எல்லா அரண்மனைகளையும் போல இங்கே மேரங்கட் கோட்டையிலும் மோதி மஹல், ஷீஷ் மஹல், மலர்களுக்காகவே ஒரு மஹல், ராஜாவின் அரசவை இப்படித் தனித்தனியா மாளிகைகள் முற்றங்கள், உப்பரிகைகள் எல்லாம் இருக்கு.
உப்பரிகை!
முற்றத்தில் இருந்து அண்ணாந்து பார்த்தால் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் மாடிக் கட்டிடங்களின் சுவர்கள் கண்ணை இழுக்குது. பளிங்கில் எப்படி இவ்வளவு கட்ட முடிஞ்சது? மரவேலைப்பாடு மாதிரி இருக்கேன்னு பார்த்தால்.... பளிங்கு இல்லையாம், சிகப்புக் கற்கள் (ரெட் ஸ்டோன்ஸ்)ன்னு சொன்னாங்க. ரொம்ப நுணுக்கமான வேலைப்பாடு மட்டுமில்லாம சல்லடைக் கண்களா துளைச்சுவச்சது எதுக்குன்னா.... அரச குடும்ப மகளிர், கீழே முற்றத்தில் நடக்கும் சபை நடவடிக்கைகளை 'யார் கண்ணுக்கும் புலப்படாமல்' பார்த்துக்கவாம்!
ஏகப்பட்ட முற்றங்களில் ஒன்னு
சிங்க அம்பாரி. பின்னால் மெய்க்காப்பாளர் இருக்கையாம்
காட்சிக்காக வச்சுருந்த பொருட்களில் என் கவனத்தை இழுத்தது யானைமேல் வைக்கும் அம்பாரி வகைகள். பல்லக்குகள், ஒரு தனிமனுஷன் உக்கார்ந்துக்கிட்டால் அப்படியே அவரைத் தூக்கிப்போகும் டிசைன் கூட இருக்கு! அநியாயமா இருக்கே:( கொஞ்சம்கூட நடக்கவே மாட்டாங்களா?
சேர் பல்லக்கு
தங்கப்பல்லக்கு
இன்னொரு பெரிய கூடத்தில் வரிசை வரிசையாத் தொட்டில்கள். பேசாம இதை வச்சே ஒரு பெரிய குழந்தைகள் காப்பகம் நடத்தலாம்! ராஜகுடும்பத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியா தொட்டில் வேவ்வேற காலக்கட்டங்களில் செஞ்சுருக்காங்க. ஆனால் போதுமான ஆழம் இல்லாம பலகை போலவே இருக்கு. குழந்தை புரண்டு படுத்தால் விழுந்துடாதோ? ஒருவேளை பணியாளர்கள் கவனமா இருக்கணுமுன்னு இப்படி டிஸைனோ என்னவோ? அதானே.......அதைவிட வேறென்ன வேலை அவுங்களுக்கு...........
மகாராஜாவின் அரசவையில் விதானம் கூட தங்கம்தான்! வர்ணக் கண்ணாடிகள் போட்ட ஜன்னல் கலர்ஃபுல்லா இருக்கு. ஆனால் ஆசனம் ஒன்னுமே போடாமல் தரையிலே பட்டுக் கம்பளம் விரிச்சு, சின்னதா மெத்தை, சாய்மானத் திண்டு போட்டு அதுலே ஹாய்யா உக்காந்துருப்பாராம்!
கத்தோலிக் சர்ச்சுலே கருவறை (ஆல்டர்) யில் இருப்பதுபோல ஒரு சாமி மாடம்! நடுவிலே ஒரு புள்ளையார்!
விதவிதமான விதானங்களில் ஒன்னு.
ராணியம்மாவின் நகைப்பெட்டி! தந்தத்தில் தசாவதார டிஸைன்கள் போல வேலைப்பாடுகள். வெறும் பெட்டியைக் காமிக்காம அதுலே இருந்த நகைகளை காட்சிக்கு வச்சுருக்கக்கூடாது? பழங்கால டிசைன்கள் எப்படி இருக்குன்னு பார்க்கலாமுல்லே? ஒரு நூறு வருசத்து டிஸைனே ஆண்ட்டீக்ன்னு சொல்லும்போது இது ஐந்நூறு வருச சமாச்சாரமில்லையோ! ஒரு காங்கோர் சிலைகூட வச்சுருந்தாங்க. மத்தபடி அரண்மனை ம்யூசியங்களுக்கான கத்தி கப்டா சமாச்சாரங்கள்தான்.
மேல்தளத்தின் இருந்து ஊரைப்பார்க்கும்போது தொலைதூரத்தில் ஒரு மாளிகை தென்பட்டது. இதை நாம் ஹோட்டேலுக்கு வழிதெரியாமச் சுத்தும்போது பார்த்தோமே................
ஏதோ மரத்தின் பிசினை எடுத்து வர்ணங்கள் சேர்த்து உருட்டித் தீயில் காமிச்சு உருக்கி வளையல்கள் செஞ்சு விக்கறாங்க. இது ஜோத்பூர் ஸ்பெஷல். வேறெங்கும் இந்த பிசின் கிடைப்பதில்லையாம். மகளுக்காக ஒரு ஜோடி வளையல்கள் வாங்கினேன் விதவிதமான தலைப்பாகைத் துணிகளுக்கு ஒரு கடையும், காலணிகளுக்கு ஒன்னும், கைவினைப்பொருட்களுக்கு ஒன்னுமா இருக்கு.
வெண்கொற்றக் குடையின் கீழ் குடிதண்ணீர் பானைகள். அதுக்கு வச்சுருக்கும் டம்ப்ளர்கள் நீளமான கைப்பிடியோடு! வாட் அ நீட் ஐடியா!!!!! ஆனா மகாராஜாவுக்குக் குடிமக்கள் மீது அசாத்திய நம்பிக்கை. நீளமான சங்கிலியால் கட்டிப்போட்டுருக்கார் குவளைகளை!
வெளிவரும் வாசல் அருகில் உள்ளூர் இசைக்கலைஞர்கள் வாசிச்சுக்கிட்டு இருந்தாங்க. அஞ்சு நிமிசம் நின்னு கேட்டுட்டு அன்பளிப்பு கொஞ்சம் கொடுத்துட்டு, போதும் கோட்டை பார்த்தது. இன்னொரு மாளிகையும் இருக்கே அதைக் கோட்டை விட்டுறப்போறோமுன்னு அங்கே ஓடுனோம்.
தொடரும்........................:-)
Monday, July 11, 2011
அம்பாரி, அம்பாரி. யானை மேலே அம்பாரி ......... (ராஜஸ்தான் பயணத்தொடர் 32)
Posted by துளசி கோபால் at 7/11/2011 05:17:00 PM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
படங்களுடன் பதிவு வெகு ஜோராக இருந்தது.
நீங்க சொல்ற மாதிரி நடக்கவே மாட்டாங்களோ!!!!!!!
வளையல்..... இந்த விஷயம் ஜெய்பூர் அரண்மனை வாசலிலும் இருக்கிறது. ஜெய்பூரிலும் இதையே சொன்னார்கள் [அங்கு மட்டும் கிடைப்பதாக]... :) கொஞ்சம் துருவினால் ராஜஸ்தானில் மட்டும் கிடைப்பதைச் சொன்னார்...
நல்ல படங்கள் மற்றும் விளக்கங்கள். பகிர்வுக்கு நன்றி.
அழகான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
நகைப்பெட்டியே இவ்ளோ அம்சமா இருந்தா, நகைகளைப்பத்தி சொல்லவா வேணும்!!!!!
வாங்க கோவை2தில்லி.
அதாங்க எனக்கும் ஆதங்கமா இருக்கு. பல்லக்குன்னால் கூட அதை ரெண்டு பேரோ நாலுபேரோ தோளில் சுமக்கலாம். இந்த சேர் பல்லக்கு.....
இப்படி நடக்காமல் இருக்கும் அரசர்கள், அதிகாரிகள் எப்படியும் உடல் உழைப்பு இல்லாததால் கொஞ்சம்(?!) செழிப்பாத்தானே இருப்பாங்க? அவுங்களை கையில் பிடிச்சுத் தூக்கனுமுன்னா அந்த தூக்கிகள் ரெண்டு பேருக்கும் எப்படி வலிச்சுருக்கும்:(
அப்புறம் இன்னொரு விஷயம்..... பல்லக்கில் உள்ளே குனிஞ்சு நுழைவதும் தரையில் இறக்கி வச்சதும் குனிஞ்சு வெளிவந்து எழுந்து நிற்பதும்கூட..... நினைச்சுப் பார்த்தால் அசௌகரியமாத்தானே இருந்துருக்கும்!!!!
ஒருமுறை கீழே படுத்த தொட்டிலில் இருந்து வெளியே வர படாதபாடு பட்டுட்டேன். செழிப்பான உடம்பு பாருங்க:-))))))
நேரம் இருந்தால் இதைப் பாருங்க:-)
http://thulasidhalam.blogspot.com/2007/06/blog-post.html
வாங்க வெங்கட் நாகராஜ்.
வளையலில் இப்படி ஒரு விவகாரமா!!!!! அட ராமா!!!!
போகட்டும், அட்லீஸ்ட் ராஜஸ்தான் சமாச்சாரமுன்னு வச்சுக்கலாம்:-)
வாங்க இராஜராஜேஸ்வரி.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிப்பா.
வாங்க அமைதிச்சாரல்.
உள்ளே பதினெட்டடி காசு மாலை இருந்துருக்குமோ!!!!!!
அருமை பதிவு , பார்க்கும் போது மர வேலைபாடு போலவே தெரியுது ,
ஒவ்வொரு படத்தையும் பார்க்கும் பொழுது அதன் செழிப்பு தெரிகிறது .
பகிர்வுக்கு நன்றி
வாங்க எம் ஆர்,
முதல் முறையா வந்துருக்கீங்க! நல்வரவு.
இப்பதான் உங்க வீட்டுப் பக்கம் போனேன். அன்பு உலகம் அருமையான பெயர்.
இனிய வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.
மாளிகைகள் ... அம்பாரிகள் என ராஜபோகம்தான்.
எத்தனை பேர் வேலை செஞ்சாங்களோ இப்படி ஒரு பாலஸ் கட்ட. என்ன நுணுக்கம் பா. வளையல் கடை போட்டோ ஒன்னு போடக்கூடாதோ.;)
எத்தனை பல்லக்கு.!!
பல்லக்கு மாடம் ஒன்னு இருக்கும் பா. அதில பல்லக்கை வச்சுட்டு ராஜாவைத் தூக்கி உட்காரவைப்பாங்க. அப்படீன்னு நினைக்கிறேன். அருமையான படங்கள்.
வாங்க மாதேவி.
ராஜ போகம் வை போகம்!!!!!
வாங்க வல்லி.
மாடத்துலே வச்சு ராஜாவைத் தூக்கித் திணிச்சால்..... ஐயோ..... பாவம்!!!!
எப்படிப்பா....எப்படி? சச்சின் சொல்வது போல் வாசிக்கவும்:-)))
ஒரே மாதிரி கவனமா இருந்து செதுக்கும்போது எவ்வளவு ப்ரெஷர் இருந்துருக்கும்?
ஆனால்..... கலையை ஆராதிக்கும் கைகளால்தான் இவ்வளவும் முடியும் இல்லை!!!!
Post a Comment