Tuesday, May 10, 2011

ஷிம்லா ஸ்பெஸல் (தொடர்ச்சி.... 1)

நமக்குப் போக வேண்டியது மால் ரோடு. அங்கே வண்டிகளுக்கு அனுமதி இல்லை. வண்டிக்குப் பார்க்கிங் பெரிய பிரச்சனை இங்கே.
கீழே போகும் சாலையில் போனால் பார்க்கிங் தனி இடம் இருக்கு. மால் ரோடுக்கு லிஃப்ட் இருக்குன்னாங்க. முதலில் இந்த லிஃப்ட் சமாச்சாரம் புரிபடலை. ப்ரதீபை வண்டியை பார்க்கிங்லே போட்டுட்டு சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு லிஃப்ட் ஏறி சுத்திப்பார்க்கச் சொல்லிட்டு நாங்க லிஃப்ட்க்குப் போனோம். ஏழு ரூபாய் ஒரு ஆளுக்கு ஒன் வே. ரெண்டு லிஃப்ட் இயங்குது. சின்ன சைஸ். ஒரு அஞ்சாறு பேர் போகலாம். ஆனால் புளிமூட்டைபோல அடைச்சுக் கூட்டம் இடம் பிடிக்குது. மூட்டையோடு மூட்டைகளா நாமும் போனோம். ஒரு இடத்தில் நின்னபிறகு வெளியேறி மற்ற ஆட்களைப் பின் தொடர்ந்தோம். மரப்பாலத்து நடை பாதையில் இப்படி அப்படின்னு கொஞ்ச தூரம் போய் இன்னொரு லிஃப்ட். அதுலே ஏறிப்போனால் அது போய் நிற்கும் இடம் மால் ரோடு.
லிஃப்ட் கட்டிடம்
டிக்கெட்
லிஃப்ட் நடைபாதை
இது நல்ல ஐடியா இல்லே? ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் பேர் போறாங்கன்னாலும் பதினாலாயிரம் ரூ வருமானம் வருமுல்லே? அதுலே செலவு நாலாயிரம் போனாலும் நிகர லாபம் நாளுக்குப் பத்தாயிரம்!

மால் தெரு வண்டி நடமாட்டம் இல்லைன்னு பேரே தவிர கூட்டமெல்லாம் அங்கேதான். அங்கேயும் கீழேயும் மேலேயுமா மலைப்பாதைகள். பூராவும் கடைகள். மேலே போனால் நல்ல இடங்கள் இருக்கும் சாப்பிடன்னார் கோபால். மொட்டை வெய்யிலில் ஏற்றத்தில் ஏறிப்போக முடியலை. இறக்கத்தில் கொஞ்சதூரம் போனோம். தாகம் வேற! வரும் வழியில் நளினி ரெஸ்ட்டாரண்ட் தென்னிந்திய உணவு(ம்) கிடைக்கும். கண்ணில் பட்டுச்சுன்னேன். விட முடியுமா? அங்கேயே போனோம். எனக்கு ஒரு தோசை. கோபாலுக்கு ஒரு தாலி(?):-))))) தோசை நாட் பேட். தாலி சகிக்கலை:(
அடுத்த பகுதியில் இருந்து தமிழ்ப்பேச்சரவம் கேக்குதேன்னு கை கழுவப்போகும்போது பார்த்தால் ஷால், ஸ்வெட்டர் எல்லாம் போட்டுக்கிட்டு ஒரு பெரிய குடும்பம் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க.
தேவாலயமும் நூலகமும்

காளிபாரி கோவில் இருக்காம். அப்புறம் க்றைஸ்ட்சர்ச் இருக்காம். ஊர்ப்பாசம் விடலை. சரிவுப்பாதையில் மெள்ள ஏறி மேலே சர்ச்சுக்குப் போனோம். சண்டே சர்வீஸ் முடிஞ்சு மூடிக்கிடக்கு. மலையில் இருக்கோம் என்ற உணர்வே வரலை. பெரிய சமநிலம். ஒரு பக்கம் நூலகம். கட்டிடங்கள் எல்லாம் ப்ரிட்டிஷ் காலத்து ஸ்டைல். ஜேஜேன்னு கூட்டம். 90 சதமானம் சுற்றுலாப் பயணிகள்தான். கூட்டதினருக்கு வேண்டி இருக்கேன்னு பஞ்சு மிட்டாய் முதல் சவாரிக் குதிரைகள்வரை வகைவகையா வியாபாரம். இந்திரா காந்தி சிலைக்குப் பக்கத்தில் பெரிய கூடாரத்தில் Thalassemia பாதிப்பு உள்ளவர்களுக்காக ஒரு ஒன்றுகூடல் மீட்டிங். பழைய கால வட்டவடிவக் கட்டிடத்தை ரெஸ்ட்டாரண்ட் ஆக மாற்றி வச்சுருக்காங்க. ஒரு இடத்தில் ஆர்ட் எக்ஸிபிஷன் நடக்கும் கட்டிடத்தின் வெளியே தரை முழுசும் வரைஞ்சு வைச்சிருக்கும் ஓவியங்கள். பக்கத்துலேயே அமெச்சூர் நாடக சொஸைட்டி. இது 1873 லே ஆரம்பிச்சது. நம்ம ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எல்லாம் போட்டு ஜமாய்ச்சுருப்பாங்க. இப்பவும் நடக்குது போல!


இந்தச் சதுக்கத்தில் சினார் மரம் ஒன்னு அரியவகைன்னு தகவலோடு அங்கே நிக்குது. கெயிட்டி தியேட்டர், போலீஸ் தலைமையகம், டவுன் ஹால், நகர சபைக் கட்டிடம் எல்லாமே வெள்ளையர் கட்டி வச்சுட்டுப் போனவைகளே. முதல் வீடு இங்கே 1822 இல் கட்டுனாங்களாம்.கிருஷ்ணா பேக்கரியில் தள்ளுமுள்ளாக் கூட்டம். மோதகம் போல ஒன்னு தட்டுதட்டா வாங்கி மக்கள் ஸ்வாஹா பண்ணிக்கிட்டு இருக்காங்க. நானும் கூட்டத்தில் ஐக்கியமானேன். இதன் பெயர் மோமூஸ். இனிப்பான்னு கேட்டால் ஸ்பைசியாம். ஐயோ..... வேணாம். இனிப்புக் கொழுக்கட்டைன்னு நினைச்சேனே:( (கோபாலுக்கு வாங்கிக் கொடுத்துருக்கலாமோ?)
நகரசமைக் கட்டிடம் & காவல்துறை தலைமையகம்

இந்த காளி பாரி கோவிலில் இருக்கும் தேவிக்கு ஷ்யாமளான்னு ஒரு பெயர். இதையொட்டித்தான் இந்த நகரை நிர்மாணிச்சப்ப ஷிம்லான்னு பெயர் வந்துருக்கு. கேட்டதும்(இந்த) சண்டிக்கு நல்ல சந்தோஷம். ஏற்றத்தில் நடக்கும்போது மூச்சு இளைக்குது (உடல் இல்லை. மூச்சு மட்டும்) என்றதால் காளி கோவிலுக்குப் போகலை. இந்தச் சதுக்கத்தில் இருந்து தலையை அண்ணாந்து பார்த்தால் மலை உச்சி முகட்டில் ஹனுமான் சிகப்பா தெரிஞ்சார். அது நம்ம லிஸ்டில் இருக்கும் கோவில்.
மறுபடி எவ்வேழு ரூ கொடுத்தி லிஃப்டில் இறங்கிக் கீழே வந்தோம். இப்போ ரெண்டே முக்கால் மணி ஆச்சு. பீமாகாளி கோவிலுக்கும் ஜாக்கூ மந்திருக்கும் போயிட்டு வரணும். பேசாம உள்ளுர் வண்டி ஒன்னு பிடிச்சால் எளிது. வழி தெரியாமத் தடுமாற வேணாமுன்னு லிஃப்ட் இருக்கும் வளாகத்தில் விசாரிச்சோம். ஏராளமான டூரிஸ்ட் டாக்ஸிகள் குவிஞ்சு கிடக்கு. நோ பேரம். எல்லாம் ஃபிக்ஸட் ப்ரைஸ். டூரிஸ்ட் அஸோசியேஷன் குறிப்பிட்ட கட்டணமாம். 350 ரூ போகவர. ஆனால் பீமகாளி கேள்விப்படலையாமே. ஜாக்கூ மந்திர் அடிவாரத்தில் பாபா பாலக்நாத் மந்திர் இருக்குன்னாங்க. எவ்வளவு நேரமாகுன்னா.... ஒரு மணியில் போயிட்டு வந்துடலாமாம். சரின்னு கிளம்பினோம்.

நம்ம திட்டம் என்னன்னா சரியா நாலு மணிக்கு ஷிம்லாவை விடணும். இருட்டு வருமுன் மலைப்பாதையைக் கடந்துடணும். அம்புட்டுதான்.

ஜாக்கூ மலைக்குப்போகும் வழி குறுகலான மலைப்பாதை. சாதாரணச் சின்ன வண்டிதான். இண்டிகா. இது மலை ஏறுமான்னு எனக்கு ஒரு சந்தேகம். ஆனால் சின்ன முக்கலோடு ஏறுச்சு. வளைஞ்சு வளைஞ்சு நாலு கிலோ மீட்டர் போகணும். ஒரு இடத்தில் ரொம்ப ஷார்ப்பான வளைவு. அங்கே ஒரு சமநிலையில் கொஞ்ச இடம் நேரா அங்கே போய் வண்டியைத் திருப்பி நிறுத்திட்டு இந்த வளைவுலே ஏறணும். ட்ரைவர் வண்டியைத் திருப்பி நிறுத்திட்டு ஓட்டப்பந்தயத்தில் கலந்துக்க ரெடியாகும் விளையாட்டுக்காரர் நல்லா நிதானமா நாலைஞ்சு முறை ஆழ்ந்த மூச்செடுத்து விர்ன்னு கிளம்புவதுபோல உயரப்பாதையில் கிளம்பினார்!!!!


வர்ற வழியில் கோவில் எத்தனை வருசத்துக்கு முந்தி கட்டுனாங்கன்னு ட்ரைவரைக் கேட்டார் கோபால். (எனக்கு மேட்டர் தேத்தித் தர்றாராம்.)ப்ராச்சீன் என்றார் ட்ரைவர். ஹனுமன் வந்து இறங்குனதில் மலை பூமிக்குள்ளே போயிருச்சுன்னார். கதையை உங்களுக்கு அப்புறமாச் சொல்றேன்னு கோபாலிடம் ரகசியமா(தமிழில்) சொல்லிட்டுக் குரங்கு நடமாட்டம் அதிகமான்னு ட்ரைவரிடம் கேட்டால்.... அங்கே பூஜை சாமான்கள் விற்குமிடத்தில் குச்சி கிடைக்கும். ஆளுக்கொன்னு எடுத்துக் கையில் வச்சுக்குங்க. மூக்குக் கண்ணாடியைக் கழட்டிடணும். பறிச்சுக்கிட்டு ஓடிடும் என்றார்.

பாதையில் போகும்போது ஒரு ரெண்டு வளைவுகள். கோவில் வாசலுக்கு வந்தோம். பாபா பாலக் நாத்தை தரிசிக்கணும். செருப்புகளை விட தனியா சின்ன அறை. கம்பிக் கதவோடு. வாசலில் விட்டால் குரங்கு கொண்டு போயிருமாம். சந்நிதிக்குள் போனால் பாபா பாலக் நாத் மயில் வாகனத்தில்! அட! நம்ம முருகன்!!!!! தரிசனம் ஆனதும் படம் எடுக்கலாமான்னால்.... தாராளமா ன்னு பதில் கிடைச்சது.
முருகா!!!


16 comments:

said...

படங்களும் தகவல்கள் தொகுப்பும் - நச்! அருமை.

said...

பகிர்ந்த தகவல்கள் அனைத்தும் அருமை. படங்களும் கூடவே ஒத்துழைக்குதே... :)

said...

சொல்லிட்டுக் குரங்கு நடமாட்டம் அதிகமான்னு ட்ரைவரிடம் கேட்டால்.... அங்கே பூஜை சாமான்கள் விற்குமிடத்தில் குச்சி கிடைக்கும். ஆளுக்கொன்னு எடுத்துக் கையில் வச்சுக்குங்க. மூக்குக் கண்ணாடியைக் கழட்டிடணும். பறிச்சுக்கிட்டு ஓடிடும் என்றார்.
// Ellaa monkedys same monkeys??:)

said...

பகிர்வுக்கு நன்றி அக்கா!! இந்த தொடரை மிஸ் பண்ணாம படிக்கணும்...

said...

நல்ல பயணம் டீச்சர். நன்றி.

said...

கட்டிடங்கள் வடிவாக இருக்கின்றன.

said...

போனதே இல்லை என்ற ஏக்கம் கொஞ்சம் போனது. weather நிலவரம் பத்திக் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.

said...

வாங்க சித்ரா. இது 'நான்பெற்ற இன்பம்'வகை:-)))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அதெல்லாம் பார்த்துப் பார்த்து 'க்ளிக்' பண்ணிருவொம்லெ:-)))))

said...

வாங்க வல்லி.

ரெண்டு வகை இருக்குப்பா. ஒன்னு நாலு கால்களுடன். மற்றதுக்கெ ரெண்டே கால்:-))))

said...

வாங்க மேனகா.

ஆஹா..... தொடர் என்ன பெரிய தொடர்? மொத்தம் மூணே பகுதிகள்தான்.

said...

வாங்க சுசி.

கூடவே வருவதற்கு நன்றிப்பா.

said...

வாங்க மாதேவி.

ரொம்பக் கூட்டமா நான் சொல்வது கட்டிடங்களுமே கூட்டமா நிக்குது.

said...

வாங்க அப்பாதுரை.

காலநிலைன்னா அங்கே கொஞ்சம் சூடு குறைவுதான். இமயமலைத் தொடரில் இருக்கே! மேலும் உயரம் கூடக்கூட வெய்யிலின் தாக்கம் குறைஞ்சு போகுது. ஆனாலும் நாம் போனபோது 27 டிகிரி. நமக்குத்தான் வேர்த்து ஊத்துது. நியூஸி ஆட்களுக்கு இந்தியாவில் எங்கே போனாலும் சூடோ சூடுதான்:(

said...

படிச்சுட்டேன். எவ்வளவு படங்கள்? இவ்வளவும் பார்த்தும் மோமுஸ் படம் பார்க்க முடியவில்லையே என்று பக்கி மனது அடித்துக் கொள்கிறது!
ப்ராச்சீன்?
பாபா பாலக்நாத் -- வட நாட்டில் தமிழ்க் கடவுள்!

said...

வாங்க ஸ்ரீராம்.

ப்ராச்சீன்.....கோவிலுக்கு வயசில்லைன்னால் அது ப்ராச்சீன்.

ஆதிகாலமுதலே இருந்ததுன்னு அடிச்சுவிடுவது இப்படி ப்ராச்சீன் என்று சொல்லியே:-))))

முருகனை அங்கே எதிர்பார்க்கவே இல்லை!!!!

அடுத்தமுறை போய் அந்த மோமூஸை ஒரு வழி பண்ணாம விடக்கூடாது:-)