Friday, July 01, 2011

ப்ச்.......பேசாம உடன்கட்டை(யே) ஏறி இருக்கலாம் ........((ராஜஸ்தான் பயணத்தொடர் 27)

ஏராளமான முற்றங்கள் ஒவ்வொன்னுக்கும் ஒரு பெயர். இந்த அரண்மனை முழுசுமே ஒரே காலத்துலே கட்டப்படலை. ஆட்சி பீடத்துலே ஏறிய வெவ்வேற மஹாராணாக்கள் அவுங்க விருப்பப்படி விஸ்தரிச்சுக்கிட்டே போயிருக்காங்க. அந்தந்தக் காலக்கட்டத்தில் இருந்த ராஜாக்களின் பெயர்கள் அவர்கள் கட்டிய முற்றத்துக்கும் மாளிகைக்கும் அமைஞ்சுருக்கு. அமர் மஹல், அமர்சிங் சௌக், போபால் சௌக் (அதென்னமோ பூபால் சௌக்கை இப்படி போபால் சௌக்ன்னு சுவத்துலே பொறிச்சு வச்சுருக்கு! )இப்படி. இதுலே மோர் சௌக் என்ற முற்றம் கண்கொள்ளாக் காட்சி. ஹிந்தியில் 'மோர்' ன்னா மயில். மயில்கள் அப்படியே சுவத்தைத் துளைச்சுக்கிட்டு வரும் 3D இமேஜ்லே முற்றத்துச் சுவர்களில் தோகை விரிச்சு நிக்குதுகள்.

மோர்சௌக்

திவான் இ காஸ், திவான் இ ஆம் இப்படி முக்கியஸ்தர்களை சந்திக்கும் இடம், பிரபலக் கலைஞர்கள் நடத்தும் நிகழ்ச்சியை குடும்பத்துடன் கண்டு களிக்கும் இடம் இப்படி அங்கங்கே அமைச்சுருக்காங்க. ஒவ்வொன்னுக்கும் தரையில் பதிச்சிருக்கும் பளிங்கு டிஸைன்கள் கூட வெவ்வேறா இருக்கும்படிப் பார்த்துப் பார்த்து செஞ்சுருக்காங்க. உப்பரிகையை ஒட்டி அமைச்சுருக்கும் சாளரங்களில் பளிங்கில் வேலைப்பாடுகள் செய்த கைகளுக்கு என்ன சன்மானம் கொடுத்தால் தகும்? ராஜஸ்தான் மாநிலத்துலே இருக்கும் அரண்மனைகளிலேயே இதுதான் பெருசு என்ற புகழும் உதய்பூர் அரண்மனைக்குத்தான்.
சித்ரசாலான்னு ஒரு தனிமாளிகை. 1828வது வருசம் கட்டியது. நாட்டு நடப்புகளை ஓவியமா வரைஞ்சு வைக்க ஏராளமான ஓவியர்களை மஹாராஜா வேலைக்கு வச்சுருக்கார். ஓவியங்கள் எல்லாமே ஒன்னாந்தரம்!!! போர்க்காட்சிகள் முதல் மஹாராஜா உல்லாசமா பொழுது போக்குனதுவரை இருக்கு இங்கே. பலவற்றில் அசல் தங்கம் கொண்டு தீட்டி இருக்காங்க.


விதவைகளுக்குன்னு தனியாச் சட்டதிட்டங்கள். எல்லாம் கடுமையானவை. தானே சமைச்சுச் சாப்பிட்டுக்கணும். அதுவும் ஒரு வேளை உணவு மட்டுமே! கடவுளை நினைப்பதைத் தவிர வேறெந்த பொழுதுபோக்கோ உல்லாசமோ கிடையாது. சமையலறை படுக்கை அறை இது ரெண்டுதான் சாஸ்வதம். ஒரு மஹாராணி விதவையான பிறகு அவுங்க வாழ்ந்த வாழ்க்கை எப்படின்னு இந்த சமையலறையைப் பார்த்துத் தெரிஞ்சுக்கலாம். ( ஐயோ.... இதுக்கு உடன்கட்டை ஏறுவது எவ்வளவோ மேல்:(.............. இல்லீங்களா? )

ஃபடே சாகர் ஏரி பார்த்த நினைவு இருக்கா? அந்த மஹாராணா ஃபடே சிங்கின் மகன்தான் பூபால் சிங். இவர். அது என்னவோ தெரியலை இந்த மேவார் ராஜாக்கள் பலருக்கும் புத்திர பாக்கியமே இல்லை. தத்துப்பிள்ளைகளைத்தான் தனக்குப் பிறகு ஆள பட்டத்து இளவரசா ஆக்கிக்கிட்டு இருந்தாங்க. இந்த மேவாரின் நூறு வருசச் சரித்திரத்துலே தத்துப்பிள்ளையா இல்லாம பெத்த பிள்ளையா ஆட்சிக்கு வந்தவர் பூபால் சிங். ஆனா பாருங்க விதியை என்னன்னு சொல்றது? மஹாராணா பூபால்சிங் ஒரு மாற்றுத் திறனாளி. தன்னுடைய பதினாறாவது வயசுலே முதுகுத் தண்டு வடத்துலே பாதிப்பு. டி.பி. அதுக்குப்பிறகு சக்கர நாற்காலியில் வாழ்க்கை. இவருடைய படுக்கை அறையில் அவருக்கான சகல வசதிகளும் செஞ்சு வச்சுருக்காங்க. கம்மோடு, எடை பார்த்துக்கத் தராசுன்னு பலதும். இவருக்காக ஒரு மின்தூக்கி கூட 1938 லே அமைச்சுருக்காங்க.

ராயல் கம்மோடு

மேவார் அரசர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தினமும் சூரிய நமஸ்காரம் செஞ்சுட்டுத்தான் கடமைகளை ஆரம்பிப்பாங்க. மழைக்காலங்களில் சூரியனைப் பார்க்க முடியாது என்பதால் அரண்மனைக்குள்ளே ஒரு பூஜை அறையில் தகதகன்னு ஜொலிக்கும் தங்கச்சூரியனை சுவரில் பதிச்சு வச்சுருக்காங்க. இது மஹாராணாவின் படுக்கை அறைக்குப் பக்கத்து மண்டபத்துலே இருக்கு,
வாழ்க்கை இவருக்குச் சக்கர நாற்காலியில் முடங்கிப்போகலை! அரசர்களுக்குரிய எல்லாக் கலைகளையும் கொஞ்சம் கஷ்டப்பட்டுக் கத்துக்கிட்டார். வேட்டையாடுவதில் விருப்பம். தன்னுடைய குதிரையில் ஏற்றி உக்காரவச்சு குதிரையோடு சேர்த்துக் கட்டிவைக்கச் சொல்வாராம். அப்படியே கிளம்பிப்போய் வேட்டையாடுவார்! ( ஒருவேளை இவருக்காகத்தான் அரண்மனை வாசலில் குதிரை யானை ஏற படிகள் கட்டி வச்சாங்களோ என்னவோ!)

மஹாராணா பட்டத்துக்கு வந்தது அவருடைய நாற்பத்தி ஆறாம் வயசில். இருபத்தியஞ்சு வருசம் (1930- 1955) ஆட்சி புரிந்தார். சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிச்சார். இதுக்குன்னே தனியா ஒரு அரசியல் கட்சியைக்கூட உருவாக்கினாராம். யுனைட்டட் இண்டியா என்ற பெயரில் தனிப்பட்ட சமஸ்தானங்கள் எல்லாம் ஒன்றுபட்டு அதிகாரத்தை விட்டுக் கொடுத்துடனும் என்ற கருத்துக்கு ஆதரவு தந்த முதல் ராஜபுத்திர மஹாராஜா இவர்தான். ஆயிரத்து நானூறு வருசப் பழமை வாய்ந்த ராஜவம்சத்து ஆட்சியை விட்டுக்கொடுக்க முன்வந்தாரேன்னு மற்ற மஹாராஜாக்களுக்கு இவர்மேல் கோபம். இவரோட காலுக்குப் பதிலா கைகள் முடங்கி இருந்துருந்தா கையெழுத்துப் போட முடிஞ்சுருக்காதேன்னு குரூரமாக்கூட அப்போ பேச்சு ஒரு பக்கம் போய்க்கிட்டு இருந்துச்சு:(

1949 ஆம் வருசம் மார்ச் மாதம் 31 ஆம் தேதியில் இருபத்தி இரண்டு சமஸ்தானங்கள் தங்களை இந்திய நாட்டுடன் இணைச்சுக்கறதாச் சொல்லி உடன்படிக்கை கையெழுத்தாச்சு. எல்லோருக்குமாச் சேர்த்து ஒரு பொதுத் தலைமையாக இவரைத் தேர்ந்தெடுத்து 'மஹாராஜப்ரமுக்' என்ற பட்டத்தையும் பொறுப்பையும் இந்திய அரசு கொடுத்துச்சு.

மஹாராணா பூபால் சிங் தன்னுடைய ஆட்சி காலத்துலே (நாட்டு) மக்களுக்கு பல நல்ல விஷயங்களைச் செஞ்சுருக்கார். பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் எல்லாம் ஆரம்பிச்சுவிட்டது அப்போதான். உடல்நலம் பேணுவது எவ்வளவு முக்கியமுன்னு இவருக்குத் தெரிஞ்சதால் சகலவசதிகளும் கூடிய ஒரு மருத்துவமனையை உதய்பூரில் கட்டி வச்சார். இதுதான் இப்போதும் நம்பர் ஒன்னா இருக்கு. காலத்துக்கேத்த மாதிரி நவநாகரிக சிகிட்சை தர எல்லாவிதமான மாடர்ன் உபகரணங்களுடன் இலவச மருத்துவமனையா இது செயல்படுது. ஊர் மக்களுக்கு இந்த மருத்துவமனையைப் பற்றி உயர்ந்த கருத்துகள் இருக்குன்னு ஒரு ஆட்டோக்காரரிடம் பேசுனப்பத் தெரிஞ்சது.

சக்கர நாற்காலியில் இருந்தாலும் தன் (நாட்டு) மக்கள் நலனைக் கவனிச்சுப் பார்த்துப் பார்த்துச் செஞ்சுருக்கார் இவர்.!!! இவருக்கு(ம்) இரண்டு ராணிகள். ஆனால் குழந்தைச்செல்வம் இல்லை. (எனெக்கென்னவோ இந்த ராணிகளை நினைச்சு மனசுக்கு ஐயோன்னு போச்சு. ப்ச்......)

பதினேழு வயசு உறவுக்காரப் பிள்ளையை தத்து எடுத்தார் மஹாராணா.
இவருக்குப்பின் பட்டத்துக்கு வந்த தத்துப் பிள்ளை பக்வத் சிங் ஆண்டு அனுபவிக்கக் 'குடும்ப சொத்தான ஷிவ் நிவாஸ், ஷம்பு நிவாஸ் மாளிகைகள் மட்டுமே' கிடைச்சது. இதையும் இந்திய அரசு கபளீகரம் செஞ்சு அரச குடும்பத்தை வீடில்லாமல் ஆக்கிடப்போறாங்களே என்ற முன் யோசனையுடன் சட்டப்படி இதைப் பதிவு செஞ்சுருந்தார் மஹாராணா பூபால் சிங். அப்புறம் ஜக் மந்திர்ன்னு சொல்லும் பிசோலா ஏரி மாளிகை. இப்போ இதுதான் தாஜ் ஹொட்டேல்.
இந்தப் படத்தில் இடப்புறம் இருக்கும் மதிள் சுவரைக் கவனியுங்க. இதுக்கு ரெண்டு பக்கமும் யானைகளை நிறுத்தி யானைச்சண்டை நடக்குமாம். உடலோடு உடல் மோதாமல் வெறும் கைச்சண்டை. தும்பிக்கையைக் கொண்டே அடுத்த யானையின் தும்பிக்கையை இழுத்துச் சுவரின் மேல்பகுதியில் தொடவச்சுட்டால் ஜெயிப்புக்கு அடையாளம். யானைக் கபடி:-)
விளையாட்டுச் சண்டைதானாம். பொழுது போக்கு!!!! போதுண்டா சாமி........ கடைசியா இது நடந்தது 1951லே.

மேவார் நாட்டு மன்னராட்சி மஹாராணா பூபால் சிங்கோடு முடிஞ்சது. இவர் அரசபரம்பரையில் 76வது மன்னர். இவருக்குப்பிறகு வந்த ராஜவம்சத்தினர் ஆள்வதற்கு ராஜ்ஜியமில்லாத ராஜாக்கள்தான்.
கீழ்தளத்தில் ஏராளமான பல்லக்குகள் பெண்களுக்குத் தனியா மூடு பல்லக்குகள், சாரட்டுகள் வரிசைகட்டி நிக்குது. ராஜகுடும்பத்துலே யாருமே நடக்கமாட்டாங்களோ? வஸந்த மண்டபங்கள் அங்கங்கே! விசாலமான உள்முற்றத்தில் குடைகளுடன் இருக்கைகள் அமைச்சுருக்காங்க. குடும்ப விழாக்கள், திருமணங்கள் நடக்கும்போது இந்த இடம் ஜேஜேன்னு இருக்கும். ஒரே ஒரு கஷ்டம்........வெறும் ரெண்டாயிரம் விருந்தினர்களைத்தான் உபசரிக்க முடியுமாம்!!!!


தொடரும்.......................:-)

23 comments:

said...

இந்தப் பதிவை தமிழ்மணத்தில் சேர்க்க முடியலை. யாராவது கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்களேன் ப்ளீஸ்!

said...

நல்ல பகிர்வு.

தமிழ் மணத்திலே ஏதோ பிரச்சனை. தமிழ்மண ஓட்டுப் பட்டை இருக்கிற தளங்கள் திறக்கவே நிறைய நேரம் எடுக்கிறது.

said...

///மஹாராணா பூபால் சிங் தன்னுடைய ஆட்சி காலத்துலே (நாட்டு) மக்களுக்கு பல நல்ல விஷயங்களைச் செஞ்சுருக்கார். பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் எல்லாம் ஆரம்பிச்சுவிட்டது அப்போதான். உடல்நலம் பேணுவது எவ்வளவு முக்கியமுன்னு இவருக்குத் தெரிஞ்சதால் சகலவசதிகளும் கூடிய ஒரு மருத்துவமனையை உதய்பூரில் கட்டி வச்சார். இதுதான் இப்போதும் நம்பர் ஒன்னா இருக்கு. காலத்துக்கேத்த மாதிரி நவநாகரிக சிகிட்சை தர எல்லாவிதமான மாடர்ன் உபகரணங்களுடன் இலவச மருத்துவமனையா இது செயல்படுது. ஊர் மக்களுக்கு இந்த மருத்துவமனையைப் பற்றி உயர்ந்த கருத்துகள் இருக்குன்னு ///

வலி உணர்ந்தவர்கள்தான்
மக்களின் வாழ்க்கை
வகை உணர்ந்தவர்கள்
என்பதை நிருபிக்கும் மன்னர்

நல்ல பதிவு
அந்த மயிலின் படம் அற்புதம்

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஏற்கெனவே காத்தாடும் பதிவுக்கு தமிழ்மணம் வேற கூட்டுச்சதி:-)))))

said...

வாங்க ஏ ஆர் ஆர்.

எல்லா 'மன்னர்களுக்கும்' வலி தெரியும் என்றாலும்......... மக்களுக்காக(வே) சேவை செய்பவர்கள் அரிது இந்த மாடர்ன் இந்தியாவில்:(

அந்த மயில் ரொம்ப நுணுக்கமான கண்ணாடி வேலைப்பாடு! பிரமிச்சுப் போயிட்டேன்! ரசிப்புக்கு நன்றி.

said...

தமிழ்மணம் படுத்துக்கிச்சு துளசி மேடம்! ஆறு தடவைக்கு மேல் பார்த்தாலும் மறுபடியும் போகணும்னு இருக்கிற இடம் இது!

said...

உங்க கட்டுரைகள் எல்லாம் தௌகுத்தா ரண்டு பெரிய புத்தகம் தேறும் போல, எப்ப வெள்யீடு மேடம்!

said...

வெறும் ரெண்டாயிரம் விருந்தினர்களைத்தான் உபசரிக்க முடியுமாம்!!!!//

no seats for us!!??

said...

அருமையான பதிவுகள்.
வாழ்த்துக்கள்.

said...

தோகை மயிலுகள் எம்மையும் ஆடவைக்குதுகள்...

மழைக்கால சூரிய நமஸ்காரம்.. நல்லாகத்தான் யோசித்துச் செய்திருக்கிறார்கள்.

said...

மிகவும் ரசித்தேன்.

மனைவியிழந்த ராஜாக்களுக்கு அந்த மாதிரி விதிகள் எதுவும் செய்யவில்லையே, ஏன்? எவ்வளவு காலத்துச் சுமை இது... சே!

யானைக் கபடி :) சிரித்தேன்.

புகைப்படங்கள் பிரமாதம்.

said...

வாங்க அருணா.

ஆறுதடவை பார்த்தும் ஆறலை என்பது உண்மைதான்.

நின்னு நிதானமாப் பார்க்க நமக்கு நேரம் இல்லை:(

ஓடிக்கிட்டே பார்க்க முடிஞ்சது இவ்வளவுதான்!

said...

வாங்க ஷர்புதீன்.

இன்னும் 998 பேர் வாங்கிக்க முன் பணம் கட்டினால்.... அடுத்த புத்தக விழாவுக்கு வெளியிட்டுறலாம்:-)

said...

வாங்க தருமி.

அப்படித்தான் இருக்கு!

எட்டாயிரம் பேருக்கு இடம் தேடலாமா?:-)

said...

வாங்க ரத்னவேல்.

கண்டது இதுவரை ஒரு சதவீதம்தான். காணாதது மீதி:(

said...

வாங்க மாதேவி.

அதெல்லாம் 'உக்காந்து' யோசிக்காமல் இருப்பாங்களா?;-))))))

said...

வாங்க அப்பாதுரை.

ஒன்றுக்கு மேற்பட்ட ராணிகள் இருப்பதால் ராஜா நிரந்தர சுமங்கலன்!

அப்படியே இல்லைன்னாலும் புதுமாப்பிள்ளையாக எத்தனை நாள் ஆகப்போகுது?

எல்லாவிதக் கட்டுப்பாடுகளும் பெண்ணினத்துக்கு மட்டுமே:(

said...

ராணியாவே இருந்தாலும் விதிவிலக்குன்னு ஒண்ணும் இல்லை போலிருக்கு:-(

said...

வாங்க அமைதிச்சாரல்.

அவுங்க விதிக்கு விலக்கு கிடையாதுன்னு சொல்லிட்டாங்களேப்பா:(

said...

மயிலும் யானையுமாக அற்புத படப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிப்பா.

said...

அருமையான பகிர்வு. தங்களுடன் தொலைபேசியில் உரையாட முடிந்தால் நன்றாக இருக்கும்.

said...

வாங்க RajmiArun.

முதல் வருகைக்கு நன்றி.

நான் நியூஸிலாந்தில் வசிக்கிறேன். தொலைபேசி எண் தரவா?