Monday, November 01, 2010

திறந்த கைகளால் ஓர் அழைப்பு

நல்லாப் பார்த்துக்குங்க, கையில் கறை ஏதுமிருக்கான்னு.....
இந்தச் சண்டிகர் ஒரு நகரா இல்லை மாநிலமான்னு எனக்கு ஒரு சின்னக்குழப்பம், இன்னிவரையில். பரப்பளவில் வெறும் 114 சதுர கிலோமீட்டர் உள்ளதும், இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார ஊராவும் இருக்கு. மத்திய அரசின் நேரடிப்பார்வையில் இருக்கும் மாநிலங்களில் ஒன்னு. மாநிலச் சின்னமா திறந்த கைகள் செஞ்சு அங்கே ஒரு இடத்தில் தூக்கி வச்சுருக்காங்க. அதைப் பார்க்கலாமுன்னா போனால் ஏகப்பட்ட கெடுபிடி அந்தப் பகுதியில் ( செக்டர் 1 கேப்பிடல் காம்ப்ளெக்ஸ்) நுழையறதுக்கு. ஏ.கே.47 வச்சுருக்கும் ஆர்மிக்காரர் வண்டியை நிறுத்தி என்ன ஏதுன்னு விசாரிச்சார். 'கை' பார்க்க வந்தேன்னு சொன்னதும், எந்த ஊருன்னார். (சிங்காரச்) சென்னைன்னதும் உடனே உள்ளே போக அனுமதி கிடைச்சது. ஒருவேளை 'அன்னை' ஆர்டர் போட்டுருக்காங்களோ!!! வடக்கே தமிழனை யாரும் மதிக்கறது இல்லேன்னு இனி சொல்லாதீங்கப்பா:-))))

ஆரஞ்சு ட்ராஃபிக் கோன்களை வரிசையா வச்சு அதுக்கிடையில்தான் வண்டி போகணும். லைசன்சு எடுக்கக்கூட இவ்வளவு 'கடுபடு' இல்லை. இதுலே பை இருக்கறவங்களுக்குத் தனி லேன். பை இல்லாதவங்களுக்குத் தனியா ஒன்னு. ஒருவேளை ஸூட்கேஸுக்கு இங்கெல்லாம் 'பை'ன்னு பேரோ!!!!! காரில் இருக்கும் ஏர்பேக் கணக்கில் வருமா?
14 மீட்டர் உயரம், 14 மீட்டர் அகலம். எடை வெறும் 50 டன். உலோகத்தகடுகளால் ஆன பெரிய கை. ஒரு கம்பத்துலே தூக்கி நிறுத்தி இருக்காங்க. இவ்வளவு கனம் இருந்தாலும் காத்தாடி போல சுத்துது. சுத்துப்புறம் எல்லாம் வெட்டவெளி தான். காத்தடிக்கும் திசையையும் தெரிஞ்சுக்கலாம். "open to give & open to receive." Open hand is the city's official emblem. எங்கே கிவ்? வியாதிகளுக்கு எல்லாம் ரிஸீவ் மட்டும்தான். ஒரு பக்கம் உயர்நீதி மன்றக் கட்டிடம். அதென்னவோ ஹை கோர்ட்டுன்னதும் சென்னை உயர்நீதி மன்றக் கட்டிடம் நினைவுக்கு வருவதால் இதை மனசு ஏத்துக்கமாட்டேங்குது!
இது ஒரு பக்கம் இருக்க ஊருக்கு மறு கோடியில் கலைக்குன்னு ஒரு கிராமத்தை நிர்மாணிச்சாங்க. வருசம் 2000. பக்கத்துலே இருக்கும் சாலையில் பயணம் போகும்போதெல்லாம் உள்ளே என்னதான் இருக்குமுன்னு ஒரு யோசனை. அழகான தோரணவாயில் ஒன்னு கண்ணுலே படும். அதுலே யானை இருக்கே! பார்த்தால் ஆச்சுன்னு ஒரு நாள் போனால்......
ஒரு ரெஸ்ட்டாரண்ட். தொட்டடுத்து சிற்பங்கள் சுற்றிவர இருக்கும் புல்வெளியும் அதுக்குக் கரைகட்டுனாப்போல இருக்கும் நடைபாதை வெராந்தா. சினிமாவுக்கு டூயட் பாடச் சரியான இடம். அடுத்தபக்கம் வெட்டவெளியில் ஒரு மேடை. அன்னிக்கு ஏதோ க்விஸ் ப்ரோக்ராம் நடக்கப்போகுதுபோல....வரிசையா நாற்காலிகள் போட்டு வச்சுருக்காங்க.
உறங்கும் சிங்கம். எழுந்தா அவ்ளோதான்!
ரெண்டு மூணு பேர் புல்வெளியை ஒட்டிய இடத்தில் சிற்பங்களை செதுக்கி(??) அதுக்கு பாலீஷ் போட்டுக்கிட்டு இருக்காங்க. 'சேண்டர்' மாதிரி ஒரு கருவி சர்ன்னு சுத்திக்கிட்டு இருக்கு கையில். நவீன விஷ்ணு சக்கரம்!
சிற்பியிடம் பேச்சுக் கொடுத்ததில், வரப்போகும் போட்டிக்கு தயாராக்கறாராம்! சப்ஜெக்ட்டு........... ஆமை. இந்த சிற்பப்பூங்காவில் சின்னதும் பெருசுமா 200க்கும் அதிகமான சிற்பங்கள் அங்கங்கே காட்சிக்கு இருக்கு.
Baithak Restaurant அருமையான ருசியோடு சாப்பாடு போடுதாம். ஒரு நாளைக்குப் போகணும். கிராமிய செட்டிங்லே மண்டபம், மாட்டுவண்டி, கிணறு, ஓய்வெடுக்கும் எருமைக்குடும்பம், முறுக்கு மீசையுடன் சர்தார், மோர் கடையும் அம்மா, கோலி விளையாடும் பசங்கன்னு அங்கங்கே அலங்காரத்துக்கு வச்சுருந்தாலும் முயல்குட்டிகளையும் நாலைஞ்சு கூண்டுகளில் வளர்த்துக்கிட்டு இருக்காங்க.

இங்கே இருக்கும் திறந்தவெளி அரங்கில் நாலாயிரம் பேர் உக்கார வசதி இருக்கு. நவராத்திரி காலங்களில் தாண்டியா ஆட்டம்கூட உண்டாம். நம்ம கோவிலில் ஏழுநாளும் விழா, கலைநிகழ்ச்சின்னு அமர்க்களப்படுத்திட்டதால் நமக்கு தாண்டியா 'ஆட' ச்சான்ச் கிடைக்காமப்போச்சு:( ஒன்னரை லட்சம் பேர் இந்த 9 நாளிலும் ஆடோ ஆடுன்னு ஆடி இருக்காங்க.

தாய்லாந்து ஸ்டைலில் ஒரு Condom Bar வச்சுருக்காங்களாம். எய்ட்ஸைத் தடுக்க முன்னேற்பாடு. மொத்தம் 16 ஏக்கரை வளைச்சு இருக்கு. டெல்லியில் இருக்கும் டில்லிஹாட் போல உருவாக்கணும் என்று ஆரம்பிச்சது. ( இது பற்றி நம்ம பழைய பதிவு ஒன்னு இருக்கு இங்கே)

சிற்பங்களை நோட்டம் விட்டுக்கிட்டே அந்தப் பக்கம் போனால் கூரை எல்லாம் பிய்ஞ்சு வெறும் ஸ்டால்கள் கிடக்குதேன்னு விசாரிச்சால் இங்கே மேளா நடக்குமாம். கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சி. அப்போ அந்த ஸ்டால்களுக்கு உசுரு வந்துருமுன்னு சொன்னாங்க. எப்போ எப்போன்னால்..... சரியாக தேதியோ மாசமோ சொல்லத் தெரியலை, அங்கே இருந்த மக்களுக்கு. வோ த்தோ...ஆயேகா...

கப் kab கப்ன்னு இருந்ததுக்கு ஒரு நாள் தினசரியில் விளம்பரம் வந்தே வந்துருச்சு.NZCC நடத்துதுன்னு பார்த்ததும் நியூஸியான்னு ஒரு திகைப்பு. என்னைத்தான் சொல்றாங்களோ???

சண்டிகர் மாநிலம் தன் 'திறந்த கை'யோடு நடத்தும் கண்காட்சி. நார்த் ஸோன் கல்ச்சுரல் செண்ட்டர் முன் 'கை' எடுத்து ஆரம்பிச்சது.
இடமே மாறிப்போய்க்கிடக்கு. எங்கே பார்த்தாலும் பூக்களும் பலூன்களும் அலங்காரமுமா.......பத்து ரூபாய் நுழைவுக் கட்டணம். இந்த வருசத்து தீம் வடகிழக்கு மாநிலங்கள். அஸ்ஸாம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், அருணாசல் ப்ரதேஷ், த்ரிபுரா, மிஸ்ஸோரம், சிக்கிம் கலந்துக்கறாங்க.

போன வருசம்தான் இந்த மேளா வைப்பது ஆரம்பிச்சு இருக்கு. தீம் காஷ்மீர் மாநிலம். ஓஹோ....தலையில் இருந்து ஆரம்பிக்கறாங்க:-)

உள்ளே நுழைஞ்சதுமே மூங்கில் பட்டைகளால் அலங்கரிச்ச குடில்கள். வடகிழக்கு இந்தியாவின் எல்லா மாநிலங்களும் ஸ்டால்ஸ் வச்சுருக்காங்க. மரத்தாலும், மூங்கில்களாலும் ஆன பொருட்களே அநேகமா எல்லாம். தேனீர் கெட்டிலும், ஹரிக்கேன் விளக்கும் நல்லா இருந்துச்சு.
செயற்கைப் பூக்கள் வகையில் ச்சும்மாக் கலர்க்கலரா குச்சியில் ஒட்டிவச்சுருப்பது பார்க்க சுமாராத்தான் இருக்கு. ஆனால் பார்வையாளர்கள் பலரும் கையில் பிடிச்சுக்கிட்டுப் போறாங்க. நல்ல உசரமான பூஞ்சாடி இருக்கணும் இதுக்கெல்லாம். ச்சீச்சீ...... இந்தப் பழம் ரொம்பவே புளிக்குது..........
மக்களை வரவேற்கும் முகமா மேளதாளத்தோடு நாட்டியம் ஆடிக்கிட்டே ஒரு கலைக்குழு. மூணு திருநங்கைகள் என்னமா ஆடுறாங்கன்னு.... பாருங்க. இடமும் வலதுமா கடைகள் .....குடில்களுக்கு உசுரு வந்தே வந்துருச்சு;-)
நடுநாயகமா . தூக்கிய துதிக்கையுடன் நம்ம ஆள் நிக்கறார். நகருக்கு அன்பளிப்பாம். ஹூம்..... நம்ம விலாசம் தெரிஞ்சுருக்காது .....என்னாலேயும் 'இந்த யானையைக் கட்டித் தீனி போடமுடியுமு'ன்னு காமிச்சுருக்கலாம்....

நான் தாகமாயிருந்தேன்....................


PIN குறிப்பு
: பதிவின் நீளம் கருதி மீதியை அடுத்த இடுகையில் பார்க்கலாம்

20 comments:

said...

எப்படியோ அந்த நாளும் வந்து நீங்களும் எங்களை சுத்தி காமிச்சிட்டீங்க..:))

said...

காமிராவைக் கோபால் கையில கொடுத்துட்டு நீங்களும் தண்ணீ குடிச்சிருக்கலாம்:)
அந்த கெட்டில் உண்மையிலியே நல்லா இருக்குப்பா. அந்த பைசாத் சாப்பாடும் சாப்பிட்டுவிட்டுச் சொல்லுங்க. அலங்ஆரம் எல்லாம்நல்லா இருக்கு. சே ,தெரிஞ்சிருந்தா நானும் வந்திருப்பேன். டாண்டியா ஆடி இருக்கலாம்:(

said...

யானை சிற்பம்,அந்த தண்ணீர் ஊற்றும் சிற்பம் அனைத்தும் நன்றாக உள்ளது, சாரின் சிற்பமும் சேர்த்து:))))

said...

டீச்சர்..கோபால் அண்ணாவும் சிலை மாதிரியே இருக்காரே? :-)

said...

வாங்க கயலு.

எப்ப எப்பன்னு இருந்தமுல்லெ! அதான் ரெண்டாம் நாளே ஓடிப்போய்ப் பார்த்தோம்:-)

said...

வாங்க வல்லி.

'தண்ணி' குடிச்சுப் பழக்கம் இல்லையேப்பா:-)))))

நீங்க கிளம்பி வாங்க. ஆடிடலாம். உங்களுக்கில்லாத தாண்டியாவா????

said...

வாங்க சுமதி.

சாருக்கு கேமெரா ஃபேஸ் இருக்குப்பா:-)))))

said...

வாங்க ரிஷான்.

சிலை ஒன்னு 'வடிச்சுறணும்' இல்லே? :-)

said...

\\இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார ஊராவும் இருக்கு\\

ஆகா...!!!ம்ம்..சிலைகள் எல்லாம் நன்றாக இருக்கு...கடைசி சிலை ரொம்ப நன்றாக இருக்கு டீச்சர் ;))

said...

டீச்சர்

தீபாவளி வாழ்த்துக்கள்.

அங்க என்னலாம் பண்றீங்க தீபவளிகுனு ஒரு பதிவு போடுங்க,முடிஞ்சா ரேசிபெஸ் கூட.

எங்களுகுலம் இங்க அமெரிக்க ல ஒன்னும் கிடையாது.மத்தவங்க சொல்றத கேடு சந்தோஷ பட வேண்டியது தான்.

said...

THanks for sharing, photos and article are nice

said...

புது இடம் பகிர்வுக்கு நன்றி!

said...

வாங்க விஜி.

தீபாவளி ஸ்பெஷல் ஒன்னு விரைவில் வருகிறது:-)))

said...

வாங்க ராம்ஜி_யாஹூ.

இதன் தொடர்ச்சி ஒன்னு நாளை உண்டு.

அதையும் நேரம் இருக்கும்போது பாருங்க.

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

said...

வாங்க அன்புடன் அருணா.

சண்டிகரின் ஒரே தமிழ்ப்பதிவர் என்ற கடமை உணர்ச்சி அளவில்லாமல் பெருகுதுப்பா:-))))

said...

வாங்க கோபி.

கடைசிச்சிலை லைஃப் சைஸ். விலையும் கொஞ்சம் கூடுதல்:-)))))

said...

கடைசி போட்டோவுல இருக்கிற சிலைகளெல்லாம் அவ்வளவு தத்ரூபமா இருக்கு :-)))))))))

said...

கையின் அழைப்பு நன்றாக இருக்கிறது. தொலைவில் எடுத்த படத்தில் பறவை பறப்பது போல் தெரிகிறது.

கலைகள் ரொம்ப நல்லாஇருக்கு.:)

said...

வாங்க அமைதிச்சாரல்.

'சிலை எடுத்தாள் ஒரு பெரிய ஆணுக்கு'ன்னு பாடலாம்:-))))

said...

வாங்க மாதேவி.

அம்பது டன் கை!!!!

கலைகளே அழகுதானேப்பா:-))))