Thursday, December 23, 2010

உலக அதிசயத்தில் ஒன்னு!

முதல்முறை தாஜைப் பார்த்தப்ப இருந்த பரவசம் இப்போ சுத்தமா இல்லை. போதாக்குறைக்கு பனிமூட்டத்தில் கலங்கலாத் தெரியுது. கூட்டமான கூட்டம். நாங்களும் ஊர்ந்து போய் செருப்பை விட்டுட்டு படிகளில் ஏறினோம்.
முகப்புக் கட்டிடம் மட்டும் அச்சுஅசலா அக்பர்சமாதி முகப்பு போலவே இருக்கு. எல்லாம் ஒரு ஸ்டேண்டர்ட் டிஸைனா இருக்கும்போல! முகப்பையொட்டி ரெண்டுபக்கமும் நீளமான வெராந்தாக்களுடன் எக்கச்சக்க அறைகள்.
தாஜ், அன்றும் இன்றும் என்று ஒரு பதிவே போடலாம் போல. வித்தியாசங்கள் நிறைய இருக்கு. எதுன்னு முதலில் சட்னு புரிபடலை.
முகப்பில் லாக்கர்ஸ் வச்சு நம்ம கேமெரா, கைப்பைகள் எல்லாம் வாங்கி வச்சுக்குவாங்க அன்று. இன்றோ..... அதெல்லாம் ஒன்னும் இல்லை.
தாஜ் முன்னைவிட இன்னும் சாம்பல் பூத்த நிறத்தில் நிக்குது. படியேறும் இடத்தில்....... இப்போ படிகளுக்கு மரச்சட்டம் அடிச்சு தரைவிரிப்பு போட்டு வச்சுருக்காங்க. முந்தி அங்கே வரிசையாய் உக்கார்ந்திருந்த ஆட்கள் துணியால் ஆன காலணியைப் போட்டுவிட, சூடு தாங்காமல் ஓடுனோம். கோடையின் உச்சம் அப்போ. இப்போ குளிர்காலம் துணிக்காலணி ஒன்னும் இல்லை.
முகப்பில் இருந்து தாஜ்
இது தாஜ்மஹல் மேடையில் இருந்து முகப்பு நோக்கி எடுத்த படம்.

மேடையேறினதும் நேரா சமாதிக்குப் போகமுடியாது. இப்பெல்லாம். வரிசை இடமாப் போகுது. எங்கே பார்த்தாலும் ஏகே 47 தாங்கிய ராணுவம். இடம்சுத்தி வந்து சமாதி ஹாலில் நுழைஞ்சோம். ஒரே இருட்டு. கூட்டம் நெரியுது. கொஞ்சம்நஞ்சம் வாசல்வழியா வரும் வெளிச்சம்கூட கூட்டம் மறைச்சுருது. பளிங்கு அலங்காரத் தடுப்பினுள்ளே பளிங்கு மேடையில் ரெண்டு சமாதிகள்.
வரிசையில் நின்னு உள்ளே
தடுப்புக்குள் சமாதிகள்

அன்று: மேலே நாம் பார்ப்பது போலி சமாதி. கீழே நிலவறை போல படிகள் இறங்குது. அதன் வழியா கைடு கூட்டிக்கிட்டுப் போனார். மேலே இருப்பதுபோலவே சமாதிகள். ஆனால் அழகான இன்லே வேலைப்பாடுகள். நவரத்தினக் கற்கள் பதிச்ச பூக்கள் டிஸைனுடன் நிலவறையில் ஜொலிக்குது. படிகள் கடந்து நிலவறைக்குப்போகும் வழி உயரம் அதிகம் இல்லாதது. அதனால் தலையைக் குனிஞ்சு உள்ளே போகணும். ஆட்டோமேடிக்கா வணக்கம் சொல்லிருவோம். சமாதியில் மின்சார விளக்கெல்லாம் கிடையாது. ஒரு ஹரிகேன் விளக்கு சமாதிமேல் உக்காந்துருக்கும் லேசான மங்கிய வெளிச்சம் காமிச்சுக்கிட்டு.

சுட்டது. கூகுளுக்கு நன்றி.

இன்று: மேலே பார்ப்பதோடு சரி. வேறெங்கும் போக வழியே இல்லை..

அன்று பார்க்கும்போது இருந்த மனநிலை..... உலக அதிசயத்தில் நிக்கறோம்.

இன்று......தாஜைபற்றிய ஏராள சேதிகள் அதுவும் இது ஒரு இந்துக் கோவிலாக இருந்தது என்று வலையில் படிச்சது முதல், உண்மையா இருக்குமோன்னு கண்ணை முழிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கேன் எங்கியாவது துப்பு கிட்டுமுன்னு. (அப்படியே அந்த சேதி உண்மைன்னாலும் என் ஊனக்கண்ணுக்குத் தெரியும்படியாவா வச்சுருப்பாங்க? நிலவறையை மூடிவச்சது ஒருவேளை இதுக்குத்தானோ? குரங்கு மனம் என்னெல்லாம் ஆட்டம்போடுது பாருங்க. ச்சும்மாக்கிட மனமே)
ரெண்டு பக்கங்களிலும் மசூதிகள் இருக்கு.தாஜுக்கு ரெண்டு பக்கமும் சிகப்பு மணல் கற்கள் கட்டிடம் பக்கத்துக்கொன்னா நிக்குது. வெங்காயக்கூரை பழுதுபார்க்கும் பணி நடக்குது. தாஜுக்குப் பின்புறம் யமுனையின் ஓட்டம். மக்களின் கூட்டம்.
பின்பக்கம் யமுனா

தாஜுக்கு முன் இருக்கும் நீரோடையில் தாஜின் பிரதிபலிப்பு தெரியலை. கலங்கல். தாஜுக்கு நேரெதிரா இருக்கும் பளிங்கு மேடையில் நாலு புறமும் பளிங்கு பெஞ்ச் ஒன்னு போட்டுருக்கும்.அதுதான் ஃபோட்டோ பாய்ண்ட். பின்புலத்தில் தாஜ் அட்டகாசமா ஜொலிக்கும். (அன்று, படங்கள் எடுத்தோம்) இன்று...ஒரே ஈ மொய்ச்சதுபோல் மக்கள் கூட்டம். குளிர் காலம் என்பதால் கூட்டமே இல்லைன்னு ஒருத்தர் சொல்லிக்கிட்டு இருந்தார்.

வரிசையில் நமக்கு முன்னால் ஒரு சிங்களக்குடும்பம். ஏழெட்டுபேர் சிங்களத்தில் பேசிக்கிட்டு இருந்தாங்க.

தோட்டம் பராமரிப்பு எல்லாம் சுத்தமாவே இருக்கு.
என்ன தவம் செய்தனை.............. எல்லாநேரமும் அதிசயப் பார்வை!!!
சட்னு உக்காருங்க. மக்கள்ஸ் குறுக்கே வருமுன் க்ளிக்கணும்.


தாஜைப் பற்றி எல்லோருக்கும் தெரிஞ்சுருக்கும் என்றாலும் ஒரு சிறு குறிப்பு வரைய வேணாமா?

கட்டியவர் ஷாஜஹான். அக்பரின் பேரன். ஜஹாங்கீரின் மகன். 1592 இல் பிறந்து தன் முப்பத்தி அஞ்சாவது வயசில் 1627 பட்டத்துக்கு வந்தார். முப்பது வருசம், 1658 வரை அரசாண்டார். இதுக்கிடையில் தன் இளவயதில்(15 வயசுதான்) பெர்ஸியா நாட்டுப் பிரபுவின் 14 வயசுப் பேத்தி அஞ்சுமன் பானு பேகத்தைக் கண்டதும் காதல் ஏற்பட்டுக் கல்யாணம் கட்டிகிட்டார். அஃபீஸியலா இவருக்கு(ம்) மூணு மனைவிகள். அதுலே ஸ்பெஷல் இவுங்க. இவுங்க அறிவையையும் திறமையையும் பாராட்டும்விதமா இவுங்களுக்கு மும்தாஜ் மஹல்ன்னு பெயரைச்சூட்டி இருக்கார். (அரண்மனை ரத்தினம்!)

ராஜா போகுமிடங்களில் எல்லாம் ராணியைக் கையோடு கூட்டிக்கிட்டுப் போவாராம். பிரிஞ்சு ஒரு கணமும் இருக்கமுடியாத அளவு அன்பு. ஒரு போர் விஷயமா புர்ஹன்பூர் என்ற இடத்துலே கேம்ப் போட்டுருந்த சமயம் சோகம் நடந்துபோச்சு.

மும்தாஜுக்கு 38 வது வயசில் மரணம். காரணம்? இடைவிடாத பிள்ளைப்பேறு. கல்யாணம் ஆன 24 வருசத்துலே 14 பிரசவம். இந்தக் கடைசிப் பிரசவத்துலே போய்ச் சேர்ந்துட்டாங்க. அதே ஊரில் ஒரு தோட்டத்துலே சவ அடக்கம் நடந்துச்சு. ராஜா ஒரு வருசம் தனிமையில் துக்கம் அனுஷ்டிச்சார். மனைவி இறந்த அதிர்ச்சியால் தலைமுடியெல்லாம் 'பொளேர்'னு வெளுத்துப் போச்சாம் அப்போ. துக்க காலத்துலே யோசிச்சுத் திட்டம் போட்டதுதான் தாஜ்மஹல் கட்டிடம். ஆறு மாசத்துக்கு முன்னே இறந்த மனைவியின் சமாதியைத் தோண்டி சவத்தை ஒரு தங்கப்பெட்டியில் வச்சு ஆக்ராவுக்குக் கொண்டுவந்து யமுனை நதிக்கரையில் ஒரு சின்னக்கட்டிடத்தில் தாற்காலிகமாப் புதைச்சு வச்சுட்டு தாஜ்மஹலைக் கட்டத் தொடங்கியாச்சு.

இருபதாயிரம் பேர் வேலை செஞ்சும்கூட 22 வருசமாச்சுக் கட்டி முடிக்க
1653லே கட்டிடம், வெளிப்புறத்தோட்டம், தோரணவாசல் இப்படி முழுசும் பூர்த்தியாச்சு. முக்கியமான சமாதிக் கட்டிடம் 1648 லேயே முடிச்சுட்டாங்க. அதுக்குள்ளே தங்கப்பெட்டியைப் புதைச்சு சமாதி கட்டுன கையோடு தனக்கும் மனைவியின் அருகிலேயே இன்னொரு சமாதி கட்டி வச்சுக்கிட்டார். எப்பவும் மனைவியின் அருகிலேயே இருக்கணும்.

ஷாஜஹானுக்குத் தன் தாத்தா அக்பரைப் போலவே கட்டிடக்கலையில் ஆர்வம் அதிகம். தில்லியில் இருக்கும் செங்கோட்டை, முத்து மசூதி, ஜமா மசூதி, செங்கோட்டைக்குள்ளே இருக்கும் மாளிகைகள் எல்லாம் இவர் கைவண்ணம்தான். அந்தப் பகுதிக்கே ஷாஜஹானாபாத் என்ற பெயர்தான். அதுதான் இப்போ பழைய தில்லின்னு ஆகி இருக்கு. ப்ரிட்டிஷ்காரன் கடத்திக்கிட்டுப்போன தங்கமயிலாசனமும் ஷாஜஹானின் ஐடியாக்களில் ஒன்னு.
1658 வது வருசம் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனதும் அவருடைய மகன் ஔரங்கஸேப், தகப்பனை ஆக்ரா கோட்டையில் சிறை வச்சுட்டு, தானே முடிசூட்டிக்கிட்டார். சிறையில் எட்டு வருசம். அவரை அடைச்சு வச்ச அறையில் இருந்து பார்த்தால் தூரத்துலே தாஜ்மஹல் தெரியுது.(கோபால் எடுத்த வீடியோவில் பார்த்தேன்)
1666 வது வருசம் ஷாஜஹான் (74 வயசு) இறந்துட்டார். அவருடைய மூத்த மகள் தகப்பனின் சவ ஊர்வலத்தை பிரமாண்டமா நடத்துமுன்னு திட்டம் போட்டாங்க. ஆனால் அக்காவின் திட்டத்துக்கு வேட்டு வச்சார் தம்பி ஔரங்கஸேப். இஸ்லாமியக் கலாச்சாரத்தில் ஆடம்பரத்துக்கு இடமில்லைன்னு சடலத்தைக் குளிப்பாட்டி, சந்தனப்பெட்டியில் வச்சு ஒரு படகில் யமுனை நதியைக் கடந்து ஏற்கெனவே நிர்மாணிச்சு இருந்த சமாதியில் புதைச்சுட்டாங்க.

எனக்கு யமுனையின் மறுகரைக்குப்போய் அங்கிருந்து தாஜ் பார்க்க ஆசை. அதுக்காகவே கோபால் ஒரு ஆக்ரா வரைபடம் ஒன்னு வாங்கி வச்சுருந்தார். ரொம்ப சுத்து வழியில் போகணும் என்பதால் அப்புறம் பார்த்துக்கலாம். இப்ப நேரா ஹொட்டேலுக்குப் போய் செக்கின் செஞ்சுக்கலாமுன்னு கிளம்பிட்டோம். கார் பார்க் திரும்பிவர இந்த முறை குதிரை வண்டி.
ஹொட்டேலைத் தேடிக்கிட்டுப்போனால்...சாலையில் யானையார் நமக்கு முன்னே போறார். ஹொட்டேலைக் கண்டுபிடிச்சுட்டு செக்கின் செஞ்சுட்டு அதுக்கு எதிர்வரிசையில் இருக்கும் மாலுக்குள் உணவகம் இருக்கான்னு தேடணும். சாலைக்கு வந்தால் நம்ம யானையார் நின்னுக்கிட்டு இருக்கார். கரும்புப்பொதிகளை ஏத்தறாங்க. நீ படம் எடுக்கலையேன்னுதான் உனக்காகக் காத்துருக்கேன்றார்!

தொடரும்...............:-)35 comments:

said...

மும்தாஜ் மஹல் கண்டுகொண்டேன் ....கண்டுகொண்டேன்....
காதல்மாளிகை.

சாம்பல் பூத்திடுச்சா :(

said...

நான் சில வருடங்களுக்கு முன்பு வந்தேன். அருமையான படங்களுடன் அழகான, ஆழமான கட்டுரை.

said...

arumayana padangal.......

vivaramana katturai......

said...

மும்தாஜ் மகல் கண்டேன். கடந்த இருபது வருட தில்லி வாழ்க்கையில் சுமாராக 20-25 முறையாவ்து ஆக்ரா சென்று இருப்பேன் [ஒரு முறை மட்டுமே எனக்காக, மற்ற முறைகள் எல்லாமே மற்றவர்களுக்காக!]. ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் தாஜ் பழுப்பு அதிகமாகவே ஆகி விட்டிருந்தது. முந்தைக்கும் இப்போதும் நிறைய மாற்றங்கள்.

நல்ல கட்டுரை படித்த திருப்தி. பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

said...

உலக அதிசயம், உங்கள் கைவண்ணத்தில் மிளிர்கிறது.

said...

ரொம்ப நிறைவா இருக்குது.. படங்களும் பதிவும்.

'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ'ன்னுதான் தோணுது... சாம்பல்பூத்த தாஜ்மஹலை பார்க்கும்போது.

said...

அன்றும் இன்றும் நல்லா இருக்கு..உள்ள இறங்கி எல்லாம் நான் பார்த்தது இல்லை..

said...

//குரங்கு மனம் என்னெல்லாம் ஆட்டம்போடுது பாருங்க//

உண்மைதான். அதிகம் அறிவில்லாத பழைய காலங்களிலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது இப்போவெல்லாம். :-(( Ignorance is bliss!!

தாஜ் மஹல் காண வேண்டுமென்பது கனவாகியிருந்தது ஒரு காலத்தில். படங்களிலும், பத்திரிகைகளிலும், இப்போ பதிவுகளிலும்கூட அதிகம் பார்க்க முடிவதால் அவ்வளவு ஆர்வமில்லை இப்ப!!

said...

நல்ல அருமையா விவரிச்சு எழுதியிருக்கீங்க.. படங்கள் அருமை.

said...

மும்தாஜ் பிரசவம் பற்றி இப்போது தான் முதன் முதலாக தெரிந்து கொள்கின்றேன்.

மகராசி......

ம்ம்மம் பல நினைவுக்ள்....

said...

நான் இதுவரை போனதே இல்லை:(

போகனும்.

said...

வாவ்.. ரொம்ப அழகா விவரிச்சிருக்கீங்க டீச்சர். நேரில் பார்த்ததுபோன்று...

said...

எப்போது படிச்சாலும் பார்த்தாலும் அதிசயம் அதிசயம் தான் டீச்சர் ;)

said...

தாஜ் மஹாலா! நான் இன்னும் நேரில் சென்று பார்த்ததில்லைங்க டீச்சர்! :)))

said...

வாங்க மாதேவி.

ஆமாங்க:( திரும்ப பாலீஷ் செய்ய முடியாதபடி வேலைப்பாடுகள் நிறைய இருப்பதால் ஒன்னும் செய்ய முடியலையோ என்னவோ!

said...

வாங்க சே.குமார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

ஒருமுறை பார்க்கத்தான் வேணும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தும் அதிசயம் இது.

said...

வாங்க வழிப்போக்கன் - யோகேஷ்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வணக்கம். முதல் வருகைக்கு என் நன்றிகள்.

தில்லிக் கருத்தரங்கத்தை அருமையா நடத்தி இருக்கீங்க!

தில்லி வாழ் தமிழர்களுக்கு
இனிய பாராட்டுகள்.

நம்ம 'சிறுமுயற்சி' மூலம் விவரங்களைத் தெரிந்துகொண்டேன்.

வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.

said...

வாங்க தமிழ் உதயம்.

முடிந்தவரை சொல்லணும் என்ற எண்ணம்தான்.

உங்கள் கருத்துக்கு என் நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

சாம்பல் பூத்தாலும்.....ச்சும்மா உக்காராம நம்ம நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் வருமானம் ஈட்டித் தருது பாருங்க!!!

said...

வாங்க கயலு.

உள்ளே போய்ப் பார்க்க விடுவதை நிறுத்திப் பலவருசங்கள் ஆகி இருக்கணும்.

தீவிரவாதம் தொடங்கியதால் நிறுத்தப்பட்ட ஏராளமானவைகளில் இதுவும் ஒன்னு:(

said...

வாங்க ஹுஸைனம்மா.

என்னதான் வாசித்தாலும் நேரில் காண்பதற்கு ஈடாகுமா?

சந்தர்ப்பம் கிடைச்சால் விட்டுடாதீங்க.

said...

வாங்க பாரத்...பாரதி.

வணக்கம். நலமா? முதல் வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜோதிஜி.

சரித்திரம் போரடிக்க வேண்டிய விஷயமில்லைன்னுதான் சொல்லணும்.

கொஞ்சம் மெனெக்கெட்டால்..... நிறைய சேதிகள் கிடைச்சுருது:-)

said...

வாங்க கோபி ராமமூர்த்தி.உள்நாட்டு விஷயமுன்னா 'அப்புறம் பார்த்துக்கலாம்'னு இருந்துடறோம் இல்லையா?

கட்டாயம் ஒரு முறை பார்க்க வேண்டியதுதான்.

பி.கு: உங்க '108' பயணங்களைக் கண்டு நான் இங்கே பெருமூச்சு விட்டுக்கிட்டே இருக்கேன்.

said...

வாங்க மின்மினி.

ஆர்ம்சேர் ட்ராவலர்ஸ்க்காக எழுதறேன்ப்பா:-)))))

said...

வாங்க கோபி.

அதிசயத்தை அதிசயமுன்னு சொல்லாம வேற எப்படிச் சொல்லணுமுன்னு கேட்பதே அதிசயமாத்தான் இருக்கு:-)

அவ்வ்வ்வ்வ்வ்

said...

வாங்க வருண்.

சந்தர்ப்பம் கிடைச்சால் விட்டுறாதீங்க.

எல்லாத்துக்கும் நேரமுன்னு ஒன்னு வரணும் இல்லை?

said...

ஐயையோ நான் டூபிளிகட் சமாதியைத்தான் படம் புடிச்சுகிட்டு வந்தேனா ...................

said...

உங்கள் பதிவு இன்னும் ஸ்பெஷலாக, அன்று இன்று என்று ஒப்பிட்டுடன் விவரித்திருக்கிறீர்கள்...

இன்று முழுக்க தாஜ்மஹால் ஸ்பெஷல்... :-)

said...

வாங்க ஜயதேவ்.

டூப்ளிகெட்டை மட்டும் காமிச்சால் அதைத்தானே படம் பிடிக்கணும், இல்லையா?

வன்முறைகளால் எல்லா இடங்களிலும் ஒரே கெடுபிடிதான்:(

said...

வாங்க சரவணகுமரன்.

தாஜ்மஹலே ஸ்பெஷல்தான். அது எழுப்பும் கேள்விகள் கணக்கில்லை!!!

said...

தாஜ்மஹால் பற்றிய ஒரு தகவல் படித்திருந்தேன் இதை கட்டிய கலைஞர்களின் பெருவிரல் வெட்டப்பட்டதாம். அதனாலேயோ என்னவோ இதன் கூரையின் ஒரு இடத்தில் சரிசெய்யமுடியாத ஒழுகல் இருக்கிறதாம்.

said...

நாங்கள் தாஜில் ஒருமணிநேரத்துக்கும் சற்று அதிகமாகவே இருந்தோம். யாரிடமும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. 2003-ல்

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நாங்க முதல்முறை போனது 1994 இல். அதுவும் ஜூன் மாசம். வெயிலில் பொரிஞ்சே போயிட்டோம்:(