Thursday, July 07, 2011

Dதர்னாவிஹார் என்னும் த்ரிபுவனதிலக் ......... ((ராஜஸ்தான் பயணத்தொடர் 30)

ரணக்பூர் தீர்த் ஜெயின் கோவிலுக்கு ஆதிகாலத்தில் தர்னாவிஹார் என்ற பெயரே அமைஞ்சுருக்கு. த்ரைலோக்கியத்வீப், திரிபுவனதிலக் என்றும் புகழாரம் சூட்டி இருக்காங்க. மூன்று உலகிலும் இதைப்போல ஒளிவீசும் ஒன்னு இல்லவே இல்லையாம்! உண்மைதான்!
இந்தக் கோவில் சதுர்முக வடிவத்தில் அமைஞ்சுருக்கு. அதனால் மூலவர் ரிஷபதேவ் என்னும் ஆதிநாத் பகவானின் பளிங்குச்சிலைகள் நாலு செய்யறாங்க. ஒவ்வொன்னும் நாலேகால் அடி உயரத்தில் வெள்ளைப்பளிங்கில் செஞ்சு திசைக்கு ஒன்னா கருவறையில் வைக்கிறாங்க. ஒவ்வொரு சிலைக்கு முன்னும் மஹா மண்டபம், ரங்க மண்டபம் ஒவ்வொரு மண்டபத்துக்கும் கிண்ண வடிவில் உள்விதானம் அதில் ஒவ்வொன்னுக்கும் விதவிதமான சிற்பங்கள் வேலைப்பாடுகள் இப்படி. அண்ணாந்து பார்த்தே கழுத்து நோவுது இப்ப! (Meghamandap) மேகமண்டப்ன்னு இருப்பதை மெகா மண்டப் (Megha mandap)ன்னும் சொல்லலாம். அத்தாம் பெருசு!
ஒரு இடத்தில் கீசகன் உருவம். மஹாபாரத்தில் பாண்டவர்கள் விராட தேசத்தில் அஞ்ஞாதவாசத்தில் இருக்கும்போது பாஞ்சாலி மேல் துராசை கொண்ட கீசகனை பீமன் வதம் செய்தது நினைவிருக்கா? அதே கீசகந்தான். ஒரு தலையும் அஞ்சு உடலுமா இருக்கு. கோவிலில் உள்ள சிற்பங்களில் ராமாயண, மகாபாரதக் காட்சிகள், இந்துக் கடவுளர்களின் உருவங்கள் எல்லாம் நிறையவே இருக்கு.
கீசகன்

இன்னொரு விதானத்தில் 108 பாம்புகள் பின்னிப் பிணைஞ்சு 'ரீஃப் நாட்' போட்டுக்கிட்டு இருக்குதுங்க. தலை மட்டுமே தெரியுது., வளஞ்சு நெளிஞ்சு போகும் உடலும் வாலும் கடைசியில் எங்கே போய் முடியுதுன்னே தெரியலை!
நாகதேவர்

போனவாரம் இங்கே சண்டிகர் நகருக்கு வெளியில் ஒரு மார்பிள் கடைக்குப் போயிருந்தோம். ஒரு சின்ன பளிங்கு மண்டபம் வாங்கித் தோட்டத்தில் வைக்கலாமேன்னு. சின்னதாவும் அழகாவும் இருக்கணும். சுமாரா ஒன்னு இருந்துச்சு. அதில் மேலே பொருத்தும் கூம்புப்பகுதி தனியா இருக்கு. வாங்கினோமுன்னா அதை ஒட்டித்தருவாங்களாம். சரி. ஆனால் அந்தக் கூம்பு கோணலா செய்யப்பட்டுருக்கு. அதன்மேலே ஒட்டிவச்ச சின்ன டிஸைனை சரியா செண்ட்டர் பண்ணாம ஒருபக்கம் அசிங்கமா நிக்குது. கண்முன்னால் வச்சுச் செய்யும் இந்தச் சின்ன வேலையில்கூட எவ்வளவு அசிரத்தை பாருங்க. என்னத்தையோ வித்துக் காசு பண்ணால் சரி என்ற மனோபாவம்:( அப்படி என்ன கோணலும் மாணலுமா வேண்டி இருக்குன்னு நான் வாங்காம வந்துட்டேன்.

இது இப்படி இருக்க இந்த ரணக்பூர் கோவிலில் இருக்கும் டிஸைன்களுக்கு அந்தக் காலத்தில் எவ்வளோ மெனெக்கெட்டுருப்பாங்கன்னு நினைச்சுப் பார்க்கவே முடியலை.
இன்னொரு இடத்தில் கருவறைக்கு வெளியே உள்ள விதானத்தில் கற்பகமரம்! இங்கே நின்னு பிரார்த்தனை செய்தால் உடனே பலிக்குமாம். எனக்கு இந்த விவரம் அப்போ தெரியாது:( நீங்க போனால் மறக்காம வேண்டிக்குங்கோ!
கற்பக மரம்


கருவறையைச் சுற்றி வரும்போது ஒவ்வொரு திசையில் இருந்தும் ஆதிநாத்தின் தரிசனம் கிடைக்குது. ரொம்ப சிம்பிளா 'ஒன்னுமே இல்லாம' கால்களை மடிச்சுப்போட்டுப் பத்மாஸனத்தில் இருக்கார். முழிச்சுப் பார்க்கும் கண்கள்.
ஒரு மூலவருக்கு முன் ரெண்டு யானைகள் ஒன்றின் பின்னால் ஒன்றுன்னு அம்பாரி வச்சு நிக்குதுகள். அம்பாரியில் கணவனும் மனைவியுமா ஒவ்வொரு ஜோடி. தர்னாஷாவும் ரத்னாஷாவும் தங்கள் மறுபாதிகளுடன் இருக்காங்க. நிறைய தூண்களுக்கு மத்தியில் யானை கம்பீரமா நிக்குது! கருவறைக்கு வெளியே இருக்கும் சிலைக்கு வாயைத் துணியால் கட்டிக்கிட்ட பெண் ஒருவர் மலர்களை வச்சுப் பூஜிச்சுக்கிட்டு இருந்தார்.
தர்னாஷாவும் அவர் மனைவியும்

கோவிலுக்கு வெளியே வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கான ஏராளமான அறைகளுடன் சத்திரமும் குளியலறைகளும் இருக்கு. இங்கே தாமாய் பூஜை செய்யணுமுன்னா இங்கேயே குளிச்சுட்டு வாயைக் கட்டிக்கிட்டுப் பூஜிக்கலாம். எல்லா ஜெயின் கோவில்களிலும் இந்தக் குளியலறை ஏற்பாடுகள் உண்டு.
கருவறைக்கு இருபுறமும் பெரிய காண்டாமணிகள் பக்கத்துக்கு ஒன்னு. ஒவ்வொன்னும் 250 கிலோ எடை. இதுலே ஒன்னு ஆண்மணி ஒன்னு பெண்'மணி' ரெண்டுக்கும் ஒலிக்கும்போது வெவ்வேற ஓசை. ஆனால் ரெண்டையும் ஒரே சமயத்தில் ஒலிக்கவைக்கும்போது அதன் ஓசை மனசை அப்படியே சாந்தியாக்குமாம். (அட! நமக்குக் கேக்கக் கிடைக்கலையே!) சுத்துவட்டத்துலே மூணு மைல் தூரத்துக்கு இந்த ஒலி கேக்குமாம்!
கோவிலுக்குள்ளே தலவிருட்சமாக ஒரு சப்போட்டா மரம் இருக்கு. கோவில் கட்ட ஆரம்பிக்கும்போதே இதை நட்டாங்களாம். இதுக்கும் கோவிலின் வயசுதானாம்! ஐநூறுக்கும் மேலே!!!!
இப்போ இவ்வளவு அருமையா நம் கண் முன்னே கம்பீரமா நிற்கும் கோவில் இருநூறு வருசப் புழக்கத்தில் புகழெல்லாம் பரவ இருந்து, முகலாய மன்னர் அவுரங்கஸேப் படையெடுப்பில் நாசமடைஞ்சு போச்சு. தாத்தா மாதிரி பேரன் இல்லைங்க. அக்பர் சக்ரவர்த்திக்கு இருந்த மத நல்லிணக்கம் கொஞ்சமும் இல்லாத பேரன் இவர்:( இந்தக் கோவில் தூண்கள் ஒன்றில் அக்பரின் உருவத்தைச் செதுக்கி வச்சுருக்காங்களாம்.

நாலுபுறமும் இருக்கும் மண்டபங்களில் ஒரே கல்லில் செஞ்சு பொருத்திய தோரணவாயில்கள் யானை முகப்புடன் இருக்கு. 128 தோரணவாயில்கள் இருந்த இடத்தில் அழிவுக்குப்பிறகு இப்போ எஞ்சி நிற்பது வெறும் மூணுதான்:(
தோரணம்

முகலாயர்கள் படை சீரழிச்ச பிறகு வவ்வால்களும் காட்டு மிருகங்களும், சமூகவிரோதிகளும் பயன்படுத்தும் இடமா மாறிப்போயிருச்சு:( கோவிலும் சுற்றுப்புறமும் காடுகள் மண்டி பூஜைகள் நின்னுபோயிருந்தது.

ஏதோ நம்ம நல்லகாலம்..... பழைய கோவில்களைப் புதுப்பிச்சு நடத்தும் ஆனந்த்ஜி கல்யாண்ஜி குழுவின் கண்களில் இது பட்டது. இந்தப்பெயர் தனிப்பட்ட மனிதர்களின் பெயர்கள் இல்லையாம். (நான்கூட முதலில் ஹிந்திப்பட இசை அமைப்பாளர்கள் கல்யாண்ஜி ஆனந்த்ஜின்னு நினைச்சுக்கிட்டேன்,. எப்பப் பாரு சினிமா........... ச்சீ) மகிழ்ச்சியும் மங்களமும் என்பதுதான் பெயரின் விளக்கம்.

1897 வது ஆண்டு ( அப்பவும் வெள்ளைக்காரர் ஆட்சிதாம். சுதந்திரம் கிடைக்க இன்னும் அம்பது ஆண்டுகள் பொறுமை காக்கணும்) இந்தக் கோவிலைப் புதுப்பிக்க ஆரம்பிச்சாங்க. சிற்பக்கலையில் அதிக நாட்டம் உள்ள 200 பேர் வந்தாங்க. சிதைஞ்சு போன சிலைகளை சரிப்படுத்தி, ஒழுகும் மண்டப விதானங்களை எல்லாம் பழுது பார்த்துன்னு 12 வருசம் ஆகி இருக்கு. மூலவர் ரொம்ப டேமேஜ் ஆகிட்டார். அவரையும் ஒன்னுக்கு நாலா புதுப்பிச்சு இருக்காங்க.
ஆதிநாத் கோவிலின் ஆதிகால ஸ்தபதி, தீபக்கின் வம்சத்தினரே இந்தப் பழுதுபார்க்கும் வேலையிலும் ஈடுபட்டு இருக்காங்க. இன்னைக்கு வரை இவுங்க வம்சத்தினர்தான் பராமரிப்பு வேலைகள் செய்யறாங்களாம் பதினாலு தலை முறைகளாக !

கோவிலில் வருசம்தோறும் நடக்கும் திருவிழாக்களுக்கான கொடியேற்றும் உரிமை தர்னாஷா பரம்பரைக்குன்னே ஒதுக்கப்பட்டிருக்கு. அவுங்களும் பதினாலு தலைமுறையா, எங்கே இருந்தாலும் விழா சமயத்துலே ஆஜராகித் தங்கள் கடமையை செஞ்சுக்கிட்டு இருக்காங்களாம்.
கோவிலில் படம் எடுத்துக்கலாம். அதுக்குன்னு ஒரு தொகை அடைச்சால் போதும். ஆனால் காலையில் கோவிலின் தினப்படி பூசைகள் ஆரம்பிச்சு உச்சிகாலப் பூஜை முடிஞ்சு பகல் பன்னெண்டுக்குக் கருவறையை மூடியதும் படம் எடுத்துக்கலாம். பகல் பனிரெண்டரை முதல் நாலுமணி வரை அனுமதிக்கிறாங்க. ஒரு கைடு மட்டும் கிடைச்சுருந்தால் எல்லாம் விவரமாப் பார்த்துருக்கலாம். ஒருவேளை மதியத்துக்கு மேல் கிடைப்பாங்களோ என்னவோ?
சந்நிதி மூடி இருக்கு


நம்ம அதிர்ஷ்டம் பாருங்க.....இப்போ மணி பத்துதான். இன்னும் ரெண்டரை மணி நேரக் காத்திருப்பு.............ஊஹூம்................ நோ ச்சான்ஸ்:(

இன்னும் ரெண்டரை மணி நேரப் பயணம் இருக்கு நமக்கு. சீக்கிரம் போனால்தான் அரைநாளாவது கிடைக்கும் சுத்திப் பார்க்க.
கவலையோடு கிட்டியதை க்ளிக்கலாமுன்னு வெளிப்பக்கம் நான் 'பிஸி'யா இருந்தப்ப கோபால் ஆஃபீஸ் அறைக்குப்போய் விசாரிச்சுக் கோவில் தலபுராணம் ரெண்டு வாங்கி வந்தார். அதென்ன ரெண்டு? ஒன்னு அறுபது ரூ இன்னொன்னு 100 ரூ. ரெண்டுமே பப்பத்துப் படங்களுடன் இருக்கு. ரெண்டு செட் ஆஃப் படங்களும் வெவ்வேற, அதான் கோவிலுக்கு டொனேஷன் கொடுத்த மாதிரி இருக்கட்டுமுன்னு ரெண்டும் வாங்கிட்டேன்றார்! உங்களுக்கெல்லாம் கோவிலைப் பத்தி 'நான்' சொல்லணும் என்பதில் அவருக்கு எவ்வளோ ஆர்வம் பாருங்க:-))))
நன்றி: ரணக்ப்பூர் தீர்த் தலவரலாறு. & கோவிலுக்குள்ளே இருக்கும் சிற்பங்களின் படங்கள் ஆனந்த்ஜி கல்யாண்ஜி ட்ரஸ்ட் வெளியீடு

தொடரும்.............:-)

PIN குறிப்பு: குழப்பம் காரணமாக இந்தப் பதிவில் கூடுதலான படங்கள் சேர்த்துருக்கேன். அப்படி என்ன குழப்பம்? எதைவிட? எதைச் சேர்க்க? ன்னு......... ஒவ்வொன்னும் அள்ளிக்கிட்டுப் போகுதே! உங்களைவிட்டா எனக்கு யார் இருக்கா நல்லதையும் கெட்டதையும் சொல்லி மாள!!!!!
தர்னாவிஹார்

26 comments:

said...

சிற்பங்கள் பிரமிக்க வைக்கின்றன. ஆதிநாத் அற்புதமாகப் படமாக்கப் பட்டிருக்கிறார். 108 பாம்புகள் மட்டுமின்றி எல்லா இடங்களிலுமே நுணுக்கமான வேலைப்பாடுகள்.

//உங்களுக்கெல்லாம் கோவிலைப் பத்தி 'நான்' சொல்லணும் என்பதில் அவருக்கு எவ்வளோ ஆர்வம் பாருங்க:-))))//

நன்றி அவருக்கும்:)!

said...

சீக்கிரம் இதையும் புத்தகமாகப் போடுங்க.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

தமிழ்மணத்தில் இணைக்கமுடியலை. அதற்கான பட்டையும் வர்றதில்லை:(

என்னடா...... ஆளில்லாத டீக்கடையாப் போகுமோன்னு இருந்தேன். கடையில் பால் வார்த்தீங்க:-)

நுண்ணிய வேலைப்பாடுகள் தந்த பிரமிப்பு இன்னும் தீரலை எனக்கு:-)

கோபாலிடம் சொல்லிட்டேன். 'நன்றியெல்லாம் எதுக்கு? நான் என் கடமையைத்தானே செஞ்சேன்' என்றார்!

said...

வாங்க கோபி ராமமூர்த்தி.

//சீக்கிரம் இதையும் புத்தகமாகப் போடுங்க.//
அப்டீங்கறீங்க? ஈரோடு புத்தக் கண்காட்சிக்குள் வராதே....:(

ச்சும்மா.......:-)

பதிப்பகம் கிடைச்சால் ஜமாய்ச்சுடலாம்!

உங்கள் நம்பிக்கைக்கு நன்றி.

said...

எத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள் இந்த தூண்களிலும் விதானங்களிலும்.... எடுத்த எல்லா புகைப்படங்களையும் பிகாசாவில் அப்லோட் செய்து லின்க் கொடுத்தால் எல்லாவற்றையும் நாங்களும் பார்க்கமுடியும்....:)


நல்ல பகிர்வுக்கு நன்றி.

said...

சிற்பக்கலை பிரமிக்க வைக்குதுங்க. ஒவ்வொன்றும் நுண்ணிய வேலைப்பாட்டுடன் சிறப்பாக இருக்கு. படங்களை பகிர்ந்ததற்கு நன்றி.

திருச்சி தாயுமனவர் கோவிலில் குரங்கின் ஒரு தலையுடன் ஆறு உடம்புகள் சேர்ந்திருப்பது மாதிரி படம் வரையப்பட்டிருக்கும். எந்த பக்கத்திலிருந்து பார்த்தாலும் அந்த உடலோடு பொருந்தி போயிருக்கும்.

said...

excellent Thulasikka.thanks to you both.manam kollai poguthae.

said...

பிரமிப்பா இருக்குது.. ஒவ்வொண்ணிலும் நுணுக்கமான வேலைப்பாடுகள்.இதெல்லாம் நம்ம நாட்டோட, போற்றிப்பாதுகாக்கப்படவேண்டிய கலைப்பொக்கிஷங்கள்

said...

வாங்க வெங்கட்.

//எடுத்த எல்லாப் படங்களையும்...//

கோவிலுக்குள்தான் படம் எடுக்க முடியலையே:( அதுக்கு மதியம் வரை காத்திருக்கணும்:(

பதிவில் உள்ள உட்புறப் படங்கள் எல்லாம் அங்கே வாங்குன ஃபோட்டோக்களை ஸ்கேன் செஞ்சு போட்டதுதான்.

said...

வாங்க கோவை2தில்லி.

ஆஹா.... தாயுமானவர் கோவில் குரங்கர் நியூஸ் எனக்குப் புதுசு. அங்கே போய் 22 வருசமாச்சு.

அடுத்தமுறை போகும்போது மறக்காமல் பார்க்கணும்.

தகவலுக்கு நன்றிப்பா.

said...

வாங்க தேனிக்காரி.

அழகை ரசிச்சதுக்கு நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

இந்தப் பொக்கிஷங்களின் மதிப்பு தெரியாத மக்கள் நிறைஞ்ச நாடுப்பா நம்மது:(

அரசாங்கம் வந்து கையில் எடுத்தால் அத்தனையும் நாசம்தான்:(

said...

"த்ரைலோக்கியத்வீப்" அப்படியே தகதக என்று ஒளிவீசி கண்ணை இழுத்துகிறது. சரியாத்தான் பெயரிட்டு இருக்கிறார்கள்.

இதை புதுப்பித்து எமக்குக் காணக்கொடுத்ததற்கு ஆனந்த்ஜி கல்யாண்ஜி குழுவினருக்கு நன்றி சொல்லணும்.

said...

வாங்க மாதேவி.

உண்மைதாங்க. அவுங்க மட்டும் இதைச் சரி செய்யலைன்னா கலைக்கு எப்பேர்ப்பட்ட இழப்பு:(

நம் எல்லோருடைய நன்றிகளும் இந்தப்பதிவின் மூலம்!

said...

படங்கள் ரொம்ப அழகாக இருக்கு துளசி மேடம். நீங்க பயணம் பற்றி எழுதும் விதம் நாங்களே நேரில் பார்ப்பது போல இருக்கு.

said...

//நன்றி: ரணக்ப்பூர் தீர்த் தலவரலாறு. & கோவிலுக்குள்ளே இருக்கும் சிற்பங்களின் படங்கள் ஆனந்த்ஜி கல்யாண்ஜி ட்ரஸ்ட் வெளியீடு//
படம் அழகா வந்திருக்குகேன்னு பார்த்தேன் :))

said...

சிற்பக்கலையில் அதிக நாட்டம் உள்ள 200 பேர் வந்தாங்க

இது போன்ற நல்லவர்கள் உதவியினால் தான் நாட்டில் உள்ள சில சிற்பங்களாவது தப்பியது.தங்கள் உதவியினால் நாங்களும் கண்டு மகிழ்கிறோம்.--பத்மாசூரி

said...

எத்தனை எத்தனையோ தளங்களில் எழுதிக் களைத்துவிட்டு
சற்று ஓய்வு வேண்டி வந்த எனக்கு தங்களின் ராஜஸ்தான்
பயணத்தொடர் # 30 புகைப்படங்களைப் பார்த்தவுடன் கண்கள்
நிலைகுத்தி அவைகளின் மீதே இலயித்துவிட்டது..

ஆஹா ! ஆஹா ! அற்புதம் ! இன்று முழுவதும் இந்த புகைப்படங்களையே பார்த்துக்கொண்டிருக்கலாம் போல்
இருக்கிறது.

நன்றி .

said...

வாங்க ராம்வி ( சரியா?)

கூட்டிட்டுப்போக நான் ரெடின்னாலும் கூட வர நீங்க ரெடியா இருப்பது மகிழ்ச்சி:-))))

said...

வாங்க குறும்பன்.

இவ்வளவு திறமையா படம் எடுக்கத் தெரிஞ்சா..... இப்படியா மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதிக்கிட்டு இருப்பேன்:-))))))

said...

வாங்க பத்மாசூரி.

கலைத் திறமை இன்னும் பூரணமா அழிஞ்சு போகலை என்பதே ஒரு பெரிய மன ஆறுதல்.

ஸ்வாமிநாராயண் கோவிலைக் கட்டும்போது பார்க்கணும்...... எல்லாம் தன்னார்வலர்களே!!!!!

said...

வாங்க சிவஷன்முகம்.

ரசிப்புக்கு நன்றி.

எல்லாப் புகழும் படங்கள் எடுத்தவருக்கும் அவருடைய கேமெராக் கண்ணுக்குமே!

நான் வெறும் கருவி:-)

said...

''Ungalidam sollaamal yaarkitta solvathu''
ithuthaan unmai Thulasi..

said...

வாங்க வல்லி.

எஸ்ஸூ. அக்ரீடு:-)

said...

அடுத்த வருஷம் ஊருக்குப் போகாமே இங்க ஊரைச் சுத்தலாம்னு ப்ளான் பண்ணியாச்சு! இதெல்லாம் இன்னும் பார்க்கலை:(

said...

வாங்க அருணா.

நல்ல ஐடியா. அபூர்வ அழகு கொட்டிக்கிடக்கு உங்க மாநிலத்தில்! 'கோட்டை' விட்டுடாதீங்க:-))))