Friday, December 03, 2010

கம்ஸனைக் கொன்றபின்.......

லேசுப்பட்ட ஆளா இந்தக் கம்ஸன்? பலசாலியான அவனுடன் ஒண்டிக்கு ஒண்டி நேரா நின்னு சண்டை போட்டா, கடவுளா இருந்தாலுமே களைப்பு வந்துருக்காதா?

நம்ம கீதா எவ்வளவு அழகா, கம்சனோடு நடந்த சண்டையை எழுதி இருக்காங்க பாருங்க!
http://sivamgss.blogspot.com/2009/12/blog-post_6518.html

லிங்கு வேலை செய்யலைன்னு நினைக்கிறேன். சுட்டி மேலே இருக்கு.


சண்டைன்னுகூடச் சொல்லக்கூடாது. இது வதம். கம்சவதம். ஒரு பாவமும் அறியாத பிஞ்சுக்குழந்தைகளை ஈவு இரக்கம் இல்லாம உடனுக்குடன் வெட்டிக் கொன்னதுமில்லாமல், தங்கையின் எட்டாவது குழந்தையைக் கொல்லணும் என்ற ஆவேசத்தில் ஊரில் அப்போப் பிறந்த அத்தனை குழந்தைகளையும் கொன்னுபோட்ட பாவியை வதம் செய்ஞ்சது நியாயம்தானே? வதைச்சு முடிச்சுட்டு கொஞ்சநேரம் ஓய்வெடுக்கன்னு வந்து உக்கார்ந்த இடம் இந்த விஷ்ராம் ( ஹிந்தி வார்த்தை. தமிழில் ஓய்வு) Gகாட் (படித்துறை) யமுனை நதிக்கரையில் இருக்கும் ஏகப்பட்ட படித்துறைகளில் இதுக்கு ரொம்ப முக்கியத்துவம்!

சம்பவத்துக்குப் பொருந்தி வரும்வகையில் கொஞ்சதூரத்திலேயே கம்ஸனின் கோட்டை இருக்கு!

மதுராவில் ஏகப்பட்ட கோவில்களும் பார்க்க வேண்டியவைகளும் இருந்தாலும் அத்தனைக்கும் போக நேரமேது? முக்கியமான சிலதை விட்டுடாமப் பார்த்தால் போதும் என்ற எண்ணம்தான். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்தாம்!

(ஆமாமாம்...இதுலே மட்டும்........ )

விடுங்க. கோபாலும் தன் மனசில் இருப்பதைச்சொல்ல ஒரு ச்சான்ஸ் கொடுக்கலாம்:)

ரொம்பக் குறுகலா இருக்கும் வீதிகள்.ரெண்டு பக்கமும் வெளியே ரெண்டடி நீட்டி இருக்கும் பலகைகளுடன் நெருக்கமான கடைகள். நிரம்பி வழிஞ்சு தெருவெல்லாம் ஓடும் சாக்கடைகள். இது எங்க இடம். அப்படித்தான் மேய்வோம்ன்னு மக்களை உரசிக்கிட்டுப் போகும் மாடுகள். போதாக்குறைக்குப் பள்ளி மாணவர்கள் கூட்டம் வேற. ஷிஃப்ட் ஸ்கூல் முடிஞ்சுருக்கு போல.


ரொம்பப் புராதன ஊர்ன்னு சொல்லும் பழைய கட்டிடங்கள் எல்லாமே! நம்ம வண்டியோ கொஞ்சம் பெருசா இருக்கு. யார்மேலேயும் இடைக்காம, திறந்துகிடக்கும் சாக்கடையில் சக்கரம் இறங்காமப் போறதே பெரிய சவாலா இருக்கு. திரும்பிப்போயிடலாமுன்னு நினைச்சாலும் வண்டியைத் திருப்ப இடம் ஏது? ஆனது ஆகட்டுமுன்னு போய்க்கிட்டே இருக்கோம். இதுலே நம்ம ட்ரைவர் வேறு ஊருக்குப்புதுசு. வழி தெரியாம பத்து மீட்டருக்கொரு முறை விசாரிச்சுக்கிட்டே முன்னேறுனோம்.

விஷ்ராம் காட் னு கை காமிச்சவருக்கு நன்றி சொல்லி இடதுகைப்பக்கம் அந்தப் பாதையில் நுழைஞ்சால் யமுனா தெரிஞ்சது. படகுகள் ரெண்டுமூணு கட்டிப் போட்டுருக்காங்க. எங்கே பார்த்தாலும் குப்பையும் கூளமுமா......... ஓடிவந்து பார்க்கிங் சார்ஜ் முப்பது ரூபாயை வாங்கிக்கிட்டு அந்த அழுக்குப்பக்கம் கைகாட்டுறார் ஒருத்தர். படகுலே கொண்டுபோய் காமிப்பாங்களாம். கம்சனின் கோட்டை, விஷ்ராம் காட் , மற்ற படித்துறைகளையெல்லாம் காமிச்சு இங்கே கொண்டுவந்து விடறேன்னு சொல்றார் படகோட்டி.

படகுலே உக்கார ஆசனங்கள், பெஞ்சு ஒன்னும் இல்லை. தட்டையான மரப்பலகையில் தரையில் உக்காருவதுபோல உக்காரணும்! கீழே உக்காருவது ஒரு கஷ்டமுன்னா திரும்ப எந்திரிப்பது மகா கஷ்டம் எனக்கு. இது என்னடா நமக்கு நேர்ந்த கொடுமைன்னு நான் முழிக்கறேன்.

யமுனையில் கண்ணை ஓடவிட்ட கோபால்......'ஏம்மா...இந்த அழுக்குத் தண்ணியிலா போகப்போறே?' ன்றார். ஏம்ப்பா அந்த விஷ்ராம் காட் எங்கே இருக்குன்னு பார்க்கிங் வார்டனை(!) கேட்டால்..... நீங்க இங்கே திரும்பாம இன்னும் கொஞ்சம் முன்னாலே போயிருக்கணுமுன்னு பதில் வருது.

சரி. அங்கேயே போகலாமுன்னு வண்டியைக் கிளப்பிட்டோம். மறுபடி ஜனத்திரளில் மாட்டிக்கிட்டுப் போகுது வண்டி. சந்து திரும்பும் இடத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில். ஆரஞ்சு நிற அனுமனுக்கு வெள்ளி ரேக்குகளை ஒட்டிக்கிட்டு இருக்காங்க.. என்னை என்னடா இம்சிக்குறீங்கன்னு அவர் முழிச்சுப்பார்க்கறார்!
சந்திலே ஆளாளுக்கு வண்டியை நிறுத்தி, 'கைடா வரேன்'னு ஒரு இம்சை. அதுக்குள்ளே விஷ்ராம் காட் இங்கேதான். வண்டியை அந்த ஓரமா நிறுத்திட்டுப் போய் தரிசனம் செய்யுங்கன்னார் ஒரு காவி ஜிப்பாக்காரர். ஏடாகூடமான இடம். அதனால் நாங்க ரெண்டு பேர் மட்டும் இறங்கிப்போனோம். நாம் தரிசனம் முடிச்சுட்டு வந்து ட்ரைவரை அனுப்பலாமே.(நம்ம ட்ரைவர் ப்ரதீப் பயங்கர பக்திமானாக்கும்)
இந்தப் பக்கம் வாங்கன்னு, கடைகளுக்குப் பக்கவாட்டில் இருந்த ஒரு வாசலில் நுழைஞ்சார் காவி ஜிப்பாக்காரர். ஸெல்ஃப் அப்பாய்ண்டட் கைடு!!!! சின்ன சந்துக்குள்ளே போறோம். கோவில் முற்றம் போல ஒரு இடம். வலதுபக்கம் தூண்களில் பெரிய பெரிய காண்டாமணிகள் சங்கிலியால் கட்டித் தொங்குது. படிகள் இறங்கினால் யமுனைக்கரையும் ஓசைப்படாமல் ஓடும் யமுனையும். நல்ல அகலமான நதிதான். நேரா அக்கரையில் ஒரு தோரணவாசல் தெரிஞ்சது. அதுலே குழந்தையைக் கூடையில் வச்சு சுமந்துவரும் வசுதேவர் சிலை. ஆற்றைக் கடந்த இடம் இதுவாக இருக்கலாம்.


இடப்பக்கம் நேரா யமுனாதேவிக்கான சந்நிதி. முற்றத்தின் எல்லாப் பக்கங்களிலும் சந்நிதிகளா இருக்கு. அந்தப் பக்கம் காசி விஸ்வநாதரும் அன்னபூரணியும். விச்சு தங்கத்தலை வச்சுருக்கார். தினமும் மாலை ஆறு மணிக்கு யமுனா ஆரத்தி நடக்குதாம். ரொம்ப நல்லா இருக்குமுன்னு சொன்னார் காவி.

த்வார்க்காதீஷ் கோவில் ஒன்னு கொஞ்சதூரத்திலே இருக்கு. ஆனா நாலுமணிக்குத்தான் திறப்பாங்கன்னதும் மணியைப் பார்த்தால் ரெண்டு. இன்னும் பகல் சாப்பாடு ஆகலை. நாம்தான் ஒரிஜனல் த்வார்க்காதீஷை சேவிச்சுட்டோமேன்னு அங்கிருந்து கிளம்பிட்டோம். யமுனைக்குப் பூஜை பண்ணுங்கன்னு பண்டிட்/பண்டாக்கள் துளைச்சு எடுத்துட்டாங்க. இங்கேயும் அழுக்கும் குப்பையுமாத்தான் கிடக்கு. நம்ம மக்கள் அதுலே முங்கிக்குளிச்சுப் பூஜை செஞ்சுக்கிட்டு இருந்ததையே சேவிச்சுக்கிட்டோம்.


வெவ்வேற சந்துகளில் நுழைஞ்சு கொஞ்சம் அகலமான கடைத்தெருவில் புகுந்து ஒருவழியா ஹொட்டேலுக்கு வந்தோம். கடைத்தெருவில்கூட ஆனந்தமா பாடி ஆடிக்கிட்டுப்போகும் குஜராத்தி யாத்திரீகர்கள் கூட்டம் கண்ணில் பட்டது. ஒரே குழு என்று காமிக்க ஆரஞ்சு நிறத் ஸ்கார்ஃப் எல்லோரும் கழுத்துலே சுத்திக்கிட்டு இருந்தாங்க.
நாம் தங்கி இருந்த ஹொட்டேலில் இருக்கும் ரெஸ்ட்டாரண்டு பரவாயில்லை. குறைஞ்சபட்சம் சுத்தமாக இருக்கே என்ற மனநிறைவுதான்.

நாமும் கொஞ்ச நேரம் விஷ்ராம் எடுத்துக்கிட்டு ஒரு மூணரைக் கிளம்பலாம்.

தொடரும்.................................:-)

PIN குறிப்பு : அழுக்குப் படம் போட்டதுக்கு மன்னிக்கணும். தினமும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்யும் புண்ணிய க்ஷேத்ரம் இருக்கும் ஊர். பயணிகளால் நல்ல வருமானம் இருக்கும் ஊர். அந்த மாநில அரசு, மக்களின் நலத்தை முன்னிட்டு ஊரை, சாலைகளை எல்லாம் மேம்படுத்தி இருக்கலாமே என்ற ஆதங்கம்தான்.42 comments:

said...

ஸெல்ஃப் அப்பாயிண்டட் கைடு :))
அதெல்லாம் விடுவாங்களா?

said...

அழுக்குப் படம் போட்டதுக்கு மன்னிக்கணும். தினமும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்யும் புண்ணிய க்ஷேத்ரம் இருக்கும் ஊர். பயணிகளால் நல்ல வருமானம் இருக்கும் ஊர். அந்த மாநில அரசு, மக்களின் நலத்தை முன்னிட்டு ஊரை, சாலைகளை எல்லாம் மேம்படுத்தி இருக்கலாமே என்ற ஆதங்கம்தான்.


..... நியாயமான ஆதங்கம்தான்.

said...

தண்ணியைப்பழிக்கப்படாதுன்னு சொல்லுவாங்க.. இருந்தாலும் ஒரு புண்ணிய நதி இப்படி பாழடைஞ்சு கிடக்கிறதைப்பார்த்தா அய்யோன்னு இருக்கு :-((

said...

அழுக்குப் படம் போட்டதுக்கு மன்னிக்கணும்//

நம்ம ஊர்ல எங்கதான் அழுக்கு இல்ல? புண்ணிய ஷேத்திரம்கறதெல்லாம் அங்க வர்ற வெளியூர் பக்தர்களுக்குத்தான். உள்ளூர்வாசிகளுக்கு இல்லை. அது எந்த மத ஷேத்திரம்னாலும் இதே நிலைதான்.

said...

படங்களைப் பார்த்தால் மனசுக்கு மிகவும் கஷ்டமாத்தான் இருக்கு. தாங்கள் பதிந்த படங்களிலேயே அழுக்கான படங்கள் இவையாகத்தான் இருக்கும். என்ன செய்வது நாட்டில் பல ஆன்மீகத்தலங்கள் எவ்வளவு வருமானம் வந்தாலும் சுத்தத்தில் குறையாகவே உள்ளன.

said...

சாலைகளை எல்லாம் மேம்படுத்தி இருக்கலாமே என்ற ஆதங்கம்தான்.
:)

mm: What to do:

said...

ஹிஹிஹி, இ.வி.க்கு நன்னிங்கோ! அப்புறம் கோகுலத்திலும் விருந்தாவனத்திலேயும் மாவா, ரபடி, லஸ்ஸி சாப்பிட்டீங்களா??(நமக்கு சப்பாட்டிலே தான் கண் எப்போவும்:D)நெய் ஒழுகும் திரட்டுப்பால், சோஓஓஓஓஓஓஓஓ ச்வீஈஈஈஈஈட், கோவர்தன் மலையும் கட்டாயம் பாருங்க. தீபாவளி சமயம் கோவர்தன் மலைக்கு விழா எடுப்பாங்க. அது பத்தியும் கேட்டுத் தெரிஞ்சுட்டு எழுதுங்க. வரேன், அப்புறமா!

said...

ஊர் அழுக்கோ அழுக்குத் தான். இதுக்குக் காசி வீசம் பரவாயில்லாம இருக்கும்! ஹரித்வார் கொஞ்சம் பரவாயில்லை ரேஞ்சு தான்! :(

said...

வாங்க கயலு.

'விடலை'ப்பா!!!

said...

வாங்க சித்ரா.

இதனால் மக்களுக்கு நோய் நொடி இல்லாம இருக்கணுமே......

said...

வாங்க அமைதிச்சாரல்.

தனக்குச் சிலையும் யானைச்சிலையும் வைக்கும் கவனத்தில் இதை மறந்துட்டாங்க போல இருக்கே அங்கத்து 'அம்மா'!!!

யானைக்கு வேணா..... இருந்துட்டுப்போகட்டும் என்ற பெரிய மனசு எனக்கு:-)

said...

வாங்க டி. பி. ஆர்.

எல்லா க்ஷேத்திரங்களுக்கும் பொதுவானாலும்...... கூட்டம் சேரச்சேர சுத்தமும் அளவு கூடவேணாமா?

said...

வாங்க பிரகாசம்.

குழந்தைகுட்டிகளோடு வரும் யாத்திரீகர்களை நினைச்சா மனசுக்கு பேஜாரா இருக்கு.

said...

வாங்க நரசிம்மரின் நாலாயிரம்.

நம்ம தமிழ்நாட்டுக் கோவில்களில் சுத்தம் கொஞ்சம் பரவாயில்லைன்னு தோணிப் போச்சுன்னா பாருங்க.

said...

வாங்க கீதா.

//(நமக்கு சப்பாட்டிலே தான் கண் எப்போவும்:D)//

எனக்கும்தான். அதான் கண்ணால் மட்டும் தின்னுடுவேன்:-)))

நம்ம மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடி இருக்கு போல. ஒன்னும் ஆகறதில்லை!!!!

என்னால் ரிஸ்க் எடுக்க முடியாது.

போன பதிவு கோவர்தனகிரி, அதுக்கு முன்னால் கோகுலம் எழுதியாச்சு.

உங்களைத்தான் வீட்டுப்பக்கம் காணோம்:(

said...

சந்து சந்தா கூட்டிட்டு போறிங்க..

said...

அழுக்கும் குப்பையும் பார்த்தா கவலையா இருக்கு. எனக்கும் பொது இடங்களுக்கு போனா இப்படி மக்கள் பொருப்பிலாமா குப்பையை அனாவசியமா எதோ அது பிறப்புரிமை மாதிரி போடுவதை பார்க்கும் போது கொவலையா இருக்கும்.

அரசு சுத்தம் செய்ய வேண்டும். மக்கள் அதை மதித்து திரும்பத் திரும்ப குப்பை ஆக்காமல் இருக்க வேண்டும்.

நான் போன வாரம் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் போய்ட்டு வந்து ஒரு குப்பை கதைய தான் எழுதி வைச்சு இருக்கேன்

said...

இந்த இடுகை எனக்கென்றே போட்ட மாதிரி இருக்கு. எப்போதும் நல்ல படங்களை நேர்மறை எண்ணங்களை விதைக்கும் நீங்கள் இந்த முறை தான் உருப்படியான படங்களையும் சேர்த்து போட்டு இருக்குகீங்க. அழுக்கு அசிங்கம் என்று ஒதுங்கி போய்விட முடியுமா? அதுவும் வந்தால் அழகு. சாலையில் போய்க்கொண்டுருக்கும் போது டிப்டாப்டாக உடை உடுத்தி பத்து லட்சம் காரில் முன்னால் போய்க்கொண்டுருப்பவர் ஓடிக் கொண்டுருக்கும் அவருடைய காரின் ஜன்னல் வழியே பின்னால் யார் வருகின்றார்கள் என்பதை கணக்கில் கொள்ளாமல் பான்பராக் எச்சிலை துப்பி நம் மேல் அபிஷேகம் செய்யும் சுகத்தை அல்லது நாகரித இந்தியனைப் போல. விசயத்திற்கு வருகின்றேன்.

காசி என்ற நகரை புனிதம் என்று ஒற்றைச் சொல்லில் முடித்து விடுகிறார்கள். நம்முடைய முன்னாள் தேர்தல் ராஜா டிஎன் சேஷன் காசி மாநகரில் ஏதோவொரு உயர்பதிவில் தொடக்கத்தில் இருந்தார். அவர் முழுமூச்சாக பிணங்களை எறிக்கும் ஒப்பந்த முறைகேடுகளை தவிர்க்கப் பார்த்தார். ஏராளமான நலத்திட்டங்களை ஊழலை தனிநபர் பெற்றுக்கொண்டுருக்கும் ஆதாயங்களை ஒடுக்கப் பார்த்தார். பிணங்களை எறிப்பதில் புழங்கும் கோடிகளும் அதில் சம்மந்தப்பட்ட கேடிகள் அத்தனை பேர்களும் நம் பார்வையில் சாமியார்கள். இன்னும் பல விசயங்களை அவர் பேட்டியில் சொல்லியிருந்தார்.

எதிர்மறை நேர்மறை நியாயங்களை புரியவைக்கும் போது செல்பவர்கள் சரியான முறையில் சில விசயங்களை உணர்ந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

காரணம் இப்போது ஆன்மீகம் தான் வளம் கொழிக்கும் தொழில். அது சேவையல்ல.

பெரிதா எழுதிவிட்டேனோ?

said...

உண்மையில் ட்ரைவருக்கு ஒரு ஸ்பெசல் ஒ போடனும் ;)

said...

//அழுக்குப் படம் போட்டதுக்கு மன்னிக்கணும்//

அழுக்குன்னு நினைச்சா அழுக்குதான்.
இத்தனை அழுக்குக்கும் மத்தியிலே ஒரு ஈர்ப்பு இருக்கிறதே!
அது நம்மை இறுக்கமா பிடித்துக்கொண்டு, அந்த இடத்திற்கு நம்மை இழுக்கிறதே!
அந்த இழுப்புதான் ஆனந்தமோ !!

சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com

said...

இதுவா மதுரா...என்று ஆதங்கமா இருக்கு. ஏன் இப்படி இருக்கோம் நாம்.

நல்ல வேளை, கலியுகம்னு கிளம்பிட்டார் கிருஷ்ணன். வந்து பார்த்தால் மீண்டும் பிறக்க மாட்டார் இங்கே.
இல்ல, அவர் வந்தால் மீண்டும் சுத்தமாயிடுமோ:(

said...

[ma]ஊர் அழுக்காக இருந்தாலும் புண்ணிய தலம் தானே![/ma]

said...

போட்டோக்கள் பிரமாதம்... யுனீக்கான இடங்களை எல்லாம் தேடிப்பிடிச்சு பயணக்கட்டுரை எழுதுறீங்க. விவரங்களை ரசிக்க முடியுது. இத்தனை குறுகலான தெருக்கள், நெரிசலிலும் யூனிபார்ம் போட்டு நடக்கும் பிள்ளைகளின் கமிட்மென்ட்டை என்ன சொல்லிப் பாராட்ட? 'பாவிகள் கடப்பதால் புண்ணிய நதிகள் எல்லாமே சாக்கடை தான்'னு இன்னொரு பதிவுல படிச்சேன்.

said...

அருமையான காய்ச்சல் ஜோதிஜி! ஆன்மீகம் என்றைக்குமே வளம் கொழிக்கும் தொழிலாகத் தான் இருந்திருக்கிறது - நாம் தான் சேவை என்று தொடர்ந்து ஏமாறுகிறோம் (என் கருத்து)
>>>ஆன்மீகம் தான் வளம் கொழிக்கும் தொழில். அது சேவையல்ல

said...

"இது எங்க இடம். அப்படித்தான் மேய்வோம்ன்னு.." என ஆரம்பித்து அழகான உலகுக்குள் அழைத்துச் சென்றீர்கள்

said...

பப்ளிஷ் பண்ணணும்னு அவசியமில்லை..

டீச்சர் கொஞ்ச நாளா சொல்லணும்னு நினைச்சுக்கிட்டே இருக்கேன் ஆனா படிச்சுட்டு லாகின் பண்ண சோம்பி போயிடறேன்.. ஒண்ணுமில்ல சின்ன விஷயம் தான், ஆனா திருப்பி திருப்பி வரும்போதேல்லாம் தோணிக்கிட்டே இருக்கு.

எழுத எழுத ஸ்டைல் மெருகேறணும்னு இருக்கறது சரி தான், ஆனா எனக்கு என்னவோ நீங்க முன்னாடி எழுதின மாதிரி இப்போலாம் இல்லைன்னு வருத்தமா இருக்கு. :( உங்க பழைய பதிவுகளுக்கும் (அதாவது மரத்தடி மற்றும் 2-2.5 வருஷம் முன்னாடி வரைக்கும்) புது பதிவுகளுக்கும் நடுவில நான் ரொம்ப வித்தியாசம் உணர்றேன். ஒரு அந்நியோன்யமான வாத்சல்யம் நிறைந்த பக்கத்து வீட்டு ஆண்ட்டி திடீர்னு ப்ரொஃபஷனல் எழுத்தாளார் ஆகிட்டா மாதிரி.. முன்னாடி வந்த பதிவுல எல்லாம் நானும் உங்க கூட அண்ணனும் அக்காவும் உப்புமா கிண்டறதையும், ஸ்கூல்ல இருந்து அம்மா கூட‌ வெயில்ல நின்னு நின்னு ஒரு ஒரு கடையா பத்துட்டு வர்ற மாதிரியும் இருக்கும், இப்போலாம் ஏதோ அடுத்த வீட்டு படம் பாக்கற மாதிரி தோணுது. குறிப்பிட்டு சொல்லாம இது என்ன ஃபீட்பேக்னு நீங்க கேப்பீங்களோ என்னவோன்னு ரொம்ப யோசிச்ச‌துல தோணினது- சொற்களில் விளையாட்டு ‍ தலைப்பு, பதிவின் நடுவிலே ப்ரயத்தன பட்டு உபயோகிக்கற சில வார்த்தை விளையாட்டு ஜோக்ஸ்.. சிலது நல்லாருக்கு பலது அந்நிய படுத்துது. ஏதோ விஷயம் சொல்ல ஆரம்பித்து விட்டு அப்புறம் அதில பாதியை சொல்ல விருப்பமில்லாமல் போய் அதை மொட்டை வாக்கியமா முடிச்சுடறது.. உங்க குடும்ப விஷயம் உங்க ப்லாக் நீங்க விருப்பம் இருக்கும் போது சொல்வீங்க சொல்லாம இருப்பீங்க, ஆனா அது என்னவொ என்னை எட்டி வைக்குது. இதுக்கு மேலே சரியா சொல்ல தெரியல.


நீங்க எவ்ளோ சிரத்தையா பயணம் போய் விபரம் சேகரிக்கறீங்க அதெல்லாம் சந்தோஷமா இருக்குன்னாலும் பழைய டீச்சர் வேணும்னு ஃபீலிங்கா இருக்கு!
தெரிந்தே கொண்டு வந்த மாற்றமோ இல்லை தேவை இல்லாத பினாத்தலாகவோ தோன்றினாலோ, நான் உங்க பொண்ணை விட சின்னவ தானே மன்னிச்சுருங்க. எது எப்படியாயினும் உங்க பதிவு படிக்கறதுலயோ, திருப்பி திருப்பி படிக்கறதுலயோ மாற்றம் ஒண்ணும் இருக்காது! (அப்படிலாம் நிம்மதியா விட்டுடுவேனா என்ன?)

said...

பப்ளிஷ் பண்ணணும்னு அவசியமில்லை..

டீச்சர் கொஞ்ச நாளா சொல்லணும்னு நினைச்சுக்கிட்டே இருக்கேன் ஆனா படிச்சுட்டு லாகின் பண்ண சோம்பி போயிடறேன்.. ஒண்ணுமில்ல சின்ன விஷயம் தான், ஆனா திருப்பி திருப்பி வரும்போதேல்லாம் தோணிக்கிட்டே இருக்கு. எழுத எழுத ஸ்டைல் மெருகேறணும்னு இருக்கறது சரி தான், ஆனா எனக்கு என்னவோ நீங்க முன்னாடி எழுதின மாதிரி இப்போலாம் இல்லைன்னு வருத்தமா இருக்கு. :( உங்க பழைய பதிவுகளுக்கும் (அதாவது மரத்தடி மற்றும் 2 2.5 வருஷம் முன்னாடி வரைக்கும்) புது பதிவுகளுக்கும் நடுவில நான் ரொம்ப வித்தியாசம் உணர்றேன். ஒரு அந்நியோன்யமான வாத்சல்யம் நிறைந்த பக்கத்து வீட்டு ஆண்ட்டி திடீர்னு ப்ரொஃபஷனல் எழுத்தாளார் ஆகிட்டா மாதிரி.. முன்னாடி வந்த பதிவுல எல்லாம் நானும் உங்க கூட அண்ணனும் அக்காவும் உப்புமா கிண்டறதையும், ஸ்கூல்ல இருந்து அம்மா கூட‌ வெயில்ல நின்னு நின்னு ஒரு ஒரு கடையா பத்துட்டு வர்ற மாதிரியும் இருக்கும், இப்போலாம் ஏதோ அடுத்த வீட்டு படம் பாக்கற மாதிரி தோணுது.

said...

ஆஹா என்னோட பினாத்தல் தாங்காம ப்லாக்கரே அலறிடுச்சு, பிச்சு பிச்சு போட்டுருக்கேன், ரெண்டு மூணு தடவை வந்தா கண்டுக்காதீங்க!

said...

@போர்க்கொடி,
நான் உங்க பொண்ணை விட சின்னவ தானே மன்னிச்சுருங்க. //

இது என்ன அக்கிரமம்னு கேக்கிறேன். எத்தனை வருஷத்துக்குச் சின்னவனு சொல்லிட்டே திரியறதாம்?? கேட்பார் இல்லை?? :P:P:P:P சும்மா இருக்க மாட்டோமுல்ல????

said...

haha geetha paati!!!!!! adhu epdi correcta mooku verthududhu???

ethanai kaalam analum paati paati thaan, pethi pethi thaan, teacher teacher thaan. :-)

(teacher, ipo romba sandhoshama ungluku?? avvvvv!)

said...

வாங்க குமார்.

இருக்கறதுலேதானே கூட்டிப்போக முடியும்!!!!!!

வேற வழி???????

சரி சரி. மூக்கைப் பொத்திக்கிட்டுக் கூடவே வாங்க:-))))))

said...

வாங்க விருட்சம்.

//.....பிறப்புரிமை....//

அதேதான். பேசாம ஒரு நாள் தேசிய விடுமுறை அறிவிச்சுட்டு (அன்னிக்கு டிவி ரேடியோ எதுவுமே இருக்கக்கூடாது!)

நாட்டில் உள்ள அனைவரும்

வீட்டுக்கு வெளியே வந்து நவ்வாலு தெருவையும் அதை முடிச்சபிறகு மற்ற பொது இடங்களையும் சுத்தம் செஞ்சா நாடே சுத்தம் ஆகிறாது?

said...

வாங்க ஜோதிஜி.

//காரணம் இப்போது ஆன்மீகம் தான் வளம் கொழிக்கும் தொழில். அது சேவையல்ல.//


சத்தியமான உண்மை.

நானும் ஒரு ஆஸ்ரமம் வச்சுக்கும் ஐடியாவிலே இருக்கேன்:-) சாரிட்டின்னா வரி கூட கட்டவேணாமாமே!!!!


ஆமாம்.....இந்த ஆன்மீகம் சொல்லும் சாமியார்கள், ஏன் சுத்தத்தைப்பற்றி அவுங்க அடியார்களுக்குச் சொல்ல மாட்டேங்கிறாங்க?

அட்லீஸ்ட் அவுங்க சொன்னா அடிபொடிகள் கேக்காதா?

said...

வாங்க கோபி.

ஒரு ஓ என்ன பல ஓ போட்டாச்சு. இத்தனைக்கும் சின்னப்பையர். வயசு 22 தான்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

ஈர்ப்பு இல்லைங்கலை. அதனால்தான் இந்தப் புலம்பல்:(

said...

வாங்க வல்லி..

கிருஷ்ணன் வரும்போது நல்ல குண்டாந்தடி எடுத்துவந்து குப்பை போடும் மாக்களை பெண்டு நிமிர்த்துனா எல்லாம் சரி ஆகிரும்.

உலகத்துலேயே குப்பை அதிகமா இருக்கும் நாடுகளில் நியூஸிக்குத்தான் முதல் இடம். மக்கள் தொகையே ரொம்பக் கொஞ்சம்.

ஆனால் கூட தெருக்களில் குப்பை, அசிங்கம் எல்லாம் பார்க்கவே முடியாது.

அவுங்களால் முடியுதுன்னா நம்மால் ஏன் முடியலை என்பதுதான் கேள்வி.

said...

வாங்க சந்திரவம்சம்.

புண்ணிய தலம்?

ஆமாம். அதனாலேதான் தலைபாடா அடிச்சுக்கறேன்.

லட்சக்கணக்கான மக்கள் வரும் இடம். நோய்நொடிக்குக் காரணமா இருக்கலாமா?

வெளிநாட்டுத் தலைவர்கள் வந்தால் மட்டும் நகரங்களில் (அவர்களைக்கூட்டிக்கொண்டு போகும் பாதைகள் மட்டும்) பளிச்ன்னு எப்படி சுத்தமாகுது?

said...

வாங்க அப்பாதுரை.

அழுக்கோ புழுக்கோ தினசரி வாழ்க்கை அதுபாட்டுக்கு நடந்துக்கிட்டுத்தானே இருக்கு.

சாக்கடைத் தண்ணி ஓடும் தெருக்களில் பச்சைக் காய்கறிகள் விற்பதும் மக்கள் நின்னு வாங்குறதையும் பார்த்தாலே குலை நடுங்குது.

ஜோதிஜிக்கு சொன்ன பதிலுக்கு நன்றி :-)

said...

வாங்க டொக்டர் ஐயா.

அழகும் அசிங்கமும் ஒன்னாக் கலக்குதேன்னுதான் என் வருத்தம்:(

said...

வாங்க பொற்கொடி.

அதெல்லாம் மன்னிச்சு விட்டாச்சு:-))))

உங்க ஆதங்கம் புரியுயுதுதான்......

ஒன்னாம் வகுப்பில் எழுதுன மாதிரியே கலாசாலையில் இருக்க முடியுமா?

உப்புமா கிண்டுன சம்பவமும் சுற்றுலாவும் ஒன்னா எப்படிப்பா இருக்கமுடியும்?
எது எப்படியானாலும் திரும்பத்திரும்ப வருவேன்னு சொன்னீங்க பாருங்க...... அங்கெ நிக்கிறீங்க நீங்க:-)))))

டாங்கீஸ்.

said...

புண்ணிய நதிகள்,தலங்கள்....:(

said...

வாங்க மாதேவி..


ஹூம்..... எனக்கும் இப்படித்தான் இருக்கு.