Friday, July 15, 2011

பிகானீரில் வெண்கொற்றக் குடைகள் வரிசை ......... (ராஜஸ்தான் பயணத்தொடர் 36)

எலிக்கோவிலில் இருந்து ஒரு முப்பது கிமீ தூரத்தில் பிகானீர் நகரம். இதை நிர்மாணிச்ச ராஜா ராவ் பிகா, நம்ம ஜோத்பூர் மஹாராஜா ராவ் ஜோதாவின் அஞ்சாவது மகன். பட்டத்துக்கு வாரிசு 'தான்' இல்லை என்பது நல்லாவே தெரிஞ்சு போச்சுன்னா வேற ஊருலே போய் தனியா ஆட்சி அமைச்சுக்கும் டெக்னிக் தமிழ்நாட்டுலே கூட கேட்ட/பார்த்தமாதிரி இருக்கே! ராஜான்னு ஆனபிறகு சம்பிரதாயமான கோட்டை கொத்தளம் எல்லாம் வேண்டித்தானே இருக்கு, இல்லையா? வம்பு எதுக்குன்னு பாலைவனத்துக்குள்ளே(யே) போய் செட்டில் ஆகிட்டார்.

ஊருக்குள் நுழையும்போதே நகரின் பழமை, பார்க்கும் இடங்களில் எல்லாம் கண்ணுலே பட்டுச்சு. பெரிய மதிள் சுவரில் இருக்கும் வாசல் வழியாகப் போறோம். கடைகள் நிறைஞ்ச பகுதியில் குறுகலான தெருக்கள். இப்பவும் வழி தெரியாமல் சுத்திட்டு, போக்குவரத்தைச் சரி பார்க்கும் காவல்துறையாரைக் கேட்டு, சரியான இடத்துக்குப் போனோம். பெரிய சிகப்புக் கல் கட்டிடங்கள், கங்கா தியேட்டர் ( இது மஹாராஜா கங்கா சிங் மஹாலின் ஒரு பகுதி) குழந்தைகள் பூங்கா எல்லாம் கடந்து ஹொட்டேல் ராஜ் விலாஸ் பேலஸ்ஸில் நுழைஞ்சோம். பார்த்தாலே பிடுங்கித்தின்னும் அழகு. லாபியில் கண்ணாடிக்கூண்டு லிஃப்ட்.
இதுவும் சரித்திர சம்பந்தமுள்ள இடம்தான். 1866 வது வருசம் பிரிட்டிஷார் ஆட்சியில் கவர்னர் ஜெனரல் வசிப்பதற்கும் அவர் இல்லாத சமயங்களில் அவருடைய பிரதிநிதி தங்கிக்கவும் கட்டியிருக்காங்க. அப்ப மஹாராஜா டுங்கர் சிங், பிகானீர் அரசர். அவருடைய காலத்துக்குப்பின் பட்டத்துக்கு வந்த மஹாராஜா கங்கா சிங், இந்த மாளிகையை அரசரைக் காணவரும் முக்கிய விருந்தினர்களுக்கான இடமா மாத்திக்கிட்டார். அதுக்குப்பிறகு அரச குடும்பக் கல்யாண விழாக்களில் சம்பந்திகள் வந்து தங்கும் இடமா இருந்துருக்கு.
இப்ப இருக்கும் ராஜா நரேந்திர சிங் ஜியின் ஆட்சியில் இதை(யும்) ஹொட்டேலா மாத்தி இருக்காங்க. மொத்தம் 57 அறைகள். மாடியில் ரெஸ்ட்டாரண்ட், பார் இப்படிப் பார்க்க கிராண்டாத்தான் இருக்கு.

நமக்குக் கொடுத்த அறையில் ஒரு மக்கல் வாசனை. போதாததுக்கு சிகரெட் நாத்தம். யக்.......:( வேறு அறை மாத்திக் கொடுக்கச் சொன்னால்....... வரவேற்பில் இருந்த பெண் (ட்ரெய்னி) எல்லா கேள்விக்கும் ஒரே மாதிரி முழிக்கறாங்க. போட்டுருந்த புதுமாதிரி மூக்குத்தி நல்லா இருந்துச்சு:-) ட்ரெயின் பண்ணும் நபர் அடிக்கடிக் காணாமப் போயிடறார்!

அறை மாத்துனதும் நாங்க ரெஸ்ட்டாரண்டுக்குச் சாப்பிடப்போனோம். அலங்கரிச்ச டைனிங் ஹாலில் ஈ காக்கை இல்லை. காலிக் கவுண்ட்டரில் நாலு தட்டு தட்டுனபிறகு ஒரு தலை எட்டிப் பார்த்துச்சு. சாப்பிடவா வந்துருக்கீங்கன்னு ஒரு (அனாவசியக்) கேள்வி! பின்னே? அலங்காரம் பார்க்கவா?
ரெண்டேகாலுக்குக் கிளம்பி இப்போ சத்ரி பார்க்கப் போய்க்கிட்டு இருக்கோம். ஜெய்ஸல்மீர் போகும் நேஷனல் ஹைவேயில் எட்டு கிலோ மீட்டர் போகனும் தேவி குண்ட் என்ற இடத்துக்கு. அரசகுடும்ப சுடுகாடுதான் இது. நாம் ஜெய்ப்ப்பூரில் பார்த்தமாதிரி அரச குல ஆண்களுக்குத் தனி, பெண்களுக்குத் தனி இடமுன்னு பிரிச்சு வைக்காம எல்லோருக்கும் பொதுவாவே இருக்கு. பயங்கர ப்ளானிங்! ஒழுங்கு கலையாம வரிசைகளில் வச்சு எரிச்சு அப்படியே அந்த இடத்தில் மண்டபங்கள் கட்டி இருக்காங்க. ஒரு கோணத்துலே இருந்து பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தூண்களே தூண்கள்.
மஹாராஜா கல்யாண் சிங் அவர்களின் சத்ரிதான் இங்கே ஏற்றவும் மூத்தது. இவர் பிகானீரின் அஞ்சாவது ராஜா. மற்ற நான்கு ராஜாக்கள்மாரை எங்கே எரிச்சாங்களோ? மண்டபத்துக்கு மேலே குடைபோல் ஒரு அமைப்பு கட்டி இருப்பதால் இதைச் சத்ரின்னு சொல்றாங்க. அரச குடும்பத்து அங்கங்களின் முக்கியத்தை அனுசரிச்சு பெருசும் சிறுசுமா இருக்கு. அலங்காரங்களும் அப்படியே! ஆண்களுக்கு அவர்கள் பெயர் பொறிச்ச ஹெட்ஸ்டோன் மாதிரி ஒரு பலகைக்கல். பெண்களுக்கு அவர்கள் காலடி பதிச்ச பலகைக் கல். குட்டிப்பசங்களுக்குக் குடை இல்லையாம்..... சிம்பிளா கட்டிட்டாங்க.

உடன்கட்டை ஏறின சதிகள் 22 பேருக்கு தனித்தனி மண்டபங்கள். இவுங்க எல்லோரும் மஹாராஜா கஜ் சிங் காலத்துக்கு(1745 - 1787) முற்பட்டவங்க. இந்த சதிகள் கூட்டத்துலே ஒரே ஒரு சதனோட நினைவு மண்டபமும் இருக்கு. நமக்கு கைடு இல்லாததால் தேடிக் கண்டுபிடிக்க நேரம் இல்லை:( மனைவி மேல் எவ்வளோ பிரியம் பாருங்க...... கோபாலுக்குக் கட்டாயமாக் காமிச்சுருக்க வேண்டியது....ஜஸ்ட் மிஸ்டு! (1829 வது வருசம் இப்படி உடன்கட்டை ஏறுவது சட்டத்துக்கு விரோதமான செயல்ன்னு சட்டம் உருவாச்சு)

உள் விதானங்களிலும் அழகான சித்திரவேலைப்பாடுகள். அசல் தங்கத்துலே கூட பெயிண்டிங் செஞ்சது சில !
மண்டபங்கள் பெரும்பாலும் வெள்ளைப் பளிங்குன்னாலும் ஒரு சிலது சிகப்புக்கல்லிலும் இருக்கு! வெள்ளைப்பளிங்கை விட இந்த சிகப்புக்கல் விலை உயர்ந்ததாம்.


என்னதான் ராத்திரி பகலுன்னு இருபத்தினாலு மணி நேரமும் குடை பிடிச்சுக்கிட்டுப் படுத்துக்கிடந்தாலும் சூடு எரியத்தானே செய்யும்? அதுக்காகவே இந்த இடத்தையொட்டி கல்யாண் சாகர் என்ற பெரிய குளம் ஒன்னு இருக்கு
விஸ்ராந்தியா இப்படி ஓய்வு எடுத்தால் நல்லாதான் இருக்கு. குடை இருந்தாத்தான் மதிப்பாம். எனக்கும் ஒரு குடை வைக்கணும். இல்லைன்னா செத்துருவேன்னு கோபாலை மிரட்டி வச்சுருக்கேன்:-)

அஞ்சு ரூபா நுழைவுக் கட்டணம் இதுக்குள்ளே போய்ப் பார்க்க. அடிக்கும் மொட்டை வெய்யில் குடை இல்லாம ரெண்டு பேர் வெளியில் காவலுக்கு இருந்து கட்டணம் வாங்கிக்கிட்டு ரசீது கொடுக்கறாங்க.தொடரும்....................:-)

17 comments:

said...

அரண்மனையில இருக்கற லிஃப்டே அவ்ளோ அழகாருந்தா.. மத்த அழகுகளுக்கு கேக்கவா வேணும்.. பார்த்துமுடிக்க ஒரு ஜென்மம் போதாது போலிருக்கு.

எல்லோரும் இந்நாட்டு மன்னர்ன்னு பெயரளவுலதான் சொல்லிக்கிட்டிருக்கோம். நமக்கும் இப்படியொரு அரண்மனை இருந்தா எப்டியிருக்கும்!!!.

அடுத்த தேர்தல்ல இலவசமா எந்தக்கட்சி அரண்மனை தருதோ, அவங்களுக்குத்தான் முன்னுரைமை கொடுக்கணும்... சரியா
:-)))))))))

said...

பிகானீர் ஸ்வீட்ஸ்ன்னு இருக்கற தொடர் இனிப்பகங்களுக்கு, ஒருவேளை இதான் தாய்மண்ணோன்னு தோணுது.

said...

//முன்னுரைமை //

பின்னவீனத்துவ தமிழ்மாதிரியே ஒலிக்குது. ஜாரி... முன்னுரிமைன்னு மாத்திப்படிச்சுக்கோங்க :-))

said...

விதானங்களின் சித்திரங்கள் வெகு அழகு. லிஃப்ட்டை கீழிருந்து உச்ச்ச்சி வரை காட்டிய கோணம் மிக அருமை.

@ சாரல்,

பேராசை. அவங்க ‘ராசா’ கணக்கா அரண்மனை கட்டிக்கிட்டே போறதுக்குதான நாம வாக்களிக்கிறோம்:)!

said...

வாங்க அமைதிச்சாரல்.

இது விருந்தினர் மாளிகை. (நம்மைப்போல்) அரசரைச் சந்திக்கவரும் முக்கியஸ்தர்களுக்காம்:-)

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற
ஹோதாவில் காசைக் கட்டிட்டு ரெண்டு நாள் அரண்மனை ஆடம்பரத்தை ரசிக்கலாம்.

பிகானீர்வாலாவின் ஹெட் ஆஃபீஸ் இங்கேதான் இருக்கு.
'உரைமை'கூட நல்லாத்தான் இருக்கு:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

ஆஹா.... பிட் டீச்சர் சொன்னால் அதுக்கு மதிப்பு கூடுதல்! நன்றிப்பா.

'ராசா'வா இருந்தால் தி** லே இருக்கணும்:-)

வேணாம்....நாம் மன்னியாவே இருக்கலாம்!

said...

எந்த ராசாவைச் சொல்றேன்னு சரியாப் புடிச்சீங்க.நமக்கு ரெண்டு நாள் பார்த்து ரசிக்கறதே போதும்:)!

said...

ஊர் உலகமெல்லாம் தெரிஞ்ச ராசா இவரு! இந்திய நியூஸை கொஞ்சமும் சட்டை பண்ணாத நியூஸியே இவரைபத்தி சேதி சொல்லுதுன்னா பாருங்க.

இப்போ இன்னொரு இந்திய செய்தி புகழோடு சுத்துது அங்கே. எல்லாம் நம்ம அனந்தபுரம் சமாச்சாரம்தான்!

said...

நம்ம வூரு கலைப் பொக்கிஷங்கள் மேலே வெளிநாட்டவருக்கு எப்பவும் ‘ஒரு’(?) கண்ணாச்சே. இப்படி ஒரு புதையல் என்றால் விடுவார்களா?

said...

உள்ள இருந்தாலும் வெண்கொற்றக் குடைபிடிச்சிட்டு ஆட்சி செய்யராங்களா? :)

ஹாயா படியில் உக்காந்து என்ன கதை கேட்டுட்டு வந்தீங்க?

said...

எல்லா இடத்துக்கும் குடை வேற.... ம்... கொடுத்து வைச்சவங்க...

கூரை விதானங்களில் இருக்கும் ஓவியங்கள்.... என்ன ஒரு ரசனை அந்த ஓவியர்களுக்கும், அரசருக்கும். :)

said...

வாங்க கயலு.

மடக்கமுடியாத குடையப்பா!!!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

படுத்துக்கிட்டே பார்க்கணுமுன்னா விதான ஓவியங்கள்தான் சரிப்படும்:-))))

ரசனைக்குக் கேக்கணுமா!!!!

said...

பயணங்களில் அரண்மனை வாழ்க்கையுடன் வெண்கொற்றக் குடைகளையும் பார்க்காமல் விடுவதாய் இல்லை.:))

said...

அழகான புகைப்படங்களோடு உங்கள் பதிவு. ஒரு முறைப் போயி பார்த்துவிட வேண்டியது தான்!

said...

வாங்க மாதேவி.

குடையும் நம்மை விடுவதாக இல்லையாக்கும்:-)))))

said...

வாங்க மோகன்ஜி.

ரொம்பவும் கலர்ஃபுல்லாகக் கலை அழகுடன் இருக்கும் மாநிலம் இது. சந்தர்ப்பம் கிடைச்சால் விட்டுடாதீங்க.