தேவி Kகுண்ட் சாகரில் மீளாத்துயிலில் இருப்பவர்களைத் தொல்லைப்படுத்த வேணாமேன்னு சைலண்டா கொஞ்சம் க்ளிக்கிட்டுக் கிளம்பினோம். இங்கே இருந்து ஒரு நாலைஞ்சு கிலோமீட்டர் தூரத்துலே ஒட்டக ஆராய்ச்சி நிலையம் இருக்கு. மூணு மணிக்குத்தான் பார்வையாளர்களுக்கு அனுமதி என்றதால் நமக்கு குடைகளைப் பார்த்துட்டுப் போக நேரம் இருந்துச்சு. பத்து நிமிசம் முன்னாலேயே போயிட்டோம். நுழைவுச்சீட்டுக்காகக் காத்துருந்த நேரத்தில் மூணு வெள்ளைக்காரப் பயணிகள் வந்து சேர்ந்தாங்க. அதுலே இருந்த பொண்ணுக்கு.....ஜெய்ஸல்மீர்லே ஒட்டக சவாரி கொண்டுபோறோமுன்னு சொல்லி ஆயிரம் ரூபாய்க்கு ஆட்டையைப் போட்ட ஒருத்தர் ஒட்டகத்தைத் தொட்டுப் பார்க்கக்கூட விடலைன்னு புலம்பல்.
கவலைப்படாதே. இங்கே வெறும் இருவது ரூபாய் கட்டுனா ஒட்டக சவாரி செய்யலாம். நாங்களும் அதுக்கு டிக்கெட் வாங்கப் போறோம்னு சேதி சொன்னேன். உள்ளே போக நமக்கு பத்து ரூ. அவுங்களுக்கு இருபது. மற்ற சார்ஜ் எல்லாம் ஒரே மாதிரிதான். கேமெராவுக்கு இருபது கட்டணும்.
உள்ளே போனதும் விஸிட்டர் புத்தகத்துலே கையெழுத்துப் போடணும். அரசு நடத்தும் இடம் பாருங்க. நேஷனல் ரிஸர்ச் செண்டர் ஆன் கேமல், பிகானீர். அங்கே இருந்த ஒருத்தர் கைடு வேணுமா? முப்பது ரூபாய்தான்னார். சரின்னு சொன்னதுக்கு சந்தோஷமாக் கிளம்பி எங்களோடு வர்றார். இவரே கைடு பண்ணுவாராம். வேலை செய்யும் இடத்துலேயே பார்ட் டைம் ஜாப்.
முன்புறம் பெரிய பெரிய கட்டிடங்களா லேப் ஆஃபீஸ். அது இதுன்னு இருக்கு. இதெல்லாம் நமக்கு எதுக்கு? நேரா ஒட்டகம் பார்க்கணும். முதலிலே நம்ம வடிவேலுவை நினைச்சுக்கும்படி ஆச்சு. ஒட்டகப்பால் டீ!
தனித்தனியா நீள நீளமாக் கொட்டகை போட்டு வரிசையா ஒட்டகங்களைக் கட்டி விட்டுருக்காங்க. கொட்டகைக்கு ஆஸ்பெஸ்டாஸ் கூரை:( தகிக்கும் வெய்யிலுக்கு இன்னும் கொளுத்தாது? ப்ச் ............பாவம். ஒவ்வொன்னுக்கும் தலை உசரத்துலே தலையை நீட்டி வேடிக்கை பார்க்கும் விதமா ஒரு குட்டி ஜன்னல். ஜன்னலுக்குக் கீழே ஒவ்வொரு தொட்டி.
மாடுகள் போல குணம் இல்லையோன்னு தோணல். சொல்லி வச்சமாதிரி எல்லோரும் தொட்டிக்குள்ளே தலையை வச்சுச் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. லஞ்சு டைமோ?
இங்கே நாலுவகை ஒட்டகங்கள் இருக்கு. பிகானிரி, ஜெய்ஸல்மீரி. கச்சி. மேவாரி ன்னு நாலு பிரதேசத்து வகைகள். 137 ஆண்களும் 228 பெண்களுமா மொத்தம் 365.
புள்ளைத்தாய்ச்சிகளுக்கு! அப்போ தாய்ச்சனுகளுக்கும் இடம் ஒதுக்கியாச்சா:-)))))
பால் பண்ணைக்கு, ஆஸ்பத்திரிக்கு, புள்ளைத்தாய்ச்சிகளுக்கு, பிரசவிச்ச அம்மாக்களுக்குன்னு தனித்தனி ஏரியாவும் கட்டிடங்களும். அம்மாக்கள் இருக்கும் இடத்துக்குப் பக்கமா நர்ஸரி. ஆசையா ஓடிப்போய் பார்த்தால்..... அம்மா அம்மான்னு அழுதுக்கிட்டு இருக்குதுங்க பசங்க. கம்பி அடிச்சுவச்சக் கட்டைசுவருக்கு அந்தப் பக்கமா அம்மாக்கள் எல்லோரும் சொல்லி வச்சமாதிரி தண்ணீர் குடிச்சுக்கிட்டு நிக்கறாங்க. பசங்க எட்டிப் பார்த்துக்கிட்டே இங்கேயும் அங்கேயுமா ஓடுது.. தாயைப் பார்த்தால் பசி வந்துருக்குமே........... அஞ்சு வரை விஸிட்டிங் டைம் என்பதால் அதுக்குப்பிறகு பால் பண்ணைக்குக் கொண்டுபோய் பால் கறந்துக்கிட்டு அப்புறமா குழந்தைகளைப் பசியாற விடுவாங்களாம்.
நாம் போய் நின்னதும் அம்மாவை மறந்துட்டு வேடிக்கை பார்க்க நம்மை நோக்கி வருதுங்க பசங்க. பெரிய பெரிய கண்களை வச்சுக்கிட்டு ஓடிவந்து கேமெராக் கண்ணை முறைச்சுப் பார்த்துச்சு ஒன்னு:-)பிறக்கும்போதே குறைஞ்ச பட்சம் முப்பத்தியஞ்சு கிலோ எடை .உயரம் குறைஞ்சது நாலடி. ரெண்டு ரெண்டரை வருசம் தாய்ப்பால் குடிக்குதுங்க. நம்ம ஆசியாக் கண்டத்து ஒட்டகங்கள் அஞ்சு வயசுலே ஆளாகிருதுங்களாம். மற்ற நாடுகளைவிடக் கொஞ்சம் லேட்.
வளர்ந்த ஒட்டகங்கள் சுமார் 700 கிலோ வரை எடை இருக்குமாம். ஆயுசு? நாப்பது அம்பது வருசம் வரை உயிர்வாழும் வேற எந்த ஆபத்தும் இல்லாம க்வாலிட்டி ஆஃப் லைஃப் நல்லா இருந்தால்! பாலைவனத்துலே ஒரு நாளைக்கு இருபத்தியஞ்சு மைல் தூரம் கூட நடக்குமாம். சாப்பிடவோ குடிக்கவோ ஒன்னும் கிடைக்கலைன்னாலும் ஒரு வாரம் வரை தாக்குப் பிடிக்குமாம்.!!! இந்த 'ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்' எல்லாம் மனுசனுக்குத்தானா? எங்கே அந்த தண்ணி பாட்டில்? கொஞ்சம் இப்படித்தாங்கன்னு கோபால்கிட்டே கேட்டேன்.
குடிக்கும் தாய்களைப் பார்க்கும் பிள்ளைகள்!!
தண்ணியாண்டை கொண்டு விட்டால் ஒரே தடவையில் 100 லிட்டர்கூட குடிச்சுருங்களாம். குவாட்டர் மட்டும் அடிக்காது..... அதெல்லாம் எந்த மூலைக்கு:-)
குச்சிக்குச்சிக் காலை வச்சுக்கிட்டு 450 கிலோ எடை வரை சுமந்துக்கிட்டு என்னமாதிரி சூடுன்னாலும் அசராம நடக்குமுன்னு சொன்னப்ப ஆச்சரியமாத்தான் போச்சு. .
யானைப்படை குதிரைப்படை மாதிரி ஒட்டகப்படை கூட வச்சுருந்தாங்களாம். இப்பவும் ராணுவத்துலே வேலை செய்யும் ஒட்டகங்கள் உண்டு.
ஒட்டகவண்டி ஒன்னு வச்சுருக்காங்க. அதுலே போகவும் அதே இருபது ரூ தான். வண்டியில் உக்கார்ந்து போக நாம் கோழைகளா என்ன? அதான் ஏற்கெனவே ரெண்டு டிக்கெட்டு வாங்கியிருக்கே..... கோபாலுக்கும் நம்ம ட்ரைவர் ப்ரதீபுக்கும்:-)
ஒரு நிமிச வீடியோ ஒன்னு உங்களுக்காக:-)
ஜோத்பூரில் காலை ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போனப்ப ஒரு வெள்ளைக்காரரை சந்திச்சோம். ஜெர்மனியில் இருந்து ஹாலிடேக்குத் தனியா வந்துருக்கார். கொடுத்துவச்ச மனுசர்ன்னு கோபால் நினைச்சார். அவர் முகத்துலே ஒரு மில்லி செகண்டுக்கு ஒரு சோகம் எட்டிப் பார்த்துச்சு:-)
ஜெய்ஸல்மீர் போயிட்டு இங்கே வந்துருக்கார். போட்டோக்ராஃபி ஹாபியாம். அட்டகாசமான கேமெரா(பை) வச்சுருந்தார். நல்ல கேமெராவாத்தான் இருக்கணும். ஊர் எப்படி இருந்துச்சு, என்ன பண்ணீங்கன்னு கேட்டதுக்கு ரொம்ப சூடு. பாலைவனத்துலே ஒட்டக சவாரி போனேன்னார். நல்லா இருந்துச்சான்னா..... அப்போ நல்லா இருந்துச்சு. இப்ப பின்பக்கம் பூராவும் ஒரே வலி. தொடையெல்லாம் எரிச்சல். நடக்கவே முடியலைன்னார். அடடா....இந்த அனுபவம் கோபாலுக்குக் கிடைக்கலையேன்னு எனக்கு ஒரே வருத்தமாப் போயிருச்சு. அதான் இங்கே .......
உக்கார்ந்துருக்கும் ஒட்டகத்துலே 'ஏறி உக்கார' ஒட்டகக்காரர் உதவி செஞ்சார். ஒரு 150 மீட்டர் நடந்துபோய் திரும்பி வந்துச்சு ஒட்டகம். போன வருசத்து ஆணழகன் போட்டியிலே ஜெயிச்சவன் இவன்:-) தகவல் கொடுத்த கைடு காதுலே வெள்ளையும் சிகப்புமாக் கல்லுவச்ச அழகான தங்கக்கம்மல் போட்டுருந்தார். நிறைய இடங்களில் இப்படி ஆண்கள் கம்மல் போட்டுருப்பதைப் பார்த்தேன். நல்லாத்தான் இருக்கு. ஐ மீன் கம்மல்:-))))
அங்கிருந்த ஒரு ஷெட் லே மலைபோல் குமிச்சு வச்சுருக்காங்க ஒட்டகத் தீனியை. பொடியா அரிஞ்ச கோதுமை வைக்கோலாம். வழியில் ஒரு இடத்தில் பார்த்த பொதி இந்தத் தீவனமாத்தான் இருக்கணும்.மறுபடி மில்க் பார்லர் வழியா திரும்பினோம். பக்கத்து அறையில் ஒட்டகத்தோல் செருப்புக்கள் ஹேண்ட் பேக் பொம்மைன்னு வித்துக்கிட்டு இருக்காங்க. ச்சும்மா வேடிக்கை மட்டும் நமக்கு.
தொடரும்.......................:-)
Friday, July 15, 2011
ஒட்டகத்தைக் கட்டிக்கோ........... (ராஜஸ்தான் பயணத்தொடர் 37)
Posted by துளசி கோபால் at 7/15/2011 09:52:00 PM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
nalla anubavam... vaalththukkal
//தகிக்கும் வெய்யிலுக்கு இன்னும் கொளுத்தாது?//
பாலைவனத்திலிருந்து பழகியவை ஆயிற்றே என விட்டிருப்பார்களோ?
ஒட்டகம் குறித்த தகவல்கள், படங்கள் மற்றும் வீடியோ பகிர்வு அருமை.
//வண்டியில் உக்கார்ந்து போக நாம் கோழைகளா என்ன?//
ஆகான்னு வியந்தேன்.
// அதான் ஏற்கெனவே ரெண்டு டிக்கெட்டு வாங்கியிருக்கே..... கோபாலுக்கும் நம்ம ட்ரைவர் ப்ரதீபுக்கும்:-)//
அதானே பார்த்தேன்:))!
நல்ல வர்ண்னை.
அழகிய படங்களுடன் ஒட்டகத்தை பற்றி அருமையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி மேடம்.
கடுக்கன்களை பனியாக்கள்ன்னு சொல்லப்படற ராஜஸ்தானியர்கள் கிட்ட கண்டிப்பா பார்க்கலாம்.. அவங்கள்ல ஆம்பிளைப்புள்ளைக்கு காதுகுத்தினப்புறம்தான் பெண்குழந்தைக்கு காதுகுத்தமுடியும்.. எத்தனை வருடங்கள் ஆனாலும் சரி..
http://sivamgss.blogspot.com/2011/07/blog-post_29.html//
துளசி, தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன். மெதுவா நியூசி போய் எழுதுங்க. ஒட்டகங்கள் காத்திருக்கட்டும். :
ஒட்டகப்படக் காஷி ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஜோர். ஆமா, அதில் வா இங்கே என்று கூப்பிட்டது யாரை?
வாங்க சரவணன்.
வாழ்க்கை முழுசும் விதவிதமான அனுபவங்கள்தான்!
வாங்க ராமலக்ஷ்மி.
பாய்ண்டைப் பிடிச்சுட்டீங்க:-))))))
நான் ஃபோட்டோகிராஃபர்ப்பா. அதான் ஒட்டக சவாரி செய்யலை:-))))
வாங்க டாக்டர் ஐயா.
வருகைக்கு நன்றி.
ரொம்பநாள் ஆச்சே இங்கே உங்களைப் பார்த்து..... நலமா?
வாங்க ராம்வி.
சொன்னது ஒரு பத்து சதம் . ஆராயப்போனா ஏராளம் இருக்கு!
வாங்க அமைதிச்சாரல்.
சரியான பனியாதான் அவர். இல்லேன்னா அரசாங்க வேலையில் இருக்கும்போதே பார்ட் டைம் கைடு வேலை பார்க்கமுடியுமா:-))))
ஆண்களுக்கு முன்னுரிமையா!!!!!
தகவல் புதுசு!
குத்திறலாம்..... காதை:-)))))
வாங்க கீதா.
ஒட்டகம் மட்டுமா? பதிவும் காத்திருக்கணும்தான். இங்கே இப்போ நிலமை நான் எதிர்பாராதது!
எல்லாத்துக்குமே கொஞ்சம் நேரம் எடுக்கும்போல் இருக்கு.
வாங்க பத்மாசூரி.
கூப்பிட்ட குரலுக்கு வர வேண்டியவங்களைத்தான் கூப்பிட்டேன்ப்பா. கோபாலை இல்லை:-)))))
ஒட்டகத்தில் சவாரி போகனும் என்றால் புக் செய்து காத்திருக்கணும் போல அதான் லேட்டாக வருகிறேன்.:)
வழமைபோல் தகவல்கள் படங்கள்நன்றாக இருக்கின்றன.
நானும் இரண்டு முறை ஒட்டக சவாரி செய்து இருக்கேன். நிஜமாகவே பயங்கர வலிதான்.... :)
தொடரட்டும்... உங்கள் பயணம்.
வாங்க மாதேவி.
சவாரி அவ்வளவு சௌகரியமானதல்ல(வாம்)!!!!
வாங்க வெங்கட் நாகராஜ்.
நெடுந்தூரம் போனீங்களா?
பயணம் அம்போன்னு நிக்குது. தொடரத்தான் வேணும்.
நினைவூட்டுதலுக்கு நன்றி:-)
ஆஹா ஒட்டகத்தோட உங்க குரல் கேட்டது மகிழ்ச்சியா இருந்தது. அதெப்புடி நீங்க கத்துங்கன்னு சொன்னா ஒட்டகங்க அப்புடியே கத்தறாங்க துள்சி:)
Post a Comment