைப்பதில் 'பேர்' போனவர்கள். நம் தோழி ஒருத்தர் ஜென்ம நட்சத்திரத்துக்கும் பொருத்தமா இருக்கணும்,பேரும் புதுமையா இருக்கணுமுன்னு மண்டையைக் குடைந்து யோசிச்சு மகனுக்கு ஹேமல் என்று பெயர் வச்சாங்க. நல்லவேளை கேமல் என்று வைக்கலைன்னு மனசுக்குள்ளே(!) நினைச்சுக்கிட்டேன்.

இப்போ எங்கூருலே ரெஜிஸ்தர் பண்ண 29462 பெயர்களில் 421 மேக்ஸ், 380 Bபெல்லா. அடுத்தவரிசைகளில் மோலி, ஜாக், சார்லி, பாப்பி, டோபி, ரூபி, லூஸின்னு இடம் பிடிச்சுருக்கு. அந்த நிமிசத்துக்குத் தோணும் பெயரைச் சட்னு வச்சுட்டா எப்படி?

ஒரு சிலர் மட்டும் நல்லா யோசிச்சு அவுங்களுக்குப் பிடிச்ச விஷயத்தின் பெயரைப் பசங்களுக்கு வச்சுடறாங்க. ஒரு தோழி தன் பசங்களுக்கு வின்னி, ரூபர்ட் ன்னு கார்ட்டூன் கேரக்டர் பெயர்களும், இன்னொரு தோழி அவுங்களுக்கு விருப்பமான கதைகள் வரிசையை வெளியிடும் மில்ஸ் அண்ட் பூன்ஸ் நினைவா ஒருத்தனுக்கு மில்ஸ் இன்னொருத்தனுக்கு பூன்ஸ்ன்னு பெயர் சூட்டிட்டாங்க.

'குடி'யாசை உள்ளவர்கள் வைக்கும் பெயர்கள் டக்கீலா, ஸ்காட்ச், ஜேக் டேனியல்ஸ், ஜிம் பீம், Smirnoff இப்படி இருக்கு. LOTR பிரியர்கள் ஃப்ரோடோ, கேண்டால்ஃப் ( frodo, Gandalf) பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் ப்ரேமிகள், ஜாக் ஸ்பேரோ இன்னும் ஹாரி பாட்டர் மக்கள் அதுலே வரும் 'பாத்திரங்கள்' னு வரிசைகள் வளர்ந்துக்கிட்டே போகும்போது............

உள்ளூர்க்காரர் ஒருத்தர் 'ஷெர்லாக் போன்ஸ்'ன்னு பையனுக்குப் பெயர் வச்சு அவனோட அறைக்கு 221B ( Baker Street) ன்னும் போர்டு எழுதி மாட்டி இருக்கார். யூகிச்சு இருப்பீங்களே...இவர் யாருடைய ரசிகன்னு!

கணினி லவ்வர்ஸ் சிலர் மெகாபைட், பிக்ஸல், கிகா என்று பெயர்கள் வச்சுடறாங்க.

இந்த வகையில் கோபாலகிருஷ்ணன் இந்த ஊருக்கே ஒருத்தனா இருந்தேன். எல்லோருக்குமா இந்த 'அதிர்ஷடம்' வாய்ச்சுருது:-))))))


PIN குறிப்பு: படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
19 comments:

said...

உள்ளூர்க்காரர் ஒருத்தர் 'ஷெர்லாக் போன்ஸ்'ன்னு பையனுக்குப் பெயர் வச்சு அவனோட அறைக்கு 221B ( Baker Street) ன்னும் போர்டு எழுதி மாட்டி இருக்கார். யூகிச்சு இருப்பீங்களே...இவர் யாருடைய ரசிகன்னு!

....cool!

said...

ஐ, கோபாலகிருஷ்ணன்.... கூர்ந்து பார்ப்பது என்ன ஒரு அழகு.

said...

ஒரு அண்ணா இருக்காங்க பேர் சுனில் கவாஸ்கர். அவங்க அப்பாவுக்கு கிரிக்கெட்னா உயிராம்.

”கணினி லவ்வர்ஸ் சிலர் மெகாபைட், பிக்ஸல், கிகா என்று பெயர்கள் வச்சுடறாங்க. ”

இப்படியெல்லாம் கூடவா வெக்கறாங்க.

said...

நல்ல பதிவு.
அம்மா - இங்கு இப்போது யாரும் தமிழ் பெயர் வைப்பதில்லை.
வேதனைதான்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

said...

//இப்போ எங்கூருலே ரெஜிஸ்தர் பண்ண 29462 பெயர்களில் 421 மேக்ஸ், 380 Bபெல்லா. அடுத்தவரிசைகளில் மோலி, ஜாக், சார்லி, பாப்பி, டோபி, ரூபி, லூஸின்னு இடம் பிடிச்சுருக்கு.//

பிரைவேட் டிடெக்டிவ் தொழில் ஆரம்பிச்சுடலாம் போல இருக்கே:))

said...

ஹை.. கோகி! பார்த்து எத்தனை நாளாச்சு!

said...

வாங்க சித்ரா.

நல்ல ரசிகர் அவர்!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பெர்ஸியன் ப்ரீட் லாங் ஹேர் சாதிப்பையன்:-)

வாயைத் திறந்து பேசாமல் கண்ணாலேயே காரியம் சாதிப்பதில் கெட்டிக்காரன்.

said...

வாங்க கோவை2தில்லி.

சண்டிகர் வீட்டு ஹவுஸ் ஓனரம்மா பையன் பேரே, 'பிக்ஸி'தாங்க.

said...

வாங்க ரத்னவேல்.

தமிழ்தான் மூச்சுன்னு சொல்றவங்ககூட அடுத்தநாட்டு ஆட்கள் பெயரை வைக்கிறாங்க. அதில்கூடப் பாருங்க.... அந்த ஆட்களின் முதல்பெயரை விட்டுட்டுக் குடும்பப்பெயர்களை வைக்கிறதைப் பார்த்தால் தலையில் (நம்ம தலையில்தான்)அடிச்சுக்கத் தோணுது!

எல்லாம்..... காலம்....என்னவோ போங்க:(

said...

வாங்க ரசிகன்.

இந்த ரெஜிஸ்ட்ரேஷன்கூட 'மனிதனின் நண்பர்களுக்கு' மட்டுமே. இன்னொரு வகைக்காரங்களுக்கு இல்லை. அவுங்க வீட்டுக்குக் குறைஞ்சது சராசரியா ரெண்டு பேர் என்ற கணக்கில் இருக்காங்க.

தொழில் ஆரம்பிக்கலாம்:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

இந்திய வாசத்தில் கொஞ்சம் நினைவில் இருந்து அகன்றவன்..... இங்கே வந்தவுடனே கொசுவத்தி ஏத்தி வச்சுட்டான். அவன் நின்ன இடம், அவன் சாப்பாட்டுத் தட்டுகள், தண்ணிப் பாத்திரம், இப்படி ஒவ்வொன்னும் கண்ணுலே பட்டுக்கிட்டே இருக்கு. அவன் எப்போதும் பதுங்கும் மூலையில் ஒருநாள் உக்கார்ந்துருக்கான் அதேஎ நீள வாலோடு!ஓடிப்போய்ப் பார்த்தால் அங்கிருக்கும் கருப்புப் ப்ளாஸ்டிக் ஷீட்.

காணும் பொருள் யாவும் அவன் தோற்றம். அதைக் கண்டு நெருங்கினால் ஏமாற்றம்:(

said...

:)

ஆகா...கோகி.

said...

கோபாலகிருஷ்ணன் நல்லா இருக்கான் .அதே உறுத்துப் பார்க்கும் பார்வை.
ஹை ஜிகே.

said...

வாங்க மாதேவி.

கோகியை நினைச்சாலே மனசு என்னவோ சரியில்லாமப் போயிருதுங்க..

said...

வாங்க வல்லி.

இங்கே இருந்தவரை ராஜபோகம்தான் அவனுக்கு! 'அங்கேயும்' அரசனா இருக்கலாம்:-))))

said...

Good sharing . . Thanks

said...

Super post

said...

வாங்க என் ராஜபாட்டை ராஜா.

முதல் வருகைக்கு நன்றி. நல்லா இருக்கீங்களா?