மதுராவை விட்டுக் கிளம்பி ஆக்ரா போகும் சாலைக்குக் குறுக்கே போனால் சரியா 20 கிலோ மீட்டரில் கோவர்தன். கூட்டம் நெரியும் சாலை. ரெண்டு வழியாப் பிரிச்சு இருப்பதால் கஷ்டமில்லாமல் போகமுடிஞ்சது பாதிதூரம் வரை. சின்ன கிராமங்களுக்கே உரித்தான வீடுகள், பொட்டிக்கடைகள், எருமைகள் மாடுகள். அநேகமா எல்லார் வீட்டு வாசலிலும் கயித்துக்கட்டில் ரெண்டு போட்டு வச்சுருக்காங்க. பகலில் ஸிட்டிங் ரூம் ஃபர்னிச்சர், ராத்திரியில் பெட் ரூம் ஃபர்னிச்சர், டூ இன் ஒன்!
ஒரு இடத்தில் சாலையில் பெரிய பள்ளம். மழைத்தண்ணீர் குளம் போலத் தேங்கி இருக்கு. அதைத் தொட்டடுத்து இடிஞ்சு போன ஒரு பழைய கோவில். பாறைக்கற்களை தெளிச்சு விட்டுருக்கு. அடராமா...... மேலே போக வழி இல்லாம வண்டியைத் திருப்பவும் போதிய இடமில்லாம பின்னாலேயே ரிவர்ஸில் வரும்படியா ஆச்சு. நடுவில் மீடியன்வேற இருக்கே. பாதை உள்ளெ நுழையும் இடத்தில் நாலு கற்களைக்குறுக்கே போட்டுருக்கக்கூடாதா யாராவது உள்ளூர் மக்கள்?
மீதி இருக்கும் பாதி சாலையில் காவாசியை தாமே எடுத்துக்கிட்டு உரிமையோடு போகும் வண்டிகளைப் பின் தொடர்ந்தோம். ஜனக்கூட்டமும் டூரிஸ்ட் பஸ்களும் அடைச்சு நின்னுக்கிட்டு இருந்த இடம்தான் கோவர்தன். ரோடு மேலேயே கோவில் நிக்குது. கோவில் கோபுரங்கள் ரெண்டு, சர்ச்லே இருக்கும் ஸ்டீப்பிள் போல நெடுநெடுன்னு உசரம். ரெண்டுக்கும் இடைப்பட்ட வெளியில் கோவர்தனமலையைத் தூக்கிப் பிடித்திருக்கும் கண்ணனும் மலையின் கீழ் மழைக்கு ஒண்டி நிற்கும் மாடுகளும் மனிதர்களுமா ஒரு ஸீன். சரஞ்சரமா சாமந்திப்பூக்களைக் கோர்த்துத் தொங்கவிட்டு அலங்கரிச்ச கோவில் வாசல்.
உள்ளே நுழைஞ்சால் விஸ்தாரமான பெரிய கூடம். வலது பக்கம் அஞ்சாறு படிகள் இறங்கினால் ஒரு ப்ராச்சீன் மந்திர். சுவரில் உள்ள மாடங்களில் புள்ளையார், ஹனுமன், ஸ்ரீநாத் இப்படி குட்டிச்சந்நிதிகள். இடப்பக்கம் ஒரு கோவில் அலுவலகம். அங்கே போய் கேட்டதும் படமெடுத்துக்க அனுமதி கிடைச்சது! ஸ்ரீ கிரிராஜ் ஸேவக் சமிதி நடத்துது இந்த கோவிலை. குட்டிச்சந்நிதிகளை தரிசனம் செஞ்சுக்கிட்டு இன்னும் நாலைஞ்சு படி இறங்கி அந்தப் பக்கம் போனால் ராதாவும் கிருஷ்ணனுமா நிற்கும் பளிங்குச்சிலைகள். முன்னால் இடுப்புயரத் தடுப்பு. தடுப்புக்கு முன்னால் ரெண்டு பண்டிட்கள்.
நம்ம கோபாலை 'வா வா'ன்னு கூப்பிட்டதும் இவர் வெள்ளந்தியா கிட்டே போனார். அவரைத் தடுப்புக்குள்ளே கொண்டுபோய் குழலூதும் கண்ணன்முன் நிற்க வச்சுட்டு என்னையும் உள்ளே வா வான்னதும் சின்னத் தயக்கம் இருந்தாலும் 'கோபாலை மீட்டு எடுக்கணுமே'ன்னு நானும் உள்ளே போனேன்:-)
குடும்ப விவரம் எல்லாம் கேட்டறிந்து ஒரு ரூபாய் காசு ஒன்னை எடுத்து அதுலே சிகப்புக்கயிற்றைச் சுற்றி முடி போட்டு கொஞ்சம் பூக்களை ஒரு சின்னக்காகிதத்தில் பொதிஞ்சு அந்தக் காசையும் வச்சு சாமிகளின் காலில் வச்சு எடுத்து கோபாலுக்கு முன் நீட்டியபடி வலதுபக்கம் எழுதிப் போட்டுருந்த லிஸ்டில் எது விருப்பமோ அவ்வளவு தட்சிணை தாங்கன்னார். 251 லே ஆரம்பிச்சு ஒரு லட்சத்து ஒன்னுவரை இருக்கு. லிஸ்டை ஏறிட்டுப் பார்த்த கோபால் நூறு ரூபாயைத் தட்டில் போட்டார்.
"இவ்வளவு கூட்டம் இருக்கும் இடத்தில் உங்களுக்கு மட்டுமே தடுப்புக்குள்ளே வந்து நின்னு கும்பிட சாமி அருள் செஞ்சுருக்கார். நான் வேற யாரையாவது கூப்பிட்டேனா? இல்லையே..... நீங்கதான் ஸ்பெஷல். லிஸ்டைப் பார்த்துக் காசு போடுங்க"
இவ்வளவு கூட்டத்துலேயும் கூட நாந்தான் ஏமாளி ன்னு கோபால் நெத்தியில் இருப்பது பளிச்சுன்னு அவருக்குத் தெரிஞ்சுருக்கு பாருங்களேன்!!!!!
இந்த நூறுதான் போட்டாச்சே அது போதுமுன்னு கோபால் சொன்னதும், சடார்ன்னு ரூபாயில் கட்டி இருந்த சிகப்புக் கயிறைப் பிரிச்சுட்டு அந்தக் காசை தடாலுன்னு அந்தத் தட்டுலேயே எறிஞ்சார் மூஞ்சைத் தூக்கிவச்சுக்கிட்ட அந்த. பேண்டிட். (தட்டச்சுப் பிழை இல்லை) குடும்ப நலத்துக்குச் சொன்ன மந்திரத்தின் எஃபெக்ட் எல்லாம் டிலீட் ஆகிருச்சு! பேசாம தட்டுலே போட்ட நூறை திருப்பி எடுத்துக்கலாமான்னு எனக்குத் தோணுச்சு ஒரு விநாடி.
தடுப்பைவிட்டு வெளியே வந்ததும் கெமெராவைக் கிளிக்கினேன். படம் எடுக்கக்கூடாதுன்னு அவருடைய பங்காளி கத்துனார். ஆஃபீஸ்லே போய் கேட்டுக்கோன்னு சொல்லிட்டுப் படியேறி கூடத்துக்கு வந்தோம். ( படம் எடுக்கக்கூடாதுன்னு சுவற்றில் எழுதி இருந்ததை இப்போ படத்தை அப்லோடு செய்யும்போதுதான் கவனிச்சேன்)
கூடம் பெருசாதான் இருக்கு. திறந்தவெளியா இருந்து அப்புறமா மேலே கூரை போட்டுருக்காங்க. சுத்திவர சில சந்நிதிகள். ஒரு பக்கம் அடுப்பு வச்சு பலகாரங்கள் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. பிரஸாதம் தயாரிப்பா இருக்கலாம்.
நேரெதிரா சின்ன இடத்தில் கோவர்தன மலையைத் தன் சுண்டுவிரலால் தூக்கி நிறுத்தும் கண்ணன். குன்றினடியில் சிலபல மனிதர்கள் மாடுகள். குழந்தை எங்கே மலையை விட்டுருவானோன்னு, தங்கள் கையில் இருக்கும் மாடு மேய்ப்பவர் வச்சுருக்கும் கோலால் ரெண்டுபேர் சப்போர்ட் கொடுத்துத் தாங்கிக்கிட்டு இருக்காங்க.
சந்நிதி முன்னால் பார்க்குகளில் இருக்கும் தாமரைக்குளம் போல ஒன்னு. தண்ணி இல்லாத குளம். அதுலே வசுதேவர் கூடையில் குழந்தையை வச்சுத் தலையில் சுமந்துருக்கப் பின்னால் உசரமா நிற்கும் ஆதிசேஷன் குடை பிடிச்சுருக்கும் சிற்பம். அந்தத் தொட்டிக்குப் பக்கத்தில் மயில் பீலிகளைக் கொத்தாப் பிடிச்சுக்கிட்டு 'வாங்க வாங்க'ன்னு கூப்பிட்டு பக்தர்களின் தலையைத் தடவறார் ஒரு பண்டிட். நாம்தான் சூடு பட்டோமே சில நிமிசத்துக்கு முன்னே..... அது இன்னும் ஆறலைன்றதால் ஒதுங்கி ஓடிட்டோம்!
நியூஸியில் நம்மூர் ஹரே க்ருஷ்ணா கோவிலில் இந்த கோவர்தன் பூஜை ரொம்ப அருமையாச் செய்வாங்க. ஈடுபாடோடு செய்யும் மக்கள் அனைவரும் இந்த இஸ்கான் இயக்கத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரர்களே. பொதுவா இந்தியர்கள் எல்லோருக்கும் யோகா தெரிஞ்சுருக்குமுன்னு வெள்ளையர் உலகில் நினைக்கராங்க பாருங்க அதே போல அங்கே ஹரே க்ருஷ்ணா கோவிலுக்குப்போகும் நாம் கோவர்தனகிரியைத் தரிசனம் செஞ்சுருப்போம் என்ற நம்பிக்கையில் அவுங்க தல யாத்திரையா மதுரா, விருந்தாவன், கோகுலம் வந்தப்ப கோவர்தனகிரியில் கிரிவலம்(பரிக்ரமா) போனதையெல்லாம் ஆர்வமா நம்மிடம் சொல்லும்போது........... நாங்க தென்னிந்தியர்கள். வடக்கே அவ்வளவா போனதில்லைன்னு மழுப்பலா.....பம்முவது வழக்கம். அந்தக் காரணத்தாலேயே.....
கிரிவலம் போகலாமேன்னு கிரியைத் தேடுனா..... அது கோவிலுக்கு எதிர்ப்பக்கத்துலே இருக்காம். வந்த வழியில் ஒரு அம்பது மீட்டர் போனால் கிரிவலம் பாதை ஆரம்பமுன்னு சொன்னாங்க. பதினாலு கிலோமீட்டர் சுத்தி வரணும். அதனால் கோவர்தன கிரியில் காரில் ஒரு பரிக்ரமா நடத்த வேண்டியதாப் போச்சு.
பெரிய மலையை எதிர்பார்த்துப்போனா சின்னதா ஒரு கரடு போல ஒன்னு! சுத்திவர கம்பி வேலி போட்டு வச்சுருக்காங்க. அங்கங்கே குரங்குகள் நடமாட்டம். பசுக்களும் பன்றிகளும் எக்கச்சக்கமா சாலையை ஆக்ரமிச்சுக்கிட்டு நிக்குதுங்க. 64 மைல் நீளமும் 40 மைல் அகலமும் 16 மைல் உயரமும் இருந்த இந்த மலை எப்படி இப்படிச் சின்னக் குன்றா ஆச்சுன்றதுக்கு ஒரு கதை இருக்கு. வந்து வட்டமா உக்காருங்க. கதை கேக்கணுமா இல்லையா/
கோவர்தனகிரி
த்ரோணாசல் என்ற பெயரில் ஒரு மலையரசன் இருந்தார். அவருக்கு ஒரு பிள்ளை பிறந்தான். அவனுக்குக் கோவர்தன் என்று பெயர் வச்சு வளர்த்துக்கிட்டு இருக்கார். கிரிராஜா கோவர்தன் அழகுன்னா அப்படி ஒரு அழகு. நல்ல அம்சமான அழகான மலையா வளர்ந்துக்கிட்டு இருக்கான். அவன் மேல் அழகான மரங்கள், செடி கொடிகள் எல்லாம் படர்ந்து வளர்ந்து பச்சைப்பசேலுன்னு ஜொலிக்கிறான். ஏகப்பட்ட பூக்கள் உள்ள விதவிதமான மரங்கள் சொரியும் பூக்களால் எப்போதும் அலங்காரமாக நிக்கறான். மகனைப் பார்த்த அப்பாவுக்கு ரொம்பவே பெருமிதம்.
அப்போ சத்ய யுகம் ஆரம்பிச்சது. காசி நகரத்துலே தவம் செஞ்சுக்கிட்டு இருந்த புலஸ்திய முனிவர் தீர்த்த யாத்திரையா இந்தப் பக்கம் வந்தவர் கிரிராஜனின் அழகில் அப்படியே சொக்கிப் போயிட்டார். இவ்வளவு அழகான மலைமேல் உக்கார்ந்து தவம் செய்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை அவர் மனசுலே வந்துருச்சு.
நேரா அரசன் த்ரோணாசல் அரண்மனைக்குப் போனார். தான் இன்னார்ன்னு அறிவிச்சுக்கிட்டு, 'காசியில் உள்ள மகாகாளியை தரிசிக்க கங்கையே வந்து அங்கே பாயுது. அவ்வளவு அழகான நதி. அந்த இடத்தில் மலைகள் இல்லை. உன் பையன் கிரிராஜனை என்னோடு அனுப்பி வை. நான் காசிக்குக் கூட்டிக்கிட்டுப் போறென். அங்கே வந்து இருக்கட்டும்'ன்னார்
முனிவருக்கு .நோ' சொல்ல அரசனால் முடியலை. முனிவரின் கோபத்துக்கு ஆளாகிட்டா..... சாபம் கிட்டுமேன்ற பயம். ஆனால் மகனைப் பிரியவும் மனம் இல்லை.
இதையெல்லாம் பார்த்த கிரிராஜாவுக்கு 'ஐயோ'ன்னு ஆகிருச்சு. 'முனிவர்கூட நான் போறேன்ப்பா. ஆனா ஒரே ஒரு கண்டிஷன். என்னை அவர் தூக்கிட்டுப் போகணும். வழியிலே எங்கேயும் இறக்கி வைக்கக்கூடாது'ன்னார். புலஸ்திய மகரிஷி, இது என்ன பிரமாதம்? நான் என் வலது கையில் வச்சுக் கொண்டு போறேன்' னுட்டு, நம்ம கிரிராஜாவைத் தூக்கி வலது உள்ளங்கையில் வச்சுக்கிட்டு நடக்க ஆரம்பிச்சார்.
வழியில் இந்த வ்ரஜ பூமிக்கு வர்றாங்க. அந்த இடத்தில் தர்மம் மேலோங்கி இருக்கு. இதைக் கண்டதும் கிரிராஜனுக்கு இங்கேயே இருக்கணும் என்று தோணுச்சு. பகவான் ஸ்ரீக்ருஷ்ணன் இங்கே பிறக்கப்போறாரே! எதாவது ஐடியா செஞ்சு இங்கேயே தங்கணுமுன்னு யோசிச்சு வழி கண்டு பிடிச்சார்.
இந்த இடத்துலே ரெண்டு வெர்ஷன் வருது.
1. தன்னுடைய மனோ வலிமையால் தன் உடலை மிகவும் கனமா ஆக்கிக்கிட்டே போனார். ஒரு கையால் தூக்கிக்கிட்டு நடந்த முனிவருக்குத் தாங்க முடியாத கனம். பொறுக்க முடியாம கீழே இறக்கி வச்சுட்டார்.
2. (இது கொஞ்சம் சின்னப்புள்ளைத்தனமானது) வ்ரஜபூமியில் தங்கணும் என்ற ஆசையில் இருந்த கிரிராஜா, தன்னுடைய மனோ வலிமையால் முனிவருக்கு இயற்கை உபாதையை, அவசரமாக் கழிக்கவேண்டிய நிலையை உண்டாக்குனார். பொறுக்க முடியாத முனிவர் மலையை சட்னு இறக்கி வச்சுட்டுப் புதரைத் தேடி ஓடினார். திரும்ப வந்து மலையைத் தூக்கினா.... கடுகளவு கூட நகர்த்தவே முடியலை.
எப்படியோ மலை இங்கேயே தங்கிருச்சுன்னு வையுங்க. மீதிக் கதையைப் பார்க்கலாம்.
தன்னை இந்த மலை ஏமாத்திடுச்சேன்னு கோபம் வந்து மலையைச் சபிச்சுட்டார். 'நீ மண்ணுக்குள்ளே புதைஞ்சு போ' ! சாபம் இட்டதும் அடடா..... கோபத்துலே இப்படிச் சபிச்சுட்டேனேன்னு மனம் வருந்தி (இதுதான் பெரியவங்களுக்கு அழகு. தான் எதாவது தப்பு செஞ்சுட்டா உடனே மனம் வருந்தி அதை எப்படியாவது சரியாக்கப் பார்ப்பாங்க)
கிரியிடம் மன்னிப்பு கேட்டுக்கிட்டு, 'விட்ட சாபத்தை திருப்பி வாபஸ் வாங்க முடியாது. ஆனா சின்ன கரெக்ஷன் செஞ்சுக்க முடியும். அதனால் சடார்ன்னு மண்ணுக்குள் புதையாமல் தினம் ஒரு கடுகளவு உசரம் குறைஞ்சுக்கிட்டே போவே. இன்னும் சில யுகங்கள் நடந்து முடிஞ்சு கலியுகம் பிறந்து பத்தாயிரம் வருசமாகும் நீ முழுவதுமா கரைய'ன்னார். சம்பவம் நடந்தப்ப சத்ய யுகம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அந்த சாபத்தால்தான் இப்படி இத்தனூண்டு குன்றா இப்ப நிக்குது.
கிரி பாதையில் நிறையப்பேர் நடந்து போறாங்க. பக்தி அதிகமா இருக்கறவங்க தரையில் விழுந்து நமஸ்கரிச்சுக்கிட்டே போறாங்க. கையில் பாய், ப்ளாஸ்டிக் ஷீட், மெலிசா மெத்தை மாதிரி ஒன்னு இப்படி எதாவது வச்சுக்கிட்டு அதை விரிச்சு அதன்மேல் சாஷ்ட்டாங்கமா விழுந்து வணங்கிட்டு, எழுந்து நின்னு அந்தப் பாயை சுருட்டி நாலைஞ்சு எட்டு நடந்து மறுபடி விரிச்சு அதில் விழுந்து வணங்கி எழுந்துன்னு அவுங்க பரிக்கிரமா நடக்குது. 14 கிலோமீட்டர்................ ஐயோ:(
வலம் வரும் சமயம் நமக்கு வலதுபக்கம் சட்னு பிரியும் சின்ன தெருவுக்குள் ஏகப்பட்ட மனிதர் கூட்டம். என்னன்னு விசாரிச்சால் உள்ளே ஒரு கோவில் இருக்காம். நாங்களும் போய்ப் பார்த்தோம். அந்த்ச் சந்துத் தெருவுக்குள் போகப்போக ரெண்டு பக்கமும் ஏராளமான கடைகள். பால், கட்டித் தயிர், இனிப்புகள் விற்பனை. எல்லாத்துக்கும் ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரிச்சு வச்சுருக்காங்க. மக்களும் மனநிறைவோடு வாங்கிச் சாப்புடறாங்க. சந்தின் ரெண்டு பக்கமும் திறந்த சாக்கடை. பார்த்தாவே 'பகீர்' னு இருக்கு எனக்கு. கண்ணால் தின்னால் போதுமுன்னு போறோம்.
தெரு முடியும் இடத்தில் ஒரு கூடம். அங்கே கோவர்தன கிரியைத் தூக்கும் கண்ணனும் ஆயர்பாடி மனிதர்களும், மாடுகளுமா ஒரு பெரிய படம். அதுக்குக்கீழே என்னவோ சந்நிதி இருக்குன்னு நினைக்கிறேன். கால் வைக்கமுடியாத அலவு கூட்டம் நெரியுது. சொம்புகளிலும் டம்ப்ளர்களிலும், வாளிகளிலும் பாலை எடுத்துக்கிட்டு ஜனம் அங்கே போகுது. அதை அங்கே இருக்கும் சிலைக்கு அபிஷேகம் பண்ணுறாங்க போல. காலிச்சொம்புகளும் பக்கெட்டுகளுமா திரும்பி வெளியே வருது.
நாங்க நிக்கும் இடத்தில் பெரிய பெரிய பாத்திரங்களில் பால் வச்சுக்கிட்டுக் குவளை பத்து ரூபான்னு விக்கறாங்க. அப்போ ஒருத்தர் பால்பக்கெட்டைத் தலையில் சுமந்து வந்து பாத்திரத்தில் ஊத்துனார். ஒரு வேளை அங்கே ஊத்தும் அபிஷேகப்பால் இங்கே ரீசைக்கிள் ஆகுதோன்னு ஒரு சம்ஸயம் எனக்கு. ( எப்பப் பார்த்தாலும் ஒரு குறுக்கு புத்தி. நீ உருப்படமாட்டே...... மனசாட்சிதான். வேறென்ன? அப்பப்ப இப்படி எதாவது சொல்லிக்கிட்டே இருக்கணும் அதுக்கு)
கோவர்தன கிரிவலம் முடிச்சப்ப மணி பனிரெண்டரைதான். அதனால் மதுராவில் இன்னும் சில இடங்களைப் பார்க்கலாமுன்னு வந்த வழியே திரும்பி மதுராவுக்குள்ளே நுழைஞ்சோம்.
தொடரும்..........................:-)
Wednesday, December 01, 2010
கிரிதர கோபாலா............Bபாலா..........
Posted by துளசி கோபால் at 12/01/2010 05:07:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
நல்ல விமர்சனம்
கிரி பாதையில் நிறையப்பேர் நடந்து போறாங்க. பக்தி அதிகமா இருக்கறவங்க தரையில் விழுந்து நமஸ்கரிச்சுக்கிட்டே போறாங்க. கையில் பாய், ப்ளாஸ்டிக் ஷீட், மெலிசா மெத்தை மாதிரி ஒன்னு இப்படி எதாவது வச்சுக்கிட்டு அதை விரிச்சு அதன்மேல் சாஷ்ட்டாங்கமா விழுந்து வணங்கிட்டு, எழுந்து நின்னு அந்தப் பாயை சுருட்டி நாலைஞ்சு எட்டு நடந்து மறுபடி விரிச்சு அதில் விழுந்து வணங்கி எழுந்துன்னு அவுங்க பரிக்கிரமா நடக்குது. 14 கிலோமீட்டர்................ ஐயோ:(
......இந்த அளவுக்கு நேர்த்தி கடன் என்றால், என்ன கஷ்டமோ? பாவம்ங்க.
கோயிலுக்குப்போனமா சாமிகும்பிட்டமானு இருக்கனும்.. பூஜை செய்யரவங்களை எல்லாம் கண்ணுக்கு கண்ணா நேரா பாக்கவே படாது ;))
மிக அழகான பதிவு !
கோவர்தன கிரி மலையை நேரில் சுற்றி பார்த அனுபவம் நமக்கு !
நன்றிகள் கோடி உங்களுக்கு !
வாங்க சமுத்ரா.
வரவுக்கு நன்றி.
வாங்க சித்ரா.
பாவமாத்தான் இருக்கு அவுங்களைப் பார்த்தால்:(
அதிலும் ரொம்ப வசதி இல்லாத நிலையில் இருக்கும் மக்கள்தான் இப்படி அதீத பக்தி காமிக்கிறாங்க!
எனக்கே கொஞ்சம் வெக்கமாப்போச்சு என் கிரிவலத்தை நினைச்சு.
வாங்க கயலு.
ஆஹா.... ஐ காண்டாக்ட் கூடவே கூடாதுன்னு சொல்றீங்க!!!
அடுத்தமுறை கடைப்பிடிக்க முயல்வேன்.
நல்ல பாய்ண்ட். ஆனா.... எனக்கு மக்களைப் படிக்கப் பிடிக்குதேப்பா:(
வாங்க வாலாஜாபாலாஜி!
முதல் வருகைக்கு நன்றி.
வணக்கம்.நலமா?
நம்ம துளசிதளத்தில் கோவில்கள் விஸிட் ஏகப்பட்டது இருக்குங்க.
நேரம் இருக்கும்போது பாருங்க.
அழகும் சுத்தமும் ஒருசேர இருந்திருந்தா எவ்ளோ நல்லாருக்கும்..
சாஷ்டாங்க பரிக்ரமா வடக்கே கயிலாயத்திலும் செய்வாங்களாம்.
நோ நோ தட் அட்வைஸ் ஒன்லி ஃபார் கோபால் சார்..:)
நீங்க படிங்க..
ஆனா அவங்க எல்லாம் இவரை இல்ல பிடிக்கிறாங்க..
சந்நிதி முன்னால் பார்க்குகளில் இருக்கும் தாமரைக்குளம் போல ஒன்னு. தண்ணி இல்லாத குளம். அதுலே வசுதேவர் கூடையில் குழந்தையை வச்சுத் தலையில் சுமந்துருக்கப் பின்னால் உசரமா நிற்கும் ஆதிசேஷன் குடை பிடிச்சுருக்கும் சிற்பம். அந்தத் தொட்டிக்குப் பக்கத்தில் மயில் பீலிகளைக் கொத்தாப் பிடிச்சுக்கிட்டு 'வாங்க வாங்க'ன்னு கூப்பிட்டு பக்தர்களின் தலையைத் தடவறார் ஒரு பண்டிட். நாம்தான் சூடு பட்டோமே சில நிமிசத்துக்கு முன்னே..... அது இன்னும் ஆறலைன்றதால் ஒதுங்கி ஓடிட்டோம்!:))
பரிக்ரமா செய்ய முழங்கால்னா சரியா இருக்கணூம்!
கொடுத்த வைத்த பக்தர்கள். மூகாம்பிகை கோவிலில் கூட செய்வதா யாரோ சொன்னாங்க.இதூக்குத்தான் ஆரோக்கியமா இருக்கும் போது கோவில் குளமெல்லாம் பார்த்துடணும். படமெல்லாம் ஜோர். அந்த சாக்கடை விஷயம் தான் .....
வாங்க அமைதிச்சாரல்.
கயிலைன்னா இன்னும் கிலோமீட்டர்கள் கூடிப்போகுமே!
கயலு,
கோபாலுக்கு நியூஸ் போயிருச்சு:-)))))
டாங்கீஸ்.
வாங்க வல்லி
சாமி என்னை நோகாம 'சாமி கும்பிட'ச் சொல்லி இருக்கார்ப்பா!!!!
உங்களுக்கும் சொன்னாராமே......
//இவ்வளவு கூட்டம் இருக்கும் இடத்தில் உங்களுக்கு மட்டுமே தடுப்புக்குள்ளே வந்து நின்னு கும்பிட சாமி அருள் செஞ்சுருக்கார். நான் வேற யாரையாவது கூப்பிட்டேனா? இல்லையே..... நீங்கதான் ஸ்பெஷல். லிஸ்டைப் பார்த்துக் காசு போடுங்க"//
இதே போல்தான் திடீர்ன்னு செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் காலிங் பெல் அடிக்கும், திறந்தா...ஆத்தா மாதிரி ஒரு ரூபா காசுக்கு குங்குமம் வைத்துக்கொண்டு, மஞ்சள் பூசிக்கொண்டு, மஞ்சள் புடவையில் நிற்பார் ஒர் அம்மா! ’ரோட்டிலே போய்ட்டிருந்தேன், இந்த வீட்டில் போய் தட்க்ஷணை வாங்கு’ என்று எனக்கு உத்தரவு வந்தது.....இத்தாதி...இத்தயாதி..ன்னு காசு கேட்பார். சரின்னு ஐந்து ரூபாய் போட்டால், இல்லை ஐம்பது கொடுன்னு டிமாண்ட் செய்வார். பிறகு சங்கர் வந்துதான் என்னை அவரிடமிருந்து பிச்செடுப்பார்.
கிரிவலப் பாதையில் மெத்தை, பாய் சகிதம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போல் நம்ம திருவண்ணாமலையில் வலம் வந்தால் புல்டோஸர் மாதிரி நம்மேல் ஏறி மிதித்து போய்க்கொண்டேயிருக்கும் கூட்டம்!!!
நல்ல பதிவு, நல்ல பகிர்வு!!
வாங்க நானானி.
பிரிச்சு, பிரிச்சு பிரிச்சு...
மேஞ்சு மேஞ்சு மேஞ்சு......
ஆஹா......
ஆத்தாளே வீடு தேடிவந்தாளா!!!!!
அஞ்சு வேணாம், அம்பது போடுன்னாளா!!!!!
இதுமாதிரிதான்..... திருப்பதிக்கு நடந்து போறேன்னு......
கோவிந்தா கோவிந்தா......
சேவிச்சுக்கிட்டேவா!! நேற்று என் சித்தப்பா இதே மாதிரி ஒரே இடத்தில் 108 முறை செய்வார்களாம்.நினைச்சு பார்க்கவே பயமாக இருக்கு.
மிக்க நன்றிகள் திரு.போபால்.
ஆன்டவன் அருளில் மிக்க நலம்.
உங்கள் போன்ற போற்றதக்கவர்களின் பதிவுகளால் மனம் நிறைந்த அனுபவம் சுலபமாக அடையமுடிகிறது.யாத்ரிகதனமான உஙகள் பதிவுகள் சிறப்பு.
வாழிய நலம் .
வாங்க குமார்.
பக்தி முத்தினால் இப்படித்தான் ஆகும்!!!!
வாலாஜாபாலாஜி,
இப்படிக் குலை நடுங்க வச்சுட்டீங்களே!
போபால்ன்னா இப்பவும் மனசுலே துயரம்தான்.
நம்ம பேரு கோபால். அதுவும் மறுபாதியின் பெயர்தான்.
துளசிதளத்தில் எழுதுவது 'அவர் அல்ல' :-))))))
குட்டிக்கதை சுவை.
ஸ்வீட் போட்டோவைப் பாத்தாலே வெயிட் போடுதுங்க..
வாங்க அப்பாதுரை.
கண்ணாலே தின்னாலும் வெயிட் போடுதா!!!!!!!!!
மகா டேஞ்சரா இருக்கே:-)))))
கிரிதர கோபால் :)
வாங்க மாதேவி..
கரெக்ட்டு......
நானே ஒரு குன்றுபோலத்தான் இருக்கேன்:-))))))
Post a Comment