Friday, December 17, 2010

நீ பாதி நான் பாதி கண்ணா....

நமக்குத்தான் இந்தத் தெருக்களில் நடக்க சோம்பலா இருக்கே தவிர பக்தி முத்தின பக்தர்கள் கூட்டம் குழுக்குழுவா தங்கள் 'குரு'ஜியுடன் புண்ணியத்தல யாத்திரை செஞ்சுக்கிட்டுதான் இருக்காங்க. பேண்ட் வாத்திய கோஷ்டியுடனும் போலீஸ் பாதுகாப்புடனும் வந்த ஒரு குழுவுக்கு வழிவிட்டு ரிக்ஷாவோடு ஒரு சந்தில் ஓரங்கட்டப்பட்டோம்.

குரு'ஜி' கழுத்தில் மாலையுடன் வெண்ணிற உடுப்பில் பக்தர்கள் புடைசூழ நடந்து போறார். நாம்தான் சோம்பேறியா இருக்கமோன்னு லேசா(!) வெட்கம் வந்த வேளையில் இதோ நாங்க இருக்கோமுன்னு குழுவினரில் ஒரு ஜோடி சைக்கிள் ரிக்ஷாவில் ஊர்வலத்தின் பின்னால் வர்றாங்க. நம்மைப்போல் முட்டிவலி கேஸாக இருக்கணும்:( இந்தப்பக்கங்களில் பேண்டு வாத்திய கோஷ்டிக்கு முன்னால் ஒரு வண்டி போகுது. அதுலே பெரிய ஸ்பீக்கர்கள் ஆம்ப்ளிஃபையர்ஸ் எல்லாம் வச்சு வாசிக்கும் ம்யூஸிக்கை அதிர வச்சுக்கிட்டுப் போறாங்க.

மாடுகள் கூட்டமா நிக்கும் தெருவில் ஒரு மாடிப்படியைக் காமிச்சு கோவில் அங்கே இருக்குன்னார் ராம். மாடி ஏறினோம். இருட்டான ஒரு சின்ன இடம். தர்ஷன் இப்போ இல்லை. ஒருமணி நேரம் ஆகும். மூடிட்டாங்கன்னு சொன்னாங்க. பரவாயில்லை வெளியே இருந்து பார்க்கலாமுன்னு , வலதுபக்கம் சுரங்கப்பாதை போல் இருந்த இன்னொரு படு இருட்டான வழியில் எதிர்ப்பக்கம் தெரியும் வெளிச்சத்தை நோக்கிப்போனால் அது ஒரு திறந்த வெளி முற்றத்தில் நம்மைக் கொண்டுவிடுது. கொஞ்சம் கூட்டமா மக்கள்ஸ் இருந்தாங்க. முற்றத்தில் ஒரு அழகான துளசி மாடம்! சந்நிதி திறந்துதான் இருக்கு.. கருப்புப் பளிங்கில் குழலூதும் மாயவன். அவனுக்கு அருகில் பூக்களால் அலங்காரம் செஞ்ச ஒரு க்ரீடம். ராதையின் க்ரீடமாம்.
Photobucket
ராதா வல்லப் மந்திர் துளசி

ராதா வல்லப் கோவில். கண்ணனைவிட ராதைக்கே முக்கியத்துவம் கொடுக்கும் ராதாவல்லப் சம்பிரதாயம் அனுஷ்டிக்கும் குழு, இதை நிர்வகிக்குது. பதினாறாம் நூற்றாண்டுலே கட்டுன மூணடுக்குக் கோவில் ரொம்ப அழகா இருந்தது ( இவுங்க வலைப்பக்கத்தில் இருந்து எடுத்த படம் இது.)
ஹிட் ஹரிவம்ச கோஸ்வாமி கட்டிய கோவிலாம். இவர் கண்ணன்குழலின் மறு அவதாரமாம். மதுராவில் இருந்து ஒரு பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கிராமத்தில் பிறந்துருக்கார். 16 வயசுலே கல்யாணம். 32 வயசில் சந்நியாசம். இடையில் குழந்தைங்க மூணு. சந்நியாசியாகி விருந்தாவனம் நோக்கி வந்தபோது ஆத்மதேவா என்ற பெரியவரைச் சந்திச்சு இருக்கார். இந்தப் பெரியவர் கைலாசமலையில் தவம் செஞ்சப்ப பரமசிவன் தோன்றி என்ன வரம்னு கேக்கறார். எனக்கு பூஜிக்க ஒரு விக்கிரஹம் வேணுமுன்னு கேட்டதும் அவர் குழலூதும் கண்ணன் சிலையைக் கொடுத்தார். அதைக் கொண்டுவந்து தினமும் பூஜிச்சு வர்றார்.

அப்போ ஒரு நாள் கனவில் இவருக்கு இந்த சிலையை ஹரிவம்சாவிடம் கொடுக்க உத்தரவாகி இருக்கு. அதுக்கேத்தமாதிரி ரெண்டு பேரின் சந்திப்பும் நடந்து சிலை கை மாறுச்சு. விருந்தாவனத்துக்குக் கொண்டுவந்து கோவில் கட்டுனது அப்போதான்.

இதையும் ஔரங்கஸேப் 1670 வது ஆண்டு இடிச்சுப் பாதியிலே விட்டுருக்கார். இதை இப்போ தொல்பொருள் இலாக்கா பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமா ஏற்றெடுத்து இருக்கு. இதுக்குப் பக்கத்துலேயே புதுக்கோவில் ஒன்னு 1871 வது வருசம் கட்டி இருக்காங்க. இதைத்தான் நாம் இப்போ பார்த்துக்கிட்டு இருக்கோம். மாடியில் எல்லாம் சுத்திவர நிறைய அறைகள் வச்சு கட்டி இருக்கும் மாளிகை. சந்தில் இருந்து பார்த்தால் இதன் பிரமாண்டம் தெரிய வாய்ப்பே இல்லை!

தீர்த்த யாத்திரை வரும் பக்தர்கள் தவறாமல் வந்து தரிசனம் செஞ்சுக்கிட்டுப் போறாங்க. ஹோலிப்பண்டிகை, ஜென்மாஷ்டமி, ஊஞ்சல் உற்சவம் இப்படி விசேஷமாக் கொண்டாடும் பண்டிகைகளில் கூட்டம் அப்படி நெரியுமாம். கொஞ்சம் மாடர்னா வெப்சைட் எல்லாம் வச்சுருக்கார் கிருஷ்.


ஆறாவது இடமா பாங்கே பிஹாரி கோவில். ரிக்ஷா நுழைய இடமில்லாதபடி நெரிக்கும் கூட்டம் அந்த சந்தில். நீங்க இறங்கிப்போய்ப் பார்த்துட்டு வாங்க. நான் ஓரங்கட்டிக்கிறேன்னார் ராம்ஸ்.
ஹரிதாஸ் ஸ்வாமிகளுக்கு கிருஷ்ணனும் ராதையுமாக் காட்சி கொடுத்தப்ப அவர் உங்க ரெண்டு பேரையும் பிரிச்சுப் பார்க்க என்னால் முடியலை. ஓர் உருவமா எனக்குக் காட்சி கொடுக்கணுமுன்னு வேண்ட கிருஷ் & ராதா ரெண்டுபேரும் அப்படியே காட்சி கொடுத்து அதையே ஒரு சிலை வடிவத்தில் கொடுத்தாங்களாம். சம்பவம் நடந்தது நிதிவனம் துளசித் தோட்டத்தில்.
அந்த சிலையைத்தான் பாங்கே பிஹாரி கோவிலில் ப்ரதிஷ்டை செஞ்சுருக்காங்க. த்வார்க்காவில் இருப்பதுபோல் அப்பப்பத் திரை போட்டு மூடிக்கறாங்க இந்தக் கோவிலில். எப்போ தரிசனம் என்று தெரியாத நிலையில் திரைவிலகக் காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம் கோவிலில் நெரிசலை ஏற்படுத்துது. டிமாண்ட் இருந்தால்தான் ஏகப்பட்ட மதிப்பு. காட்சிக்கு எளியவனா இருக்கப்படாதோ? அசல் திரைக்குப் பதிலா வெள்ளிக்கவசத்தோடு இருக்கும் சந்நிதிக்கதவுகள் மூடி இருந்துச்சு நாம் போனபோது.
தாழ் திறவாய் மணிக் கதவே!!!!


ஹரிதாஸ் ஸ்வாமிகளின் காலம் கடந்து மூணு நூற்றாண்டுகளா வெவ்வேற கோஸ்வாமிகளால் பூஜிக்கப்பட்ட இந்த பங்கே பிஹாரிக்குச் சொந்தமா ஒரு கோவில் கட்டி இங்கே குடியேற்றுனது 1864 வது வருசம்.
இங்கே மற்ற கோவில்களைப்போல் காலங்கார்த்தாலே சாமியை எழுப்பிப் பூஜைகள் நடத்தறது இல்லை. கண்ணனைத் தன் குழந்தையைப்போல் ஆராதித்த ஹரிதாஸ் ஸ்வாமிகள். 'போட்டும். குழந்தை தூங்கட்டும் இன்னும் கொஞ்ச நேரம்'ன்னு சில நியமங்கள் செஞ்சுட்டுப் போயிருக்கார். காலை ஒன்பது மணிக்குத்தான் முதல் பூஜை. அபிஷேகம், அலங்காரம் எல்லாம் அப்போதான். உச்சி காலத்துக்கு விருந்து சாப்பாடு. இரவு சயனம் இப்படி மூணு நேரம் பூஜைகள் பெரிய அளவில் நடக்குது.
சந்நிதிமுன் இருக்கும் கூடத்தில் மலர்ச்சரங்கள் தொங்கும் அலங்காரம் ஒரு ஷாண்டிலியர் போலவே இருக்குது. சின்னச்சின்ன பித்தளை மணிகள் வட்டவட்டாமாய்..... சூப்பர்! இதுக்காகவே கம்பியால் ஆன அமைப்பை உண்டாக்கி இருக்காங்க. முற்றத்தில் துளசி மாடம்போல் போல் ரெண்டு மேடை வச்சு அதுலே பசுவும்கன்றுமா ரெண்டு பித்தளைச் சிற்பங்கள்.
பலருக்கு இந்த பாங்கேபிஹாரி குடும்ப சாமி என்பதால் அவுங்க சம்பந்தமுள்ள விழாக்களை இங்கே வந்து நடத்திக்கிட்டுப் போறாங்க. அடுத்து இருக்கும் இன்னொரு சின்னக்கூடத்தில் ஒரு குடும்ப விழா நடத்துக்கிட்டு இருக்கு. சாமி அகல் விளக்கு கொளுத்தி வைக்க ரெண்டுமூணு ஸ்டேண்டு வச்சுருக்கு அங்கே. மக்கள்ஸ் வந்து விளக்கு ஏத்திவச்சுட்டுப் போறாங்க. கண்ட இடத்தில் வச்சு அழுக்கு பண்ணாம இருப்பது நல்லதுதான். எண்ணெய் தீர்ந்து அணைஞ்சு போன விளக்குகளை அகற்ற ஒருத்தர் இருக்கார். அநேகமாக ரீசைக்ளிங் வெற்றிகரமா நடக்குதுன்னு தோணுச்சு.
கிளம்பி கடைத்தெரு வழியா வரும்போது இன்னொருத்தர் மோட்சத்துக்குப் போயிட்டாருன்னு அவருக்கான ஏற்பாடுகள் நடக்க மூங்கில் வேலைகள் ஆரம்பிச்சு இருந்தது. அந்தக் கடையை மட்டும் சும்மா ஒரு துணிபோட்டு மூடி வச்சுருக்காங்க. மரணம் ஒரு பெரிய விஷயமே இல்லைன்னு அக்கம்பக்கம் எல்லாம் ஜேஜேன்னு வழக்கம்போல் வியாபாரம்.
இந்த கோபிகா செட் மேல் ஒரு ஆசை இருக்கேன்னு ஒரு கடையில் நுழைஞ்சு ஒன்னு வாங்கினேன். நல்ல காட்டன். ராப்பரௌண்ட் ஸ்கர்ட், ஒரு தாவணி, ப்ளவுஸ்க்கு ஒரு மீட்டர் துணி அதே ப்ரிண்டில்.விலை ரொம்பவே மலிவு. 300 ரூபாய்தான். அப்படியே கோபனுக்கு ஒரு ஜிப்பா:-)

ராதே ராதே....என்ன ஆனந்தம்! வெள்ளைக்கார ஜோடி

கார் நிறுத்துன இடத்துக்கு வந்து சேர்ந்தோம். வரும் வழியெல்லாம் வெவ்வேற குழுவினரின் ஊர்வலங்கள். நகரமே ஆனந்தக் களிப்பில் மிதக்குது. சாதாரண நாளிலேயே இப்படின்னா.... ஹோலி, கிருஷ்ணாஷ்டமி காலங்களில் கால் வைக்க இடம் இருக்காது போல! இந்த ஆறுகோவில் டூருக்குக்கு ராம்ஸ் சொன்னதுபோலவே ரெண்டரை மணி நேரம் எடுத்துச்சு. புது இடங்களில் இப்படி அலையாம உள்ளுர் வண்டிகளை அமர்த்திக்கணும் என்ற பாய்ண்டை மனசில் குறிச்சுக்கிட்டேன்.
லிஸ்ட்டுப்படி இன்னும் பார்க்க நிறைய இருக்குன்னாலும் கோபாலின் ஆசைக்காக அரைநாள் ஒதுக்கிட்டேன். இப்பவே மணி பனிரெண்டரை. பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுக் கிளம்பணும். வாங்க. நியூ விருந்தாவன் சாலையின் ரெண்டு பக்கமும் இருக்கும் மரங்களில் கூட ராதா ராதான்னு எழுதி வச்சுருக்காங்க. எங்கும் எதிலும் ராதை மட்டுமே!

தொடரும்..............:-)

22 comments:

said...

//அந்தக் கடையை மட்டும் சும்மா ஒரு துணிபோட்டு மூடி வச்சுருக்காங்க. மரணம் ஒரு பெரிய விஷயமே இல்லைன்னு அக்கம்பக்கம் எல்லாம் ஜேஜேன்னு வழக்கம்போல் வியாபாரம்.//

மக்கள் தொகை கூடிவிட்டால் மனித உயிருக்கு மதிப்பேது.

படங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கு.

said...

சந்நிதிமுன் இருக்கும் கூடத்தில் மலர்ச்சரங்கள் தொங்கும் அலங்காரம் ஒரு ஷாண்டிலியர் போலவே இருக்குது//

மிக அழகு...


உங்க ரசனையும் பொறுமையும் பிரமிப்புதான்...

said...

பகிர்வுக்கு நன்றிங்க.

said...

பூக்கள் அலங்காரம் நல்லாருக்கு டீச்சர்,சந்தில் கூட்டத்தை பார்த்தால் ரங்கநாதன் தெரு போல் உள்ளது:))))

said...

மரத்தில் எழுதி இருப்பது
கண்ணனின் ராதை
தானா ....
பகிர்வு எங்களையும்
கை பிடித்து அழைத்துச் செல்வது
போல் உள்ளது.

said...

அழகான அழகு...குழந்தை.

said...

படங்கள் எல்லாம் கொள்ளை அழகு.

நிலம் பாவாத சிவந்த பாதம் கொண்ட குழந்தைக் கண்ணனை எங்க வீட்டுக்குத் தூக்கிட்டுப் போயிரணும் போலிருக்கு. நானே ராதையாயிருவேன் போலிருக்கு...

எனக்குத் தெரிந்தவரின் பெற்றோர் இருவரும் ராதாப்யாரிகள் ஆகிவிட்டனர். சந்நியாசம் போலவே. இதுபற்றி அதிகமும் பேசுவார்.

said...

அந்தப் பூ அலங்காரம் மனசை விட்டுப் போகவில்லை துளசி. விஜய் டி வி யில் இந்த மாதம் காலை முழுவதும் விருந்தாவனம் தானாம்.

said...

குழலூதும் மாயவன் மனத்தைச் சொக்கவைக்கிறானே.....

said...

வாங்க கோவியார்.

உண்மைதான். ஒரு உயிர்போனதும் பத்து புது உயிர்கள் பூமிக்கு வந்துருதே!

said...

வாங்க சாந்தி.

பளிச்ன்னு கண்ணுலே முதலில் பட்டது சரஞ்சரமா இதுதான்ப்பா!!!

said...

வாங்க சித்ரா,

வருகைக்கு நன்றி.

said...

வாங்க சுமதி.

ஆஹா.... 'ரங்கநாதன் தெரு.....'

சரியான உவமை. எனக்குத் தோணலை பாருங்க!!!!

நன்றிப்பா.

said...

வாங்க சிவகுமாரன்.

புது விருந்தாவனத்தில் எல்லா மரங்களிலும் ராதே தான். அதுவும் ஸ்ரீ ராதா!!!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

குழந்தையே அழகு. இதில் இந்தக் குழந்தை....... இன்னும் அழகு!

said...

வாங்க கெக்கே பிக்குணி.

இதுதாங்க..... இதுதான்......
என்னதான் சொள்ளை சொல்லிக்கிட்டுப் போனாலும் 'அவன்' முகம் பார்த்தால் எல்லாம் மறந்து போயிருது.

கண்ணனின் விசேஷமே இதுதான்!

said...

வாங்க வல்லி.

ஆஹா.... விஜயில் விருந்தாவன் எத்தனை மணிக்கு வருதுப்பா?

said...

வாங்க மாதேவி.

கண்குளிரக் கண்டாச்சு. இனி குழலோசையைக் காதுகுளிரக் கேக்கணும்.

said...

Dear Author,
Thulasidhalam is a worthwhile site embellished with beautiful articles and a lovely spalsh of colour via the photos. It is further enhanced by the erudite commentators who express themselves with such freedom and expert analyses and the display of neutrality.
There is a quite urge within, however, to write more about Saivism and its manifold system of epics and philosophies; its evocative Gods and Goddess. I await your esteemed responce...

Please publish this kandhar Anubooti translated formats..
Through this begins the Saivite's column in thulasidhalam..

Maga mayai kalainthida valla piraan,
Mugam aarum mozhindum ozhindilane,
Agam maadai madantair endru aayarum,
Chaga mayayul nindru thayanguvathe.

(Translated by sivashanmugam)

Lord Muruga, the Six Faced One
The One who removes even the strongest of Illusions, the ego
Yet this illusion clings on in the form of wealth and spouse
This is the torment - i'm stuck in this illusion.

welcome the valuable comments from our thulasidhalam reasers,,

''shivayadav''

said...

உங்க பயணக்கட்டுரை எதையும் தமிழ்மணம் போட்டியில் பரிந்துரை பண்ணலியா? தேடித் தேடிப் பார்த்தேனே? உங்கப் பயணக் கட்டுரைகளை அடிச்சுக்க ஆள் கிடையாது.

said...

வாங்க ஷிவ்யாதவ்.

சைவ நெறி நல்லாத் தெரிஞ்ச அறிஞர்களையும், நம்ம பதிவர்களையும் கேட்டுப்பார்த்து எழுதணும்.

நம்ம வாசகர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்.

said...

வாங்க அப்பாதுரை.

அதென்னவோ போட்டிகளில் கலந்துக்கும் ஆர்வம் அதிகம் இல்லை. என்னைவிட எத்தனையோபேர் எவ்வளோ அழகா, ஆர்வமா, ஆழமா எழுதறாங்க.

நாமே நம் பதிவில் சிறந்ததைச் சொல்லணுமுன்னா...... திரும்பிப்பார்த்தால்......போக
வேண்டிய தூரம் அதிகமுன்னு படுது.

பார்க்கலாம்.