Friday, May 20, 2011

கண்களில் ஒரு சிரிப்'பூ' ....((ராஜஸ்தான் பயணத்தொடர் 13)

முகத்தில் ஆர்வம் கொப்புளிக்க மலர்ந்த கண்களில் உதிர்ந்த சிரிப்பூவைப் பார்த்ததும் மனமயக்கம் லேசா வந்துச்சு. பெயரைக் கேட்ட மாத்திரத்தில் அப்படியே மயங்கி விழுந்தேன்! ஹைய்யோ!!!!!!! எனக்கு ரொம்பப் பிடிச்ச பெயர்! ( ஆனா என் பொண்ணுக்கு இந்தப்பெயர்களில் ஒன்னை வைக்கவிடாம தடுத்தது சுஜாதா என்றால் நம்புவீங்களா?)

கிளம்பிட்டோமுன்னு தொலைபேசியில் சொல்லிட்டுக் கிளம்புனோம். வழி தெரியாமக் காணாமப்போனா அட்லீஸ்ட் போலீஸுக்குத் தகவல் சொல்லுவாங்களே! ஏற்கெனவே கைடுகிட்டே வழியைக்கேட்டு வச்சுக்கிட்டாலும்..........சட்னு புரிபடுதா என்ன?

அவுங்க வீடு இருக்கும் ஏரியா (நல்லா இருக்கான்னு பார்க்கன்னு வச்சுக்குங்க) முழுசும் சுத்திச்சுத்தி வந்தோம். ஒரு கட்டத்துலே தாங்க முடியாம செல்லடிச்சால் நேரா வாங்கன்றாங்க. வளைஞ்சு போகும் சாலையில் நேராப்போகக் கஷ்டப்படவேண்டியதாப் போச்சு:-)

ஒரு பள்ளிக்கூடத்துக்கு முன்னால் வண்டியை நிறுத்திட்டு (ஸ்கூல் ப்ரின்ஸிக்கு அடையாளம் வேற எப்படி?) மறுபடி செல்லில் தொடர்பு. இப்பத் தாங்க முடியாமப்போறது அவுங்க முறை! அங்கேயே கையைக் காலை ஆட்டாம நில்லுங்க. தோ வர்றேன்னாங்க.

அருணாவின் ரங்க்ஸ் ( அதெல்லாம் முகவிலாசம் வச்சுக் கண்டுபுடிச்சுருவோம்லெ) ரெண்டு சக்கரத்தில் வந்து நமக்கு முன்னே போய் வழிகாட்ட அவுங்க வீட்டை ரொம்ப ஈஸியாக் கண்டுபுடிச்சுட்டொம்லெ:-)

காலம்காலமாப் பழகுன சனங்களா இருக்காங்க இந்தக் கோவில்பட்டிக்காரங்க. 'கடலைமுட்டாயின்' அதே திகட்டாத இனிப்பு! நேரம் ஏன் இப்படிப் பறக்குதுன்னு யாருக்குத் தெரியும்? சந்திப்பை அவுங்களே விளக்கமா எழுதிட்டாங்க இங்கே.

குலோப்ஜாமூன் ( இல்லே ரஸகுல்லாவா? பேச்சு சுவாரஸியத்துலே மறந்துட்டேனே. சட்னு முழுங்கிட்டேனோ?) சிப்ஸ், காஃபின்னு மினி விருந்து. பசங்கதான் ஓடி ஓடி உபசரிச்சாங்க. நானும் உபசரிக்க வேணாமா? நம்ம வீட்டுக்கு கட்டாயம் வாங்கன்னேன்:-)

வீட்டுக்குள்ளே நுழைஞ்சது முதல் இளைய மகளோடு கொஞ்சம் பிசின் போட்டு ஒட்டிக்கிட்டேன். என்ன அழகான மெலிசான நீண்ட வெண்டைப்பிஞ்சு விரல்கள்! அதான் ஓவியம் வரைய முடியுதோ!!!!!
டீச்சர் என்பதை நினைவூட்டும் விதமா சார்ட் போட்டு வச்சுருக்காங்க, பிஞ்சின் ஓவியங்களை:-) ஜன்னலை இப்படிக்கூட அலங்கரிக்கலாமா!!!!!!!

மூத்த மகள் என் 'சாதி'ன்னு அப்புறம் தெரிஞ்சது. ச்சோ........ச்வீட் (ப்ரேமி) பதிவர் சந்திப்பா இருக்க வேண்டியது....இப்படிக் குடும்ப சந்திப்பா மாறிய விநோதம் என்ன என்ன என்ன? பிரியாவிடை பெற்றுக்கொண்டு (அப்பவும் வாங்குவதுதான் முக்கியம்?) மனசில்லா மனசோடு கிளம்ப வேண்டியதாப் போச்சு:(

இன்னும் பேச்சு பாக்கி இருந்துச்சோ?

50 நிமிசத்தில் அறைக்குத் திரும்பியாச்சு. இருட்டும் நேரம் ஆனாலும் இன்னொருத்தரையும் எப்படியாச்சும் சந்திக்கணும். ஒரு ஆட்டோ எடுத்துக்கிட்டுப்போய்ச் சேர்ந்தோம். நல்ல சேதி காதில் நிறைஞ்சது. சந்நிதி திறந்து இருக்காம்.

ஆனாலும் இத்தனை அழகு ஆகாது! பின்னால் பசு மாடு. ஒய்யாரமா சாய்ஞ்சு ஒரு காலின் குறுக்கா மறுகாலை வச்சு கையில் குழல் பிடிச்சு நிற்கும்' மாடு மேய்க்கும் பையன்'. பக்கத்துலே அவனைவிட்டுக் கணநேரமும் பிரிய மனமில்லா ராதை!
காலையில் வந்தும் பார்க்கமுடியாமல் பொருமிக்கிட்டுப் போன 'வ்ருந்தா'வுக்குக் காட்சி தருகிறான். கண்கள் நிறைஞ்சு போச்சு! கூடவே மனசும்! சந்நிதிக்கு முன்னால் ஏகப்பட்ட கூட்டம். ஜெய் கோவிந்த் ஜெய் கோவிந்த் முழக்கம்! குழலூதும் ஸ்ரீ வேணுகோபாலனின் கருப்புப் பளிங்குச்சிலை, விளக்கொளியில் ஜொலிக்குது!

இவன் இங்கே வந்த கதையை இப்போதான் இந்தத் தொடரின் பகுதி 5 இல் சொல்லி இருக்கேன். மறந்து போனவங்க அங்கே ஒரு நடை போயிட்டு வாங்க:-)

கெமெராவைச் சார்ஜ் பண்ணப் போட்டுருந்ததால் கோபாலிடம் அவர் கெமெரா இருக்கேன்னு மெத்தனமா இருந்துட்டேன். இவருக்கோ அது பையில் இருப்பதே அடியோடு நினைவிருக்காது. அப்பப்ப நான் நினைவு 'படுத்தணும்'. அழகைப் பார்த்த பரவசத்தில் நான் மயங்கிப்போனதால்............. இவர் பாவம் தேமேன்னு இருந்துட்டார்.

மனசில்லா மனசோட வெளியே வந்தேன். கோவில் இருக்கும் இடமும் ஒரே இனிப்புதான். ஜலேபி சௌக்! வாசலில் கோவில்கடைகளும் பரபரப்பா வியாபாரத்தில் மூழ்கி இருக்க ஒரு கண்ணன் பொம்மையைத் தேடினேன். முகத்தில் அழகு போதாதாம். வழக்கத்துக்கு மாறா கோபால் பேச்சைக் கேட்டுட்டேன்:( அதெப்படி ? கோவிலின் உள்ளே அழகைப் பார்த்த கண்ணோடு/ கையோடு தேடினால்..... இப்படித்தான் ஆகும்.
அழகுன்றது நாம் அப்போதிருக்கும் மனநிலையையும் பொருத்ததுதானே?
நேத்து ரொம்ப அழகா இருந்தது இன்னிக்கு ரொம்பவே சுமாராகவும் இருக்கலாம். பார்த்துப் பார்த்து முதல்நாள் வாங்குன புதுப்புடவையை மறுநாள் வீட்டில் பிரிச்சுப் பார்க்கும்போது அடிக்கடி இப்படித் தோணும்:-) வேணாமுன்னு ஒதுக்குன புடவைதான் ரொம்ப அழகு இல்லே?

ஹவா மஹல் சாலைக்குப் போயிட்டால் இன்னும் நல்லதாக் கிடைக்குமாம். ஆட்டோ தேடினால் கோவில் வாசலில் கிடைக்கலை. ரொம்பப்பக்கம்தான் நடந்து போகலாமுன்னு இவர் இழுத்த இழுப்பில் அரை இருட்டான தெருக்களில் அலைஞ்சு ஒருவழியா மெயின் ரோடுக்கு வந்தோம். இத்தனை மக்கள் கூடும் இடத்தில் தெருவிளக்குகள் வைக்கப்படாதோ?

அங்கங்கே கடைகளைச் சாத்திக்கிட்டு இருக்காங்க. அப்படியும் ஒரு கடையில் சில பொம்மைகளை (பேரம் பேசி) வாங்கினோம். இந்த வருசக் கொலுவுக்குப் புது பொம்மைகள் சேர்க்கிறேனாம்:-) இது எதுக்கும்மான்னு இவர் ஆரம்பிக்கும்போதே 'கொலுவுக்கு'ன்னு சொல்லி வாயை அடைச்சுருவேன்:-))))

ஃபோகஸ் லைட்டில் ஹவா மஹல் 'வா வா'ன்னுது. வண்ணவண்ணக் கண்ணாடிகளால் ஜன்னல்கள் மேல்தளத்தில் ஜொலிக்குது. பகலோ இரவோ எந்த நேரமும் ஒருவித அழகுதான்! ஆனாலும் உள்ளே போய்ப் பார்க்கலைன்னு எனக்கு மனக்குறை:( உள்ளே ஒன்னுமில்லைன்னு 'மக்கள்ஸ்' சொல்லிக்கிட்டே இருந்தாலும்.....( என் தலையைச் சொல்றாங்களோ?)


மஹலுக்கு அந்தாண்டை நாலு ரோடு சந்திப்பில் ஒரு ப்ராச்சீன் கர்பக்ரஹ் மஹாதேவ் மந்திர் இருக்கு. சுவத்தில் புள்ளையார் சந்நிதி ஒன்னும் அதுலே
தனியா! இன்னொரு ஆட்டோ பிடிச்சு அறைக்கு வந்தோம். ஆளில்லா முற்றத்தில் ஜலதரங்கம் இசை!

ஜெய்ப்பூருக்கு குட் பை சொல்லிட்டுக் காலையில் கிளம்பிப்போகணும். போனோம்.

தொடரும்.................:-)

PIN குறிப்பு: குடும்பம் என்று ஆகிட்டதால் இளசுகளின் படங்களை இங்கே தவிர்த்துவிட்டேன். என்ன அழகான முகம்! கண்கள் அப்படியே ஆளை அடிச்சுக்கிட்டுப் போயிருது! அருணா மேல் பொறாமைப்படணுமுன்னா லேசாப் பட்டுக்குங்க என்னோடு சேர்ந்து:-)


22 comments:

said...

//வியாபாரத்தில் மூழ்கி இருக்க ஒரு கண்ணன் பொம்மையைத் தேடினேன். முகத்தில் அழகு போதாதாம். வழக்கத்துக்கு மாறா கோபால் பேச்சைக் கேட்டுட்டேன்:( அதெப்படி ? கோவிலின் உள்ளே அழகைப் பார்த்த கண்ணோடு/ கையோடு தேடினால்..... இப்படித்தான் ஆகும்.
அழகுன்றது நாம் அப்போதிருக்கும் மனநிலையையும் பொருத்ததுதானே?//

மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.
பதிவு மிகவும் அருமை. பாராட்டுக்கள்.
அந்த கிருஷ்ணர் பொம்மை மிகவும் அழகாக உள்ளது எனக்கு இப்போது உள்ள என் மனநிலையில்.

நான் இந்த உங்கள் வலைப்பூவுக்கு பதிவராக விரும்புகிறேன். அதற்கான Provision இல்லையே! என்ன செய்வது? விளக்கவும். அன்புடன் vgk

said...

அழகான paintings .... display செய்து இருக்கிற விதமும் நல்லா இருக்குது. இந்த பதிவு ரொம்ப நல்லா இருந்துச்சு, மேடம்!

said...

நாங்களும் தான் ராஜஸ்தான் போய் வந்தோம். ஆனால் இந்த மாதிரி அழகாக எழுதத் தெரியாமல் சும்மா இருந்தேன்.

வழக்கம் போல அருமை.

வெற்றி மகள்.

said...

அய்யோ ஒரேயடியா புகழ்ந்து தள்ளிட்டீங்களே!!!பிள்ளைங்களுக்கு வாசித்துக் காட்டி ஒரே ஆனந்தம்தான் போங்க!!! திரும்பி ஒருதடவை வாங்க!!!

said...

நல்ல சந்திப்பு நல்ல பகிர்வு ;)

said...

Kalakkal round up...:)

said...

நாங்களும் பதிவர் (குடும்பச்) சந்திப்பில் கலந்து கொண்டதில சந்தோஷம் :))

said...

அருணா அவர்களின் பக்கத்திலேயே படித்து இருந்தேன். உங்களின் வார்த்தைகளில் படிக்கும் போது மீண்டும் அவர்களது பதிவு நினைவுக்கு வந்தது. ஜன்னல் பெயிண்டிங் சூப்பர். குட்டிச் செல்லத்துக்கு வாழ்த்து சொல்லணும்…. அவங்க பக்கத்திலே சொல்லிடறேன்…

said...

இருந்தாலும் குளோப்ஜாமுக்கும் ரசகுல்லாவுக்கும் வித்தியாசம் தெரியலைன்னு சொல்றது ரொம்ப ஓவர்.”மல்லிகையே வெண் சங்கா வண்டூத” கணக்கா இருக்கு

said...

வாங்க VGK.

உங்க பெயர் எங்களுக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. எங்க வீட்டிலும் ஒரு கோபாலகிருஷ்ணன் இருந்தார். சுருக்கமா கோகின்னு கூப்புடுவாங்க நம்ம பதிவர்கள்.

அவரைப்பற்றி இங்கே இந்தச் சுட்டியில்.

http://thulasidhalam.blogspot.com/2008/08/blog-post_21.html

தமிழ்மணத்தில் இணைப்பதோடு சரி. ஃபாலோயர்ஸ் க்கு தனியா உரல் ஒன்னும் வச்சுக்கலை.

நண்பர்கள் கூகுள் ரீடரில் போட்டு வச்சுக்குவாங்க.

நீங்களும் முடிந்தால் ரீடரில் போட்டுக்கலாம். அது கொஞ்சம் சுலபமான வேலைதான்:-)

தொடர விரும்பும் உங்கள் அன்புக்கு நன்றி.

said...

வாங்க சித்ரா.

அழகை அழகுன்னுதானே சொல்லணும்:-)))))

said...

வாங்க வெற்றிமகள்.

ஆஹா.... ராஜஸ்தான் ரிட்டர்னா நீங்க???

பேஷ் பேஷ். எழுதியவைகள் நீங்கள் நேரில் கண்டு ரசித்தவைகளுடன் ஒத்துப்போகிறதா?

said...

வாங்க அன்புடன் அருணா.

பிள்ளைகளைப் பார்த்துப் பழகினது எனக்கு எவ்வளவு ஆனந்தமா இருந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியாது:-)

இறக்கைகட்டிப் பறந்த நேரத்தைக் கண்டிச்சு வைக்கணும்:(

said...

வாங்க கோபி.

பதிவர் சந்திப்பு தரும் மகிழ்ச்சியே அலாதின்னு 'உங்களுக்கும்' தெரியுமே:-)))))

said...

வாங்க அப்பாவி தங்கமணி.

வலைச்சரத்தில் நீங்க கலக்குனதுக்கு முன்னே இது எம்மாத்திரம்:-))))

said...

வாங்க சுசி.

நீங்க(ளும்) வந்து கலந்துக்கிட்டது எனக்கு(ம்) ஒரே சந்தோஷம்தான்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சந்திப்புகளில் நிலவும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் போது பலமடங்காக பெருகுவதென்னமோ சத்தியமான உண்மை!

said...

வாங்க ஞாபகம் வருதே!

அதானே பசுவுக்கும் எருமைக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாமப் போச்சே:-)))))

கோபால்கிட்டே விசாரிச்சேன். ரசகுல்லாதானாம்.

பேச்சு சுவாரசியத்துலே கலரைக் கவனிக்க மறந்துட்டேன் பாருங்க:-))))

said...

இனிய சந்திப்பில் கலந்து கொண்டோம்.

said...

//ஆனாலும் இத்தனை அழகு ஆகாது! பின்னால் பசு மாடு. ஒய்யாரமா சாய்ஞ்சு ஒரு காலின் குறுக்கா மறுகாலை வச்சு கையில் குழல் பிடிச்சு நிற்கும்' மாடு மேய்க்கும் பையன்'. பக்கத்துலே அவனைவிட்டுக் கணநேரமும் பிரிய மனமில்லா ராதை!//

அந்த ராதைக்கு ஒரு நாளைக்கு கோபம் வந்துடுச்சு. அப்ப அந்த குழல் பிடிச்சு நிற்கும் மாடு
மேய்க்கும் பையன் இப்படி பாடுவானோ ?
http://youtu.be/rCbNCEsOnOM

சுப்பு ரத்தினம்.

said...

வாங்க மாதேவி.

ரஸகுல்லா நல்லா இருந்துச்சா? அருணாவே தன் கைப்படக் கடையில் வாங்குனது:-)

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

சிவாஜி ரூபத்தில் தமிழில் மட்டுமா? இந்தியிலும் கூடப் பாடுனாரே:-))))